மாநில அளவிலான பரதநாட்டிய போட்டி ஊத்தங்கரை ஸ்ரீகுரு நாட்டியாலயா பரத நாட்டியப் பள்ளி சார்பில் மாநில அளவிலான பரதநாட்டியப் போட்டி. ஊத்தங்கரை ஸ்ரீகுரு நாட்டியாலயா பரத நாட்டியப் பள்ளி சார்பில் மாநில அளவிலான பரதநாட்டியப் போட்டி நடைபெற்றது. ஊத்தங்கரை ஓம் சக்தி மகாலில் ஸ்ரீகுரு நாட்டியாலயா பரத நாட்டியப் பயிற்சிப் பள்ளி சார்பில் 6 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவ மாணவியருக்கு இளையோர் மூத்தோர் பிரிவில் தணி, இருவர் நடனம் என்ற பிரிவில் மாநில அளவிலான பரதநாட்டியப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வழக்குரைஞர் பிரபாவதி கணேசன்.தேவர பாடல்ஆசிரியர் கிருஷ்ணவேணிஅம்மையார் முன்னிலை வகித்தார். பள்ளி நிறுவனர் டாக்டர்.வீரலட்சுமி அனைவரையும் வரவேற்றார். தருமபுரி ஸ்ரீ வர்ணம் நாட்டியாலயா நிறுவனர் இராஜலட்சுமி சரவணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும் தருமபுரி ஸ்ரீசிவா நாட்டியாலயா நடனகுரு அம்பிகா, கிருஷ்ணகிரி தேன்தமிழ் நாட்டியாலயா நடன குரு மதுமொழி ஆனந்த் ஆகியோர் விருந்தினராகப் பங்கேற்றனர். இப்போட்டிகளை ஊத்தங்கரை கலாஸ் கலாலயா சந்திரன், கலைவளர்மணி ஞானசத்தி, கிருஷ்ணகிரி ஸ்ரீ கிருஷ்ணா யோக நாட்டியாலயா நிறுவனர் ஜெய்வித்யா ஆகியோர் நடுவர்களாக அமர்ந்து நடத்தினர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஜேசிஐ தேசியப்}பயிற்சியாளர் பாலமுருகன் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர் ராஜலட்சுமி சரவணன் அவர்கள் மாணவச் செல்வங்களுக்கு பரதக்கலையின் மகத்துவம் பற்றியும் நடனக் கலையால் உடலுக்கு உண்டாகும் நன்மைகள் பற்றியும் தெளிவாக விளக்கினார் . போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்க்கு பரிசுகள்,பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நாட்டியத் தாரகை }2026 எனும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பிறகு பல மாவட்டங்களிலிருந்து பங்கேற்ற நாட்டியப் பள்ளிகள் சார்பில் ஆருத்ரா நாட்டிய சமர்ப்பணம் எனும் ஆன்மீக பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ குரு நாட்டியாலயா நடன குரு டாக்டர்.வீ.வீரலட்சுமி தமிழரசன் அவர்கள் மிகச் சிறப்பாக இன் நிகழ்ச்சினை நடத்தினார்.

- பென்னாகரம் அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை சாலை மறியல தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆறு மாதமாக தொடர் மின்வெட்டு உள்ளது. தினமும் 10 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. தொடர் மின்வெட்டின் காரணமாக விவசாயிகள் தொழிலாளர்கள் கடும் வேதனை. இதனை கண்டித்து இன்று 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏரியூர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உரிய பதிலளிக்காமல் சென்றதால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், மின்வாரிய அலுவலகம் எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மின்வாரிய அலுவலகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஏரியூர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தின் காரணமாக, சுமார் ஒரு மணி நேரம் ஏரியூர் பென்னாகரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது1
- திமுக தொண்டர் அணி அமைப்பாளருக்கு அறிவாள் வெட்டு, காவல்த்துறையினர் விசாரணை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர் 7வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், முன்னாள் நகர் மன்ற உறுப்பினரான இவர் திமுகவில் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளராக பதவியில் இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது மகன் கடந்த 15 தினங்களுக்கு முன்பு காணாமல் போய் உள்ளார். அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்களுக்கும், ஆறுமுகத்திற்கும் மகன் காணாமல் போனது தொடர்பாக வாக்குவாதம் இருந்து வந்துள்ளது. இதனை காரணம் காட்டி வீட்டிலிருந்த ஆறுமுகத்தை மர்ம நபர்கள் சிலர் அறிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. காயமடைந்த ஆறுமுகம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து காவல்த்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் மெயின் ரோட்டின் இடது பக்கத்தில் நிலத்தடியில் பதிக்க வேண்டிய குழாய்கள் சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் பாதசாரிகள் நடக்க மிகவும் சிரமம் ஏற்பட்டு, மூச்சுத்திணறல் நிலவும் சூழல் உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த குழாய்களை உடனடியாக அகற்றி பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.1
- பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பேசும்போது கரூர் துயரச் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜி முக்கிய காரணம் என கூறியது குறித்து கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் செய்தியாளர்கள் கேட்ட போது ஏழு மணி நேரம் கால தாமதமாக வந்தது யார்? விளக்கு அணைத்தது யார்? இந்த வழக்கு சிபிஐ விசாரித்து வருவதால் விரைவில் இதற்கான விடை கிடைக்கும் என கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மாணவ, மாணவர்களுக்கான மணிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளரிடம் தெரிவித்தார்.1
- திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவில் வீதி அருகே உள்ள மாநகராட்சி பூ மார்க்கெட்டில், தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்த லட்சுமி என்ற தூய்மை பணியாளரை பூக்கடை உரிமையாளர் நல்லசாமி என்பவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தூய்மை பணியாளர்கள், கடையை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.1
- தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆறு மாதமாக தொடர் மின்வெட்டு உள்ளது. தினமும் 10 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. தொடர் மின்வெட்டின் காரணமாக விவசாயிகள் தொழிலாளர்கள் கடும் வேதனை. இதனை கண்டித்து இன்று 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏரியூர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.1
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் பருவமழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக 1,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 2000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜன.06) செவ்வாய்க்கிழமை காலை 11 மணி நிலவரப்படி வினாடிக்கு 3000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாக, மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1