Shuru
Apke Nagar Ki App…
காலை வணக்கம் 🙏 ஓம் நமசிவாய 🙏
J.MUTHU
காலை வணக்கம் 🙏 ஓம் நமசிவாய 🙏
More news from Karur and nearby areas
- கரூர் மாவட்டம் குளித்தறையில் ஏபிஎஸ் ஜவுளிக்கடை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு விலை இல்லா வேட்டி சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் குளித்தலை நகரில் உள்ள நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குளித்தலை ஏபிஎஸ் ஜவுளி நிறுவனம் உரிமையாளர் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி இலவச வேட்டி சேலை வழங்கினார்2
- ஜல்லிக்கட்டு காளைக்கு சிறப்பு பூஜை! புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் தொடங்கியுள்ள நிலையில் அந்த காளைக்கு நன்றி செலுத்தும் விதமாக இன்று மாலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பொங்கல் வைக்கப்பட்டு படையல் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான காளை வளர்ப்போர் கலந்து கொண்டனர்.1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் பகுதியில் அமைந்துள்ள புனித கபிரியேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு கோலப்போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று வித விதமான கோலங்கள் போட்டு அசத்தினர். ஒவ்வொரு கோலமும் சிறந்தது என கூறும் அளவிற்கு மாணவிகள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.. இறுதியில் நடுவர்கள் சிறந்த கோலங்களை முடிவு செய்து ஒவ்வொரு வகுப்பிற்கும் தலா மூன்று பரிசுகள் வீதம் தலைமை ஆசிரியை சிஸ்டர் அடைக்கலமேரி வழங்கினார்கள். மேலும் கோலப் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- திண்டுக்கல் திமுகவில் இணைந்த தவெகவினர் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தவெக தெற்கு ஒன்றிய செயலாளர் பால்பாண்டி தலைமையில் 37 நிர்வாகிகள் 300 உறுப்பினர்கள் சித்தரேவு ஊராட்சியில் இருந்து கொடைக்கானல் திமுக கீழ் மலை தெற்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன் மூலமாக 15 க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக வந்து திண்டுக்கல் மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும் திமுக துணை பொதுச்செயலாளரும் ஆத்தூர் சட்டமன்றத் உறுப்பினர் ஐ பெரியசாமி மற்றும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர் தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில் குமார் வாழ்த்துக்களை தெராவித்தனர்1
- தமிழகம் முழுவதும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. பல வாகனங்கள் வெளி மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்குள் போர்வெல் போட பயன்படுத்தும் பிட் என்ற பொருளின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 25 ஆயிரம் ரூபாய்க்கு கிடைத்து வந்த இந்த பொருள் தற்போது 55 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தொழில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு காரணம் சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிட் செய்ய தேவைப்படும் கார்பன் என்ற மூலப்பொருள் வருவது தடைபட்டுள்ளது தான் எனவே மத்திய அரசு இதனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து இந்தியா முழுவதும் ஆங்காங்கே போர்வெல் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் தேனி கரூர் திருப்பூர் திருச்செங்கோடு சேலம் நாமக்கல் ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் 2000க்கும் மேற்பட்ட ரிக் எனப்படும் போர்வெல் வாகனங்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றன. இது குறித்து தமிழ்நாடு ரிக் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் சுரேஷ் கூறும் போது கடந்த 15 நாட்களில் ரிக் வாகனத்திற்கு தேவைப்படும் பிட் இரண்டு மடங்கு விலை உயர்ந்துள்ளது இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தி உரிய விலையில் மத்திய அரசு வழங்க வேண்டும். மேலும் இந்த பிட்டிற்கு மூலப் பொருளாக சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்பன் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது எனவே பிட்டின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது இந்த தடையை நீக்கி மத்திய அரசு ரிக் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் காவல்துறையும் ரிக்கு வாகனங்கள் தொடர்பான வழக்குகள் விவகாரங்களில் எங்களுக்கு துணை நின்று எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். நாள் ஒன்றிற்கு 19 கோடி ரூபாய் வரியாக தமிழக அரசுக்கு வழங்கி வருகிறோம். அதேபோன்று மத்திய அரசுக்கு 240 கோடி ரூபாய் டீசல் வழியாக வழங்கி வருகிறோம். எங்கள் பிரச்சனைகளை மத்திய மாநில அரசுகள் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை போர்வெல் உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு கூட செவி சாய்ப்பதில்லை என்றும் அதனை சரி செய்து தர வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த பிரச்சினைகள் காரணமாக தற்போது போர்வெல் போடுவதற்கு சற்று விலை அதிகப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த விலை உயர்வு 20 சதவீதம் வரை உயர்த்தப்படும் என தெரிய வருகிறது தேனி கரூர் போன்ற மாவட்டங்களில் தற்போது 20 சதவீத விலை உயர்வுடன் போர்வெல் வாகனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள போர்வெல் வாகனங்கள் தங்கள் போர்வெல் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகிறது என தலைவர் சுரேஷ்செய்தியாளர்களிடம் கூறினார்1
- திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட 44வது வார்டு பகுதியில் மாமன்றஉறுப்பினர் மார்த்தாண்டன் தலைமையில் சமத்துவப் பொங்கல் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி .செந்தில்குமார் மற்றும் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராசப்பா கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்1
- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் ஊராட்சிக்கு உட்பட்ட சூரியநல்லூர் அருகே திமுக விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக குண்டடம் ஒன்றியம் திருப்பூர் கிழக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது அதன் பின்னர் பெண்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது இதில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்1
- புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி பேட்டி! புதுகை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அதில், "அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு என்ன செய்ய வேண்டுமோ, அதை சிறப்பாக செய்துள்ளது. இதை அனைவரும் ஏற்றுள்ளனர். ஒரு சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும், ஜனநாயகன் திரைப்படத்தில் கோர்ட்டின் உத்தரவு படியே நடந்து கொள்ளப்படுகிறது. பாஜகவில் புதிய கூட்டணியாக தணிக்கை வாரியம் திகழ்கிறது" என்றார்.1