logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ரேசன் கடையை இடித்துவிட்டு கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு ரேசன் பொருட்கள் வழங்க அட்டைக்கு ரூ.50 கேட்பதாக புகார் வத்திராயிருப்பு வத்திராயிருப்பு அருகே கிழவன் கோவில் பகுதியில் ரேசன் கடையை இடித்துவிட்டு கிணறு அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு வத்திராயிருப்பு அருகே கிழவன் கோவில் பகுதியில் ரேசன் கடையை இடித்துவிட்டு கிணறு அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ரேசன் கடை வாடகை கட்டிடத்தில் இயங்குவதால் குடிமை பொருள் வழங்க ஒரு அட்டைக்கு ரூ.50 கேட்பதாக புகார் தெரிவிக்கின்றனர். வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பிளவக்கல் அணை அருகே உள்ள கிழவன்கோவில் பகுதியில் எஸ்.கொடிக்குளம் பேரூராட்சி கட்டிடத்தில் ரேசன் கடை இயங்கி வந்தது. இதில் விநோபா நகர் மலைவாழ் மக்கள் குடியிருப்பு, சந்திரன் நகர், கிழவன்கோவில் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ரேசன் பொருட்கள் வாங்கி வந்தனர். இக்கட்டிடம் சேதமடைந்ததாக கூறி, வண்ணாம்பாறை பகுதியில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு மக்கள் செல்ல மறுத்ததால் கடந்த மாதம் டிராக்டர் மூலம் அரிசி உள்ளிட்ட ரேசன் பொருட்கள் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இந்த மாதத்திற்கு உரிய ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் கிழவன் கோவிலில் ரேசன் கடை இயங்கிய கட்டிடத்தை இடித்துவிட்டு, அங்கு பேரூராட்சி சார்பில் கிணறு அமைக்க உள்ளதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பிளவக்கல் அணைக்கு வந்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்: கிழவன் கோவிலில் இயங்கிய ரேசன் கடை மூலம் பழங்குடியின மக்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்து வந்தது. கட்டிடம் சேதம் அடைந்ததாக கூறி 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வண்ணாம்பாறை பகுதியில் உள்ள வாடகை கட்டிடத்திற்கு ரேசன் கடை இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கு பொருட்கள் வாங்க ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.50 கேட்டதால் மக்கள் செல்ல மறுத்து விட்டனர். பழைய கட்டிடத்தை இடித்து விட்டு, குடிநீர் கிணறு அமைக்க உள்ளதாக கூறுகின்றனர். இப்பகுதியில் பேருந்து வசதி இல்லாததால் கிழவன்கோவில் பகுதியில் ரேசன் கடை கட்டிடம் கட்ட வேண்டும், என்றனர்.

1 hr ago
user_ஸ்ரீவி செய்திகள்
ஸ்ரீவி செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
1 hr ago
63dc78fd-7080-4388-975c-a64063fa57c6

ரேசன் கடையை இடித்துவிட்டு கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு ரேசன் பொருட்கள் வழங்க அட்டைக்கு ரூ.50 கேட்பதாக புகார் வத்திராயிருப்பு வத்திராயிருப்பு அருகே கிழவன் கோவில் பகுதியில் ரேசன் கடையை இடித்துவிட்டு கிணறு அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு வத்திராயிருப்பு அருகே கிழவன் கோவில் பகுதியில் ரேசன் கடையை இடித்துவிட்டு கிணறு அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ரேசன் கடை வாடகை கட்டிடத்தில் இயங்குவதால் குடிமை பொருள் வழங்க ஒரு அட்டைக்கு ரூ.50 கேட்பதாக புகார் தெரிவிக்கின்றனர். வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பிளவக்கல் அணை அருகே உள்ள கிழவன்கோவில் பகுதியில் எஸ்.கொடிக்குளம் பேரூராட்சி கட்டிடத்தில் ரேசன் கடை இயங்கி வந்தது. இதில் விநோபா நகர் மலைவாழ் மக்கள் குடியிருப்பு, சந்திரன் நகர், கிழவன்கோவில் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ரேசன் பொருட்கள் வாங்கி வந்தனர். இக்கட்டிடம் சேதமடைந்ததாக கூறி, வண்ணாம்பாறை பகுதியில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு மக்கள் செல்ல மறுத்ததால் கடந்த மாதம் டிராக்டர் மூலம் அரிசி உள்ளிட்ட ரேசன் பொருட்கள் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இந்த மாதத்திற்கு உரிய ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் கிழவன் கோவிலில் ரேசன் கடை இயங்கிய கட்டிடத்தை இடித்துவிட்டு, அங்கு பேரூராட்சி சார்பில் கிணறு அமைக்க உள்ளதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பிளவக்கல் அணைக்கு வந்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்: கிழவன் கோவிலில் இயங்கிய ரேசன் கடை மூலம் பழங்குடியின மக்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்து வந்தது. கட்டிடம் சேதம் அடைந்ததாக கூறி 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வண்ணாம்பாறை பகுதியில் உள்ள வாடகை கட்டிடத்திற்கு ரேசன் கடை இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கு பொருட்கள் வாங்க ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.50 கேட்டதால் மக்கள் செல்ல மறுத்து விட்டனர். பழைய கட்டிடத்தை இடித்து விட்டு, குடிநீர் கிணறு அமைக்க உள்ளதாக கூறுகின்றனர். இப்பகுதியில் பேருந்து வசதி இல்லாததால் கிழவன்கோவில் பகுதியில் ரேசன் கடை கட்டிடம் கட்ட வேண்டும், என்றனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • ஜாதி வெறிசெயல் குடிக்கும் தண்ணிர் குழாயை அடைத்து இரு சமூகத்தினர் தண்ணியின்றி தவிக்கவிட்ட கிராமச்செயலாளர்(ஈஸ்வரன், கள்ளர்) கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி, கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி மாவட்டம்
    1
    ஜாதி வெறிசெயல் குடிக்கும் தண்ணிர் குழாயை அடைத்து இரு சமூகத்தினர் தண்ணியின்றி தவிக்கவிட்ட கிராமச்செயலாளர்(ஈஸ்வரன், கள்ளர்) கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி, கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி மாவட்டம்
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • திருமங்கலம் முனிசிபல் காலனி 12வது வார்டு மூன்று மாதங்களால் அடைக்கப்பட்டிருக்கும் சாக்கடை கழிவுகள்
    1
    திருமங்கலம் முனிசிபல் காலனி 12வது வார்டு மூன்று மாதங்களால் அடைக்கப்பட்டிருக்கும் சாக்கடை கழிவுகள்
    user_Village volgs Alex and siva
    Village volgs Alex and siva
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
    16 hrs ago
  • தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள நாகலாபுரம் பகுதியே சேர்ந்தவர் காமாட்சி இவரது மகன் தவசி (13) போடி நகராட்சியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காமாட்சி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சித்தப்பா ஒருவருக்கு திதி கொடுப்பதற்காக கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு இரண்டு தனது உறவினர்களுடன் வேன்களில் வந்துள்ளனர். தற்போது சுருளி அருவியில் முற்றிலும் நீர் வரத்து இல்லாததால் குளிப்பதற்காக கம்பம் நகரில் இருந்து சுருளிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றின் பாலப்பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு காமாட்சி மகன் தவசி மற்றும் அவரது உறவினர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சிறுவன் தவசி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான். இதைக் கண்டு அங்கே குளித்துக் கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்டனர். அதற்குள் மாணவன் தண்ணீரில் மூழ்கியுள்ளான். இதனை அடுத்து உடனடியாக ராயப்பன்பட்டி காவல்துறையினருக்கும், கம்பம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய மாணவனை பல மணி நேரமாக தேடி வந்த நிலையில் குடிநீர் தொட்டி அருகே 12 அடி ஆழத்தில் பள்ளி மாணவன் சடலமாக சிக்கி இருப்பதை பார்த்து தீயணைப்பு துறையினர் மாணவனின் உடலை சடலமாக வெளியே கொண்டு வந்துள்ளனர். தாய் தந்தையர் மற்றும் உறவினர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    1
    தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள நாகலாபுரம் பகுதியே  சேர்ந்தவர் காமாட்சி 
இவரது மகன் தவசி (13) போடி நகராட்சியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் காமாட்சி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சித்தப்பா ஒருவருக்கு திதி கொடுப்பதற்காக கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு இரண்டு தனது உறவினர்களுடன் வேன்களில் வந்துள்ளனர்.
தற்போது சுருளி அருவியில் முற்றிலும் நீர் வரத்து இல்லாததால் குளிப்பதற்காக கம்பம் நகரில் இருந்து சுருளிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றின் பாலப்பகுதிக்கு வந்துள்ளனர்.
அங்கு காமாட்சி மகன் தவசி மற்றும் அவரது உறவினர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சிறுவன் தவசி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான். 
இதைக் கண்டு அங்கே குளித்துக் கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்டனர். அதற்குள் மாணவன் தண்ணீரில் மூழ்கியுள்ளான். 
இதனை அடுத்து உடனடியாக ராயப்பன்பட்டி காவல்துறையினருக்கும், 
கம்பம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். 
தகவலின் பெயரில் விரைந்து வந்த  தீயணைப்புத் துறையினர் ஆற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய மாணவனை பல மணி நேரமாக தேடி வந்த நிலையில் குடிநீர் தொட்டி அருகே 12 அடி ஆழத்தில் பள்ளி மாணவன் சடலமாக சிக்கி இருப்பதை பார்த்து தீயணைப்பு துறையினர் மாணவனின் உடலை சடலமாக வெளியே கொண்டு வந்துள்ளனர்.
தாய் தந்தையர் மற்றும் உறவினர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    46 min ago
  • தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் ஆர்ச் பகுதியில் இன்று (மார்ச்.10) மாலை தொடங்கியது. மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் ஒடிசாவில் இருந்து வந்த 60 பேர் கொண்ட மத்திய துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் திருப்பரங்குன்றம், திருநகர் காவலர்கள் 30 பேர் இணைந்து கொடி அணிவிப்பு நடைபெற்றது. 16 கால் மண்டபம் ,கீழரத வீதி, பெரிய ரத வீதி வழியாக சன்னதி தெரு, மேலரத வீதி பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை, மற்றும் எக்கோ பார்க் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது .
    1
    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் ஆர்ச் பகுதியில் இன்று  (மார்ச்.10) மாலை தொடங்கியது. மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் ஒடிசாவில் இருந்து வந்த 60 பேர் கொண்ட மத்திய துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் திருப்பரங்குன்றம், திருநகர் காவலர்கள் 30 பேர் இணைந்து கொடி அணிவிப்பு நடைபெற்றது. 16 கால் மண்டபம் ,கீழரத வீதி, பெரிய ரத வீதி வழியாக சன்னதி தெரு, மேலரத வீதி பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை, மற்றும் எக்கோ பார்க் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது .
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    16 hrs ago
  • தேனியில் உள்ள தேனி அல்லிநகரம் நகராட்சியில் மாதந்திர கூட்டம் நடைபெற்றது,நகராட்சி சேர்மன் ரேணுப்பிரியா பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த நிகழ்வில் துணை சேர்மன், வார்டு கவுன்சிலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்
    1
    தேனியில் உள்ள தேனி அல்லிநகரம் நகராட்சியில் மாதந்திர கூட்டம் நடைபெற்றது,நகராட்சி சேர்மன் ரேணுப்பிரியா  பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த நிகழ்வில் துணை சேர்மன், வார்டு கவுன்சிலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • சிவகிரி காந்தி கலையரங்கம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டு உள்ளிட்ட கோரிக்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    1
    சிவகிரி காந்தி கலையரங்கம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டு உள்ளிட்ட கோரிக்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • வணிக சிலிண்டர் தட்டுப்பாடு - மதுரையில் 3 நாட்களில் உணவகங்கள் மூடப்படும் அபாயம் – வணிகர்கள் எச்சரிக்கை. மதுரை, மார். 10 - சர்வதேச அளவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் சந்தையில் ஏற்பட்ட அதிர்வுகள், இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளதுடன், பல இடங்களில் விநியோக தட்டுப்பாடும் உருவாகியுள்ளது. இந்த நிலைமையால் சிறு வணிகர்கள், உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் பல தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. சமீபத்திய அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.115 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் ரூ.1,929-க்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டர் தற்போது ரூ.2,043.50 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ.60 உயர்ந்து ரூ.928.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தில்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களிலும் விலை உயர்வு பதிவாகியுள்ளது. போர் பதற்றம் – கச்சா எண்ணெய் விலைய அதிகரிப்பு.  அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றம் சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உலகின் முக்கிய கடல்சார் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை வழியாக உலக நாடுகளின் சுமார் 20 சதவீத கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பகுதியில் உருவான பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வருவதுடன், அதன் தாக்கம் சமையல் எரிவாயு சந்தையிலும் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் அதிகரித்த முன்பதிவு இந்த அச்சநிலையைத் தொடர்ந்து கடந்த 5 முதல் 6 நாட்களுக்குள் எரிவாயு முன்பதிவு 15% முதல் 20% வரை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பல பகுதிகளில் விநியோக தாமதம் மற்றும் தட்டுப்பாடு உருவாகி வருகிறது. இந்த நிலைமையை குறித்து சமையல் எரிவாயு விநியோகத்தில் பணியாற்றும் தனியார் நிறுவன பணியாளர் இளங்கோவன் கூறுகையில், “சமீப நாட்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  தற்போது வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால் உணவகங்கள் மற்றும் டீக்கடைகளுக்கு தேவையான அளவு சிலிண்டர்கள் கிடைக்காமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல கடைகளில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே இருப்பு உள்ளது. அதன் பிறகு கடைகளை மூட வேண்டிய நிலை உருவாகும் அபாயம் உள்ளது,” என தெரிவித்தார். மதுரையில் உணவகங்களுக்கு கடும் பாதிப்பு. மதுரை மாவட்டத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட உணவகங்கள் இயங்கி வருகின்றன.  இவற்றை நம்பி 25,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அதேபோல் சாலையோர உணவக கடைகள் சுமார் 10,000 உணவகங்கள் மற்றும் டீக்கடைகளும் நகரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளன. வணிக சிலிண்டர் கிடைக்காததால் சாலையோர சிறிய கடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மதுரையில் மகபூப்பாளையம் 20 ஆண்டுகளாக சாலையோர வடைக் கடை நடத்தி வரும் ஜெயக்குமார் கூறுகையில், “சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் கடையை நடத்த அதிக முதலீடு தேவைப்படுகிறது. எங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே சிரமமாகிறது. ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் முதல் 1500  ரூபாய் வரை தான் வியாபாரம் இருக்கும். ஒரு சிலிண்டர் ஐந்து நாட்களுக்கு தான் பயன்படுத்த முடியும். சிலிண்டர் கிடைக்கவில்லை என்றால் எங்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும்,” என்று தெரிவித்தார். கருப்புச் சந்தை குற்றச்சாட்டு சில இடங்களில் வணிக சிலிண்டர்கள் விநியோகிக்க வேண்டாம் என டீலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தையில் கிடைக்காத சிலிண்டர்கள் கருப்புச் சந்தையில் ரூ.3,000 வரை விற்கப்படுகின்றன என வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து கோச்சடை நடராஜ் நகர் பகுதியில் இயங்கி வரும் பாரத் கேஸ் சிலிண்டர் சேமிப்பு கிடங்கில் பணியாற்றிய ஒரு தொழிலாளி கூறுகையில் முன்பு வீடுகளுக்கு பயன்படுத்தும் சிலிண்டர்கள் முதல் நாள் புக் செய்தால் மறுநாள் கொண்டு போய் வீடுகளுக்கு கொடுக்கப்படும் ஆனால் இப்போது புக்கிங் செய்தார்கள் என்றால் சுமார் ஒரு வாரம் கழித்து தான் கொடுக்க முடிகிறது அந்த அளவிற்கு தற்போது தட்டுப்பாடு என்பது அதிகரித்துள்ளது. மேலும் இதே நிலை நீடித்தால் புக்கிங் செய்பவர்களுக்கு இன்னும் கொடுக்க காலதாமதம் ஏற்படும் .மேலும் வணிக ரீதியான சிலிண்டரை முதலில் நேரடியாக நாங்கள் ஆர்டர் போட்டவுடன் கொண்டு போய் வழங்குவோம் இப்பொழுது நேரடியாக சென்னையில் உள்ள மையத்திற்கு தகவல் கொடுத்தால் அதுவும் குறிப்பாக மருத்துவமனை மற்றும் தங்கும் விடுதிகளுக்கு மட்டுமே கொடுக்கச் சொல்லி உள்ளார்கள் அப்படி இவர்கள் புக்கிங் செய்து அவர்கள் எங்களுடைய நிறுவனத்திற்கு தகவல் கொடுப்பார்கள் அந்த அடிப்படையில் தான் வணிகரீதியான சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது அதுவும் குறைவான எண்ணிக்கையில் தான் இப்போது வந்துள்ளது இதனால் தற்போது வீடுகளிலும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படுகிறது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு அபாயம். வணிக சிலிண்டர் விலை உயர்வும் தட்டுப்பாடும் தொடர்ந்தால், தோசை, இட்லி, பரோட்டா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை இருமடங்கு உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்களின் அன்றாட உணவு செலவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் தாக்கம் மதுரையில் பல ஆயிரம் மாணவர்கள் விடுதிகளில் தங்கி கல்வி கற்கின்றனர். அதேபோல் வெளிமாவட்டங்களில் இருந்து வேலைக்காக வந்திருக்கும் தொழிலாளர்களும் உணவகங்களையே பெரிதும் நம்பி உள்ளனர். உணவகங்கள் மூடப்பட்டால் அவர்களின் அன்றாட உணவு தேவைகளும் பாதிக்கப்படும் அபாயம்  உள்ளது என்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சிலர் கூறுகின்றனர். பொருளாதார பாதிப்பு குறித்து வணிகர்கள் கவலை சர்வதேச போர் பதற்றம் நீடித்தால் அதன் தாக்கம் இந்திய பொருளாதாரத்திலும் கடுமையாக இருக்கும் என வணிகர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.  குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக பொதுமக்களின் வாங்கும் சக்தி குறையும் நிலையும் உருவாகலாம் என எச்சரிக்கப்படுகிறது. போர் நிறுத்தத்திற்கு இந்தியா முயற்சி எடுக்க வேண்டும் எனவே, ஈரான் தொடர்பான போர் நடவடிக்கைகளை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நிறுத்தும் வகையில் இந்திய அரசு சர்வதேச அளவில் ஆலோசனைகள் மேற்கொண்டு அமைதியை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு போர் பதற்றத்தை குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இந்தியாவில் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் பொருளாதார பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதே நேரத்தில், நாட்டில் உருவாகியுள்ள வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டை உடனடியாக சீரமைத்து விநியோகத்தை அதிகரிக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜெ. பொன்மாறன்.
    2
    வணிக சிலிண்டர் தட்டுப்பாடு - மதுரையில் 3 நாட்களில் உணவகங்கள் மூடப்படும் அபாயம் – வணிகர்கள் எச்சரிக்கை.
மதுரை, மார். 10 -
சர்வதேச அளவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் சந்தையில் ஏற்பட்ட அதிர்வுகள், இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர்களின் விலை திடீரென
உயர்த்தப்பட்டுள்ளதுடன், பல இடங்களில் விநியோக தட்டுப்பாடும் உருவாகியுள்ளது. இந்த நிலைமையால் சிறு வணிகர்கள், உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் பல தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
சமீபத்திய அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.115 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் ரூ.1,929-க்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டர் தற்போது ரூ.2,043.50 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ.60 உயர்ந்து ரூ.928.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தில்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களிலும் விலை உயர்வு பதிவாகியுள்ளது.
போர் பதற்றம் – கச்சா எண்ணெய் விலைய அதிகரிப்பு. 
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றம் சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உலகின் முக்கிய கடல்சார் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை வழியாக உலக நாடுகளின் சுமார் 20 சதவீத கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பகுதியில் உருவான பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வருவதுடன், அதன் தாக்கம் சமையல் எரிவாயு சந்தையிலும் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் அதிகரித்த முன்பதிவு
இந்த அச்சநிலையைத் தொடர்ந்து
கடந்த 5 முதல் 6 நாட்களுக்குள் எரிவாயு முன்பதிவு 15% முதல் 20% வரை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பல பகுதிகளில் விநியோக தாமதம் மற்றும் தட்டுப்பாடு உருவாகி வருகிறது.
இந்த நிலைமையை குறித்து சமையல் எரிவாயு விநியோகத்தில் பணியாற்றும் தனியார் நிறுவன பணியாளர் இளங்கோவன் கூறுகையில்,
“சமீப நாட்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
தற்போது வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால் உணவகங்கள் மற்றும் டீக்கடைகளுக்கு தேவையான அளவு சிலிண்டர்கள் கிடைக்காமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல கடைகளில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே இருப்பு உள்ளது. அதன் பிறகு கடைகளை மூட வேண்டிய நிலை உருவாகும் அபாயம் உள்ளது,” என தெரிவித்தார்.
மதுரையில் உணவகங்களுக்கு கடும் பாதிப்பு.
மதுரை மாவட்டத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட உணவகங்கள் இயங்கி வருகின்றன.  இவற்றை நம்பி 25,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அதேபோல் சாலையோர உணவக கடைகள் சுமார் 10,000 உணவகங்கள் மற்றும் டீக்கடைகளும் நகரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளன.
வணிக சிலிண்டர் கிடைக்காததால் சாலையோர சிறிய கடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மதுரையில் மகபூப்பாளையம் 20 ஆண்டுகளாக சாலையோர வடைக் கடை நடத்தி வரும் ஜெயக்குமார் கூறுகையில்,
“சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் கடையை நடத்த அதிக முதலீடு தேவைப்படுகிறது. எங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே சிரமமாகிறது. ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் முதல் 1500  ரூபாய் வரை தான் வியாபாரம் இருக்கும். ஒரு சிலிண்டர் ஐந்து நாட்களுக்கு தான் பயன்படுத்த முடியும். சிலிண்டர் கிடைக்கவில்லை என்றால் எங்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும்,” என்று தெரிவித்தார்.
கருப்புச் சந்தை குற்றச்சாட்டு
சில இடங்களில் வணிக சிலிண்டர்கள் விநியோகிக்க வேண்டாம் என டீலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தையில் கிடைக்காத சிலிண்டர்கள் கருப்புச் சந்தையில் ரூ.3,000 வரை விற்கப்படுகின்றன என வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து கோச்சடை நடராஜ் நகர் பகுதியில் இயங்கி வரும் பாரத் கேஸ் சிலிண்டர் சேமிப்பு கிடங்கில் பணியாற்றிய ஒரு தொழிலாளி கூறுகையில் முன்பு வீடுகளுக்கு பயன்படுத்தும் சிலிண்டர்கள் முதல் நாள் புக் செய்தால் மறுநாள் கொண்டு போய் வீடுகளுக்கு கொடுக்கப்படும் ஆனால் இப்போது புக்கிங் செய்தார்கள் என்றால் சுமார் ஒரு வாரம் கழித்து தான் கொடுக்க முடிகிறது அந்த அளவிற்கு தற்போது தட்டுப்பாடு என்பது அதிகரித்துள்ளது. மேலும் இதே நிலை நீடித்தால் புக்கிங் செய்பவர்களுக்கு இன்னும் கொடுக்க காலதாமதம் ஏற்படும் .மேலும் வணிக ரீதியான சிலிண்டரை முதலில் நேரடியாக நாங்கள் ஆர்டர் போட்டவுடன் கொண்டு போய் வழங்குவோம் இப்பொழுது நேரடியாக சென்னையில் உள்ள மையத்திற்கு தகவல் கொடுத்தால் அதுவும் குறிப்பாக மருத்துவமனை மற்றும் தங்கும் விடுதிகளுக்கு மட்டுமே கொடுக்கச் சொல்லி உள்ளார்கள் அப்படி இவர்கள் புக்கிங் செய்து அவர்கள் எங்களுடைய நிறுவனத்திற்கு தகவல் கொடுப்பார்கள் அந்த அடிப்படையில் தான் வணிகரீதியான சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது அதுவும் குறைவான எண்ணிக்கையில் தான் இப்போது வந்துள்ளது இதனால் தற்போது வீடுகளிலும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படுகிறது.
உணவுப் பொருட்களின் விலை உயர்வு அபாயம்.
வணிக சிலிண்டர் விலை உயர்வும் தட்டுப்பாடும் தொடர்ந்தால், தோசை, இட்லி, பரோட்டா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை இருமடங்கு உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்களின் அன்றாட உணவு செலவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் தாக்கம்
மதுரையில் பல ஆயிரம் மாணவர்கள் விடுதிகளில் தங்கி கல்வி கற்கின்றனர். அதேபோல் வெளிமாவட்டங்களில் இருந்து வேலைக்காக வந்திருக்கும் தொழிலாளர்களும் உணவகங்களையே பெரிதும் நம்பி உள்ளனர். உணவகங்கள் மூடப்பட்டால் அவர்களின் அன்றாட உணவு தேவைகளும் பாதிக்கப்படும் அபாயம்  உள்ளது என்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சிலர் கூறுகின்றனர்.
பொருளாதார பாதிப்பு குறித்து வணிகர்கள் கவலை
சர்வதேச போர் பதற்றம் நீடித்தால் அதன் தாக்கம் இந்திய பொருளாதாரத்திலும் கடுமையாக இருக்கும் என வணிகர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 
குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக பொதுமக்களின் வாங்கும் சக்தி குறையும் நிலையும் உருவாகலாம் என எச்சரிக்கப்படுகிறது.
போர் நிறுத்தத்திற்கு இந்தியா முயற்சி எடுக்க வேண்டும்
எனவே, ஈரான் தொடர்பான போர் நடவடிக்கைகளை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நிறுத்தும் வகையில் இந்திய அரசு சர்வதேச அளவில் ஆலோசனைகள் மேற்கொண்டு அமைதியை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்வாறு போர் பதற்றத்தை குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இந்தியாவில் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் பொருளாதார பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதே நேரத்தில், நாட்டில் உருவாகியுள்ள வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டை உடனடியாக சீரமைத்து விநியோகத்தை அதிகரிக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜெ. பொன்மாறன்.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    12 hrs ago
  • திருமங்கலம் பன்னிரண்டாவது வார்டு முனிசிபல் காலனி பகுதியில் சுமார் மூன்று மாத காலமாக கழிவுநீர் சாக்கடை அடைத்துக் கொண்டிருக்கிறது அதில் கொசு புழு உற்பத்தி ஆகிறது சிறுவர்களுக்கு காய்ச்சல் அப்பப்போது வருகிறது அதனால் சாக்கடை மற்றும் சாக்கடை போகும் பாதையை சரி செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் நன்றி
    4
    திருமங்கலம் பன்னிரண்டாவது வார்டு முனிசிபல் காலனி பகுதியில் சுமார் மூன்று மாத காலமாக கழிவுநீர் சாக்கடை அடைத்துக் கொண்டிருக்கிறது அதில் கொசு புழு உற்பத்தி ஆகிறது சிறுவர்களுக்கு காய்ச்சல் அப்பப்போது வருகிறது அதனால் சாக்கடை மற்றும் சாக்கடை போகும் பாதையை சரி செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் நன்றி
    user_Village volgs Alex and siva
    Village volgs Alex and siva
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
    22 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.