திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா நிம்மியம்பட்டு சுண்ணாம்பு பள்ளம் பகுதியில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் மத்திய ஒன்றியம், நிம்மியம்பட்டு ஊராட்சியில் (இன்று ஆகஸ்ட் 26) அருள்மிகு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம் குடமுழுக்கு விழாவில் திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ தேவராஜ் ,கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்ச்சியில் ஆலங்காயம் மத்திய ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், திமுக கிளைக் கழக செயலாளர்கள் அசோகன், ஆப்பிள், ஞானம், கோவிந்தராஜ், சூரியகுமார், குமார், வெங்கடேசன், கிளை இளைஞரணி நிர்வாகிகள் பிரேம், வினோத், ரவிக்குமார், திலகரசன், சுந்தர், முரளி, சூர்யா, பார்த்திபன், திருமலை, பிரகாஷ், ராஜசேகர், சிலம்பு, கார்த்தி, லட்சுமணன் மற்றும் கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா நிம்மியம்பட்டு சுண்ணாம்பு பள்ளம் பகுதியில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் மத்திய ஒன்றியம், நிம்மியம்பட்டு ஊராட்சியில் (இன்று ஆகஸ்ட் 26) அருள்மிகு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம் குடமுழுக்கு விழாவில் திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ தேவராஜ் ,கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்ச்சியில் ஆலங்காயம் மத்திய ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், திமுக கிளைக் கழக செயலாளர்கள் அசோகன், ஆப்பிள், ஞானம், கோவிந்தராஜ், சூரியகுமார், குமார், வெங்கடேசன், கிளை இளைஞரணி நிர்வாகிகள் பிரேம், வினோத், ரவிக்குமார், திலகரசன், சுந்தர், முரளி, சூர்யா, பார்த்திபன், திருமலை, பிரகாஷ், ராஜசேகர், சிலம்பு, கார்த்தி, லட்சுமணன் மற்றும் கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சியில் தனியார் கம்பனி கேட்டில் நாய் சிக்கியது தீ அணைப்பு வீரர்கள் நாயை மீட்டனர் *திருப்பத்தூர் மாவட்டம்* *தேவலாபுரத்தில் தொழிற்சாலை கேட்டில் சிக்கிய நாய் - தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்* திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, மாதனூர் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சியில் இன்று (ஆகஸ்ட் 26) தனியார் தொழிற்சாலை ஒன்றின் இரும்பு கேட்டில் நாய் ஒன்று சிக்கிக்கொண்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள், பணியாளர்கள் உதவியுடன் கட்டர் மூலம் கேட் கம்பியை அறுத்து நாயை பத்திரமாக உயிருடன் மீட்டனர். தீயணைப்பு வீரர்களின் மனித நேயமிக்க செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.1
- லட்சுமிபுரம் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வேண்டுகோள் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியது திருப்பத்தூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் தமிழக அரசால் கிடப்பில் வைத்துள்ள தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற வேண்டும். வெலக்கல்நாத்தம் ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகிறது அவர்களுக்கு நிரந்தர பட்டா வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்களை அப்புறப்படுத்த கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி வேண்டும் அதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் பரந்தூர் விமான நிலையத்தை கைவிடப்பட்டதற்கு அரசை வரவேற்கிறேன் என கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தேர்வில் நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். நமது மாநிலத்தின் கடை கோடி பணியாளரான தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளராக பணியமர்த்த வேண்டும். வேளாண் பயிர் கடன்களை 100% தள்ளுபடி செய்ய முதலமைச்சர் அரசாணை வெளியிட வேண்டும் தமிழக வெற்றி கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். தமிழக வெற்றி கழக அரசு ஆட்சி அமைப்பதை வெளியில் இருந்து ஆதரிக்கிறோம். ஆனால் கூட்டணி வைக்க மாட்டோம். மேலும் விலைவாசி உயர்வு, போக்குவரத்து கட்டணம் உயர்வு பால் விலை உயர்வு போன்றவற்றிற்கு எதிர்ப்பு குரலாய் நிற்போம் என அவர் செய்தியாளர்கள் மூலம் தெரிவித்துள்ளார் இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் நந்தி மாவட்ட பொருளாளர் வேணுகோபால் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முல்லை மாநில நிர்வாக குழு உறுப்பினர் லெனின் ஆகியோர் உடன் இருந்தனர்1
- காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம். காவேரிப்பட்டணம்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு நடைப்பெற்றது, பள்ளியின் தலைமை ஆசிரியர் வேந்தன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சமுக நுகர்வேர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் கலந்துகொண்டார்.1
- நேபாளத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு; அடித்து செல்லப்பட்ட பாலம் திபெத்தில் இருந்து நேபாளத்திற்குள் வரும் போட்டே கோசி ஆற்றில் காலை 9 மணியளவில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் தாதிங் மாவட்டத்தின் மலேகு பகுதியில் உள்ள மலேகு பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சி!1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- மாரண்டஅள்ளி அருகே ஏரியில் கிராவல் மண் கடத்தல் – 2 டிப்பர் லாரிகள் பறிமுதல் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏரிகளில் இருந்து சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. குறிப்பாக, பஞ்சப்பள்ளி, செவத்தம்பட்டு, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சட்டவிரோத மண் கடத்தலை தடுக்க மாவட்ட ஆட்சியர் சரவணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், தர்மபுரி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் புவனமாணிக்கம் தலைமையிலான அதிகாரிகள் மாரண்டஅள்ளி அருகே கோவில்பட்டி கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த இரண்டு டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு, அதற்கு பதிலாக அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சுமார் ரூ.2 லட்சத்து 4 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் அவற்றில் இருந்த 4 யூனிட் கிராவல் மண்ணை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், லாரிகள் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதுதொடர்பாக மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஞ்சப்பள்ளியை சேர்ந்த ஓட்டுநர் அருள் (36), தொட்டபடகாண்டஅள்ளியை சேர்ந்த ஓட்டுநர் முனியப்பன் (29), செவத்தம்பட்டியை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் அருண்குமார் (48), வீரமணி (53) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரிகளில் இருந்து தொடர்ந்து சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.1
- காவேரிப்பட்டணம்கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் தேமுதிக நிறுவனத் தலைவர் மறைந்தவிஜயகாந்தின் பிறந்த நாள்விழா காவேரிப்பட்டணம் பனந்தோப்பு அருகில் கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் அதிரடி பிரபு தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது1
- ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை. லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிலப்பு. ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை. லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் பலி. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்னப்பநாய்க்கனூர் அருகே கலைஞர் நகரைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது, இந்த செங்கல் சூளை அனுமதி பெறாமல் நடைபெறுவது மட்டுமின்றி இரவு நேரங்களில் சூளைக்கு தேவையான செம்மண்னை இரவு நேரங்களில் அனுமதியின்றி திருடுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை டிராக்டரில் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டிருக்கும் போது திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் மீது செங்கல் சரிந்து விழுந்தது, அருகில் இருந்தவர் சேகரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஆனால் மருத்துவர் இறந்துவிட்டதாக தெரிவித்தாக கூறப்படுகிறது. இதுபோன்று ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதி பெறாத பாதுகாப்பின்றி செயல்படும் செங்கல் சூலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1