logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

"நெதன்"யாகுவை கைது செய்ய வேண்டும் என அதிக அளவு அமெரிக்கர்கள் ஆதரவு!! Economist/YouGov வெளியிட்ட புதிய கருத்துக்கணிப்பின்படி, அமெரிக்காவுக்கு வருகை தரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிறப்பித்துள்ள கைது வாரண்டின் அடிப்படையில் கைது செய்ய வேண்டும் என்று 49% அமெரிக்கர்கள் ஆதரித்துள்ளனர். அதேவேளை, 27% பேர் கைது செய்யக் கூடாது என தெரிவித்துள்ளதுடன், 23% பேர் உறுதியான கருத்து தெரிவிக்கவில்லை. மேலும், 47% அமெரிக்கர்கள், காசாவில் நெதன்யாகு போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக நம்புவதாகவும், 43% பேர் பாலஸ்தீன பொதுமக்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருவதாக கருதுவதாகவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. நெதன்யாகு செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா செல்லவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “நெதன்யாகு அமெரிக்காவில் இருக்கும் வரை எந்த வகையிலும் கைது செய்யப்படமாட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

5 hrs ago
user_KS. RAFEEQ
KS. RAFEEQ
Media Consultant அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
5 hrs ago
6d8a4136-714e-4f4d-a9bc-b4b1a021f229

"நெதன்"யாகுவை கைது செய்ய வேண்டும் என அதிக அளவு அமெரிக்கர்கள் ஆதரவு!! Economist/YouGov வெளியிட்ட புதிய கருத்துக்கணிப்பின்படி, அமெரிக்காவுக்கு வருகை தரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிறப்பித்துள்ள கைது வாரண்டின் அடிப்படையில் கைது செய்ய வேண்டும் என்று 49% அமெரிக்கர்கள் ஆதரித்துள்ளனர். அதேவேளை, 27% பேர் கைது செய்யக் கூடாது என தெரிவித்துள்ளதுடன், 23% பேர் உறுதியான கருத்து தெரிவிக்கவில்லை. மேலும், 47% அமெரிக்கர்கள், காசாவில் நெதன்யாகு போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக நம்புவதாகவும், 43% பேர் பாலஸ்தீன பொதுமக்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருவதாக கருதுவதாகவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. நெதன்யாகு செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா செல்லவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “நெதன்யாகு அமெரிக்காவில் இருக்கும் வரை எந்த வகையிலும் கைது செய்யப்படமாட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • நெல்லை மாவட்டம் மாஞ்சோலைக்குச் செல்ல தொழிலாளர்களுக்கு அனுமதி மறுப்பு நெல்லை மாவட்டம் மாஞ்சோலைக்கு செல்ல தொழிலாளர்களுக்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாஞ்சோலை முழுவதும் வனத்துறைக்கு கட்டுப்பாட்டு கீழ் வந்த அதை அடுத்து நேற்று மதியம் மாஞ்சோலைக்குச் செல்லும் பேருந்து மணிமுத்தாறு பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு அங்கு இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
    1
    நெல்லை மாவட்டம் மாஞ்சோலைக்குச் செல்ல தொழிலாளர்களுக்கு அனுமதி மறுப்பு 
நெல்லை மாவட்டம் மாஞ்சோலைக்கு செல்ல தொழிலாளர்களுக்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாஞ்சோலை முழுவதும் வனத்துறைக்கு கட்டுப்பாட்டு கீழ் வந்த அதை அடுத்து நேற்று மதியம் மாஞ்சோலைக்குச் செல்லும் பேருந்து மணிமுத்தாறு பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு அங்கு இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வீ த லீடர்ஸ் சார்பில் போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக மாணவர்கள் ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியை மாவட்ட வீ த_க்ஷ லீடர்ஸ் தன்னார்வலர்கள் மற்றும் சுமு முருகன், மாடசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    1
    தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 
வீ த லீடர்ஸ் சார்பில் போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக மாணவர்கள் ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது 
நிகழ்ச்சியை மாவட்ட வீ த_க்ஷ லீடர்ஸ் தன்னார்வலர்கள் மற்றும் சுமு முருகன், மாடசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • மறைந்த விசிக நிர்வாகி உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருமாவளவன் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உடல் நலக்குறைவால் மறைந்த திருமங்கலம் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் பழக்கடை சுப்ரமணியன் அவர்களின் திருவுடலுக்கு இன்று (ஆக.1) மதுரை வந்த விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். உடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    1
    மறைந்த விசிக நிர்வாகி உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருமாவளவன் 
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உடல் நலக்குறைவால் மறைந்த திருமங்கலம் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர்  பழக்கடை சுப்ரமணியன் அவர்களின் திருவுடலுக்கு இன்று (ஆக.1) மதுரை வந்த விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். உடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    15 min ago
  • தேவகோட்டை அருகே கோவில் திருவிழா முன்னிட்டு உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஆவரங்காடு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத திருவிழா முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த புனித ஆடி மாதத்தில், உலக நன்மை மற்றும் அனைவரின் நலனை வேண்டி சிறப்பு திருவிளக்கு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது. பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.உலக அமைதி, நல்வாழ்வு, மற்றும் அனைவரின் நலனுக்காகவும் இந்த சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்கள் தங்கள் குடும்ப நலனுக்காகவும், சமுதாய நன்மைக்காகவும் அம்மனை வேண்டி வழிபட்டனர்.
    1
    தேவகோட்டை அருகே கோவில் திருவிழா முன்னிட்டு உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடைபெற்றது. 
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஆவரங்காடு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத திருவிழா முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இந்த புனித ஆடி மாதத்தில், உலக நன்மை மற்றும் அனைவரின் நலனை வேண்டி சிறப்பு திருவிளக்கு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது. பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.உலக அமைதி, நல்வாழ்வு, மற்றும் அனைவரின் நலனுக்காகவும் இந்த சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
பக்தர்கள் தங்கள் குடும்ப நலனுக்காகவும், சமுதாய நன்மைக்காகவும் அம்மனை வேண்டி வழிபட்டனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • ஆண்டிபட்டி வருசநாடு அருகே சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை ஒட்டிய மேகமலை, ஹைவேவிஸ் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழையால் சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. தேனி மாவட்டம், மேகமலை அடிவாரத்தில் கோம்பைத்தொழு வடக்கு மலைப்பகுதியில் மேகமலை அருவி உள்ளது. மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள இந்த அருவிக்கு திண்டுக்கல் ,மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வரத்து இருக்கும். நேற்று விடிய விடிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது ஏற்கனவே பெய்த கனமழையால் அருவிக்குச் செல்லும் சாலை பகுதியில் சாலைகள் மிகவும் மண்ணரிப்புகளால் மிகவும் சேதம் அடைந்துள்ளது மேலும் படிக்கட்டுகள் தடுப்புக்கம்பிகள் உடைந்து காணப்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இந்நிலையில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கிற்கான பயணிகளுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து சின்ன சுருளி அருவிக்கு மீறி செல்வோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..
    1
    ஆண்டிபட்டி வருசநாடு அருகே சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை

தேனி மாவட்டம்  ஆண்டிபட்டியை ஒட்டிய மேகமலை, ஹைவேவிஸ்  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழையால் சின்ன சுருளி   அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை  தடை விதித்துள்ளது. 
தேனி மாவட்டம், மேகமலை அடிவாரத்தில் கோம்பைத்தொழு வடக்கு  மலைப்பகுதியில் மேகமலை அருவி உள்ளது. 
மேகமலை  ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள்  சரணாலயத்தில் அமைந்துள்ள இந்த அருவிக்கு திண்டுக்கல் ,மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  
ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வரத்து இருக்கும். 
நேற்று விடிய விடிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது 
ஏற்கனவே பெய்த  கனமழையால்  அருவிக்குச் செல்லும் சாலை பகுதியில் சாலைகள் மிகவும் மண்ணரிப்புகளால்   மிகவும் சேதம் அடைந்துள்ளது 
மேலும் படிக்கட்டுகள் தடுப்புக்கம்பிகள் உடைந்து காணப்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. 
இந்நிலையில் தொடர் மழையால்  வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கிற்கான  பயணிகளுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது
இதனைத் தொடர்ந்து சின்ன சுருளி  அருவிக்கு மீறி செல்வோர் மீது  உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் செல்லாத தனியார் பேருந்து  பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு  ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்கி விடாமல் சென்ற தனியார்  பேருந்து பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஶ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ராஜபாளையம் அருகே நக்கனேரியை சேர்ந்தவர் மாஸ்கோமணி.வழக்குறைஞர். இவர் கடந்த 2025 டிசம்பர் 19-ம் தேதி மதுரையில் இருந்து ஶ்ரீவில்லிபுத்தூருக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்தார். அவர் மதுரை பாண்டி கோயில் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய போது, ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது சர்ச் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும் என நடத்துனர் கூறியுள்ளார். பேருந்து நிலையத்திற்குள் ஏன் செல்லாது என மாஸ்கோ மணி கேட்டபோது, ரூல்ஸ் எல்லாம் பேசக்கூடாது எனக் கூறி பயணிகள் முன்னிலையில் நடத்துனர் அவமரியாதையாக பேசியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாமல் சர்ச் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்து ராஜபாளையம் சென்றது. இதுகுறித்து மாஸ்கோமணி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பேருந்து நிறுவனம் சார்பில் மதுரை பேருந்து நிலையத்தில் வைத்து பேருந்து ஸ்டீயரிங் பழுதானதால், ஓட்டுநர் சரி செய்து எடுத்து வர 20 நிமிடம் தாமதம் ஆனதால் ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது என மதுரையிலேயே நடத்துனர் கூறியதை பயணிகள் ஏற்றுக் கொண்டதாகவும், புகார்தாரர் வழக்குறைஞர் என்பதால் வேண்டுமென்றே புகார் அளித்துள்ளார். பேருந்து புறப்படும் போது ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது என அறிவித்து விட்டதால் இதை சேவை குறைபாடாக கருத முடியாது என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் பேருந்து முறையான வழித்தடங்களில் செல்லாமல், குறித்த நிறுத்தம் செல்லாமல் பயணியை இறக்கி விட்டது சேவை குறைபாடு என தெரிவித்த குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி ஆகியோர், பயணிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர்.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் செல்லாத தனியார் பேருந்து 

பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு 



ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்கி விடாமல் சென்ற தனியார்  பேருந்து பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஶ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ராஜபாளையம் அருகே நக்கனேரியை சேர்ந்தவர் மாஸ்கோமணி.வழக்குறைஞர். இவர் கடந்த 2025 டிசம்பர் 19-ம் தேதி மதுரையில் இருந்து ஶ்ரீவில்லிபுத்தூருக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்தார். அவர் மதுரை பாண்டி கோயில் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய போது, ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது சர்ச் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும் என நடத்துனர் கூறியுள்ளார். பேருந்து நிலையத்திற்குள் ஏன் செல்லாது என மாஸ்கோ மணி கேட்டபோது, ரூல்ஸ் எல்லாம் பேசக்கூடாது எனக் கூறி பயணிகள் முன்னிலையில் நடத்துனர் அவமரியாதையாக பேசியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாமல் சர்ச் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்து ராஜபாளையம் சென்றது. இதுகுறித்து மாஸ்கோமணி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பேருந்து நிறுவனம் சார்பில் மதுரை பேருந்து நிலையத்தில் வைத்து பேருந்து ஸ்டீயரிங் பழுதானதால், ஓட்டுநர் சரி செய்து எடுத்து வர 20 நிமிடம் தாமதம் ஆனதால் ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது என மதுரையிலேயே நடத்துனர் கூறியதை பயணிகள் ஏற்றுக் கொண்டதாகவும், புகார்தாரர் வழக்குறைஞர் என்பதால் வேண்டுமென்றே புகார் அளித்துள்ளார். பேருந்து புறப்படும் போது ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது என அறிவித்து விட்டதால் இதை சேவை குறைபாடாக கருத முடியாது என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் பேருந்து முறையான வழித்தடங்களில் செல்லாமல், குறித்த நிறுத்தம் செல்லாமல் பயணியை இறக்கி விட்டது சேவை குறைபாடு என தெரிவித்த குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி ஆகியோர், பயணிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர்.
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.