இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தேனியில் நடைபெற்றது தேனியில் இந்து முன்னணி சார்பில் மாவட்ட செயலாளர் உமையராஜன் தலைமையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விநாயகர் திருமேனிகளை காவல்துறை நிர்ணயித்த அரண்மனை புதூர் முல்லை ஆற்றில் கரைப்பதற்காக ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி நடந்தது இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் முருகன் மாவட்ட துணை தலைவர் திலகராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் தேனி நகர பொதுச்செயலாளர் ராம் கண்ணன் வரவேற்புரை ஆற்றினார் தமிழ்நாடு ஹோட்டல் சங்க மாநில செயலாளர் சுதாகர் மாநில இணை அமைப்பாளர் மாரிசாமி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் இந்து முன்னணி சென்னை மாநகர செயலாளர் சிவ விஜயன் விழாவில் சிறப்புரையாற்றினார் தொழிலதிபர் பத்ரிநாத் ஊர்வலத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார் இந்த நிகழ்வில் சாலை பிள்ளையார் கோவிலில் தொடங்கிய ஊர்வலமானது பெரியகுளம் சாலை அல்லிநகரம் நேரு சிலை தேனி பழைய பேருந்து நிலையம் மதுரை சாலை வழியாக அரண்மனை புதூர் முல்லை ஆற்றுக்குச் சென்றடைந்து அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் முல்லை ஆற்றில் கரைக்கப்பட்டது இந்த நிகழ்வில் நிறைவாக தேனி நகரச் செயலாளர் பாண்டியன் நன்றி கூறினார்
இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தேனியில் நடைபெற்றது தேனியில் இந்து முன்னணி சார்பில் மாவட்ட செயலாளர் உமையராஜன் தலைமையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விநாயகர் திருமேனிகளை காவல்துறை நிர்ணயித்த அரண்மனை புதூர் முல்லை ஆற்றில் கரைப்பதற்காக ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி நடந்தது இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் முருகன் மாவட்ட துணை தலைவர் திலகராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் தேனி நகர பொதுச்செயலாளர் ராம் கண்ணன் வரவேற்புரை ஆற்றினார் தமிழ்நாடு ஹோட்டல் சங்க மாநில செயலாளர் சுதாகர் மாநில இணை அமைப்பாளர் மாரிசாமி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் இந்து முன்னணி சென்னை மாநகர செயலாளர் சிவ விஜயன் விழாவில் சிறப்புரையாற்றினார் தொழிலதிபர் பத்ரிநாத் ஊர்வலத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார் இந்த நிகழ்வில் சாலை பிள்ளையார் கோவிலில் தொடங்கிய ஊர்வலமானது பெரியகுளம் சாலை அல்லிநகரம் நேரு சிலை தேனி பழைய பேருந்து நிலையம் மதுரை சாலை வழியாக அரண்மனை புதூர் முல்லை ஆற்றுக்குச் சென்றடைந்து அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் முல்லை ஆற்றில் கரைக்கப்பட்டது இந்த நிகழ்வில் நிறைவாக தேனி நகரச் செயலாளர் பாண்டியன் நன்றி கூறினார்
- தங்கம்மாள் புரத்தில் ஒரு மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடத்தோடு வருசநாடு சாலையில் மறியல் போராட்டம் *கடமலைகுண்டு- வருசநாடு சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பள்ளி கல்லூரி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இரண்டுபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தங்கம்மாள்புரம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என்றும் குடிநீர் கேட்டால் ஊராட்சி செயலர், குடிநீர் எடுத்துவிடும் நபர் உள்ளிட்டோர் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் புதிதாக கடைகள் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் இணைப்புகளை கொடுத்து மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வரும் குடிநீரை அப்படியே கடைகள் வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதால் வீடுகளுக்கு குடிநீரே வருவதில்லை என்றும் குற்றம்சாட்டி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து உடனடியாக குடிநீர் வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடமலைகுண்டு - வருசநாடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதால் இரண்டுபுறமும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட பேருந்துகள் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.1
- வருசநாடு அருகே உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை என குற்றம் சாட்டி அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தங்கம்மாள்புரம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் இரண்டுபுறமும் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது கூட்டுகுடிநீர் திட்டத்திலிருந்து தங்கம்மாள்புரம் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வரும் குடிநீரை புதிதாக கடைகள் வணிக நிறுவனங்களுக்கு இணைப்பு கொடுத்து முழுவதுமாக எடுத்து கொள்வதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடியிருப்புகளுக்கு குடிநீரே வழங்கப்படவில்லை என்றும் இதை கேட்டால் குடிநீர் எடுத்து விடும் குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்களும், ஊராட்சி பணியாளர்களும் அலட்சியமாக பதில் கூறுவதாகவும் குற்றம் சாட்டி தொடர்ச்சியாக மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த கடமலைக்குண்டு காவல்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர் குடிநீர் கேட்டு நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் கடமலைகுண்டு- வருசநாடு சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது1
- *தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி, பெண்கள் உள்ளிட்ட கிராமமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம்* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தங்கம்மாள்புரம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என்றும், குடிநீர் கேட்டால் ஊராட்சி செயலர், குடிநீர் எடுத்துவிடும் நபர் உள்ளிட்டோர் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் புதிதாக கடைகள் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் இணைப்புகளை கொடுத்து மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வரும் குடிநீரை அப்படியே கடைகள் வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதால் வீடுகளுக்கு குடிநீரே வருவதில்லை என்றும் குற்றம்சாட்டி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து உடனடியாக குடிநீர் வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடமலைகுண்டு - வருசநாடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதால் இரண்டு புறமும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட பேருந்துகள் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.1
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் செப்.20- ல் திருக்கல்யாணம், 23-ம் தேதி செப்பு தேரோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள வட பத்திர சன்னதியில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் செப்டம்பர் 20-ம் தேதி திருக்கல்யாணமும், 23-ம் தேதி செப்பு தேரோட்டமும் நடைபெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்) அவதார உற்சவமான புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஶ்ரீதேவி பூதேவி சமேதராக பெரிய பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதன்பின் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 11 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தினசரி காலை மண்டபங்களில் எழுந்தருளும் ஸ்ரீதேவி ஸ்ரீதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனமும், மாலை வீதி உலாவும் நடைபெறுகிறது. பிரமோற்சவ விழாவில் செப்டம்பர் 19-ம் தேதி தங்க கருட சேவையும், 20-ம் தேதி மாலை 4 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரியபெருமாள் திருக்கல்யாணமும், 21-ம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது. பெரிய பெருமாள் அவதரித்த பெரிய திருவோண நட்சத்திரத்தில் செப்டம்பர் 23- ம் தேதி காலை 7 மணிக்கு செப்பு தேரோட்டம் நடைபெற உள்ளது.இதில் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி, நகராட்சி ஆணையாளர் குமார்,வட்டாட்சியர் அறிவானந்தம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.1
- விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு) திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள சேம்பிலியூத்து என்ற மலை கிராமத்தில் உள்ள எஸ்டேட்டில் நேற்று விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை. (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு)1
- திண்டுக்கல் சிறுமலை வனசரகத்தின் முக்கிய அறிவிப்பு விவசாயிகளுக்கு1
- கன்னிவாடி அருகே கிணற்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து படுகாயம் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே சோமலிங்க சுவாமி கோவில் செல்லும் வழியில் நாட்ராயன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் உரை அமைக்கும் பணி மேற்கொள்ள கிணற்றுக்குள் இறங்கிய பெரியகுளம், கல்லுப்பட்டி சேர்ந்த ஈஸ்வரன்(32) என்பவர் கம்பி வடம் அறுந்து விழுந்ததில் கிணற்றுக்குள் சென்ட்ரிங் கம்பி உடலில் குத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் தீயணைப்புதுறையினர் கம்பியை அறுத்து மீட்பு வலையை பயன்படுத்தி ஈஸ்வரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்1
- கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நீண்ட நாட்களுக்குப் பின் கொட்டி தீர்த்த கனமழையால் விவசாயிகள் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொட்டித் தீர்த்த கனமழை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், இன்று எதிர்பாராத விதமாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான கம்பம், கூடலூர், லோயர் கேம்ப், உத்தமபாளையம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் மதியம் வரை வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் திடீரென மேகமூட்டம் திரண்டு வந்து பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழை காரணமாகச் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முக்கிய விவசாய மண்டலமாகத் திகழ்ந்து வருகிறது. இங்குள்ள திராட்சைத் தோட்டங்கள், தென்னை, வாழை மற்றும் காய்கறிப் பயிர்களுக்கு இந்த மழை மிகவும் அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்துள்ள இந்த மழை, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும் என்பதால் விவசாயிகள் பெரும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். தொடர் வெயிலால் அவதிப்பட்டு வந்த கம்பம் பள்ளத்தாக்கு மக்களுக்கு இந்தத் திடீர் மழை வெப்பத்தைத் தணித்து, இதமான குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1