logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சிவகங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ₹15 கோடி மதிப்பிலான 3.020 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்துள்ளனர். சிவகங்கை டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திரா நகர் ரயில்வே கேட் பகுதியில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், இளையான்குடி மற்றும் திருச்சியைச் சேர்ந்த இந்த நால்வரும் பிடிபட்டனர். கைதானவர்களிடமிருந்து 3.020 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை மலேசியாவிற்கு கடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்டவர்கள் பல ஆண்டுகளாக “குருவிகள்” என்ற பெயரில் கடத்தல் காரியங்களில் செயல்பட்டு வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக சிவகங்கை நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய மற்ற நபர்களை கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 hr ago
user_Devakottaigani news
Devakottaigani news
சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
1 hr ago

சிவகங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ₹15 கோடி மதிப்பிலான 3.020 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்துள்ளனர். சிவகங்கை டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திரா நகர் ரயில்வே கேட் பகுதியில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், இளையான்குடி மற்றும் திருச்சியைச் சேர்ந்த இந்த நால்வரும் பிடிபட்டனர். கைதானவர்களிடமிருந்து 3.020 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை மலேசியாவிற்கு கடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்டவர்கள் பல ஆண்டுகளாக “குருவிகள்” என்ற பெயரில் கடத்தல் காரியங்களில் செயல்பட்டு வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக சிவகங்கை நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய மற்ற நபர்களை கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சார்பில், 'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாடு பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் இன்று மாலை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் அவர் வெளியிட உள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகளும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், பொள்ளாச்சியில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகத் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் இருந்து ஏராளமான 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் உறுப்பினர்கள் பொள்ளாச்சி நோக்கித் தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
    4
    'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சார்பில், 'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாடு பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் இன்று மாலை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் அவர் வெளியிட உள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகளும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், பொள்ளாச்சியில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகத் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் இருந்து ஏராளமான 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் உறுப்பினர்கள் பொள்ளாச்சி நோக்கித் தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பெரியகுளம் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் இன்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, கடந்த ஆட்சி காலத்தில் அம்மா சிமெண்ட் குடோன் வைக்கப்பட்டிருந்த பகுதி மிகவும் அசுத்தமாகவும், குப்பைகளுடனும் சுகாதாரமற்று இருந்ததைக் கண்டு அமைச்சர் கடும் அதிருப்தி அடைந்தார். "உங்கள் வீட்டை இப்படித்தான் அசுத்தமாக வைத்துக் கொள்வீர்களா? உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது போல் அரசு கிட்டங்கியையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்று அங்கிருந்த அதிகாரிகளையும் பணியாளர்களையும் அவர் கடுமையாகக் கண்டித்தார். இதனைத் தொடர்ந்து, வளாகத்தில் உள்ள இரண்டு கிட்டங்கிகளிலும் ஒவ்வொரு பகுதியாகச் சென்று ஆய்வு செய்த அமைச்சர், உணவுப் பொருட்களின் தரம், இருப்பு, எடை, சுகாதாரம் மற்றும் பணியாளர்களின் வருகைப் பதிவேடு ஆகியவற்றைச் சரிபார்த்தார். மேலும், ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் உணவுப் பொருள் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் வீடுகளில் ஆய்வு செய்து, அவர்கள் வீட்டை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறியும் திட்டம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, பருப்பு, சீனி மற்றும் மைதா ஆகியவற்றை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சாக்குகள் மிகவும் தரமற்றதாகவும், சேதமடைந்தும், பழையதாகவும் இருந்ததைக் கண்ட அமைச்சர், அவற்றை உடனடியாக மாற்றி, தரமான பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக வைக்க உத்தரவிட்டார். வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படும் உணவுப் பொருள் பைகள் மிகவும் தரமற்று இருப்பதாக ஊழியர்கள் தனக்கு அனுப்பிய ஆடியோ புகாரை, அங்கிருந்த பணியாளர்களிடமே அமைச்சர் நேரடியாகப் போட்டுக் காட்டினார். இதனால் ஆண்டிபட்டி நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆய்வின் போது, தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன், உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் தேனி மாவட்ட தவெக செயலாளர் பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    2
    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பெரியகுளம் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் இன்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, கடந்த ஆட்சி காலத்தில் அம்மா சிமெண்ட் குடோன் வைக்கப்பட்டிருந்த பகுதி மிகவும் அசுத்தமாகவும், குப்பைகளுடனும் சுகாதாரமற்று இருந்ததைக் கண்டு அமைச்சர் கடும் அதிருப்தி அடைந்தார். "உங்கள் வீட்டை இப்படித்தான் அசுத்தமாக வைத்துக் கொள்வீர்களா? உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது போல் அரசு கிட்டங்கியையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்று அங்கிருந்த அதிகாரிகளையும் பணியாளர்களையும் அவர் கடுமையாகக் கண்டித்தார்.

இதனைத் தொடர்ந்து, வளாகத்தில் உள்ள இரண்டு கிட்டங்கிகளிலும் ஒவ்வொரு பகுதியாகச் சென்று ஆய்வு செய்த அமைச்சர், உணவுப் பொருட்களின் தரம், இருப்பு, எடை, சுகாதாரம் மற்றும் பணியாளர்களின் வருகைப் பதிவேடு ஆகியவற்றைச் சரிபார்த்தார். மேலும், ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் உணவுப் பொருள் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் வீடுகளில் ஆய்வு செய்து, அவர்கள் வீட்டை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறியும் திட்டம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, பருப்பு, சீனி மற்றும் மைதா ஆகியவற்றை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சாக்குகள் மிகவும் தரமற்றதாகவும், சேதமடைந்தும், பழையதாகவும் இருந்ததைக் கண்ட அமைச்சர், அவற்றை உடனடியாக மாற்றி, தரமான பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக வைக்க உத்தரவிட்டார்.

வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படும் உணவுப் பொருள் பைகள் மிகவும் தரமற்று இருப்பதாக ஊழியர்கள் தனக்கு அனுப்பிய ஆடியோ புகாரை, அங்கிருந்த பணியாளர்களிடமே அமைச்சர் நேரடியாகப் போட்டுக் காட்டினார். இதனால் ஆண்டிபட்டி நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆய்வின் போது, தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன், உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் தேனி மாவட்ட தவெக செயலாளர் பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீண் கௌதம், போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர நடை ரோந்துப் பணியில் ஈடுபட்டார். இந்த ரோந்துப் பணியின் போது, குற்றச் சம்பவங்களைத் தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்தும், எங்கு தவறு நடந்தாலும் அதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.
    1
    தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீண் கௌதம், போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர நடை ரோந்துப் பணியில் ஈடுபட்டார். இந்த ரோந்துப் பணியின் போது, குற்றச் சம்பவங்களைத் தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்தும், எங்கு தவறு நடந்தாலும் அதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • திண்டுக்கல் வத்தலகுண்டு சாலை முழுவதும் பள்ளங்கள் நிறைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலும், மழை பெய்தால் இப்பகுதியில் சாக்கடை நீர் தேங்கி கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மக்களுக்கு அரசு அதிகாரிகள் செய்துள்ள 'நற்பணிகள்' இந்த அளவிற்கு அதிகமாக உள்ளது என்று பொதுமக்கள் கடுமையான நையாண்டியுடனும் ஆத்திரத்துடனும் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சாலை வழியாக நெடுஞ்சாலைத்துறையினர், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஏராளமான உள்ளாட்சி நிர்வாகிகள் என பலரும் தினசரி பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பொதுமக்கள் மனு கொடுத்தால் மட்டும்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்றும், இதுவரை கொடுத்த மனுக்கள் மீது எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். சாலை அவலத்தால் நடக்கும் விபத்துகளுக்கு அரசு அதிகாரிகள்தான் காரணம் என்று பொதுமக்கள் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
    1
    திண்டுக்கல் வத்தலகுண்டு சாலை முழுவதும் பள்ளங்கள் நிறைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலும், மழை பெய்தால் இப்பகுதியில் சாக்கடை நீர் தேங்கி கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மக்களுக்கு அரசு அதிகாரிகள் செய்துள்ள 'நற்பணிகள்' இந்த அளவிற்கு அதிகமாக உள்ளது என்று பொதுமக்கள் கடுமையான நையாண்டியுடனும் ஆத்திரத்துடனும் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தச் சாலை வழியாக நெடுஞ்சாலைத்துறையினர், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஏராளமான உள்ளாட்சி நிர்வாகிகள் என பலரும் தினசரி பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பொதுமக்கள் மனு கொடுத்தால் மட்டும்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்றும், இதுவரை கொடுத்த மனுக்கள் மீது எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். சாலை அவலத்தால் நடக்கும் விபத்துகளுக்கு அரசு அதிகாரிகள்தான் காரணம் என்று பொதுமக்கள் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    14 hrs ago
  • தூத்துக்குடி அருகே உள்ள சிறுபாடு சவேரியார் புரம் கிராமத்தில், மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தினால் மரக்கிளையை வெட்டச் சென்ற கூலி தொழிலாளி கீழே விழுந்தார். இதனால் காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    1
    தூத்துக்குடி அருகே உள்ள சிறுபாடு சவேரியார் புரம் கிராமத்தில், மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தினால் மரக்கிளையை வெட்டச் சென்ற கூலி தொழிலாளி கீழே விழுந்தார். இதனால் காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்கள் அனைத்தும் வேகமாக பட்டா நிலங்களாக மாறி வருவதால், ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வழியின்றி ஆடு வளர்ப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆறுகள் மற்றும் கண்மாய்களில் போதிய அளவு தண்ணீர் இல்லாததும் இந்தத் தொழில் அழியும் நிலைக்குத் தள்ளப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என இப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இக்கட்டான சூழ்நிலையில் உள்ள தங்களைப் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக ஆடு வளர்க்கும் விவசாயிகளுக்கென தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நல வாரியம் மூலம் தேவையான உதவிகளை வழங்கி, ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். மேய்ச்சலுக்கு செல்ல வழி இல்லாததால் ஆடு வளர்ப்பு தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக வேல்ராஜ் என்பவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    1
    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்கள் அனைத்தும் வேகமாக பட்டா நிலங்களாக மாறி வருவதால், ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வழியின்றி ஆடு வளர்ப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆறுகள் மற்றும் கண்மாய்களில் போதிய அளவு தண்ணீர் இல்லாததும் இந்தத் தொழில் அழியும் நிலைக்குத் தள்ளப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என இப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இக்கட்டான சூழ்நிலையில் உள்ள தங்களைப் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக ஆடு வளர்க்கும் விவசாயிகளுக்கென தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நல வாரியம் மூலம் தேவையான உதவிகளை வழங்கி, ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். மேய்ச்சலுக்கு செல்ல வழி இல்லாததால் ஆடு வளர்ப்பு தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக வேல்ராஜ் என்பவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ லிங்க சுடலைமாடசாமி திருக்கோவில் ஆனித் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் இன்று நடத்தப்பட்டது. இப்போட்டியில் பெரிய மாடு பிரிவில் 9 வண்டிகளும், சின்ன மாடு பிரிவில் 20 வண்டிகளும் பங்கேற்றன. இதில் திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாட்டு வண்டிகள் வந்து கலந்து கொண்டன. இப்போட்டிகளை தொழிலதிபர்கள் கோவை லட்சுமணன், ஐரவன்பட்டி முருகேசன், பொன்முருகன், தங்ககுமார், ராமச்சந்திரன், அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி பாசறை கவியரசன் மற்றும் வழக்கறிஞர் கனகராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பெரிய மாட்டு வண்டி பிரிவில் சீவலப்பேரி துர்காம்பிகா மாட்டு வண்டி முதல் பரிசான ரூபாய் ஒரு லட்சத்தை தட்டிச் சென்றது. நாகம்பட்டி மாட்டு வண்டி இரண்டாவது பரிசையும், சிவகங்கை மாவட்டம் OA பில்டர் மாட்டு வண்டி மூன்றாவது பரிசையும், ஆர் சி ஆர் சித்திரங்குடி மாட்டுவண்டி நான்காவது பரிசையும் பெற்றன. தொடர்ந்து நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியில் உடப்பன்பட்டி சுப சின்னையா காபி பார் மாட்டு வண்டி முதல் பரிசையும், துரைசாமிபுரம் ஆர் எஸ் சுரேஷ் குமார் அய்யங்கார் பேக்கரி மாட்டு வண்டி இரண்டாவது பரிசையும், ஆப்பனூர் நாகநாதன் பிரதர்ஸ் பால்பண்ணை மாட்டு வண்டி மூன்றாவது பரிசையும், மோகன் சாமி குமார் மாட்டு வண்டி நான்காவது பரிசையும் வென்றன. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    1
    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ லிங்க சுடலைமாடசாமி திருக்கோவில் ஆனித் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் இன்று நடத்தப்பட்டது.

இப்போட்டியில் பெரிய மாடு பிரிவில் 9 வண்டிகளும், சின்ன மாடு பிரிவில் 20 வண்டிகளும் பங்கேற்றன. இதில் திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாட்டு வண்டிகள் வந்து கலந்து கொண்டன. இப்போட்டிகளை தொழிலதிபர்கள் கோவை லட்சுமணன், ஐரவன்பட்டி முருகேசன், பொன்முருகன், தங்ககுமார், ராமச்சந்திரன், அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி பாசறை கவியரசன் மற்றும் வழக்கறிஞர் கனகராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பெரிய மாட்டு வண்டி பிரிவில் சீவலப்பேரி துர்காம்பிகா மாட்டு வண்டி முதல் பரிசான ரூபாய் ஒரு லட்சத்தை தட்டிச் சென்றது. நாகம்பட்டி மாட்டு வண்டி இரண்டாவது பரிசையும், சிவகங்கை மாவட்டம் OA பில்டர் மாட்டு வண்டி மூன்றாவது பரிசையும், ஆர் சி ஆர் சித்திரங்குடி மாட்டுவண்டி நான்காவது பரிசையும் பெற்றன. தொடர்ந்து நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியில் உடப்பன்பட்டி சுப சின்னையா காபி பார் மாட்டு வண்டி முதல் பரிசையும், துரைசாமிபுரம் ஆர் எஸ் சுரேஷ் குமார் அய்யங்கார் பேக்கரி மாட்டு வண்டி இரண்டாவது பரிசையும், ஆப்பனூர் நாகநாதன் பிரதர்ஸ் பால்பண்ணை மாட்டு வண்டி மூன்றாவது பரிசையும், மோகன் சாமி குமார் மாட்டு வண்டி நான்காவது பரிசையும் வென்றன. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    user_Pooraja V
    Pooraja V
    ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், 28 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் ஊமைத்தலைவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரது மகன் கார்த்திக் (28) என்பவரே இவ்வாறு விபத்தில் சிக்கி பலியானவர் ஆவார். இவருக்குத் திருமணமாகி வெறும் மூன்று மாதங்களே ஆகியுள்ள நிலையில், தனது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. கார்த்திக் இளையரசனேந்தல் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரது இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மேற்கு காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கார்த்திக்கின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், 28 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் ஊமைத்தலைவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரது மகன் கார்த்திக் (28) என்பவரே இவ்வாறு விபத்தில் சிக்கி பலியானவர் ஆவார். இவருக்குத் திருமணமாகி வெறும் மூன்று மாதங்களே ஆகியுள்ள நிலையில், தனது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

கார்த்திக் இளையரசனேந்தல் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரது இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மேற்கு காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கார்த்திக்கின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_கோ.ரெங்கசாமி
    கோ.ரெங்கசாமி
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.