பிரதம மந்திரி இலவசவீடு (PMAY) திட்டம் என்னாச்சு? கடந்த கட்சியில் கலைஞர் கனவு இல்லம்( KKI) பயனாளிகள் தேர்வு என்னாச்சு? மக்கள் கேள்வி! ஜூலை. 31. திருவாடானை கடந்த ஆட்சி காலங்களில் இருந்து வந்த பிரதம மந்திரி இலவச வீடு(PMAY) திட்டம் என்னாச்சு? சமூக ஆர்வலர்கள் கேள்வி? இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு பஞ்சாயத்து ஊராட்சிகளிலும் கடந்த திமுக ஆட்சியின் போது( KKI ) கலைஞர் கனவு இல்லம் என்ற திட்டத்தின் மூலம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மூலம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வேலை ஆணை (work order) வழங்கப்போகிற சூழ்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் சுமார் 150 க்கு மேற்பட்ட பயனாளிகள் என இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கிட்டதட்ட 1500 க்கு மேற்பட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர் வறுமையால் வாடுகின்ற இந்த ஏழை பயனாளிகளுக்கு மத்திய மாநில அரசுகள் மக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட இந்த சிறப்பான திட்டம். நகர்ப்புற ( pmay-u) மற்றும் கிராமப்புற(pmay-g) ஏழைக்குடும்பங்களுக்கு இலவசமாக வீடுகளை கட்டித்தருகிறது. அனைவருக்கும் வீடு என்ற இந்த திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதா? இந்த சாமானிய மக்களின் நிலைதான் என்ன? ஏழைகளுக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள எளிய மக்களுக்கும் கிடைத்த அரசின் திட்டம் நிறுத்தப்பட்டதால் மிகவும் மன உலைச்சலுடன் இருப்பதாகவும் ஏழையின் வீடுகட்டும் கனவு இல்லம் வெறும் கனவு இல்லமாக மாறிவிட்டதாகவும் பயனாளிகள் கண்ணீர் வடிக்கின்றனர். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு விஜய் அவர்கள் இந்த ஏழைகளின் கண்ணீரை பார்ப்பாரா? இதற்கு ஒரு தீர்வு கிடைக்குமா?என வேதனையோடு கோரிக்கை வைக்கின்றனர். ஈட்டி வளவன் மாவட்ட செய்தியாளர் இராமநாதபுரம் மாவட்டம்

- மீனவள் வலையில் சிக்கிய அரேகிய வகை நட்சத்திர ஆமையை பத்திரமாக கடலில் விட்ட மீனவர்கள் தொண்டி மகா சக்தி புரம் பகுதியைச் சேர்ந்த சதீஸ் என்பவருக்கு சொந்தமான படகில் முனிஸ் இரண்டு மீனவர்கள் தொண்டி மகாசக்திபுரம் கடலுக்குச் சென்று வலையை எடுத்த போது வலையில் அரிய வகை நட்சத்திர ஆமைகள் தங்களது வலையில் அடுத்தடுத்து இரண்டு ஆமைகள் சிக்கி இருந்தது அதனை கண்ட மீனவர்கள் உடனடியாக வலையை அறுத்து பத்திரமாக மீண்டும் கடலுக்குள் இரண்டு ஆமைகளையும் விட்டனர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது அது தடை செய்யப்பட்ட ஆமை என்பதால் கடலோர காவல் படையினர், கடலோர பாதுகாப்பு படை அறிவுத்தலின்படி மீனவர்கள் பத்திரமாக நீண்ட நேரம் போராடி வலையை அறுத்து மீட்டு கடலில் விட்டனர். வலையில் சிக்கிய ஆமையை பத்திரமாக கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதே நேரம் வலை சேதமடைந்து விட்டதாகவும் தெரிவித்தனர்1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் Kபுதுக்குடி கிராமத்தில் திருவிழாவை முன்னிட்டு கும்மி திருவிழா நடைபெற்றது1
- கணிதம் கடினம் என்ற மாணவன்... உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு!” சிவகங்கை அருகே 9 வயது மாணவன் ஒருவர் கணிதப் பாடத்தில் இருந்த சவாலை வென்று உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரின் பாராட்டைப் பெற்றுள்ளார். சிவகங்கை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் திருப்பதி – வனிதா தம்பதியினரின் மகன் ஸ்ரீ வர்ஷன், சிவகங்கையில் உள்ள டி.எஸ். கார்த்திகேய ராஜா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த ஏபிசிடி, எண்கள் மற்றும் கணித வாய்ப்பாடுகளை ஆர்வத்துடன் கற்ற மாணவன், கணிதம் தனக்கு கடினமாக இருப்பதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தாயின் ஊக்கத்தால் கணித வாய்ப்பாடுகளை பிழையின்றி கற்று, பின்னர் அவற்றை தலைகீழாக கூறும் பயிற்சியிலும் ஈடுபட்டார். மாணவனின் திறமையை கண்டறிந்த பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் தொடர்ந்து பயிற்சி அளித்தனர். அதன் விளைவாக ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை தலைகீழாக மனப்பாடம் செய்து அசத்தினார். இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நடத்திய போட்டியில் பங்கேற்ற ஸ்ரீ வர்ஷன், ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை வெறும் 1 நிமிடம் 46 வினாடிகளில் தலைகீழாக கூறி உலக சாதனை படைத்துள்ளார். அவரது சாதனையை அங்கீகரித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளது. தமிழகத்திற்கும், சிவகங்கை மாவட்டத்திற்கும், தனது பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவன் ஸ்ரீ வர்ஷனை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் ஆகாஷை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் பெற்றார். உலக சாதனைக்கு தனது தாயின் ஊக்கமே காரணம் என தெரிவித்த மாணவன் ஸ்ரீ வர்ஷன், தனக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.1
- புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது இதனை அடுத்து நேற்று பெய்த மழையின் அளவை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது புதுக்கோட்டை மாவட்டத்தல் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவை புதுகை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை 46 மி.மீ,குடுமியான்மலை 30 மி.மீ, திருமயம் 25.2 மி.மீ அன்னவாசல் 16 மி.மீ , காரையூர் 10.4 மி.மீ, கந்தர்வகோட்டை 7.5 மி.மீ, கீரனூர் 6.4 மி.மீ,அரிமளம் 6 மி.மீ, உடையாளிபட்டி 5.8மி.மீ, பொன்னமராவதி 4.2 மி.மீ, ஆலங்குடி 3 மி.மீ,கரம்பக்குடி 1.2மி.மீ என மொத்தம் 161.7மி.மீ பதிவாகியுள்ளது.1
- ஸ்ரீராமர் ஆலயத்தில் பெண்கள் 108 திருவிளக்கு பூஜை செய்தனர் சிங்கம்புணரி அண்ணா நகரில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்தில் இன்று மூன்றாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு பெண்கள் 108 திருவிளக்கு பூஜை செய்தனர். நல்ல மழை, நோயற்ற வாழ்வு, மாங்கல்ய பலம், குழந்தைகள் கல்வி ஆகியவற்றிற்காக விரதம் இருந்து குத்துவிளக்கு பூஜை செய்தனர். குங்கும அர்ச்சனை, லலிதா சகஸ்ரநாமம், மகாலட்சுமி பூஜைக்குப் பிறகு அன்னை சீதாதேவிக்கும் மூலவர்களுக்கும் மகாதீபாரத்தி காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட எம்எல்ஏ மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சேடபட்டி மணிமாறன் அவர்கள் செக்காணூரணியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளை பார்வையிட்டதோடு, ஆ.கொக்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் முக்கியஸ்தர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைந்து தீர்வு காணும் படி அறிவுறுத்தினார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.1
- கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் சுவாமி வெள்ளி நகை திருட்டு மேல்பனையூர் கிராமத்தில் அருள்மிகு புலிக்குட்டி அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் சுவாமியின் கழுத்தில் இருந்த 24 கிராம் வெள்ளிச் சங்கிலியைத் திருடிச் சென்றுள்ளனர். மேலும் பூசாரி அறையில் இருந்த பீரோ உடைத்து திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாடானை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்1
- *மதுரை வாடிப்பட்டியருகே விசிக கொடிக்கம்பம் அகற்றம்* - *போலீசார் விசிகவினரிடையே* *தள்ளுமுள்ளு* - *விசிக நிர்வாகியை சட்டை கிழிந்த நிலையில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு* *மதுரை வாடிப்பட்டியருகே விசிக கொடிக்கம்பம் அகற்றம்* - *போலீசார் விசிகவினரிடையே* *தள்ளுமுள்ளு* - *விசிக நிர்வாகியை சட்டை கிழிந்த நிலையில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு* மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக விசிகவினர் அப்பகுதியில் கொடி மரம் அமைத்து பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விசிக கொடி கம்பம் அருகே புதிய தமிழகம் கட்சி சார்பில் கொடி கம்பம் நடப்பட்டதாகவும், இதற்கு விசிக மற்றும் பொது மக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் இரு கொடி மரங்களையும் அகற்றுவது என வருவாய்த்துறையினர் முடிவு செய்து இன்று நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த கொடி மரம் அகற்ற வந்த நிலையில் கொடி மரத்தை அகற்ற அப்பகுதி விசிகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விசிகவினர் போலீசாரிடமிடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது விசிக நிர்வாகியை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி செல்ல முயன்ற போது அவரின் சட்டை கிழிந்ததாக கூறப்படுகிறது, இதில் போராட்டத்தின் போது பெண் ஒருவர் மயக்கமடைந்தார், பின்னர் கொடிமரம் அகற்ற எதிர்ப்பு தெரிவித்த விசிகவினர் பொது மக்கள் என 94 பேரை வாடிப்பட்டி போலீசார் கைது செய்து ஆண்டிபட்டி பங்களா பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் அனைவரையும் தங்க வைத்துள்ளனர். தவெக கூட்டணி கட்சியான விசிக கொடி கம்பம் அகற்றுவது தொடர்பாக விசிக போலீசாரிடமிடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1