Shuru
Apke Nagar Ki App…
வந்தவாசி அதிமுக தேர்தல் பொறுப்பாளர் நியமனம்! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அதிமுக தேர்தல் பொறுப்பாளராக ஆரணியை சேர்ந்த வழக்கறிஞர் பி.ஜாகீர் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளராக பதவி வகித்து வரும் இவரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நியமனம் செய்துள்ளார் இதனைத் தொடர்ந்து வடக்கு மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான முக்கூர் என்.சுப்பிரமணியனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை கூறி, வாழ்த்துக்களை பெற்றார்.
A.Shahulhameed
வந்தவாசி அதிமுக தேர்தல் பொறுப்பாளர் நியமனம்! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அதிமுக தேர்தல் பொறுப்பாளராக ஆரணியை சேர்ந்த வழக்கறிஞர் பி.ஜாகீர் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளராக பதவி வகித்து வரும் இவரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நியமனம் செய்துள்ளார் இதனைத் தொடர்ந்து வடக்கு மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான முக்கூர் என்.சுப்பிரமணியனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை கூறி, வாழ்த்துக்களை பெற்றார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் மாநில தலைவர் கார்வேந்தன் தலைமையில், இன்று சேலத்தில் உள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு தமிழகம் முழுவதும் தங்களது ஆதரவை தெரிவித்து, அதிமுகவின் வெற்றிக்காக பாடுபட போவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து கடிதம் அளித்துள்ளதாகவும், மேலும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை என்ற பெயரை தனியரசு என்பவர் தவறாக பயன்படுத்தி வருவதால் அவர் மீது எட்டு கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கார்வேந்தன் தெரிவித்தார்.1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்ட மன்ற தொகுதி அதிமுக கட்சி செயல்வீரர்கள் மற்றும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் பாபநாசம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரெத்தினசாமி தலைமையிலும் மாநில கழகக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சரவணன் முன்னிலையிலும் அதிமுக வேட்பாளர் துரை. சண்முகபிரபுவை அதிமுக நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தி அதிமுக சாதனைகளை எடுத்துக் கூறி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என நிர்வாகிகள் மத்தியில் கேட்டுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து உமளாபாடி கிராமத்தைச் சேர்ந்த திமுகவினர் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இணைந்த அனைவருக்கும் பொன்னாடை போற்றி அதிமுகவின் வரவேற்றனர். கூட்டத்தில் அதிமுக மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- ஏன்டா மெடிக்கல் ஷாப்ல ஒரு பேனா வாங்கினது குத்தமாடா ? புரிந்தால் சிரியுங்கள்......😂1
- தேவூர் அருகே நல்லங்கியூர் முத்துமாரியம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கை குழந்தைகளுடனும், பல்வேறு அலகுகள் குத்தியும் தீ மிதித்து நேர்த்த்திக்கடன் செலுத்தினார்... சேலம் மாவட்டம் தேவூர் அருகே நல்லங்கியூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த15 நாட்களுக்கு முன்பு கம்பம் நடுதல் செய்து பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.இதனையடுத்து தினந்தோறும் சிறப்பு வழிபாட்டு பூஜை சிறப்பு அலங்காரம் சன்னதியில் தண்ணீர் ஊற்றுதல் பச்சை பூஜை பூவோடு எடுத்தல் செய்து திரளான மக்கள் விரதம் இருந்து வந்தனர்.இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் கல்வடங்கம் காவேரி ஆற்றங்கரைக்கு சென்று புனித நீராடி அம்மன் அலங்காரம் செய்து தீர்த்த குடம் எடுத்தும் மயில் அலகு ,வேல் அலகு ,எலுமிச்சை அலகு, மற்றும் இரண்டு பேரும் ஒரே வேல் அலகு குத்தியவாறு திருவீதி உலாவாக கல்வடங்கம் அங்காளம்மன் கோவில் சன்னதியில் புறப்பட்டு கொட்டாயூர் வழியாக நல்லங்கியூர் முத்துமாரியம்மன் கோவில் சன்னதி வந்தடைந்தனர்... இதனையடுத்து கோவில் சன்னதி முன்பு அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் திரளான மக்கள் நீண்ட வரிசையில் நின்று தீ மிதித்தனர். பின்னர் வழிபட்டு பூஜை பொங்கல் வைத்தல் மாவிளக்கு தட்டம் எடுத்தல் கிடா வெட்டுதல் பெரிய பூஜை நடைபெற்றது இதில் நல்லங்கியூர், வட்ராம்பாளையம்,கொட்டாயூர், ரெட்டி பாளையம்,மேட்டாங்காடு,சோழக்கவுண்டனூர், மேட்டுப்பாளையம், காவேரி பட்டி,வெள்ளாளபாளையம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்... விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா குமார் தலைமையில் ஊர் கவுண்டர்கள் கொத்துக்காரர்கள் கோவில பூசாரிகள், இளைஞர்கள் உப்பட கிராம மக்கள் திரளாகக் கலந்து கொண்டு செய்திருந்தனர்..1
- குளித்தலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் அயர்மலையிலிருந்து சுவாமிகள் அலங்காரத்துடன் கொண்டு வரப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்நிகழ்வில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- கடலூர் மாவட்டம் புவனகிரியில் திமுக வேட்பாளர் துரை.கி.சரவணன் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் தமிழக முழுவதும் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது இதனையொட்டி தமிழக முழுவதும் வேட்பாளர்கள் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் துரை.கி. சரவணன் இன்று புவனகிரி பாலக்கரையில் அமைந்துள்ள அண்ணா உருவச்சிலை அம்பேத்கர் உருவச்சிலை பெரியார் உருவச்சிலை மற்றும் ராஜீவ் காந்தி உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார் .இதில் திமுக கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் பங்கேற்று சிறப்பித்தார் .மேலும் இந்நிகழ்வில் திமுக மற்றும் காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் கம்யூனிஸ்டுகள் மதிமுக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.1
- நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆதித்தமிழர் பேரவையின் சார்பில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, இவ்வித நிபந்தனையும் எங்கேயும் தங்களது முழு ஆதரவையும் தெரிவிப்பதாகவும், இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியில் ஆதித்தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் செய்யாமல் ஓட்டுகளை மட்டும் பெற்றுவிட்டு தங்களை ஏமாற்றியதாகவும், எனவே அவர்களுக்கு வரும் தேர்தலில் தக்க பாடம் ஓட்டுவதற்காக, அதிமுகவிற்கு முழு ஆதரவையும் தெரிவிப்பதாக ஆதித்தமிழர் பேரவையின் நிர்வாகிகள் என்று சேலத்தில் உள்ள இபிஎஸ்ன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.1
- பாபநாசம் சட்டமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் திருக்கருகாவூர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் எம்.ரெங்கசாமி, ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, திமுக ஒன்றிய செயலாளர்கள். பி.எஸ்.குமார், தாமரைச்செல்வன். நாசர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்மாபேட்டை திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தியாக சுரேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வரும் சட்ட மன்ற தேர்தலில் பாபநாசத்தில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் ஷாஜகானை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினர். கூட்டத்தில் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் ஷாஜகான் கலந்து கொண்டு தனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் கோவிஅய்யாராசு, துரைமுருகன், முன்னாள் தொகுதி பொறுப்பாளர் கே.வீ.கலைச்செல்வன். மற்றும் திமுக, காங்கிரஸ், உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1