logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

அருப்புக்கோட்டை அருகே குருந்தமடம் கிராமத்தில் பள்ளி அருகே தனியார் கால்சைட் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இருநூறுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே குருந்தமடம் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் தனியார் நிறுவனம் கால்சைட் குவாரி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அரசு பள்ளி அருகே இந்த குவாரி அமைய உள்ளதாகவும் இதனால் குவாரியில் வெடி வெடிக்கும் போது பள்ளி கட்டிடம் பாதிக்கப்படும் எனவும், மேலும் இந்த குவாரியால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு குடிநீர் பிரச்சினை ஏற்படும் எனவும் ஏற்கனவே குருந்தமடம் கிராமத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்படுவதாகவும் இதனால் மேலும் பல பாதிப்புகள் ஏற்படும் எனவும் புகார் தெரிவித்து குருந்தமடம் கிராம மக்கள் இருறூக்கும் மேற்பட்டோர் குருந்தமடம் கிராம எல்லையில் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பள்ளி மாணவர்களும் பள்ளிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பந்தல்குடி காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணவேணி, அருப்புக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை ஏற்காமல் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்த வாரி ஆரம்பிக்கும் பணியை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.‌

14 hrs ago
user_Virudhunagar
Virudhunagar
Virudhunagar, Tamil Nadu•
14 hrs ago

அருப்புக்கோட்டை அருகே குருந்தமடம் கிராமத்தில் பள்ளி அருகே தனியார் கால்சைட் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இருநூறுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே குருந்தமடம் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் தனியார் நிறுவனம் கால்சைட் குவாரி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அரசு பள்ளி அருகே இந்த குவாரி அமைய உள்ளதாகவும் இதனால் குவாரியில் வெடி வெடிக்கும் போது பள்ளி கட்டிடம் பாதிக்கப்படும் எனவும், மேலும் இந்த குவாரியால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு குடிநீர் பிரச்சினை ஏற்படும் எனவும் ஏற்கனவே குருந்தமடம் கிராமத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்படுவதாகவும் இதனால் மேலும் பல பாதிப்புகள் ஏற்படும் எனவும் புகார் தெரிவித்து குருந்தமடம் கிராம மக்கள் இருறூக்கும் மேற்பட்டோர் குருந்தமடம் கிராம எல்லையில் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பள்ளி மாணவர்களும் பள்ளிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பந்தல்குடி காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணவேணி, அருப்புக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை ஏற்காமல் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்த வாரி ஆரம்பிக்கும் பணியை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.‌

More news from Tamil Nadu and nearby areas
  • ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் புரட்டாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபத்ரசயனர் திருக்கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீ ஆண்டாள் மானிட பெண்ணாக அவதரித்து பாமாலை பாடி பின் பூமாலை சுற்றி ஸ்ரீரங்கநாதரை அடைந்தார் என்பது ஐதீகம்.ஆண்டாள் தினமும் தான் சூடி கலைந்த மாலையை ஸ்ரீரங்கநாதரின் அம்சமான ஸ்ரீ வடபத்ரசயனருக்குத்தான் சாற்றி வந்துள்ளார். இந்த வடபத்ர சயனருக்கான புரட்டாசி பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று துவங்கும் உற்சவம் 12 நாட்கள் நடைபெறும்.ஐந்தாம் திருநாள் தங்க கருட சேவையும், ஒன்பதாம் திருநாள்(23.09.26) செப்பு திருத்தேரோட்டமும் நடைபெற உள்ள நிலையில் தினந்தோறும் பூதேவி ஸ்ரீதேவி சமேத வடபத்ரசயனர் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். கொடியேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் புரட்டாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபத்ரசயனர் திருக்கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீ ஆண்டாள் மானிட பெண்ணாக அவதரித்து பாமாலை பாடி பின் பூமாலை சுற்றி ஸ்ரீரங்கநாதரை அடைந்தார் என்பது ஐதீகம்.ஆண்டாள் தினமும் தான் சூடி கலைந்த மாலையை ஸ்ரீரங்கநாதரின் அம்சமான ஸ்ரீ வடபத்ரசயனருக்குத்தான் சாற்றி வந்துள்ளார். இந்த வடபத்ர சயனருக்கான புரட்டாசி பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 
இன்று துவங்கும் உற்சவம் 12 நாட்கள் நடைபெறும்.ஐந்தாம் திருநாள் தங்க கருட சேவையும், ஒன்பதாம் திருநாள்(23.09.26) செப்பு திருத்தேரோட்டமும் நடைபெற உள்ள நிலையில் தினந்தோறும் பூதேவி ஸ்ரீதேவி சமேத வடபத்ரசயனர் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். கொடியேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    5 hrs ago
  • மாணவர்களுடன் காலை உணவு அருந்திய விருதுநகர் மாவட்ட ஆட்சியர். விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா ஹரி இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.09.2026) திருவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம், சுகாதாரம் மற்றும் உணவு வழங்கப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை அருந்தி, அவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களின் கல்வி, பள்ளியில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
    1
    மாணவர்களுடன் காலை உணவு அருந்திய விருதுநகர் மாவட்ட ஆட்சியர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா ஹரி இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.09.2026) திருவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம், சுகாதாரம் மற்றும் உணவு வழங்கப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை அருந்தி, அவர்களுடன் கலந்துரையாடினார்.
மாணவர்களின் கல்வி, பள்ளியில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
    user_குமார்
    குமார்
    Local News Reporter காரியாபட்டி, விருதுநகர், தமிழ்நாடு•
    14 hrs ago
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் செப்.20- ல் திருக்கல்யாணம், 23-ம் தேதி செப்பு தேரோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள வட பத்திர சன்னதியில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் செப்டம்பர் 20-ம் தேதி திருக்கல்யாணமும்,  23-ம் தேதி செப்பு தேரோட்டமும் நடைபெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்)  அவதார உற்சவமான புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஶ்ரீதேவி பூதேவி சமேதராக பெரிய பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதன்பின் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 11 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தினசரி காலை மண்டபங்களில் எழுந்தருளும் ஸ்ரீதேவி ஸ்ரீதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனமும், மாலை வீதி உலாவும் நடைபெறுகிறது. பிரமோற்சவ விழாவில் செப்டம்பர் 19-ம் தேதி தங்க கருட சேவையும், 20-ம் தேதி மாலை 4 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரியபெருமாள் திருக்கல்யாணமும், 21-ம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது.  பெரிய பெருமாள் அவதரித்த பெரிய திருவோண நட்சத்திரத்தில் செப்டம்பர் 23- ம் தேதி காலை 7 மணிக்கு செப்பு தேரோட்டம் நடைபெற உள்ளது.இதில் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி, நகராட்சி ஆணையாளர் குமார்,வட்டாட்சியர் அறிவானந்தம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

செப்.20- ல் திருக்கல்யாணம், 23-ம் தேதி செப்பு தேரோட்டம்



ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள வட பத்திர சன்னதியில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோற்சவ விழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் செப்டம்பர் 20-ம் தேதி திருக்கல்யாணமும்,  23-ம் தேதி செப்பு தேரோட்டமும் நடைபெறுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்)  அவதார உற்சவமான புரட்டாசி பிரம்மோற்சவ விழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஶ்ரீதேவி பூதேவி சமேதராக பெரிய பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதன்பின் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 11 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தினசரி காலை மண்டபங்களில் எழுந்தருளும் ஸ்ரீதேவி ஸ்ரீதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனமும், மாலை வீதி உலாவும் நடைபெறுகிறது. பிரமோற்சவ விழாவில் செப்டம்பர் 19-ம் தேதி தங்க கருட சேவையும், 20-ம் தேதி மாலை 4 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரியபெருமாள் திருக்கல்யாணமும், 21-ம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது.  பெரிய பெருமாள் அவதரித்த பெரிய திருவோண நட்சத்திரத்தில் செப்டம்பர் 23- ம் தேதி காலை 7 மணிக்கு செப்பு தேரோட்டம் நடைபெற உள்ளது.இதில் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி, நகராட்சி ஆணையாளர் குமார்,வட்டாட்சியர் அறிவானந்தம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    1 hr ago
  • கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில்  சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், வேடம் அணிந்து,பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமத்தில் அமைந்துள்ள சக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஊர்வலம் ரயில் நிலையம் முன்பு மத நல்லிணக்கத்தையும்,ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் - சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், மேடம் அணிந்து,பக்தர்கள் 1008 பால்குடம், மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி திமுக கிழக்கு நகர செயலாளர் சுரேஷ்,தலைமையில் கோவில்பட்டி ரஜினிகாந்த் நற்பணி மன்றம் நகர செயலாளர் மகேஷ் பாலா முன்னணியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் இந்த ஊர்வலம் சாத்தூர் மெயின் ரோடு புது கிராமம் மெயின் ரோடு வழியாக வந்து ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலுக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேத்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    1
    கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில்  சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், வேடம் அணிந்து,பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமத்தில் அமைந்துள்ள சக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஊர்வலம் ரயில் நிலையம் முன்பு மத நல்லிணக்கத்தையும்,ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் - சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், மேடம் அணிந்து,பக்தர்கள் 1008 பால்குடம், மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி திமுக கிழக்கு நகர செயலாளர் சுரேஷ்,தலைமையில் கோவில்பட்டி ரஜினிகாந்த் நற்பணி மன்றம் நகர செயலாளர் மகேஷ் பாலா முன்னணியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் இந்த ஊர்வலம் சாத்தூர் மெயின் ரோடு புது கிராமம் மெயின் ரோடு வழியாக வந்து ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலுக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேத்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    user_News
    News
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • தேவகோட்டையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா , சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில், 23-ஆவது வட்டக் கழகம் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வில், திமுக நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஜாஹிர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுக, திக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் அண்ணாவின் மலர் மாலை அணிவிக்கப்பட்ட புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அண்ணாவின் சிந்தனைகளைப் போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, கலந்துகொண்ட அனைவராலும் சிறப்பிக்கப்பட்டது.
    1
    தேவகோட்டையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா , 
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில், 23-ஆவது வட்டக் கழகம் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்வில், திமுக நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஜாஹிர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுக, திக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் அண்ணாவின் மலர் மாலை அணிவிக்கப்பட்ட புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அண்ணாவின் சிந்தனைகளைப் போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, கலந்துகொண்ட அனைவராலும் சிறப்பிக்கப்பட்டது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • என் ஊர் திருவிழா நாளைக்கு கும்பாபிஷேகம் விழா எல்லோரும் வாங்க
    1
    என் ஊர் திருவிழா நாளைக்கு கும்பாபிஷேகம் விழா எல்லோரும் வாங்க
    user_Kamaladevi
    Kamaladevi
    பரமக்குடி, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    14 hrs ago
  • தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம் வராக நதியில் சிலைகள் கரைப்பு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இந்து முன்னணி சார்பில் 37-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள காமாட்சிபுரம், எ.புதுப்பட்டி, தாமரைக்குளம், தெ.கள்ளிப்பட்டி, வடுகபட்டி, மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆனைத் தொடர்ந்து இன்று மாலை வேளையில் அனைத்துச் சிலைகளும் பெரியகுளம் மதுரை சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டன. அதைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம் சுருள் கத்தி, வால் சுற்றுதல், உள்ளிட்ட விளையாட்டுக்களுடன் அரண்மனைத் தெரு, வி.ஆர்.பி தெரு, தென்கரை சுதந்திர வீதி மற்றும் அக்ரகாரம் வழியாக முக்கிய வீதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் சென்றது. சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த ஊர்வலத்தின் முடிவில், அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோவில் அருகே உள்ள வராக நதி ஆற்றில் சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாகக் கரைக்கப்பட்டன. அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெறுவதற்காக, பெரியகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் நல்லு தலைமையில், 18 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 650 -க்கும் மேற்பட்ட காவலர்கள் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
    1
    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம்  வராக நதியில் சிலைகள் கரைப்பு
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இந்து முன்னணி சார்பில் 37-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள காமாட்சிபுரம், எ.புதுப்பட்டி, தாமரைக்குளம், தெ.கள்ளிப்பட்டி, வடுகபட்டி, மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆனைத் தொடர்ந்து இன்று மாலை வேளையில் அனைத்துச் சிலைகளும் பெரியகுளம் மதுரை சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டன. 
அதைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம் சுருள் கத்தி, வால்  சுற்றுதல், உள்ளிட்ட விளையாட்டுக்களுடன்  அரண்மனைத் தெரு, வி.ஆர்.பி தெரு, தென்கரை சுதந்திர வீதி மற்றும் அக்ரகாரம் வழியாக முக்கிய வீதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் சென்றது.
சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த ஊர்வலத்தின் முடிவில், அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோவில் அருகே உள்ள வராக நதி ஆற்றில் சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாகக் கரைக்கப்பட்டன.
அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெறுவதற்காக, பெரியகுளம் காவல்துறை கண்காணிப்பாளர்  நல்லு தலைமையில், 18 காவல்  ஆய்வாளர்கள் உள்ளிட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 650 -க்கும் மேற்பட்ட காவலர்கள் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது- சிவகாசிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி... தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள் கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் விமர்சனம்... அறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசி காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள அவரது திருவுருவர் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மக்கள் விரும்புகின்ற ஆட்சியாகவும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்பதுதான் மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது இடையில் ஏற்பட்ட சில சருக்கல்கள், கருத்து திணிப்புகள், அரசியல் கோல்மால்கள், வாட்ஸாப், பேஸ்புக், இன்டஸ்ட்ராகிராம் போன்ற குழப்பங்க அண்ணா திமுக ளால் ஆட்சி மாற்றம் வந்துள்ளது தற்போது நடைபெறும் ஆட்சி மக்களால் விரும்பும் ஆட்சி கிடையாது நகைப்புக்குரிய ஆட்சியாக விஜய் ஆட்சி உள்ளது இடைத்தேர்தலில் அதிமுக முதன்மையான கட்சியாக வெற்றி பெறும், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் எடப்பாடியார் தலைமை தமிழகத்திற்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு மக்கள் வாக்களிக்க தயாராகிவிட்டார்கள் தவெக ஆட்சிக்கு இடைத்தேர்தல் பாடம் புகட்டும் முதல்வரின் லண்டன் பயணம் குறித்து முதல்வர் சார்பில் வெளியிட்டுள்ள புகைப்படம் பேசுபொருளாக தமிழகத்தில் உலாவி வருகிறது, அதை தார்மீகமாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, ஒரு நாட்டின் முதல்வர் எப்படி வாழ வேண்டும், எப்படி இருக்க வேண்டும், பிறருக்கு முன் உதாரணமாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு இருக்க வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள் ஆனால் அந்த நிலைப்பாட்டில் வாழக்கூடியவராக இன்றைய தமிழக முதல்வர் இருக்கவில்லை முதல்வரின் லண்டன் பயணத்தை சந்தேக கண்ணோடு தமிழக மக்கள் பார்க்கிறார்கள் வெளிநாட்டில் முதலீடை ஈர்க்க சென்றுள்ள முதல்வர், தொழில்துறை அமைச்சர் இல்லாமல் சென்றாலும் சம்பந்தப்பட்ட பணிகளை செய்து வெற்றிகரமாக திரும்பினால் சந்தோஷம் ஆனால் முதல்கட்டமாக ஊடகத்தில் வந்த செய்திகளை பார்க்கும்போது முதல்வர் வெளிநாடு சென்ற நோக்கமே வேறாக தெரிகிறது மக்கள், அரசியல் கட்சி தலைவர்களின் எதிர்ப்புகளை தொடர்ந்து சில பணிகளை செய்வதாக கேள்விப்படுகிறோம் மொத்தத்தில் முதல்வர் தடம் மாறி, தடம் புரண்டு நடவடிக்கையில் ஈடுப்பட்டுக்கொண்டிருப்பதாக தமிழக மக்கள் எண்ணுகிறார்கள், இதை முதல்வர் மாற்றிக்கொள்ள வேண்டும் தமிழக முதலமைச்சராக வந்த பின்னர், அனைத்து முதலமைச்சர்களும் முதல்வர்களுக்கான பண்போடும், தகுதியோடும், தன்மையோடு வாழ்ந்துகொண்டு தமிழகத்தை ஆண்டிருக்கிறார்கள் அதேபோல் விஜயும் முதல்வருக்கான பண்போடும், தகுதியோடும் தன்மையோடும் வாழ்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அதற்கு எதிர்மறையான நிலைப்பாட்டோடு முதல்வர் விஜய்யின் ஆட்சியும் அவரது செயல்பாடும் இருக்கிறது முதல்வர் விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள் தவெக ஆட்சி விளையாட்டுத்தனமான ஆட்சி காவல்துறையினர் மானிய கோரிக்கையின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சார்பாக பல்வேறு கேள்விகளை முன் வைத்தபோது, எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காத முதல்வர் விஜய் அவருக்கே தெரிந்த பாணியில் வசனத்தை பேசி பதில் உரையை முடித்து விட்டார் முதல்வர் விஜயின் பதிலுரை பார்ப்பதற்கு வேண்டுமானால் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும், சிரிப்பாகவும், ஜோக்காகவும் இருக்கலாமே தவிர நல்ல விவரம் தெரிந்த, அரசியல் தெரிந்தவர்கள் முதல்வர் விஜயின் பேச்சை எள்ளி நகையாடுகிறார்கள் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ஆட்சியாளர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு கூட முதல்வர் விஜய் பதிலளிக்கவில்லை காவல்துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்களுக்கு எந்தவிதமான முன்னேற்ற அறிவிப்புகளும் காவல்துறை மானிய கோரிக்கையில் வரவில்லை இதை காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை சங்கடத்துடன் வாழ்வதை காண முடிகிறது தமிழக மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கின்ற காவல் துறைக்கு எந்தவிதமான அறிவிப்புகளோ சலுகைகளோ வழங்கப்படாததை தமிழக மக்கள், காவல்துறையினரால் ஏற்றுக்கொள்ளவில்லை மொத்தத்தில் பிறரை ஏளனமாக பேசுவதற்கும், தமக்கு பிடிக்காதவர்களை எள்ளி நகையாடுவதற்கும் சட்டமன்றத்தை ஒரு கருவியாக முதல்வர் விஜய் பயன்படுத்திக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி ஆண்ட காலத்திலும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும் சட்டமன்றத்தின் புனிதத் தன்மை காக்கப்பட்டது தற்போது சட்டமன்றத்தின் புனிதத் தன்மை குறைந்து பாலாகிவிட்டது, இந்த நிலை மாற வேண்டும் என்றால் முதல்வர் விஜய் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், அதே நேரத்தில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் பணி செய்ய விரும்பவில்லை தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது, மத்திய அரசின் மறைமுக ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே தவெகவிற்கு ஆதரவு கொடுத்தோமே தவிர தவெகாவின் தலைவரை பிடித்தோ, தவெகவின் கொள்கையை பிடித்தோ ஆதரவு கொடுக்கவில்லை என கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சொல்லிவிட்டார்கள் தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள் கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நிலையான ஆட்சியமைக்கும் தன்மை முதல்வர் விஜய்கோ, தவெக கட்சிக்கோ கிடையாது ஆட்சி நிலைக்க முதல்வர் விஜய் தனது நிலைய மாற்றிக்கொள்ள வேண்டும் பிறரை பழி வாங்குவதற்கோ, பிறரை இகழ்ந்து, புகழ்ந்து பேசுவதற்கோ, தன்னை புகழ்ந்து பேசுவதற்கோ சட்டமன்றத்தை கருவியாக பயன்படுத்த நினைத்தால் தமிழக மக்கள் காலப்போக்கில் தூக்கி எறிந்து விடுவார்கள் இதற்கு ஆதரவு தர மாட்டார்கள் தமிழக மக்கள் எப்பொழுதும் முழிப்போடும் இருக்கக்கூடியவர்கள், தமிழக மக்களும், தமிழ் அறிஞர்கள், அரசியல் அறிந்தவர்கள் எள்ளி நகையாட கூடிய சூழ்நிலையை பார்க்கிறோம் இந்த நிலை மாற வேண்டும் என்றால் சட்டமன்றம் தனி சிறப்போடு இயங்க வேண்டும் சட்டமன்றத்தில் இன்றைக்கு என்ன பாடல் பாடப்போகிறார்கள், யார் பாடப் போகிறார்கள் என பட்டிமன்றம் போல் செயல்படும் சட்டமன்றத்தின் நிலையை மாற்ற வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், முதல்வர் விஜய் அதனை மாற்றுவாரா என்றால் அது கேள்விகுறியாகவே இருக்கிறது
    1
    தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது- சிவகாசிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி...
தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள்  கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான்  கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் விமர்சனம்...
அறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசி காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள அவரது திருவுருவர் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, 
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மக்கள் விரும்புகின்ற ஆட்சியாகவும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்பதுதான் மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது 
இடையில் ஏற்பட்ட  சில சருக்கல்கள்,  கருத்து திணிப்புகள், அரசியல் கோல்மால்கள், வாட்ஸாப், பேஸ்புக், இன்டஸ்ட்ராகிராம் போன்ற குழப்பங்க அண்ணா திமுக ளால் ஆட்சி மாற்றம் வந்துள்ளது
தற்போது நடைபெறும் ஆட்சி மக்களால் விரும்பும் ஆட்சி கிடையாது 
நகைப்புக்குரிய ஆட்சியாக விஜய் ஆட்சி உள்ளது 
இடைத்தேர்தலில் அதிமுக முதன்மையான கட்சியாக வெற்றி பெறும், 
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில்  லட்சக்கணக்கான வாக்குகள் பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும்
எடப்பாடியார் தலைமை தமிழகத்திற்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு மக்கள் வாக்களிக்க தயாராகிவிட்டார்கள் 
தவெக ஆட்சிக்கு இடைத்தேர்தல் பாடம் புகட்டும்
முதல்வரின் லண்டன் பயணம் குறித்து முதல்வர் சார்பில்  வெளியிட்டுள்ள புகைப்படம் பேசுபொருளாக தமிழகத்தில் உலாவி வருகிறது, அதை தார்மீகமாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, 
ஒரு நாட்டின் முதல்வர் எப்படி வாழ வேண்டும், எப்படி இருக்க வேண்டும், பிறருக்கு முன் உதாரணமாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு இருக்க வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள் 
ஆனால் அந்த நிலைப்பாட்டில் வாழக்கூடியவராக இன்றைய தமிழக முதல்வர் இருக்கவில்லை 
முதல்வரின் லண்டன் பயணத்தை சந்தேக கண்ணோடு தமிழக மக்கள் பார்க்கிறார்கள்
வெளிநாட்டில் முதலீடை ஈர்க்க சென்றுள்ள முதல்வர், தொழில்துறை அமைச்சர் இல்லாமல் சென்றாலும் சம்பந்தப்பட்ட பணிகளை செய்து வெற்றிகரமாக திரும்பினால் சந்தோஷம்
ஆனால் முதல்கட்டமாக ஊடகத்தில் வந்த செய்திகளை பார்க்கும்போது முதல்வர் வெளிநாடு சென்ற நோக்கமே வேறாக தெரிகிறது 
மக்கள், அரசியல் கட்சி தலைவர்களின் எதிர்ப்புகளை தொடர்ந்து சில பணிகளை செய்வதாக கேள்விப்படுகிறோம் 
மொத்தத்தில் முதல்வர் தடம் மாறி, தடம் புரண்டு நடவடிக்கையில் ஈடுப்பட்டுக்கொண்டிருப்பதாக தமிழக மக்கள் எண்ணுகிறார்கள், இதை முதல்வர் மாற்றிக்கொள்ள வேண்டும் 
தமிழக முதலமைச்சராக வந்த பின்னர்,  அனைத்து முதலமைச்சர்களும் முதல்வர்களுக்கான பண்போடும், தகுதியோடும், தன்மையோடு வாழ்ந்துகொண்டு தமிழகத்தை ஆண்டிருக்கிறார்கள்
அதேபோல் விஜயும் முதல்வருக்கான பண்போடும்,  தகுதியோடும் தன்மையோடும் வாழ்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அதற்கு எதிர்மறையான நிலைப்பாட்டோடு முதல்வர் விஜய்யின் ஆட்சியும் அவரது செயல்பாடும் இருக்கிறது
முதல்வர் விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள்
தவெக ஆட்சி விளையாட்டுத்தனமான ஆட்சி
காவல்துறையினர் மானிய கோரிக்கையின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சார்பாக பல்வேறு கேள்விகளை முன் வைத்தபோது, எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காத முதல்வர் விஜய் அவருக்கே தெரிந்த பாணியில்  வசனத்தை பேசி பதில் உரையை முடித்து விட்டார்
முதல்வர் விஜயின் பதிலுரை பார்ப்பதற்கு வேண்டுமானால் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும், சிரிப்பாகவும், ஜோக்காகவும் இருக்கலாமே தவிர 
நல்ல விவரம் தெரிந்த, அரசியல் தெரிந்தவர்கள் முதல்வர் விஜயின் பேச்சை எள்ளி நகையாடுகிறார்கள்
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ஆட்சியாளர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு கூட முதல்வர் விஜய் பதிலளிக்கவில்லை 
காவல்துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்களுக்கு எந்தவிதமான முன்னேற்ற அறிவிப்புகளும் காவல்துறை மானிய கோரிக்கையில் வரவில்லை
இதை காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை சங்கடத்துடன் வாழ்வதை காண முடிகிறது
தமிழக மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கின்ற காவல் துறைக்கு எந்தவிதமான அறிவிப்புகளோ சலுகைகளோ வழங்கப்படாததை  தமிழக மக்கள்,  காவல்துறையினரால் ஏற்றுக்கொள்ளவில்லை
மொத்தத்தில் பிறரை ஏளனமாக பேசுவதற்கும், தமக்கு பிடிக்காதவர்களை எள்ளி நகையாடுவதற்கும் சட்டமன்றத்தை ஒரு கருவியாக முதல்வர் விஜய் பயன்படுத்திக்கொண்டார்
எடப்பாடி பழனிச்சாமி ஆண்ட  காலத்திலும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும் சட்டமன்றத்தின் புனிதத் தன்மை காக்கப்பட்டது
தற்போது சட்டமன்றத்தின் புனிதத் தன்மை குறைந்து பாலாகிவிட்டது,
இந்த நிலை மாற வேண்டும் என்றால் முதல்வர் விஜய் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்
தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், அதே நேரத்தில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் பணி செய்ய விரும்பவில்லை
தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது
ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது, மத்திய அரசின் மறைமுக ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே தவெகவிற்கு ஆதரவு கொடுத்தோமே தவிர தவெகாவின் தலைவரை பிடித்தோ, தவெகவின்  கொள்கையை பிடித்தோ ஆதரவு கொடுக்கவில்லை என கம்யூனிஸ்ட் கட்சி  தலைவர்கள் சொல்லிவிட்டார்கள்
தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள்  கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான்  கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது 
நிலையான ஆட்சியமைக்கும் தன்மை முதல்வர் விஜய்கோ,  தவெக கட்சிக்கோ கிடையாது 
ஆட்சி நிலைக்க முதல்வர் விஜய் தனது நிலைய மாற்றிக்கொள்ள வேண்டும் 
பிறரை பழி வாங்குவதற்கோ,  பிறரை இகழ்ந்து, புகழ்ந்து பேசுவதற்கோ, தன்னை புகழ்ந்து பேசுவதற்கோ சட்டமன்றத்தை கருவியாக பயன்படுத்த நினைத்தால் தமிழக மக்கள் காலப்போக்கில் தூக்கி எறிந்து விடுவார்கள் இதற்கு ஆதரவு தர மாட்டார்கள் 
தமிழக மக்கள் எப்பொழுதும் முழிப்போடும் இருக்கக்கூடியவர்கள், தமிழக மக்களும், தமிழ் அறிஞர்கள்,  அரசியல் அறிந்தவர்கள் எள்ளி நகையாட கூடிய சூழ்நிலையை பார்க்கிறோம் 
இந்த நிலை மாற வேண்டும் என்றால் சட்டமன்றம் தனி சிறப்போடு இயங்க வேண்டும் 
சட்டமன்றத்தில் இன்றைக்கு என்ன பாடல் பாடப்போகிறார்கள், யார் பாடப் போகிறார்கள் என பட்டிமன்றம் போல் செயல்படும் சட்டமன்றத்தின் நிலையை மாற்ற வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், முதல்வர் விஜய் அதனை மாற்றுவாரா என்றால் அது கேள்விகுறியாகவே இருக்கிறது
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.