Shuru
Apke Nagar Ki App…
நமது NDA கூட்டணியின் வால்பாறை சட்டமன்ற வேட்பாளர் மரியாதைக்குரிய D லக்ஷ்மண சிங் அவர்களுடன்🙏#BJP#ADMK#
Varun pradeep B
நமது NDA கூட்டணியின் வால்பாறை சட்டமன்ற வேட்பாளர் மரியாதைக்குரிய D லக்ஷ்மண சிங் அவர்களுடன்🙏#BJP#ADMK#
More news from Tamil Nadu and nearby areas
- நமது NDA கூட்டணியின் வால்பாறை சட்டமன்ற வேட்பாளர் மரியாதைக்குரிய D லக்ஷ்மண சிங் அவர்களுடன்🙏#BJP#ADMK#1
- பனங்காட்டுப்படை கட்சியின் சார்பாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக அக்கட்சியின் நிறுவனர் ஆறுமுகபாண்டி என்ற ராக்கெட்ராஜா அவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்செய்தார். உடன் மாநில இளைஞரணி தலைவர் அந்தோணி நாடார், டாக்டர் ராமசாமி,தொழிலதிபர் பாலாஜி, வழக்கறிஞர் பூர்ணிமா ஆகியோர் உடனிருந்தனர் .1
- திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடக் கூடிய சத்தியபாமா வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவாக வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் திமுக ஆட்சியை வீழ்த்தக்கூடிய ஒரே சக்தியாக தமிழக வெற்றிக் கழகமும் அதன் தலைவர் விஜயும் இருப்பதாக மக்கள் எண்ணுகிறார்கள் , அது நிறைவேறும் என பேட்டி அளித்தார்.1
- *ஆண்டிப்பட்டி மற்றும் கம்பம் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆண்டிப்பட்டியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து, கிரேன் வாகனம் மூலம் ராட்சத மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினராக உள்ள மகாராஜன் தொடர்ந்து ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கும், கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கும் மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து சொந்த மாவட்டத்திற்கு வருகை புரிந்த இருவருக்கும் ஆண்டிபட்டி நகரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் பட்டாசு வெடித்தும் மலர் தூவியும் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் கிரேன் வாகனம் மூலம் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது தொடர்ந்து ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு கலர் பலூன்களை கட்டி வேட்பாளர்களிடம் தொண்டர்கள் ஆர்வமாக கொடுக்க அதனை வாங்கிய வேட்பாளர்கள் மேலே பறக்க விட்டனர் இதையடுத்து தொண்டர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்ப உற்சாக வெள்ளத்தில் ஆண்டிப்பட்டி நகர் பகுதி முழுவதும் வேட்பாளர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.1
- தங்கையைக் கேலி செய்ததைத் தட்டிக்கேட்ட அண்ணன் படுகொலை - உறவினர்கள் சாலை மறியல். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரில், பள்ளி செல்லும் தனது தங்கையைக் கேலி செய்தவர்களைத் தட்டிக்கேட்ட இளைஞர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எரசக்கநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (28). இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சூர்யாவின் தங்கை அப்பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வருகிறார். பள்ளிக்குச் செல்லும் போது சில சிறுவர்கள் தனது தங்கையைக் கேலி செய்ததாகத் தெரிகிறது. இது குறித்துப் பள்ளிக்குச் சென்ற சூர்யா, சம்பந்தப்பட்டவர்களைக் கண்டித்துள்ளார். இந்த மோதல் காரணமாக, இன்று ஊரின் மையப்பகுதியான கனரா வங்கி அருகே சூர்யா மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இத்தகவல் அறிந்து விரைந்து வந்த சின்னமனூர் காவல்துறையினர், சூர்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, சூர்யாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சின்னமனூர் பிரிவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து எங்கள் முன் நிறுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். எனவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சின்னமனூர் காவல்துறையினர், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.1
- சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நித்யா அருண் ஏர் கலப்பையை சுமந்தபடி தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்... தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கிறது.சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் வேட்புமனு தாக்கல் இன்று 30ஆம் தேதி தொடங்குகிறது... இதனையடுத்து மாநிலம் முழுவதும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன... இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் நித்யா அருண் வேட்புமனு தாக்கல் செய்ய தங்கள் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்களுடன் உழவர் ஏர் கலப்பை தோலில் சுமந்தபடி இன்று சங்ககிரி மலைக்கோட்டையில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று சங்ககிரி தேர்தல் நடத்தும் அலுவலர் கேந்திரியாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்...1
- இன்று சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி(190) வேட்புமனு தாக்கல் தொடங்கியது நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் நாகலெட்சுமி திருமாறன் வாடிப்பட்டியில் கட்சியினர் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர் பிறகு ஊர்வலமாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்1
- பனங்காட்டுப்படை கட்சியின் சார்பாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக அக்கட்சியின் நிறுவனர் ஆறுமுகபாண்டி என்ற ராக்கெட்ராஜா அவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்செய்தார். உடன் மாநில இளைஞரணி தலைவர் அந்தோணி நாடார், டாக்டர் ராமசாமி,தொழிலதிபர் பாலாஜி, வழக்கறிஞர் பூர்ணிமா ஆகியோர் உடனிருந்தனர் .1