logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

வந்தவாசி கருணீகர் சங்க கூட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தமிழ்நாடு கருணீகர் சங்க கிளை சார்பில் 6 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை பயிலும் 37 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கௌரவ தலைவர் ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ். குமார் தலைமை தாங்கினார். கிளை தலைவர் வி. விஜயகுமார், செயலாளர் எஸ்.இராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் எ.இராஜசேகரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, தமிழ்நாடு கருணீகர் சங்க நிர்வாகி ஸ்ரீதேவி துரை அரசு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சம்பத் குமார், கிளை பொறுப்பாளர்கள் மோகன் குமார், சீதாலட்சுமி, பாரதி, கஸ்தூரி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் சங்க நிர்வாகி இரா.அருள்ஜோதி நன்றி கூறினார்.

1 day ago
user_A.Shahulhameed
A.Shahulhameed
Thiruvannamalai, Tamil Nadu•
1 day ago
b3c3fbf6-142e-4e12-9521-16adfdf59a37

வந்தவாசி கருணீகர் சங்க கூட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தமிழ்நாடு கருணீகர் சங்க கிளை சார்பில் 6 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை பயிலும் 37 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கௌரவ தலைவர் ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ். குமார் தலைமை தாங்கினார். கிளை தலைவர் வி. விஜயகுமார், செயலாளர் எஸ்.இராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் எ.இராஜசேகரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, தமிழ்நாடு கருணீகர் சங்க நிர்வாகி ஸ்ரீதேவி துரை அரசு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சம்பத் குமார், கிளை பொறுப்பாளர்கள் மோகன் குமார், சீதாலட்சுமி, பாரதி, கஸ்தூரி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் சங்க நிர்வாகி இரா.அருள்ஜோதி நன்றி கூறினார்.

More news from Tamil Nadu and nearby areas
  • திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜய் (வயது 22), நாகராஜ் (வயது 21) இவர்கள் இருவரும் நண்பராக உள்ளனர். நாளை கோயில் திருவிழாவிற்காக துணி எடுப்பதற்காக ஆம்பூர் பகுதிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு இரும்பு வேலி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு ஒரு நிலையில் இந்த விபத்து தொடர்பாக வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதே பகுதியில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 3 விபத்துக்கள் ஏற்பட்டு அதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 15-ககும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    1
    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜய் (வயது 22), நாகராஜ் (வயது 21) இவர்கள் இருவரும் நண்பராக உள்ளனர்.
நாளை கோயில் திருவிழாவிற்காக துணி எடுப்பதற்காக ஆம்பூர் பகுதிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு இரும்பு வேலி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு  படுகாயம் அடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு ஒரு நிலையில் இந்த விபத்து தொடர்பாக வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
மேலும் இதே பகுதியில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 3 விபத்துக்கள் ஏற்பட்டு அதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 15-ககும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    user_Suji
    Suji
    Tirupathur, Tamil Nadu•
    10 hrs ago
  • Post by Vinayagam Vinayagam
    1
    Post by Vinayagam Vinayagam
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • காஞ்சி மாவட்ட விவசாயிகளுக்கு நேற்று செங்கல்பட்டு மாவட்டம் படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மூலம் சூரிய சக்தி கொண்டு இயங்கும் மின் வேலி அமைப்பது பற்றி விவசாயிகளுக்கு ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இப் பயிற்சியில் வன விலங்குகளிடம் இருந்து தங்கள் பயிர்களை பாதுகாக்கும் வழிகளை பற்றி செயல் விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் கரும்பு ஆலை மேலாண் இயக்குனர், கரும்பு மேலாளர் கரும்பு களப்பணி அதிகாரிகள் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதி வாழ் விவசாயிகள் காஞ்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
    1
    காஞ்சி மாவட்ட விவசாயிகளுக்கு நேற்று செங்கல்பட்டு மாவட்டம் படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மூலம் சூரிய சக்தி கொண்டு இயங்கும்  மின் வேலி அமைப்பது பற்றி விவசாயிகளுக்கு ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இப் பயிற்சியில் வன விலங்குகளிடம் இருந்து தங்கள் பயிர்களை பாதுகாக்கும் வழிகளை பற்றி செயல் விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் கரும்பு ஆலை மேலாண் இயக்குனர், கரும்பு மேலாளர் கரும்பு களப்பணி அதிகாரிகள் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதி வாழ் விவசாயிகள் காஞ்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
    user_Jeya balaji
    Jeya balaji
    உத்திரமேரூர், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    15 hrs ago
  • ஊத்தங்கரையில் மகளிர் தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா வழிகாட்டி அறக்கட்டளை தலைவர் ஆடிட்டர் லோகநாதன் ஏற்பாட்டில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ் செல்வம் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் கலந்துகொண்டு துரை ரீதியாக சாதனை புரிந்த மகளிருக்கு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கழக மகளிர்களுக்கு புடவைகளும் அசைவ விருந்துகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சுந்தரவடிவேல், மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ், நகரக் கழக செயலாளர் சிக்னல் ஆறுமுகம், முன்னாள் நகர கழக செயலாளர் சிவானந்தம், ஒன்றிய கழக செயலாளர்கள் வேடி, வேங்கன், நரேஷ் குமார், சக்கரவர்த்தி, முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் தேவேந்திரன், நகர மாணவரணி செயலாளர் சம்பத் என்கிற கணேசன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் சக்திவேல், மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான அதிமுக கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    1
    ஊத்தங்கரையில் மகளிர் தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா வழிகாட்டி அறக்கட்டளை தலைவர் 
ஆடிட்டர் லோகநாதன் ஏற்பாட்டில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர்
தமிழ் செல்வம் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் கலந்துகொண்டு துரை ரீதியாக சாதனை புரிந்த மகளிருக்கு விருதுகளை வழங்கி  சிறப்புரையாற்றினார்.  அதனைத் தொடர்ந்து கழக மகளிர்களுக்கு புடவைகளும் அசைவ விருந்துகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 
மாவட்ட பொருளாளர் சுந்தரவடிவேல், மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ், நகரக் கழக செயலாளர் சிக்னல் ஆறுமுகம், முன்னாள் நகர கழக செயலாளர் சிவானந்தம், ஒன்றிய கழக செயலாளர்கள் வேடி, வேங்கன், நரேஷ் குமார், சக்கரவர்த்தி, முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் தேவேந்திரன், 
நகர மாணவரணி செயலாளர் சம்பத் என்கிற கணேசன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் சக்திவேல், மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர்
ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான அதிமுக கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    6 hrs ago
  • ---------- காஞ்சிபுரம் மாநகராட்சி ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மேல்நிலைப்பள்ளியில் இன்று 10ம் வகுப்பு தேர்வு எழுதும் அப்பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு முன்னதாக இறை வணக்கம் செலுத்தினர்.பின் பள்ளி மாணவிகள் பள்ளியின் தாளாளர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றும்,பள்ளி மாணவர்கள் தாளாளரை கட்டி அனைத்தும்,காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற பின் தேர்வு எழுத தேர்வு அறைக்கு சென்றனர்.பள்ளி தாளாரோ எவ்வித அச்சமும்,பயமுமின்றி தேர்வை நல்ல படியாக எழுத வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். பள்ளி மாணவர்களின் இந்த வினோத செயல் பள்ளி தாளாரரின் மீது வைத்துள்ள அன்பையும்,தனக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் குருவிற்கு உரிய மரியாதை செய்யும் விதமாக பார்க்கப்படுகிறது.
    1
    ----------
காஞ்சிபுரம் மாநகராட்சி ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மேல்நிலைப்பள்ளியில் இன்று 10ம் வகுப்பு தேர்வு எழுதும் அப்பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு முன்னதாக இறை வணக்கம் செலுத்தினர்.பின் பள்ளி மாணவிகள் பள்ளியின் தாளாளர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றும்,பள்ளி மாணவர்கள் தாளாளரை கட்டி அனைத்தும்,காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற பின் தேர்வு எழுத தேர்வு அறைக்கு சென்றனர்.பள்ளி தாளாரோ எவ்வித அச்சமும்,பயமுமின்றி தேர்வை நல்ல படியாக எழுத வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
பள்ளி மாணவர்களின் இந்த வினோத செயல் பள்ளி தாளாரரின் மீது வைத்துள்ள அன்பையும்,தனக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் குருவிற்கு உரிய மரியாதை செய்யும் விதமாக பார்க்கப்படுகிறது.
    user_E.LAKSHMI KANTHAN
    E.LAKSHMI KANTHAN
    பத்திரிகையாளர் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    8 hrs ago
  • கிருஷ்ணகிரி அருகே உள்ள தானம்பட்டி கிராமத்தில்  5- ஆம் ஆண்டுமாபெரும் எருது விடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
    1
    கிருஷ்ணகிரி அருகே உள்ள தானம்பட்டி கிராமத்தில்  5- ஆம் ஆண்டுமாபெரும் எருது விடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • அதியமான்கோட்டை ஸ்ரீ தட்சணகாசி காலபைரவருக்கு தேய்பிறை அஸ்டமி :அதிகாலை பைரவருக்கு16 திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சுவாமிக்கு விபூதி அலங்காரம்: ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கால பைரவர் அருள்பெற்றனர் தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் மன்னர் அதியமானால் கட்டப்பட்ட தட்சணகாசி காலபைரவர் ஆலயம் காசிக்கு அடுத்ததாக பைரவருக்கென தனி ஆலயம் என்ற பெருமை பெற்ற காலபைரவர் ஆலயத்தில் இன்று மாசி மாத தேய்பிறை அஸ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது இங்கு மாதம்தோறும் தேய்பிரை அஸ்டமி அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வரிகை புரிந்து பூசணி தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர் இன்று பைரவருக்கு அதிகாலை முதலே 16 திரவியங்களால், பால், தயிர், சந்தனம், விபூதி மஞ்சள், நெய், இளநீர் ஆகியவற்றை கலந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாவித்தார் காலபைரவர் தேய்பிறை அஸ்டமி விழாவில் சுவாமியை தரிசிக்க தருமபுரி மாவட்டம் முழுவதிலிருந்தும் அண்டை மாநிலம் கர்நாடகம், கேரளம், ஆந்திரா பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து நீண்டவரிசையில் காத்திருந்து காலபைரவரை வழிபட்டனர் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது
    1
    அதியமான்கோட்டை ஸ்ரீ தட்சணகாசி காலபைரவருக்கு தேய்பிறை அஸ்டமி :அதிகாலை  பைரவருக்கு16 திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சுவாமிக்கு விபூதி அலங்காரம்: ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கால பைரவர் அருள்பெற்றனர்
தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் மன்னர் அதியமானால் கட்டப்பட்ட தட்சணகாசி காலபைரவர் ஆலயம் காசிக்கு அடுத்ததாக பைரவருக்கென தனி ஆலயம் என்ற பெருமை பெற்ற காலபைரவர் ஆலயத்தில் இன்று மாசி மாத தேய்பிறை அஸ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது
இங்கு மாதம்தோறும் தேய்பிரை அஸ்டமி அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வரிகை புரிந்து பூசணி தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர்
இன்று பைரவருக்கு அதிகாலை முதலே 16 திரவியங்களால், பால், தயிர், சந்தனம், விபூதி மஞ்சள், நெய், இளநீர் ஆகியவற்றை கலந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாவித்தார்
காலபைரவர்
தேய்பிறை அஸ்டமி  விழாவில் சுவாமியை தரிசிக்க தருமபுரி மாவட்டம் முழுவதிலிருந்தும் அண்டை மாநிலம் கர்நாடகம், கேரளம், ஆந்திரா பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து நீண்டவரிசையில் காத்திருந்து காலபைரவரை வழிபட்டனர்
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீரவர்கோயில் பகுதியில் பெங்களூர் சென்னை ரயில்வே மார்க்கத்தின் அருகில் புதர் போல் இருந்த மஞ்சுபுல் தீப்பற்றி எரிவதை அறிந்த அப்பகுதி மக்கள் ரயில்வே துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் தகவலின் பேரில் ரயில்வே போலீசார் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் ஆம்பூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று ரயில் தண்டவாளத்தின் அருகில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீய்ச்சியடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் தண்டவாளத்தின் அருகில் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதால் தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது மேலும் அதே பகுதியில் ஏற்கனவே தண்டவாளத்தின் மீது கற்கள் வைத்து ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டது மற்றொரு முறை இதே போன்று சமூக விரோதிகளால் தண்டவாளம் அருகில் உள்ள மஞ்சுபுல் தீயிட்டு கொளுத்தியது போன்ற தொடர் சமூக விரோத செயல்கள் அப்பகுதியில் நடைபெற்று வருவதால் ரயில்வே காவல் துறையினர் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீரவர்கோயில் பகுதியில் பெங்களூர் சென்னை ரயில்வே மார்க்கத்தின் அருகில் புதர் போல் இருந்த மஞ்சுபுல் தீப்பற்றி எரிவதை அறிந்த அப்பகுதி மக்கள் ரயில்வே துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் தகவலின் பேரில்  ரயில்வே போலீசார் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் ஆம்பூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று ரயில் தண்டவாளத்தின் அருகில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீய்ச்சியடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் தண்டவாளத்தின் அருகில் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதால் தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது 
மேலும் அதே பகுதியில் ஏற்கனவே  தண்டவாளத்தின் மீது கற்கள் வைத்து ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டது மற்றொரு முறை இதே போன்று சமூக விரோதிகளால் தண்டவாளம் அருகில் உள்ள மஞ்சுபுல் தீயிட்டு கொளுத்தியது போன்ற தொடர் சமூக விரோத செயல்கள் அப்பகுதியில் நடைபெற்று வருவதால் ரயில்வே காவல் துறையினர் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
    user_Suji
    Suji
    Tirupathur, Tamil Nadu•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.