காரியாபட்டி பகுதியில் திருச்சுழி தொகுதி அதிமுக வேட்பாளர் எம் எஸ் ஆர் ராஜவர்மன் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில், திருச்சுழி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் அவர்கள், தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். மேலும், தேர்தல் நடைபெறும் நாளில் எந்தவித குறையும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்நிகழ்வில், அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு, தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
காரியாபட்டி பகுதியில் திருச்சுழி தொகுதி அதிமுக வேட்பாளர் எம் எஸ் ஆர் ராஜவர்மன் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில், திருச்சுழி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் அவர்கள், தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள
வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். மேலும், தேர்தல் நடைபெறும் நாளில் எந்தவித குறையும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்நிகழ்வில், அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு, தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
- தமிழகத்தில் இன்று (ஏப்.23) காலை 7 மணி முதல் தமிழக சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் செல்லூர் பகுதியில் உள்ள பள்ளியில் குடும்பத்துடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.1
- மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் 3 ம் நாள் நிகழ்ச்சி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் தமிழரசி ரவிக்குமார் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்குப்பதிவிற்காக காலை முதலே வாக்குச்சாவடிக்கு வந்த அவர், பொதுமக்களுடன் வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். தமிழரசி ரவிக்குமார் கடந்த மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் வாக்களிப்பு அப்பகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. வாக்குச்சாவடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், தேர்தல் அதிகாரிகள் மேற்பார்வையில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூத்தம்பட்டி பகுதியில் திமுகவினருடைய மோதல். ஒருவருக்கு மண்டை உடைப்பு. மருத்துவமனையில் அனுமதி. அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம். பதட்டமான சூழ்நிலை போலீசார் குவிப்பு.1
- தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் மகனும் தேனி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் பெரியகுளம் தெங்கறையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்து தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின் போது மீண்டும் தமிழகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் மக்கள் எழுச்சியுடன் ஆர்வத்துடன் திமுக அரசு மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகளை அளித்து வருவதாகவும் தெரிவித்தார் மேலும் போடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி நான் சென்று கொண்டே இருப்பேன் இரட்டை இலைக்கு விழுகும் வாக்கு எனக்காக விழுந்து கொண்டே இருக்கும் என கூறியுள்ளார் அது குறித்து உங்கள் கருத்து என கேட்டபோது கடந்த தேர்தலில் நாராயணசாமி டெபாசிட் இழந்துள்ளார் அவருக்கு எப்படி வாக்கு பொதுமக்கள் அளிப்பார்கள் நீங்கள் அவர் எப்படி வெற்றி பெறுவார்கள் என அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார் விஜய் குறித்து கேள்வி எழுப்பிய போது விஜய் முதல் தேர்தலை தற்போது சந்தித்துள்ளார் மே 4 ஆம் தேதி தேர்தல் ரிசல்ட் வெளிவந்த பிறகு மக்கள் எவ்வாறு அவருக்கு வாக்களித்து உள்ளார்கள் என பார்த்த பிறகு அதற்கான கருத்துக்களை தெரிவிக்க முடியும் என தெரிவித்தார்1
- மக்கள்_Vs_ஜனநாயகம் !!! மறவாதீர் ஓட்டு உங்கள் உரிமை !!! #publicintrest #publicresponse #election1
- தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வீட்டில் இருந்து ரூ.65 லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிடுகிறார். தூத்துக்குடி கணேஷ் நகர் பகுதியில் அவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காகப் பெருமளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி பொன்மாரி தலைமையிலான குழுவினர் கணேஷ் நகரில் உள்ள வேட்பாளரின் வீட்டிற்குச் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 65 லட்சம் ரொக்கப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததைத் தொடர்ந்து, அந்தப் பணத்தை அதிகாரிகள் முறைப்படி பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் உடனடியாகத் தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. பணம் பதுக்கியது தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டம் கச்சனாவிளைப் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரைத் தென்பாகம் போலீசார் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பணம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததா? என்பது குறித்துத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளர் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளர் வீட்டிலும் பெரிய அளவிலான தொகை சிக்கியிருப்பது தூத்துக்குடி மாவட்ட தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் சித்திரை திருவிழாவின் நான்காம் நாளான இன்று (ஏப்.22) காலை தங்கப்பல்லாக்கில் சுவாமியும் , அம்மனும் தெற்கு வாசல் வில்லாபுரம் பகுதியில் உள்ள பாவற்காய் மண்டபத்திற்கு எழுந்தருளினார்கள். மீண்டும் மாலையில் அங்கிருந்து புறப்பட்டு தெற்கு வாசல் சின்னக்கடை தெரு, தொட்டியகிணறு தெரு, தெற்காவணிமூலவீதி, வழியாக நான்கு சித்திரை வீதிகளை பவனி வந்து திருக்கோவில் சென்று அடைந்தது. சுவாமியும் அம்மனும் தெற்கு வாசல் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் முன்பாக சென்றபோது அங்கிருந்த இஸ்லாமியர்கள் மத வேற்றுமையை கடந்து ரோஸ்மில்க் வழங்கி இந்து முஸ்லீம் ஒற்றுமையை பறைசாற்றினார்கள்1