logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தமிழக முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கட்சித் தொண்டர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் இடும்பன் கோவிலில் சிறப்பு பூஜைகளை நடத்தினர்.

1 hr ago
user_RAJA news
RAJA news
Oddanchatram, Dindigul•
1 hr ago

தமிழக முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கட்சித் தொண்டர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் இடும்பன் கோவிலில் சிறப்பு பூஜைகளை நடத்தினர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வடமதுரை சாலையில், பயன்படாத நிலையில் நான்கு சக்கர வாகனங்களின் டயர்கள் குவியலாக வைக்கப்பட்டுள்ளன. இது அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மழைக்காலங்களில் இந்த டயர்களில் மழைநீர் தேங்கி, கொசுப் புழுக்கள் உருவாகும் நிலை உள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும், பொதுமக்கள் வேடசந்தூர் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் உடனடியாக இந்தச் சிக்கலைச் சரிசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வடமதுரை சாலையில், பயன்படாத நிலையில் நான்கு சக்கர வாகனங்களின் டயர்கள் குவியலாக வைக்கப்பட்டுள்ளன. இது அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

மழைக்காலங்களில் இந்த டயர்களில் மழைநீர் தேங்கி, கொசுப் புழுக்கள் உருவாகும் நிலை உள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும், பொதுமக்கள் வேடசந்தூர் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் உடனடியாக இந்தச் சிக்கலைச் சரிசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_திருப்புகழ் ரமேஷ்
    திருப்புகழ் ரமேஷ்
    பழனி, திண்டுக்கல், தமிழ்நாடு•
    2 hrs ago
  • தேனி மாவட்டம் கம்பம் வழியாக கேரளாவுக்குக் கடத்த முயன்ற 7,220 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தின் போடிமெட்டு, கம்பம் மெட்டு மற்றும் குமுளி ஆகிய தமிழக-கேரள எல்லைப் பகுதிகள் வழியாக, தமிழக ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி கேரளாவிற்குக் கடத்திச் செல்லப்பட்டு, அங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட அளவில் உத்தமபாளையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களைத் தவிர, மாவட்ட வருவாய்த்துறை சார்பில் பறக்கும் படை துணை வட்டாட்சியர் தலைமையிலான ஒரு குழுவும், உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான வருவாய் அலுவலர்கள் குழுவும் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவில் கம்பம் ஊத்துக்காடு பகுதியில் உத்தமபாளையம் சார்பு ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மினி லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில், கேரளாவிற்குக் கடத்துவதற்காக சுமார் 7,220 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினி லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவற்றை உத்தமபாளையம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர். ஃபுட் செல் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் புதுப்பட்டியைச் சேர்ந்த சுந்தர், பிரகாஷ் மற்றும் லாரி ஓட்டுநர் பாண்டீஸ்வரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி உத்தமபாளையம் நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து உத்தமபாளையம் ஃபுட் செல் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    தேனி மாவட்டம் கம்பம் வழியாக கேரளாவுக்குக் கடத்த முயன்ற 7,220 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தின் போடிமெட்டு, கம்பம் மெட்டு மற்றும் குமுளி ஆகிய தமிழக-கேரள எல்லைப் பகுதிகள் வழியாக, தமிழக ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி கேரளாவிற்குக் கடத்திச் செல்லப்பட்டு, அங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட அளவில் உத்தமபாளையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களைத் தவிர, மாவட்ட வருவாய்த்துறை சார்பில் பறக்கும் படை துணை வட்டாட்சியர் தலைமையிலான ஒரு குழுவும், உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான வருவாய் அலுவலர்கள் குழுவும் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் கம்பம் ஊத்துக்காடு பகுதியில் உத்தமபாளையம் சார்பு ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மினி லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில், கேரளாவிற்குக் கடத்துவதற்காக சுமார் 7,220 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினி லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவற்றை உத்தமபாளையம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

ஃபுட் செல் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் புதுப்பட்டியைச் சேர்ந்த சுந்தர், பிரகாஷ் மற்றும் லாரி ஓட்டுநர் பாண்டீஸ்வரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி உத்தமபாளையம் நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து உத்தமபாளையம் ஃபுட் செல் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமையில், உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52வது பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி வருவதையொட்டி இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக முதல்வரின் பிறந்தநாளை ஒரு வார கால கொண்டாட்டமாக சிறப்பாக நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள், அன்னதானங்கள், மருத்துவ நலத்திட்டங்கள், சாலையோர வியாபாரிகளுக்கு வாகனங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை வழங்குவதற்கும் தீர்மானம் இயற்றப்பட்டது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் காதுகேளாத மற்றும் வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்கம் சார்பில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. வருகின்ற ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் குறித்து அந்தக் கோரிக்கை இருந்தது. தமிழக வெற்றிக் கழகத்தினர், தமிழக முதல்வரின் பிறந்தநாள் அன்று அந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனர்.
    1
    தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமையில், உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52வது பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி வருவதையொட்டி இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக முதல்வரின் பிறந்தநாளை ஒரு வார கால கொண்டாட்டமாக சிறப்பாக நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள், அன்னதானங்கள், மருத்துவ நலத்திட்டங்கள், சாலையோர வியாபாரிகளுக்கு வாகனங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை வழங்குவதற்கும் தீர்மானம் இயற்றப்பட்டது.

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் காதுகேளாத மற்றும் வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்கம் சார்பில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. வருகின்ற ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் குறித்து அந்தக் கோரிக்கை இருந்தது. தமிழக வெற்றிக் கழகத்தினர், தமிழக முதல்வரின் பிறந்தநாள் அன்று அந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வாகைக்குளம் விஸ்தரிப்பு தெருவில் வசித்து வரும் 68 வயதான ஜெயலெட்சுமி, தனது இளைய மகள் புவனேஸ்வரியுடன் வசித்து வருகிறார். மாலை நேரத்தில் மூத்த மகள் கார்த்தியாவைப் பார்ப்பதற்காக விராலிமலை சாலையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றுவிட்டு, இளைய மகளுடன் வீடு திரும்பி உள்ளார். விராலிமலை சாலையிலிருந்து வாகைக்குளம் விஸ்தரிப்பு தெருவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, பின்னால் வந்த இளைஞர் ஒருவர் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 சவரன் எடையுள்ள கல் முகப்பு சங்கிலியைப் பறித்துக்கொண்டு, அருகில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த மற்றொருவருடன் தப்பி ஓடிவிட்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், எஸ்ஐ கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து, தப்பி ஓடியவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மணப்பாறை போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வாகைக்குளம் விஸ்தரிப்பு தெருவில் வசித்து வரும் 68 வயதான ஜெயலெட்சுமி, தனது இளைய மகள் புவனேஸ்வரியுடன் வசித்து வருகிறார். மாலை நேரத்தில் மூத்த மகள் கார்த்தியாவைப் பார்ப்பதற்காக விராலிமலை சாலையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றுவிட்டு, இளைய மகளுடன் வீடு திரும்பி உள்ளார்.

விராலிமலை சாலையிலிருந்து வாகைக்குளம் விஸ்தரிப்பு தெருவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, பின்னால் வந்த இளைஞர் ஒருவர் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 சவரன் எடையுள்ள கல் முகப்பு சங்கிலியைப் பறித்துக்கொண்டு, அருகில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த மற்றொருவருடன் தப்பி ஓடிவிட்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், எஸ்ஐ கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து, தப்பி ஓடியவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மணப்பாறை போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை ஊராட்சியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் இன்று திருப்பராய்த்துறையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும், அதிகாரிகளும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
    1
    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை ஊராட்சியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் இன்று திருப்பராய்த்துறையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும், அதிகாரிகளும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் மக்களுக்கு ஏற்றம் தருமா அல்லது ஏமாற்றம் தருமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஜூன் 18 அன்று அவர் வெளியிட்ட வீடியோவில், கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த மக்கள், அரசு வாக்குறுதிகளைத் தள்ளுபடி செய்துவிடுமோ என்று கவலையுடன் இருப்பதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
    1
    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் மக்களுக்கு ஏற்றம் தருமா அல்லது ஏமாற்றம் தருமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஜூன் 18 அன்று அவர் வெளியிட்ட வீடியோவில், கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த மக்கள், அரசு வாக்குறுதிகளைத் தள்ளுபடி செய்துவிடுமோ என்று கவலையுடன் இருப்பதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    5 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயியிடம் இருந்து ₹2 லட்சம் லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
    1
    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயியிடம் இருந்து ₹2 லட்சம் லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    5 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கைதையங்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட நாகமா நாயக்கனூர் கிராமத்தில், ஒரு தனிநபர் தனது சுயநலத்திற்காக தனக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் இருந்த பனை மரங்களையும், சாலையோரம் இருந்த பனை மரங்களையும் பிடுங்கி அகற்றியுள்ளார். இது குறித்து அதே கிராமத்தைச் சேர்ந்த செல்லச்சாமி என்பவர் கடந்த இரண்டாம் தேதி அன்று மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் அளிக்கப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அரசு அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பனை மரங்களை பிடுங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தாமதிப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கைதையங்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட நாகமா நாயக்கனூர் கிராமத்தில், ஒரு தனிநபர் தனது சுயநலத்திற்காக தனக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் இருந்த பனை மரங்களையும், சாலையோரம் இருந்த பனை மரங்களையும் பிடுங்கி அகற்றியுள்ளார். இது குறித்து அதே கிராமத்தைச் சேர்ந்த செல்லச்சாமி என்பவர் கடந்த இரண்டாம் தேதி அன்று மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் அளிக்கப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அரசு அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பனை மரங்களை பிடுங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தாமதிப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
    user_திருப்புகழ் ரமேஷ்
    திருப்புகழ் ரமேஷ்
    பழனி, திண்டுக்கல், தமிழ்நாடு•
    2 hrs ago
  • தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம், அண்மையில் குடியரசுத் தலைவரிடம் 'கீர்த்தி சக்ரா' விருதைப் பெற்றார். இந்த விருதைப் பெற்றதற்காக பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் இருவரும் அவரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தனர். தற்போது தனது சொந்த ஊரில் ஓய்வெடுத்து வரும் மீனாட்சி சுந்தரத்தை அரசியல் தலைவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் தொடர்ந்து நேரில் சந்தித்து வாழ்த்தி வருகின்றனர். இந்த வரிசையில், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் வைத்தியநாதன் இன்று ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தின் வீட்டிற்கு நேரில் சென்றார். அங்கு அவருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் ராணுவ வீரருடன் அமர்ந்து அவரது வீரம் செறிந்த பணிகள் குறித்தும், அவரது குடும்பத்தினர் குறித்தும் கேட்டறிந்தார். இந்த நிகழ்வின் போது, அரசுத் துறை அலுவலர்கள் பலரும் மாவட்ட ஆட்சித் தலைவருடன் உடனிருந்தனர்.
    1
    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம், அண்மையில் குடியரசுத் தலைவரிடம் 'கீர்த்தி சக்ரா' விருதைப் பெற்றார். இந்த விருதைப் பெற்றதற்காக பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் இருவரும் அவரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

தற்போது தனது சொந்த ஊரில் ஓய்வெடுத்து வரும் மீனாட்சி சுந்தரத்தை அரசியல் தலைவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் தொடர்ந்து நேரில் சந்தித்து வாழ்த்தி வருகின்றனர். இந்த வரிசையில், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் வைத்தியநாதன் இன்று ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தின் வீட்டிற்கு நேரில் சென்றார். அங்கு அவருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் ராணுவ வீரருடன் அமர்ந்து அவரது வீரம் செறிந்த பணிகள் குறித்தும், அவரது குடும்பத்தினர் குறித்தும் கேட்டறிந்தார். இந்த நிகழ்வின் போது, அரசுத் துறை அலுவலர்கள் பலரும் மாவட்ட ஆட்சித் தலைவருடன் உடனிருந்தனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.