logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக கட்சி பொதுக்கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள். தமிழக வெற்றிக்கழக கட்சி பொதுக்கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள். தமிழக வெற்றி கழக மத்திய மாவட்ட கழகத்தின் சார்பில் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா மற்றும் . பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகச் செயலாளர் எஸ் டி ஆர் சாமுவேல் ராஜ் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார் எரிசக்தி துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார். அரசியல் கட்சி பொதுக் கூட்டத்தில் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவே மாட்டார்கள் இதுதான் நடைமுறையில் இருந்தது அரசியல் கட்சி பொதுக்கூட்டம் என்றால் கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் கலந்து கொள்வது நடைமுறை. இதுவரை தமிழகத்தில் ஆட்சி செய்த எந்த ஒரு அரசியல் கட்சியின் கட்சி பொதுக் கூட்டத்தில் எந்த துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டது கிடையாது இந்த நிலையில் எரிசக்தி துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட தமிழக வெற்றிக்கழக கட்சி பொதுக் கூட்டத்தில் மின்வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பாக எக்ஸியூட்டி இன்ஜினியர் டவுன் மற்றும் ரூரல் அதிகாரிகள் தங்களுக்கு அரசு ஒதுக்கப்பட்டுள்ள காரில் அமர்ந்திருந்தனர் ஒரு சில அதிகாரிகள் மேடையின் முன்புறம் நின்று கொண்டிருந்தனர் அரசியல் கட்சியின் பொதுக்கூட்டத்தில் முதன்முறையாக மின்வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டது ஏன் என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

2 hrs ago
user_மா.சுடலைமணி
மா.சுடலைமணி
Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
2 hrs ago
ffd2ca25-2b24-4e99-933e-180dcdf67085

தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக கட்சி பொதுக்கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள். தமிழக வெற்றிக்கழக கட்சி பொதுக்கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள். தமிழக வெற்றி கழக மத்திய மாவட்ட கழகத்தின் சார்பில் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா மற்றும் . பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகச் செயலாளர் எஸ் டி ஆர் சாமுவேல் ராஜ் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார் எரிசக்தி துறை மற்றும்

6dacf68a-9339-4190-823f-0c8262552872

சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார். அரசியல் கட்சி பொதுக் கூட்டத்தில் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவே மாட்டார்கள் இதுதான் நடைமுறையில் இருந்தது அரசியல் கட்சி பொதுக்கூட்டம் என்றால் கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் கலந்து கொள்வது நடைமுறை. இதுவரை தமிழகத்தில் ஆட்சி செய்த எந்த ஒரு அரசியல் கட்சியின் கட்சி பொதுக் கூட்டத்தில் எந்த துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டது கிடையாது இந்த நிலையில் எரிசக்தி துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார்

cce29116-1624-4c10-ac33-e6210dd6670e

கலந்து கொண்ட தமிழக வெற்றிக்கழக கட்சி பொதுக் கூட்டத்தில் மின்வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பாக எக்ஸியூட்டி இன்ஜினியர் டவுன் மற்றும் ரூரல் அதிகாரிகள் தங்களுக்கு அரசு ஒதுக்கப்பட்டுள்ள காரில் அமர்ந்திருந்தனர் ஒரு சில அதிகாரிகள் மேடையின் முன்புறம் நின்று கொண்டிருந்தனர் அரசியல் கட்சியின் பொதுக்கூட்டத்தில் முதன்முறையாக மின்வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டது ஏன் என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்களை அனுப்ப தடை விதித்திருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும், அந்தத் தடை நிரந்தரமாக தொடருமா என்பது குறித்து தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் விஜய் முடிவு எடுப்பார் என்றும் சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு தெரிவித்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கிரவல் மண் குவாரிகள் தொடர்பாக பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அரசின் புதிய கொள்கை முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகும் என்றும் கூறினார். மேலும், மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதற்கான தீர்வுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். முதல்வர் விஜயின் ஊழலற்ற ஆட்சி இலக்கை வெற்றிகரமாக செயல்படுத்த அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்பதை இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தியதாக அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு கூறினார்.
    1
    வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்களை அனுப்ப தடை விதித்திருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும், அந்தத் தடை நிரந்தரமாக தொடருமா என்பது குறித்து தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் விஜய் முடிவு எடுப்பார் என்றும் சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கிரவல் மண் குவாரிகள் தொடர்பாக பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அரசின் புதிய கொள்கை முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகும் என்றும் கூறினார்.
மேலும், மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதற்கான தீர்வுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
முதல்வர் விஜயின் ஊழலற்ற ஆட்சி இலக்கை வெற்றிகரமாக செயல்படுத்த அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்பதை இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தியதாக அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு கூறினார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    10 hrs ago
  • புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட எம்எல்ஏ மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சேடபட்டி மணிமாறன் அவர்கள் செக்காணூரணியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளை பார்வையிட்டதோடு, ஆ.கொக்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் முக்கியஸ்தர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைந்து தீர்வு காணும் படி அறிவுறுத்தினார்‌. உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
    1
    புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட எம்எல்ஏ 
மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சேடபட்டி  மணிமாறன் அவர்கள் செக்காணூரணியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளை பார்வையிட்டதோடு, ஆ.கொக்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் முக்கியஸ்தர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைந்து தீர்வு காணும் படி அறிவுறுத்தினார்‌. உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    13 hrs ago
  • திருப்பாலைக்குடியில் சபடு மண் எடுப்பதில் முறைகேடு பொதுமக்கள் குற்றச்சாட்டு திருப்பாலைக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய கண்மாயிலிருந்து விவசாயப் பயன்பாட்டிற்காக மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், விவசாய நிலங்களில் கொட்டாமல், ஒரு டிராக்டர் மண் ₹1,200 என்ற விலையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட டிராக்டர் லோடு மண் திருப்பாலைக்குடி காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள மனைப்பிரிவுகளில் (பிளாட்டுகளில்) கொட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
    1
    திருப்பாலைக்குடியில் சபடு மண் எடுப்பதில் முறைகேடு பொதுமக்கள் குற்றச்சாட்டு
திருப்பாலைக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய கண்மாயிலிருந்து விவசாயப் பயன்பாட்டிற்காக மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், விவசாய நிலங்களில் கொட்டாமல், ஒரு டிராக்டர் மண் ₹1,200 என்ற விலையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட டிராக்டர் லோடு மண் திருப்பாலைக்குடி காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள மனைப்பிரிவுகளில் (பிளாட்டுகளில்) கொட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
    user_அனல் ஆனந்த்
    அனல் ஆனந்த்
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    2 hrs ago
  • வாடிப்பட்டியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியி... இன்று வாடிப்பட்டி சந்தை கேட் அருகில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவ நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாலைநேர தர்னா நடைபெற்றது இந்த நிகழ்வில் மாநில கொள்கை பரப்பு செயலாளர்கள் முனைவர் மொ.சித்திராதேவி திருச்சி.சரவனண் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இந்த நன்னாளில் மாவட்ட ஒன்றிய நகர நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
    1
    வாடிப்பட்டியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியி...
இன்று வாடிப்பட்டி சந்தை கேட் அருகில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவ நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாலைநேர தர்னா நடைபெற்றது இந்த நிகழ்வில் மாநில கொள்கை பரப்பு செயலாளர்கள் முனைவர் மொ.சித்திராதேவி  திருச்சி.சரவனண் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இந்த நன்னாளில் மாவட்ட ஒன்றிய நகர நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
    user_தங்க சுரேஷ்
    தங்க சுரேஷ்
    பத்திரிகையாளர் வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • ஆண்டிபட்டி: வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ஆண்டிபட்டி நகரில் மேற்கு ஓடை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இன்று ஆடி மாத சனிக்கிழமை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அதிகாலையிலேயே பால் தயிர் இளநீர் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    1
    ஆண்டிபட்டி: வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
ஆண்டிபட்டி நகரில் மேற்கு ஓடை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இன்று ஆடி மாத சனிக்கிழமை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அதிகாலையிலேயே பால் தயிர் இளநீர் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    user_Ramesh
    Ramesh
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • ஆண்டிபட்டி வருசநாடு அருகே சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை ஒட்டிய மேகமலை, ஹைவேவிஸ் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழையால் சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. தேனி மாவட்டம், மேகமலை அடிவாரத்தில் கோம்பைத்தொழு வடக்கு மலைப்பகுதியில் மேகமலை அருவி உள்ளது. மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள இந்த அருவிக்கு திண்டுக்கல் ,மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வரத்து இருக்கும். நேற்று விடிய விடிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது ஏற்கனவே பெய்த கனமழையால் அருவிக்குச் செல்லும் சாலை பகுதியில் சாலைகள் மிகவும் மண்ணரிப்புகளால் மிகவும் சேதம் அடைந்துள்ளது மேலும் படிக்கட்டுகள் தடுப்புக்கம்பிகள் உடைந்து காணப்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இந்நிலையில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கிற்கான பயணிகளுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து சின்ன சுருளி அருவிக்கு மீறி செல்வோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..
    1
    ஆண்டிபட்டி வருசநாடு அருகே சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை

தேனி மாவட்டம்  ஆண்டிபட்டியை ஒட்டிய மேகமலை, ஹைவேவிஸ்  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழையால் சின்ன சுருளி   அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை  தடை விதித்துள்ளது. 
தேனி மாவட்டம், மேகமலை அடிவாரத்தில் கோம்பைத்தொழு வடக்கு  மலைப்பகுதியில் மேகமலை அருவி உள்ளது. 
மேகமலை  ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள்  சரணாலயத்தில் அமைந்துள்ள இந்த அருவிக்கு திண்டுக்கல் ,மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  
ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வரத்து இருக்கும். 
நேற்று விடிய விடிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது 
ஏற்கனவே பெய்த  கனமழையால்  அருவிக்குச் செல்லும் சாலை பகுதியில் சாலைகள் மிகவும் மண்ணரிப்புகளால்   மிகவும் சேதம் அடைந்துள்ளது 
மேலும் படிக்கட்டுகள் தடுப்புக்கம்பிகள் உடைந்து காணப்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. 
இந்நிலையில் தொடர் மழையால்  வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கிற்கான  பயணிகளுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது
இதனைத் தொடர்ந்து சின்ன சுருளி  அருவிக்கு மீறி செல்வோர் மீது  உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • தென்காசி மாவட்டம் புதுச்சுரண்டை சேகர 30வது தோத்திர பண்டிகை கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவிற்கு சேகர தலைவர் அருள்திரு ஜெகன் தலைமை வகித்தார் வடக்கு சபை மன்ற தலைவர் அருள்திரு ஜெபரத்தினம் கொடியேற்றி துவக்கி வைத்தார் சுரண்டை சீயோன் சேகர தலைவர் அருள்திரு ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    1
    தென்காசி மாவட்டம் புதுச்சுரண்டை சேகர 30வது தோத்திர பண்டிகை கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவிற்கு சேகர தலைவர் அருள்திரு ஜெகன் தலைமை வகித்தார் வடக்கு சபை மன்ற தலைவர் அருள்திரு ஜெபரத்தினம் கொடியேற்றி துவக்கி வைத்தார் சுரண்டை சீயோன் சேகர தலைவர் அருள்திரு ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது பக்தர்கள் பங்கேற்பு திருவாடானை ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில், ஆடி மாத  சனிக்கிழமையன்று, ஆஞ்சநேயப் பெருமானுக்கு மங்கலப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர், வெற்றிலை மற்றும் துளசி  மாலையாக அலங்கரித்து, தீபாராதனைகள் காட்டப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, ஆஞ்சநேயரின் திருவருளையும், ஆசீர்வாதங்களையும் பெற்று, தங்கள் வாழ்வு செழிக்கப் பிரார்த்தித்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, இறைவனை தரிசித்து, பிரசாதங்களைப் பெற்றுச் சென்றனர்.
    1
    ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது பக்தர்கள் பங்கேற்பு
திருவாடானை ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில், ஆடி மாத  சனிக்கிழமையன்று,
ஆஞ்சநேயப் பெருமானுக்கு மங்கலப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர், வெற்றிலை மற்றும் துளசி  மாலையாக அலங்கரித்து, தீபாராதனைகள் காட்டப்பட்டன.
நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, ஆஞ்சநேயரின் திருவருளையும், ஆசீர்வாதங்களையும் பெற்று, தங்கள் வாழ்வு செழிக்கப் பிரார்த்தித்தனர்.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, இறைவனை தரிசித்து, பிரசாதங்களைப் பெற்றுச் சென்றனர்.
    user_அனல் ஆனந்த்
    அனல் ஆனந்த்
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    3 hrs ago
  • வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் கீழ் வைகை கூட்டு குடிநீர் தொட்டி... மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வைகை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கடந்த சுமார் ஒரு வருடமாய்நடந்த பணிகளில் போடிநாயக்கன்பட்டி செல்லும் பாதையில் காவுவாங்க காத்திருக்கும் குழி என்று கடந்தபத்துநாளுகளுக்கு முன்பு நம் ஸ்குரு ஆஃப் நியூஸ் சுட்டிக்காட்டி வெளியிட்டிருந்தோம் அதன் எதிரொலியாக வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சரிசெய்தது பொதுமக்கள் பலரும் நிர்வாகத்தை பாராட்டினர்
    1
    வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் கீழ் வைகை கூட்டு குடிநீர் தொட்டி...
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வைகை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கடந்த சுமார் ஒரு வருடமாய்நடந்த பணிகளில் போடிநாயக்கன்பட்டி செல்லும் பாதையில் காவுவாங்க காத்திருக்கும்  குழி என்று கடந்தபத்துநாளுகளுக்கு முன்பு நம் ஸ்குரு ஆஃப் நியூஸ்  சுட்டிக்காட்டி வெளியிட்டிருந்தோம் அதன் எதிரொலியாக வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சரிசெய்தது பொதுமக்கள் பலரும் நிர்வாகத்தை பாராட்டினர்
    user_தங்க சுரேஷ்
    தங்க சுரேஷ்
    பத்திரிகையாளர் வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.