தூத்துக்குடி கடற்கரையில் மாஸ் கிளினிங் கல்லூரி மாணவிகளுடன் மேயர் ஜெகன் பெரியசாமி, துப்புரவு பணியை செய்தார். தூத்துக்குடி. தூத்துக்குடி மாநகராட்சியும் வீகென் டிரஸ்ட் மற்றும் செயிண்ட் மேரீஸ் கல்லூரியும் இணைந்து மேலும் வேல்ட் கவுன்சில் பார் உமன் ரைட்ஸ் உள்பட பல்வேறு சமூக நிறுவனத்தின் சார்பில் மாநகராட்சிக்குட்பட்ட இனிகோ நகர் கடற்கரை பகுதியில் உள்ள கழிவு பொருட்களான மீன் வலை, செருப்பு, பிளாஸ்டிக் கப், கயிறு உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை கல்லூரி மாணவிகள், தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் அதிகாலையில் தூய்மை பணியை மேற்கொண்டனர். அப்பகுதியில் தேவையற்ற கருவேல செடிகளை ஜேசிபி இந்திரத்தின் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. கடற்கரை சாலை பகுதியில் உள்ள பாதசாரிகள் நடைபாதை செல்லும் பொதுமக்கள் தேவையற்ற கழிவுகளை கடலின் உள்புறம் வீசி சென்று வருகின்றனர். அது கடல் அலையின் ஒதுக்கு புறத்தில் ஒதுங்கி கிடந்த அந்த தேவையற்ற கழிவுகளையும் 2 கி.மீ தூரம் நடந்தே சென்று மாணவிகள், சுகாதார பணியாளர்கள் இணைந்து அப்புறப்படுத்தியதை பார்வையிட்டு, அதில் மதுபிரியர்கள் அருந்திவிட்டு வீசிச் சென்ற மது பாட்டில்களையும் அலையின் சறுக்கு ஒரத்தில் ஒதுங்கி கிடந்த பாட்டில்களையும் மாணவிகள் தங்கள் கைகளால் அப்புறப்படுத்தியவர்களிடம் உங்களுடைய பாதுகாப்பு நலனும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு மனித நேயத்தோடு பணியாற்றுகிற உங்களது தேவையை இந்த மாநகராட்சி நிர்வாகம் பாராட்டுகிறது என்ற அறிவுரையை கூறி, பின்னர் கடற்கரை சாலையில் 5 கி.மீ தூரத்திற்கு புதிதாக அமைக்கப்பட்டு வரும் நடைபாதையை பார்வையிட்டு, இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்குகள் அமைய உள்ள இடத்தையும் ஆய்வு செய்து, பனைமர விதைகளை கடற்கரையோரங்களில் விதைத்தார். பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தினசரி 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் 2000 பணியாளர்களை கொண்டு தூய்மை பணிகளை 60 வார்டுகளிலும் மேற்கொண்டு வருகிறோம். அதன் மூலம் 120 டன் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகிய இரண்டு வகையான கழிவுகளை சேகரித்து அதை பிரித்தெடுத்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சுகாதாரத்தை பேணி பாதுகாத்து வருகிறோம். அதேநேரத்தில் மாசு இல்லாத மாநகரும் உருவாக வேண்டும் அதற்கு நாம் ஒவ்வொருவரும் தனது வீட்டில் ஒரு மரம் வளர்க்க வேண்டும். இயற்கை நமக்கு கொடுத்த மிகப்பெரிய வரபிரசாதமான கடற்கரையை பகுதிதான பல ஏற்றுமதி இறக்குமதிக்கு காரணமாக உள்ளது. அப்பகுதியில் தேவையற்ற கழிவு பொருட்கள் அவ்வப்போது மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டு வருகிறது. இந்த கழிவுகள் கடல் அலையின் மூலம் கடலுக்குள் சென்றால் கடலின் தன்மையும் பாதிக்கப்படும், மீன்களின் இனப்பெருக்கத்திற்கும் தடையாக இருக்க கூடும். கடல் நமது தாய் என்பதை கருத்தில் கொண்டு இப்பகுதியை பயன்படுத்தும் பொதுமக்கள் சிலவற்றை முழுமையாக தவிர்த்து கடல் வளமும் மாநகராட்சி நகரமும் மாசு இல்லாத வகையில் உருவாகுவதற்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். மக்கள் பணி செய்வது தான் எங்களது கடமை என்கிற உணர்வோடு பணியாற்றி வருகிறோம் என்றார். தூய்மைப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் தேவையான முககவசம், கையுறை, மற்றும் காலை உணவுகளை மாநகராட்சி சார்பில் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் வடக்கு மண்டல தலைவர் நிர்மல் ராஜ், சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர் ரெக்ஸ்லின், சுகாதார ஆய்வாளர் நெடுமாறன், வட்டச்செயலாளர் ரவீந்திரன், வீகென் டிரஸ்ட் தலைவர் ஏஞ்சலின், செயலாளர் முத்துராஜ் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

- நகைச்சுவை நாடகம் பார்த்து ரசியுங்கள்1
- கீழவெண்மணி தியாகிகளுக்கு 57 ஆம் ஆண்டு நினைவஞ்சலி தோழர் அமுல்ராஜ் அவர்களுக்கு வீர வணக்கம் தினமும் தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் மாநில தலைவர் சாமு காந்தி தலைமை தாங்கினார் கிருஷ்ணமூர்த்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக , தமிழ்நாடு மீனவர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் கோல்டன் பரதர் , புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மாரி செல்வம் , புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக சுஜித் , மக்கள் நல இயக்கத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர் சகோதரர் எபநேசர், கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ எம் எல் மின்னல் அம்ஜத் , விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் முனீஸ் குமார், மக்கள் நல இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ஹரிராம், மக்கள் நல இயக்கத்தின் மாவட்ட இணை செயலாளர் சங்கர், ராஜேஷ் நன்றி தெரிவித்தார் கீழ வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய அப்பாவிமக்களை தீயிட்டு கொளுத்தி படுகொலை செய்யப்பட்ட இச்செயல் நடைபெற்று இன்றுடன் 57 ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது இந்த நாள் தமிழ்நாட்டின் கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது ஜனநாயக நாட்டில் கூலி உயர்வு கேட்டு போராடிய மக்கள் மீது நடைபெற்ற கொடுமையான தாக்குதலாகும் 17 பெண்கள் 15 குழந்தைகள் ஆண்கள் மொத்தம் 44பேர் மீது ஜாதி வெறியன் கோபால்சாமி நாயுடு என்பவர் தலைமையில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றிருக்கிறது இந்த வழக்கு அப்போது ஆட்சியாளர்களால் சரியாகவிசாரிக்கப்படாமல் இச்செயலில் ஈடுபட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் இது மிகப்பெரிய கொடுமையான செய்தி அப்போது ஆட்சியாளர்கள் வழக்கை சரியாக நடத்தவில்லை இது மிகப் பெரிய கண்டனத்திற்குரியது இப்போதும் கீழ வெண்மணி கிராமம் இன்னும் வளர்ச்சி அடையாமல் அங்கு உள்ள பட்டியலின பழங்குடி மக்கள் அரசு தொகுப்பு வீடுகளை நம்பி வாழ்ந்து வருகிறார்கள் கீழ் வெண்மணி கிராமம் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையான செய்தி தமிழக முதல்வர் கீழவெண்மணி கிராமத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கி அங்கு உள்ள மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் அங்கு தொழில் புரட்சி ஏற்படுத்த வேண்டும் உடனடியாக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென இந்த நேரத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது உடனே அரசு நிறைவேற்றும் என்று நம்பிக்கை உடன் காத்திருக்கிறோம் மத்திய மாநில அரசு இணைந்து உடனடியாக கீழவெண்மனி கிராமத்தில் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது1
- Post by Dayanand kumar paswan9
- சர்க்கார்பதி Power House மற்றும் வனம் Part 21
- சுனாமி வந்த தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்கள் சோக மையமாக காட்சி தருகின்றன. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.1
- ஊத்தங்கரையில் மோர் சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா. ஊத்தங்கரையில் மோர் சூப்பர் மார்க்கெட் 48 வது கிளை திறப்பு விழா நடந்தது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கல்லாவி சாலை அருகில் இந்தியாவில் அதிக கிளைகள் கொண்ட மோர் சூப்பர் மார்க்கெட்டின் 48 வது கிளையை ஊத்தங்கரையில் திறக்கப்பட்டது. கடையின் உரிமையாளர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனை தொடங்கி வைத்தார். திறப்பு விழாவை முன்னிட்டு 3,499 ரூபாய் மதிப்பில் பொருள் வாங்குபவர்களுக்கு 3 லிட்டர் குக்கர் இலவசமாக வழங்கப்பட்டது, வாடிக்கையாளர்களுக்கு எந்த பொருள் எடுத்தாலும் 5% கேஸ் பேக் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர். மோர் மார்க்கெட்டின் தமிழக செயல்பாட்டு தலைவர் சிவசங்கர், மார்க்கெட்டிங் மேனேஜர் விஜியேந்தர், ஏரியா மேனேஜர் மஞ்சுநாத், வழக்கறிஞர் வடிவேல், பிரிவு மேனேஜர் பிரபாகர் உள்ளிட்ட நிறுவன ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- _Amazing Coordination by a brilliant Conductor_1