Shuru
Apke Nagar Ki App…
கந்தர்வகோட்டையில் பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலி கந்தர்வகோட்டையிலிருந்து பாப்படையான்பட்டிக்கு நேற்று சின்னப்பா (63),பிரபு (40) ஆகிய இருவரும் பைக்கில் சென்றுள்ளனர்.அப்போது கந்தர்வகோட்டை கடைவீதி சாலையில் அவருக்கு எதிரே பைக்கை ஓட்டி வந்த துரைமாணிக்கம் (42) மோதியதில் சின்னப்பாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.பிரபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Mayilvaganan
கந்தர்வகோட்டையில் பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலி கந்தர்வகோட்டையிலிருந்து பாப்படையான்பட்டிக்கு நேற்று சின்னப்பா (63),பிரபு (40) ஆகிய இருவரும் பைக்கில் சென்றுள்ளனர்.அப்போது கந்தர்வகோட்டை கடைவீதி சாலையில் அவருக்கு எதிரே பைக்கை ஓட்டி வந்த துரைமாணிக்கம் (42) மோதியதில் சின்னப்பாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.பிரபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- குடுமியான்மலை அகிலாண்டேஸ்வாரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையில் 7-ம் நூற்றாண்டை சேர்ந்த பிரசித்தி பெற்ற குடவரைக்கோவிலான அகிலாண்டேஸ்வாரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில் இந்த ஆண்டுக்காண பங்குனி உத்திரம் திருவிழா கடந்த 23-.ந்தேதி தொடங்கியது. அதனைதொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு நாளும் மண்டகபடி தாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சிகாகிரீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்பாளை, தேரில் எழுந்தருள செய்தனர். இதையடுத்து குதிரை ஆட்டம், மேளதாளம் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந்தாடி வந்தது ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடி நின்று தேங்காய், பூ, பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் குடுமியான்மலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு நீர்மோர், பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இலுப்பூர் துணை கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் வையம்பட்டியை சேர்ந்த கதிரவன் வேட்பாளராக தவெக தலைவர் விஜய் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து விஜயை சந்தித்து விட்டு மணப்பாறைக்கு ரயிலில் வருகை புரிந்தார். அப்போது மணப்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த தவெக நிர்வாகிகள் பெரும் திரளாக ரயில் நிலையத்தில் ஒன்று கூடி வேட்பாளர் கதிரவனுக்கு வரவேற்பு அளித்தனர்.1
- 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை இணைந்துள்ளதாக அதன் தலைவர் கருணாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்தார். மேலும், திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் கூட்டணிக்கு பெரிய வெற்றியைத் தரும்1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நத்தம் விஸ்வநாதன் காலடியில் சமர்ப்பிப்போம் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஆத்தூர் அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் சூளுரை1
- ஆத்தூர் தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நத்தம் விஸ்வநாதன் காலடியில் சமர்ப்பிப்போம் என அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் சூளுரை1
- மதுரை கிழக்கு தொகுதியின் தவெக கட்சியின் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்ட கார்த்திகேயன் என்பவர் இன்று ( மார்ச் .30) விமான மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர் பேசும் போது 30 ஆண்டுகளாக திமுகவில் கொடுத்த அத்தனை பணிகளை சிறப்புடன் செய்து வந்தேன். எங்களை எல்லாம் வளர்த்து ஆளாக்கிய அண்ணன் அஞ்சாநெஞ்சன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.1
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் குட்டம் ஊராட்சி தாசிர் பட்டியில் ஊர் நுழைவாயில் சுமார் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அவர்களுக்கு தெருக் குழாயில் தண்ணீர் என்பது ஒரு வருங்களாக பிரச்சனை இருந்து வருகிறது பலமுறை ஊராட்சி செயலாளர் ஜோனல் அவர்களிடம் கூறியும் கடைசியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு உங்களுக்கு ஒரு சின்டெக்ஸ் தனியாக வைத்துக் கொடுத்தால் தான் தண்ணீர் பிரச்சனை தீரும் என ஊராட்சி செயலாளர் தங்கவேல் அவர்கள் கூறினார் இதுவரை செவிடன் காதில் ஊதிய சங்கு போல் கண்டுகொள்ளவில்லை தற்போது வெயில் காலங்கள் தண்ணீர் இன்றி பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்த வருகின்றனர் தண்ணீருக்காக பெண்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் செல்ல வேண்டிய சூழல் உள்ளது தமிழக அரசின் திமுக அரசு இது சம்பந்தமாக அந்தக் கட்சியின் நிர்வாகிகளிடம் பேசியபோது அவர்களும் ஏன் அசிங்க படுத்துகிறீர்கள் என்று கூறுகின்றனர் என்று கூறுபவர்கள் யாருக்கு அந்த அசிங்கம் என்று தெரியவில்லையா உங்கள் கட்சிக்கு தானே அந்த அசிங்கம் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்து கொடுக்க முடியாத கட்சியாக உள்ளீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் தற்போது இந்த தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வோம் என கூறி வருகின்றனர் ...1
- விராலிமலை தொகுதியில் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்ய தயாரான மத்திய அரசு வழக்கறிஞர் மீது பா.ஜ.க வினர் தாக்குதலுக்கு உள்ளான வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பரபரப்பு பேட்டி1