logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் குப்பை தரம் பிரித்தல் மற்றும் நாய்கள் கருத்தடை பணிகளை ஆணையர் ஆய்வு ஶ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்குதல் மற்றும் தெருநாய்கள் கருத்தடை செய்யும் பணிகளை நகராட்சி ஆணையர் குமார், சுகாதார அலுவலர் கந்தசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 20- வது வார்டு மாதா கோயில் தெரு, 31- வது வார்டு மலப்புரம் தெரு ஆகியவற்றில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வீடுகளில் குப்பையை சேகரிக்கும் பணிகள் மற்றும் நுண் உரக்குடில் மூலம் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணி ஆகியவற்றை நகராட்சி ஆணையர் குமார், சுகாதார அலுவலர் கந்தசாமி ஆகியோர் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது வீடு மற்றும்  வணிக நிறுவனங்களில் உற்பத்தியாகும் திடக்கழிவுகளை வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை  (பச்சை நிற குப்பை தொட்டி) மக்காத கழிவுகள் (நீல நிற குப்பை தொட்டியிலும் ) சுகாதார கழிவுகளை (சிவப்பு நிற குப்பை தொட்டி) என மூன்று வகையாக பிரித்து  தினம்தோறும் வழங்க வேண்டும்.  மேலும் மின்சார  கழிவுகளை கருப்பு நிற குப்பை தொட்டியில் சனிக்கிழமைகளில் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும், என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை பயன்படுத்தக் கூடாது . ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியை தூய்மையான மற்றும் சுகாதாரமான நகராட்சியாக உருவாக்க பொதுமக்கள் அனைவரும் திடக்கழிவுகளை முறையாகப் பிரித்து வழங்கி, நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என  நகராட்சி ஆணையர் குமார் அறிவுறுத்தினார். தொடர்ந்து குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் நுண் உர குடில்கள், தெரு நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ளும் பணிகளை ஆணையர் மற்றும் சுகாதார அலுவலர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

22 hrs ago
user_Prabakaran Praba
Prabakaran Praba
ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
22 hrs ago
d77d2ec1-54ac-4276-acab-7b8d83de9ae7

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் குப்பை தரம் பிரித்தல் மற்றும் நாய்கள் கருத்தடை பணிகளை ஆணையர் ஆய்வு ஶ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்குதல் மற்றும் தெருநாய்கள் கருத்தடை செய்யும் பணிகளை நகராட்சி ஆணையர் குமார், சுகாதார அலுவலர் கந்தசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 20- வது வார்டு மாதா கோயில் தெரு, 31- வது வார்டு மலப்புரம் தெரு ஆகியவற்றில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வீடுகளில் குப்பையை சேகரிக்கும் பணிகள் மற்றும் நுண் உரக்குடில் மூலம் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணி ஆகியவற்றை நகராட்சி ஆணையர் குமார், சுகாதார அலுவலர் கந்தசாமி ஆகியோர் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது வீடு மற்றும்  வணிக நிறுவனங்களில் உற்பத்தியாகும் திடக்கழிவுகளை வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை  (பச்சை நிற குப்பை

50275411-ba25-441a-ab24-ee95e9286dcd

தொட்டி) மக்காத கழிவுகள் (நீல நிற குப்பை தொட்டியிலும் ) சுகாதார கழிவுகளை (சிவப்பு நிற குப்பை தொட்டி) என மூன்று வகையாக பிரித்து  தினம்தோறும் வழங்க வேண்டும்.  மேலும் மின்சார  கழிவுகளை கருப்பு நிற குப்பை தொட்டியில் சனிக்கிழமைகளில் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும், என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை பயன்படுத்தக் கூடாது . ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியை தூய்மையான மற்றும் சுகாதாரமான நகராட்சியாக உருவாக்க பொதுமக்கள் அனைவரும் திடக்கழிவுகளை முறையாகப் பிரித்து வழங்கி, நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என  நகராட்சி ஆணையர் குமார் அறிவுறுத்தினார். தொடர்ந்து குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் நுண் உர குடில்கள், தெரு நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ளும் பணிகளை ஆணையர் மற்றும் சுகாதார அலுவலர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • பெரியகுளத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பெரியகுளம் MLA தொடங்கி வைத்தார் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பெரியகுளத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது வராக நதியில் கரைப்பதற்கு போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது இதனைத் தொடர்ந்து பெரியகுளம் நகர் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தநூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகளை ஊர்வலமாக எடுத்து வந்து வராக நதியில் கரைக்கப்பட்டது முன்னதாக இந்த ஊர்வலத்தை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் தொடங்கி வைத்தார் நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் உள்ளிட்ட இந்து முன்னணி மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்கள் கலந்து கொண்டனர்
    1
    பெரியகுளத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பெரியகுளம் MLA தொடங்கி வைத்தார்
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பெரியகுளத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது வராக நதியில் கரைப்பதற்கு போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது இதனைத் தொடர்ந்து பெரியகுளம் நகர் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தநூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகளை ஊர்வலமாக எடுத்து வந்து வராக நதியில் கரைக்கப்பட்டது முன்னதாக இந்த ஊர்வலத்தை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் தொடங்கி வைத்தார் நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் உள்ளிட்ட இந்து முன்னணி மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்கள் கலந்து கொண்டனர்
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சாலை மறைக்குளம் ஸ்ரீ சித்திரக்காள் அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை காரியாபட்டி அருகே சாலை மறைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திரக்காள் அம்மன் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதையொட்டி, விநாயகப் பெருமானுக்கு மஞ்சள், திருமஞ்சனம், அரிசி மாவு, பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகப் பெருமான் சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் வண்ண மலர்களால் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு, கற்பூர தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சர்க்கரைப் பொங்கல், அவல், பொரி, கொழுக்கட்டை உள்ளிட்டவை விநாயகப் பெருமானுக்கு படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் சாலை மறைக்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை வழிபட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    2
    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சாலை மறைக்குளம் ஸ்ரீ சித்திரக்காள் அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை
காரியாபட்டி அருகே சாலை மறைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திரக்காள் அம்மன் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இதையொட்டி, விநாயகப் பெருமானுக்கு மஞ்சள், திருமஞ்சனம், அரிசி மாவு, பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகப் பெருமான் சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் வண்ண மலர்களால் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு, கற்பூர தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சர்க்கரைப் பொங்கல், அவல், பொரி, கொழுக்கட்டை உள்ளிட்டவை விநாயகப் பெருமானுக்கு படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் சாலை மறைக்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை வழிபட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    user_குமார்
    குமார்
    Local News Reporter காரியாபட்டி, விருதுநகர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் மறைந்த முன்னாள் முதல்வரும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் தேனி மாவட்டம் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்நிகழ்ச்சியில் தெற்கு நகரக் கழகச் செயலாளர் VDR,பாலா, வடக்கு நகர் கழக செயலாளர் VS.தினேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலாஜி, நகர் மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் பால்பாண்டி, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் மாஞ்சோலை செல்வம், அம்மா பேரவை இணைச் செயலாளர் முருகன்,நகர அவை தலைவர் மோகன், தொழிற்சங்க செயலாளரா ஜீவானந்தம் அடுத்து,மாவட்டத் துணைத் தலைவர் தர்மலிங்கம் வார்டு செயலாளர்கள் சார்பணி நிர்வாகிகள் உள்ளிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான கலந்துகொண்டு அறிஞர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
    1
    மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
மறைந்த முன்னாள் முதல்வரும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் தேனி மாவட்டம் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்   சார்பாக பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
இந்நிகழ்ச்சியில் தெற்கு நகரக் கழகச் செயலாளர் VDR,பாலா, வடக்கு நகர் கழக செயலாளர் VS.தினேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலாஜி, நகர் மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் பால்பாண்டி, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் மாஞ்சோலை செல்வம், அம்மா பேரவை இணைச் செயலாளர் முருகன்,நகர அவை தலைவர் மோகன், தொழிற்சங்க செயலாளரா ஜீவானந்தம் அடுத்து,மாவட்டத் துணைத் தலைவர் தர்மலிங்கம் வார்டு செயலாளர்கள்  சார்பணி நிர்வாகிகள் உள்ளிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான கலந்துகொண்டு அறிஞர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு
    1
    ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • திருநெல்வேலிஅரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்பதன வசதி பராமரிப்பு… சடலங்கள் பாதுகாப்பில் கேள்வி எழுப்பும் நிலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் பழைய சவக்கிடங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன. பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளுக்கு ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் (AMC) செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுப்பணித்துறை மின் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் ஏசி மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில் பிணவறையின் குளிர்பதன வசதிகள் தொடர்பாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்றும் நாளையும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்படும் சடலங்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய சவக்கிடங்கில் வைத்து பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குளிர்பதன அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், குளிர்பதன வசதி தொடர்ந்து இயங்கி வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், பிணவறையின் குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் சூழல் பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. சடலங்களை பாதுகாப்பாக பராமரிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதா என்பதையும், பராமரிப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதையும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து வழக்கமான முறையில் பிரேத பரிசோதனைகள் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    1
    திருநெல்வேலிஅரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்பதன வசதி பராமரிப்பு… சடலங்கள் பாதுகாப்பில் கேள்வி எழுப்பும் நிலை
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் பழைய சவக்கிடங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன.
பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளுக்கு ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் (AMC) செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுப்பணித்துறை மின் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் ஏசி மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில் பிணவறையின் குளிர்பதன வசதிகள் தொடர்பாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது 
பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்றும் நாளையும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்படும் சடலங்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய சவக்கிடங்கில் வைத்து பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குளிர்பதன அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், குளிர்பதன வசதி தொடர்ந்து இயங்கி வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், பிணவறையின் குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் சூழல் பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. சடலங்களை பாதுகாப்பாக பராமரிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதா என்பதையும், பராமரிப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதையும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து வழக்கமான முறையில் பிரேத பரிசோதனைகள் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    user_Subramanian
    Subramanian
    திருநெல்வேலி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    1 hr ago
  • திண்டுக்கல் மற்றும் திண்டுக்கல் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி. திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான செட்டிநாயக்கன்பட்டி, சிலப்பாடி, தாடிக்கொம்பு , சின்னாளப்பட்டி, காந்திகிராமம், ஆத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நீண்ட நாட்களாக போதிய மழையில்லாமல் வறண்ட வானிலை காரணமாக கடும் வெப்பம் இருந்து வந்த நிலையில் இன்று மாலை 5 மணி முதல் கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    1
    திண்டுக்கல் மற்றும் திண்டுக்கல் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான செட்டிநாயக்கன்பட்டி, சிலப்பாடி, தாடிக்கொம்பு , சின்னாளப்பட்டி, காந்திகிராமம், ஆத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நீண்ட நாட்களாக போதிய மழையில்லாமல் வறண்ட வானிலை காரணமாக கடும் வெப்பம் இருந்து வந்த நிலையில் இன்று மாலை 5 மணி முதல் கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    22 hrs ago
  • வத்திராயிருப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 உதவித்தொகையை காலதாமதமின்றி வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது... விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான நலச்சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ரூ.1,500 உதவித்தொகையை காலதாமதமின்றி வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் மாற்றுத்திறனாளிகளின் அன்றாட வாழ்க்கைச் செலவுகள், மருத்துவச் செலவுகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை சமாளிக்க மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1,500 உதவித்தொகை முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. ஆனால், உதவித்தொகை உரிய காலத்தில் கிடைக்காமல் காலதாமதமாகி வருவதால், மாற்றுத்திறனாளிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர். குறிப்பாக மருத்துவச் செலவுகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த உதவித்தொகையை நம்பியுள்ள மாற்றுத்திறனாளிகள், உதவித்தொகை கிடைக்காத காலங்களில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ரூ.1,500 உதவித்தொகையை எவ்வித காலதாமதமும் இன்றி, ஒவ்வொரு மாதமும் உரிய நேரத்தில் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    1
    வத்திராயிருப்பில்  மாற்றுத்திறனாளிகளுக்கு 
ரூ.1,500 உதவித்தொகையை காலதாமதமின்றி வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான நலச்சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ரூ.1,500 உதவித்தொகையை காலதாமதமின்றி வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் மாற்றுத்திறனாளிகளின் அன்றாட வாழ்க்கைச் செலவுகள், மருத்துவச் செலவுகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை சமாளிக்க மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1,500 உதவித்தொகை முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. ஆனால், உதவித்தொகை உரிய காலத்தில் கிடைக்காமல் காலதாமதமாகி வருவதால், மாற்றுத்திறனாளிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர்.
குறிப்பாக மருத்துவச் செலவுகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த உதவித்தொகையை நம்பியுள்ள மாற்றுத்திறனாளிகள், உதவித்தொகை  கிடைக்காத காலங்களில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ரூ.1,500 உதவித்தொகையை எவ்வித காலதாமதமும் இன்றி, ஒவ்வொரு மாதமும் உரிய நேரத்தில் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    7 hrs ago
  • BJP மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் போடியில் செய்தியாளர்களுக்கு வழங்கிய பேட்டி விஜய்க்கு நல்ல அரசியல் ஆலோசர்கள் இல்லை. தமிழகத்தில் நடப்பது கிளாமரஸ் பாலிடிக்ஸ். லண்டனுக்கு யாரை ஈர்ப்பதற்கு சென்றுள்ளார் என்பது தெரியவில்லை. அஜித் விஜய் நட்பு பாராட்டுவதன் மூலம் தற்போது தமிழகத்தின் இடைத்தேர்தலில் பாதிப்பு ஏற்படும் நான் நினைக்கவில்லை. அஜித் வாக்கு வங்கி நிரூபிக்கும் முயற்சி எடுக்கவில்லை அவர் செய்யவும் மாட்டார். சினிமா பாப்புலாரிட்டி அடக்கமாக வைத்துக் கொள்பவர் அஜித். பாரதி ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் பேட்டி தேனி மாவட்டம் போடியில் விநாயகர் சேவா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட பிஜேபி மாநில பொதுச் செயலாளரும் பேராசிரியருமான ராம சீனிவாசன் அவர்கள் அடுத்த விநாயகர் சதுர்த்திக்குள் 2000 கிராம் அளவில் தங்கத்தினால் ஆன விநாயகர் சிலை அமைப்பதற்கான முயற்சியினை துவக்கி வைத்தார். தற்போது வரை நகையாகவோ அல்லது பணமாகவோ கொடுக்கப்பட்ட பக்தர்களுக்கான நன்கொடை ரசீதை வழங்கி சிறப்பித்த அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் விஜய்க்கு நல்ல அரசியல் ஆலோசர்கள் இல்லை. தமிழகத்தில் நடப்பது கிளாமரஸ் பாலிடிக்ஸ். லண்டனுக்கு யாரை ஈர்ப்பதற்கு சென்றுள்ளார் என்பது தெரியவில்லை. அஜித் விஜய் நட்பு பாராட்டுவதன் மூலம் தற்போது தமிழகத்தின் இடைத்தேர்தலில் பாதிப்பு ஏற்படும் நான் நினைக்கவில்லை. அஜித் வாக்கு வங்கி நிரூபிக்கும் முயற்சி எடுக்கவில்லை அவர் செய்யவும் மாட்டார். சினிமா பாப்புலாரிட்டி அடக்கமாக வைத்துக் கொள்பவர் அஜித். இயற்கையிலே அதிமுக ஆட்சியிலும் திமுக ஆட்சியிலும் ஆளும் கட்சி சாதகமாக இடைத்தேர்தல் அமையும் . தற்போது தமிழக வெற்றிக்கழக ஆட்சி இருப்பதால் அவர்களுக்கு ஒரு சில சாதகம் இருக்கலாம் ஆனால் மக்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பாட்டுக்கு பாட்டு போட்டி தான் கடந்த தமிழக சட்டசபையில் நடைபெற்றது . தரமான விவாதங்கள் முக்கியமான பிரச்சினை குறித்தான கருத்துக்கள் எதுவும் இல்லை. விஜயின் ஆவேச பேச்சு முதிர்ச்சியுள்ள அரசியல்வாதிகளின் முகம் சுளிக்க வைத்துள்ளது . பிரதமர் மோடி அவர்கள் பிரிக்ஸ் மாநாட்டை சிறப்பாக நடத்தியுள்ளார். இதுவரை எந்த பிரதமரும் செய்யாததை மோடி செய்துள்ளார். ஒவ்வொரு இந்தியர்களும் பெருமைப்பட வேண்டும். அஜித் விஜய் சினிமாக்காரர்கள் கலந்து கொள்ளும் சுதந்திர தினம் அனைத்தும் செய்திகளாகி விவாதங்களாகி வருகிறது தமிழக மக்களின் அரசியல் ரசனையை மிகவும் குறைத்துக் கொண்டு போகிறோம். பிரிக்ஸ் மாநாட்டை பத்தி பேசலாம் நமது அதன் தீர்மானத்தை பத்தி பேசலாம் நாம் சொல்வதைக் கேட்கும் இடத்தில் அவர்கள் இருக்கிறார்களே . ரஷ்ய பிரதமரிடம் மொழிபெயர்த்த திருக்குறள் வழங்கப்பட்டுள்ளது ஆனால் நாம் கும்மிடிப்பூண்டியை தாண்டி திருக்குறள் பற்றி பேச மாட்டீங்கிறோம். இதெல்லாம் பிரதமர் மோடி வாக்கு வங்கிக்காகவா செய்கிறார். சாதாரண விஷயங்களை விட்டு உயர்ந்த விஷயங்களை மக்கள் பேச வேண்டும். மதரீதியான விஷயங்கள் சட்டமன்றத்தில் போச வேண்டாம் அப்படி வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அனைத்து மதங்கள் சார்ந்த விஷயங்களை பேச அனுமதிக்க வேண்டும். மத்திய அரசால் நமக்கு வரவேண்டிய திட்டங்கள் வேறு மாநிலங்களுக்கு செல்கிறது அவர்கள் பலன் அடைகிறார்கள் வளர்ச்சி அடைந்து வருகிறார்கள். மத்திய அரசின் திட்டமான பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்துவிட்டு பனையூர் பகுதியில் இடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் புதிய தலைமைச் செயலகம் என்றாலும் விஜய் வீட்டு அருகாமையில் விமான நிலையம் என்றாலும் விஜய் வீட்டின் அருகாமையில் . அப்படி ஒரு அரசாங்கம் யோசிக்க கூடாது. மத்திய அரசின் திட்டங்களான துறைமுகம் போடியில் நியூட்ரின அனல் மின் நிலையம் தற்போது விமான நிலையம் உள்ளிட்ட அனைத்தையும் எதிர்த்தால் எந்த முகத்தை வைத்து பிஜேபி காரர்கள் ஆகிய நாங்கள் பிரதமரிடம் திட்டங்களை கேட்க முடியும். மற்ற மாநிலங்கள் வளர்ச்சியை பற்றியும் பேசுகிறார்கள் ஆனால் நாம் சினிமாவை பற்றி தான் பேசுகிறோம் கவர்ச்சி அரசியலை பற்றி பேசுகிறோம் தமிழ்நாட்டில் ஓடுவது கிளாமரஸ் பாலிடிக்ஸ். இந்த நிலை மாற வேண்டுமென நான் விரும்புகிறேன்
    1
    BJP மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் போடியில் செய்தியாளர்களுக்கு வழங்கிய பேட்டி
விஜய்க்கு நல்ல அரசியல் ஆலோசர்கள் இல்லை. தமிழகத்தில் நடப்பது கிளாமரஸ் பாலிடிக்ஸ்.       லண்டனுக்கு யாரை ஈர்ப்பதற்கு சென்றுள்ளார் என்பது தெரியவில்லை.  அஜித் விஜய் நட்பு பாராட்டுவதன் மூலம் தற்போது தமிழகத்தின் இடைத்தேர்தலில் பாதிப்பு ஏற்படும் நான் நினைக்கவில்லை. அஜித் வாக்கு வங்கி நிரூபிக்கும் முயற்சி எடுக்கவில்லை அவர் செய்யவும் மாட்டார். சினிமா பாப்புலாரிட்டி அடக்கமாக வைத்துக் கொள்பவர் அஜித்.  பாரதி ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் பேட்டி
தேனி மாவட்டம் போடியில் விநாயகர் சேவா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட பிஜேபி மாநில பொதுச் செயலாளரும் பேராசிரியருமான ராம சீனிவாசன் அவர்கள் அடுத்த விநாயகர் சதுர்த்திக்குள் 2000 கிராம் அளவில் தங்கத்தினால் ஆன விநாயகர் சிலை அமைப்பதற்கான முயற்சியினை துவக்கி வைத்தார். தற்போது வரை நகையாகவோ அல்லது பணமாகவோ கொடுக்கப்பட்ட பக்தர்களுக்கான நன்கொடை ரசீதை வழங்கி சிறப்பித்த அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில்
விஜய்க்கு நல்ல அரசியல் ஆலோசர்கள் இல்லை. தமிழகத்தில் நடப்பது கிளாமரஸ் பாலிடிக்ஸ்.       லண்டனுக்கு யாரை ஈர்ப்பதற்கு சென்றுள்ளார் என்பது தெரியவில்லை.  அஜித் விஜய் நட்பு பாராட்டுவதன் மூலம் தற்போது தமிழகத்தின் இடைத்தேர்தலில் பாதிப்பு ஏற்படும் நான் நினைக்கவில்லை. அஜித் வாக்கு வங்கி நிரூபிக்கும் முயற்சி எடுக்கவில்லை அவர் செய்யவும் மாட்டார். சினிமா பாப்புலாரிட்டி அடக்கமாக வைத்துக் கொள்பவர் அஜித்.  
இயற்கையிலே அதிமுக ஆட்சியிலும் திமுக ஆட்சியிலும் ஆளும் கட்சி சாதகமாக இடைத்தேர்தல் அமையும் . தற்போது தமிழக வெற்றிக்கழக ஆட்சி இருப்பதால் அவர்களுக்கு ஒரு சில சாதகம் இருக்கலாம் ஆனால் மக்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
பாட்டுக்கு பாட்டு போட்டி தான் கடந்த தமிழக சட்டசபையில் நடைபெற்றது . தரமான விவாதங்கள் முக்கியமான பிரச்சினை குறித்தான கருத்துக்கள் எதுவும் இல்லை.  விஜயின் ஆவேச பேச்சு முதிர்ச்சியுள்ள அரசியல்வாதிகளின் முகம் சுளிக்க வைத்துள்ளது .
பிரதமர் மோடி அவர்கள் பிரிக்ஸ் மாநாட்டை சிறப்பாக நடத்தியுள்ளார். இதுவரை எந்த பிரதமரும் செய்யாததை மோடி செய்துள்ளார். ஒவ்வொரு இந்தியர்களும் பெருமைப்பட வேண்டும்.  அஜித் விஜய் சினிமாக்காரர்கள் கலந்து கொள்ளும் சுதந்திர தினம் அனைத்தும் செய்திகளாகி விவாதங்களாகி வருகிறது தமிழக மக்களின் அரசியல் ரசனையை மிகவும் குறைத்துக் கொண்டு போகிறோம்.   பிரிக்ஸ்  மாநாட்டை  பத்தி பேசலாம் நமது   அதன் தீர்மானத்தை பத்தி பேசலாம் நாம் சொல்வதைக் கேட்கும் இடத்தில் அவர்கள் இருக்கிறார்களே   . ரஷ்ய பிரதமரிடம் மொழிபெயர்த்த திருக்குறள் வழங்கப்பட்டுள்ளது ஆனால் நாம் கும்மிடிப்பூண்டியை தாண்டி திருக்குறள் பற்றி பேச மாட்டீங்கிறோம். 
இதெல்லாம் பிரதமர் மோடி வாக்கு வங்கிக்காகவா செய்கிறார். சாதாரண விஷயங்களை விட்டு உயர்ந்த விஷயங்களை மக்கள் பேச வேண்டும்.
மதரீதியான விஷயங்கள் சட்டமன்றத்தில் போச வேண்டாம் அப்படி வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அனைத்து மதங்கள் சார்ந்த விஷயங்களை பேச அனுமதிக்க வேண்டும்.
மத்திய அரசால் நமக்கு வரவேண்டிய திட்டங்கள் வேறு மாநிலங்களுக்கு செல்கிறது  அவர்கள் பலன் அடைகிறார்கள் வளர்ச்சி அடைந்து வருகிறார்கள்.  
மத்திய அரசின் திட்டமான பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்துவிட்டு  பனையூர் பகுதியில் இடம்  தேடிக் கொண்டிருக்கிறார்கள்  புதிய தலைமைச் செயலகம் என்றாலும் விஜய் வீட்டு அருகாமையில் விமான நிலையம் என்றாலும் விஜய் வீட்டின் அருகாமையில் . அப்படி ஒரு அரசாங்கம் யோசிக்க கூடாது. 
மத்திய அரசின் திட்டங்களான துறைமுகம் போடியில் நியூட்ரின அனல் மின் நிலையம் தற்போது விமான நிலையம் உள்ளிட்ட அனைத்தையும் எதிர்த்தால்  எந்த முகத்தை வைத்து பிஜேபி காரர்கள் ஆகிய நாங்கள் பிரதமரிடம்  திட்டங்களை  கேட்க முடியும்.
மற்ற மாநிலங்கள் வளர்ச்சியை பற்றியும் பேசுகிறார்கள் ஆனால் நாம் சினிமாவை பற்றி தான் பேசுகிறோம்  கவர்ச்சி அரசியலை பற்றி பேசுகிறோம் தமிழ்நாட்டில் ஓடுவது கிளாமரஸ் பாலிடிக்ஸ். இந்த நிலை மாற வேண்டுமென நான் விரும்புகிறேன்
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • *தேனியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகளை ஊர்வலம் எடுத்துச் சென்று முல்லைப் பெரியாற்றில் கரைத்தனர்* விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு தேனியில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் திருமேனிகளை வைத்து நேற்று வழிபாடு நடைபெற்றது இதனை அடுத்து விநாயகர் திருமேனிகளைக் இன்று ஆற்றில் கரைப்பதற்காக விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது இதற்காக தேனியில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் திருமேனிகளை பொம்மையகவுண்டன்பட்டி பகுதிக்கு வாகனத்தில் எடுத்துவரப்பட்டது அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது செயற்கை யானையை தத்ரூபமாக அழைத்து வரப்பட்டு சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் சிறிய விநாயகர் சிலைகளை தலையில் சுமந்து கொண்டு மேளதாளத்துடன் முன்னே சொல்ல சிறுவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் விநாயகர் திருமேனிகளின் ஊர்வலம் தொடங்கியது பொம்மையை கவுண்டன்பட்டியில் தொடங்கிய இந்த ஊர்வலம் அல்லிநகரம், பழைய பேருந்து நிலையம், பங்களாமேடு உள்ளிட்ட தேனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அரண்மனை புதூரில் உள்ள முல்லைப் பெரியாற்றில் கரைத்தனர் இந்து எழுச்சி முன்னணி சார்பில் நடைபெற்ற இந்த விநாயகர் ஊர்வலத்தில் சுமார் 150 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை எடுத்து வரப்பட்டு முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது இதனை தொடர்ந்து இந்து முன்னணி சார்பில் இன்று மாலையில் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகள் ஊர்வலம் நடைபெற உள்ளது
    1
    *தேனியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகளை ஊர்வலம் எடுத்துச் சென்று முல்லைப் பெரியாற்றில் கரைத்தனர்*
விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு தேனியில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் திருமேனிகளை வைத்து நேற்று வழிபாடு நடைபெற்றது இதனை அடுத்து விநாயகர் திருமேனிகளைக் இன்று ஆற்றில் கரைப்பதற்காக விநாயகர் ஊர்வலம்  நடைபெற்றது 
இதற்காக தேனியில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் திருமேனிகளை பொம்மையகவுண்டன்பட்டி பகுதிக்கு வாகனத்தில் எடுத்துவரப்பட்டது அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது
செயற்கை யானையை தத்ரூபமாக அழைத்து வரப்பட்டு சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் சிறிய விநாயகர் சிலைகளை தலையில் சுமந்து கொண்டு மேளதாளத்துடன் முன்னே சொல்ல சிறுவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் விநாயகர் திருமேனிகளின் ஊர்வலம் தொடங்கியது 
பொம்மையை கவுண்டன்பட்டியில் தொடங்கிய இந்த ஊர்வலம் அல்லிநகரம், பழைய பேருந்து நிலையம், பங்களாமேடு உள்ளிட்ட தேனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அரண்மனை புதூரில் உள்ள  முல்லைப் பெரியாற்றில் கரைத்தனர் 
இந்து எழுச்சி முன்னணி சார்பில் நடைபெற்ற இந்த விநாயகர் ஊர்வலத்தில் சுமார் 150 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை எடுத்து வரப்பட்டு முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது 
இதனை தொடர்ந்து இந்து முன்னணி சார்பில் இன்று மாலையில் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகள் ஊர்வலம் நடைபெற உள்ளது
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.