Shuru
Apke Nagar Ki App…
பைக் திருட்டில் ஈடுபட்ட நபருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பு திருச்சி மாவட்டம். மணப்பாறை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான வேலுச்சாமி என்பவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 1,000/- அபராதம் விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Usha arun News
பைக் திருட்டில் ஈடுபட்ட நபருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பு திருச்சி மாவட்டம். மணப்பாறை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான வேலுச்சாமி என்பவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 1,000/- அபராதம் விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
More news from தமிழ்நாடு and nearby areas
- அதிவேகமாக போர வண்டியை பெற்றோர் வாங்கி தராதிங்க நம் பிள்ளைகளுக்கு அதிக வேகத்தில் போகும் இரு சக்கர வாகனத்தை வாங்கி தயாரிக்க1
- 🚨 கரூர் மாவட்டம்: வெள்ளியணையில் மீண்டும் காவேரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு – சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் காவேரி கூட்டுக் குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாக வெளியேறுவதுடன், அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதே பகுதியில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுவதால், ஒவ்வொரு முறையும் சாலை தோண்டப்பட்டு பழுதுபார்க்கப்படுகிறது. ஆனால், பணிகள் முடிந்த பிறகும் சாலை முழுமையாக சீரமைக்கப்படாமல் இருப்பதால் பல இடங்களில் மேடு, பள்ளங்கள் உருவாகி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, காவேரி கூட்டுக் குடிநீர் குழாயை நிரந்தரமாக சீரமைப்பதுடன், சேதமடைந்த சாலையையும் தரமான முறையில் முழுமையாக புதுப்பித்து, பொதுமக்களின் சிரமத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்3
- ஸ்ரீராமர் ஆலயத்தில் பெண்கள் 108 திருவிளக்கு பூஜை செய்தனர் சிங்கம்புணரி அண்ணா நகரில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்தில் இன்று மூன்றாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு பெண்கள் 108 திருவிளக்கு பூஜை செய்தனர். நல்ல மழை, நோயற்ற வாழ்வு, மாங்கல்ய பலம், குழந்தைகள் கல்வி ஆகியவற்றிற்காக விரதம் இருந்து குத்துவிளக்கு பூஜை செய்தனர். குங்கும அர்ச்சனை, லலிதா சகஸ்ரநாமம், மகாலட்சுமி பூஜைக்குப் பிறகு அன்னை சீதாதேவிக்கும் மூலவர்களுக்கும் மகாதீபாரத்தி காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- திருமயம் அருகே குருவிக் கொண்டான் பட்டியில் முன்னாள் அமைச்சர் எஸ் ரகுபதி பேட்டி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குருவி கொண்டான் பட்டி சொக்கலிங்கம் மீனாட்சி நடுநிலைப் பள்ளியில் AI தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன கணினி பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இVவிழாவில் கலந்து கொண்டு கணினி பயிற்சி அறையை திருமயம் MLA ரகுபதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.1
- மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் கரூர், ஆகஸ்ட் 1: மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கரூர் மாவட்டத்தின் 5ஆம் வட்டம் சார்பில் இன்று (01.08.2026) காலை 10.00 மணியளவில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் தோழர் K. கலாராணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர், காவேரி தமிழ்நாட்டின் உயிர்நதி என்பதையும், மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், காவேரி நீர் உரிமையைப் பாதுகாக்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- மருங்காபுரி அருகே மின் உபகரணங்களை திருட முயன்ற ஒருவர் கைது : மற்றொருவர் தப்பி ஓட்டம் போலிஸ் வலைவீச்சு திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பட்டி பிரிவில் உயர் அழுத்த மின் பாதை அமைப்பதற்கான சப் கான்ட்ராக்டர் ஒப்பந்தம் பெற்று யுவராஜ் என்பவர் கடந்த 03 மாத காலமாக மின் கட்டமைப்பு பணி செய்து வருகிறார். அதற்கான மின் உபகரணங்களை ராஜா பட்டியை சேர்ந்த அய்யாக்கண்ணு என்பவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் வைத்திருந்ததாகவும், அவ்வாறு வைக்கப்பட்டிருந்த மின் உபகரணங்களை நேற்று அதிகாலை 03:30 மணியளவில் திருச்சியை சேர்ந்த தினேஷ்குமார் மற்றும் செல்வமணி ஆகியோர் மின் உபகரணங்களை திருட முயற்சித்த போது அய்யாக்கண்ணு என்பவர் பார்த்து சத்தம் போட மேற்கண்ட இருவரும் ஓடி உள்ளனர். இதனை அடித்து ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தினேஷ்குமார் என்பவரை பிடித்து வளநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேற்படி மின் உபகரண திருட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது வளநாடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து எதிரியை கைது சிறையில் அடைத்தனர்.தப்பியோடிய செல்வமணி என்பவரை வளநாடு போலீசார் தேடி வருகின்றனர்.1