Shuru
Apke Nagar Ki App…
*If you are Bad I am your Dad.* *கையூட்டு பெறும் எனது மகன் மற்றும் மகள்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்*
ஆ.கார்த்திக் (P F H R.)
*If you are Bad I am your Dad.* *கையூட்டு பெறும் எனது மகன் மற்றும் மகள்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்*
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by ஆ.கார்த்திக் (P F H R.)1
- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உத்தம சோழகன் பகுதியில் இருந்து திருச்சின்னபுரம் உள்ளிட்ட பகுதிகள் வரை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் அன்பு சோழன் அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் இதில் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்1
- தேன் கூட்டை அழிப்பது போல் சில பேர் விசிக வை அழிக்க பார்க்கிறார்கள் விசிக தலைவர் தொல். திருமாவளவன். கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் துரை கி சரவணனுக்கு ஆதரவாக சேத்தியாதோப்பு குறுக்கு ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார் . இந்த பிரச்சாரத்தில் வேட்பாளருக்கு உதய சூரியன் சின்னத்தில் ஆதரவு திரட்டி பேசினார் இதில் கடலூர் திமுக கிழக்கு மாவட்ட பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர் . விடுதலை சிறுத்தைகள் வாக்குகள் தமிழக வெற்றி கழகத்திற்கு செல்லும் என பலரும் கூறி வருகிறார்கள் என்றும் தன் தொண்டர்களை பார்த்து சினிமா மோகமா உங்களுக்கு சினிமா மயக்கமா கதாநாயகன் மயக்கமா என உருக்கமாக கேள்வி எழுப்பினார் உங்களுக்காக வீதியில் இறங்கி போராடுவாரா உங்கள் துக்கத்தில் பங்கேற்பாரா உங்கள் கண்ணீரை துடைப்பாரா என தொண்டர்களை பார்த்து திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.1
- நாகை மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி சார்பில், நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக வாக்காளர் விழிப்புணர்வு பேரணி இன்று சிறப்பாக நடைபெற்றது.கல்லூரி புலமுதல்வர் அ.கலைச்செல்வன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். கல்லூரி அனைத்து துறைத் தலைவர்களும் முன்னிலை வகித்தனர்.கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய பகுதிகளான கடைவீதி மற்றும் காவல் நிலையம் வழியாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள்,வாக்குரிமை ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நல்ல தலைவரை தேர்வு செய்வது நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியம் என்பதையும் எடுத்துரைத்தனர்.மேலும், வாக்குகளை விற்காதீர் ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற கோஷங்களுடன் பொதுமக்களிடம் உற்சாகமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் க.ஸ்ரீதர் செய்திருந்தார்.இந்த பேரணியில் ஊராட்சி செயலர் சரவணபெருமாள், கிராம நிர்வாக அலுவலர் குமார், முதல் நிலைக் காவலர் பாபு ஜெகஜீவன், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.1
- நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் உத்திரங்குடியில் ஸ்ரீ கம்ப காமாட்சியம்மன் ஆலயத்தில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் விரதமிருந்து பால்காவடி, செடில்| காவடி,மயில் காவடி, அலகு காவடி எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.இரவு சுவாமி வீதி உலா கட்சி வெகு விமர்சையாக நடைப்பெற்றது.1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வெள்ளிமலை அருகில் உள்ள மூங்கில் குடில் வளாகத்தில்,சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் இரா.ராகேஷ் தலைமையில் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பேசிய இரா.ராகேஷ், கல்வராயன் மலை பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக அனைத்து வகையிலும் பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழிற்சாலை ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து,ஆண்டுதோறும் சுமார் 200 மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் கல்வி உதவி வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் எஸ். ரகுபதி போட்டியிடுகின்றார். இதனை அடுத்து திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சார பணி மேற்கொண்டு வரும் அவர், இன்று பொன்னமராவதி அருகே திருமயம் அருகே உள்ள குறிச்சிபட்டி பகுதியில் தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.1
- Post by ஆ.கார்த்திக் (P F H R.)1