logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கிருஷ்ணகிரி அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதி இருவர் பலி. கிருஷ்ணகிரி அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் கேரளத்தை சேர்ந்த இருவர் பலியாகினர். கேரளாவின் பட்டாம்பி பகுதியைச் சேர்ந்த வினீத் என்பவர் தனது குடும்பத்துடன் கர்நாடகாவிற்குச் சுற்றுலா சென்றுவிட்டு, கிருஷ்ணகிரி வழியாக ஊர் திரும்பி கொண்டிருந்தார். இன்று அதிகாலை குருபரப்பள்ளி அருகே ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அவரது காரின் டயர் பஞ்சர் ஆனது. பின் பழுது நீக்கப்பட்டு காரில் சென்று கொண்டிருந்த போது பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி காரின் பின்பகுதியில் மோதியதில் தீபக் (28) மற்றும் அவரது சகோதரி திவ்யா (30) இருவரும் பலியாகினர். மேலும் ரவீந்திரன், ஸ்ரீ பார்வதி, வினீத், சரோஜினி உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான தீபக் மற்றும் திவ்யா இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

5 hrs ago
user_Agarva manickam
Agarva manickam
போளூர், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
5 hrs ago
5b5629a5-d08a-4255-b6be-e0a0b942dc8d

கிருஷ்ணகிரி அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதி இருவர் பலி. கிருஷ்ணகிரி அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் கேரளத்தை சேர்ந்த இருவர் பலியாகினர். கேரளாவின் பட்டாம்பி பகுதியைச் சேர்ந்த வினீத் என்பவர் தனது குடும்பத்துடன் கர்நாடகாவிற்குச் சுற்றுலா சென்றுவிட்டு, கிருஷ்ணகிரி வழியாக ஊர் திரும்பி கொண்டிருந்தார். இன்று அதிகாலை குருபரப்பள்ளி அருகே ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அவரது காரின் டயர் பஞ்சர் ஆனது. பின் பழுது நீக்கப்பட்டு காரில் சென்று கொண்டிருந்த போது பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி காரின் பின்பகுதியில் மோதியதில் தீபக் (28) மற்றும் அவரது சகோதரி திவ்யா (30) இருவரும் பலியாகினர். மேலும் ரவீந்திரன், ஸ்ரீ பார்வதி, வினீத், சரோஜினி உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான தீபக் மற்றும் திவ்யா இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர். குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சாரம், நில பிரச்சனைகள், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மனுக்களை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர். மேலும், பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவாக பரிசீலனை செய்து தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    1
    திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர்.
குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சாரம், நில பிரச்சனைகள், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மனுக்களை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர். மேலும், பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவாக பரிசீலனை செய்து தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    user_Suresh S
    Suresh S
    Local News Reporter திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • தருமபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 340 ஆடுகள் விற்பனைக்கு வந்தன. சிறிய குட்டிகள் ₹2000 முதல் பெரிய ஆடுகள் ₹24,000 வரை விற்பனையாகி, மொத்தமாக ₹43 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.
    1
    தருமபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 340 ஆடுகள் விற்பனைக்கு வந்தன. சிறிய குட்டிகள் ₹2000 முதல் பெரிய ஆடுகள் ₹24,000 வரை விற்பனையாகி, மொத்தமாக ₹43 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • முதல் முப்பது நிமிடங்களிலேயே கோடிக்கணக்கான பார்வைகளை பெற்றது. திரு ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு விஜய் ஆகியோருக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் ஆதரவு, மோடி அரசை தெளிவாக பதற்றமடையச் செய்துள்ளது. இந்த காணொளி வெளியான முதல் முப்பது நிமிடங்களிலேயே கோடிக்கணக்கான பார்வைகளை பெற்றது.
    1
    முதல் முப்பது நிமிடங்களிலேயே கோடிக்கணக்கான பார்வைகளை பெற்றது. 
திரு ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு விஜய் ஆகியோருக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் ஆதரவு, மோடி அரசை தெளிவாக பதற்றமடையச் செய்துள்ளது.
இந்த காணொளி வெளியான முதல் முப்பது நிமிடங்களிலேயே கோடிக்கணக்கான பார்வைகளை பெற்றது.
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • तमिलनाडु की राजनीति में एक नया अध्याय शुरू हो गया जब Vijay ने मुख्यमंत्री पद की शपथ ली। विधानसभा में विजय जोसेफ़ थलापति का अंदाज़ सबसे अलग नजर आया। उन्होंने पूरे आत्मविश्वास और गंभीरता के साथ ईश्वर के नाम पर संविधान के प्रति निष्ठा की शपथ ली। शपथ लेते हुए विजय ने कहा कि वह भारत की संप्रभुता और अखंडता को अक्षुण्ण रखेंगे और मुख्यमंत्री पद के कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वाह करेंगे। उनके शपथ ग्रहण का वीडियो और तस्वीरें सोशल मीडिया पर तेजी से वायरल हो रही हैं। समर्थक इसे तमिलनाडु की राजनीति में “नए दौर की शुरुआत” बता रहे हैं।
    1
    तमिलनाडु की राजनीति में एक नया अध्याय शुरू हो गया जब Vijay ने मुख्यमंत्री पद की शपथ ली। विधानसभा में विजय जोसेफ़ थलापति का अंदाज़ सबसे अलग नजर आया। उन्होंने पूरे आत्मविश्वास और गंभीरता के साथ ईश्वर के नाम पर संविधान के प्रति निष्ठा की शपथ ली।
शपथ लेते हुए विजय ने कहा कि वह भारत की संप्रभुता और अखंडता को अक्षुण्ण रखेंगे और मुख्यमंत्री पद के कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वाह करेंगे। उनके शपथ ग्रहण का वीडियो और तस्वीरें सोशल मीडिया पर तेजी से वायरल हो रही हैं। समर्थक इसे तमिलनाडु की राजनीति में “नए दौर की शुरुआत” बता रहे हैं।
    user_Bashar khan
    Bashar khan
    Aminjikarai, Chennai•
    5 hrs ago
  • ஸ்பானிய டிவியில் இருந்து ஹாலிவுட் நட்சத்திரமாக உயர்ந்த ஆனா டி அர்மாஸ், தனது பன்முகத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். 'ஜான் விக்' போன்ற அதிரடிப் படங்களிலும், ஆஸ்கர் பரிந்துரை பெற்ற நாடகங்களிலும் ஜொலித்துள்ளார். இவர் தற்போது கலாச்சார ஐகானாகவும், முன்னணி பிராண்டுகளின் உலகளாவிய தூதுவராகவும் திகழ்கிறார்.
    1
    ஸ்பானிய டிவியில் இருந்து ஹாலிவுட் நட்சத்திரமாக உயர்ந்த ஆனா டி அர்மாஸ், தனது பன்முகத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். 'ஜான் விக்' போன்ற அதிரடிப் படங்களிலும், ஆஸ்கர் பரிந்துரை பெற்ற நாடகங்களிலும் ஜொலித்துள்ளார். இவர் தற்போது கலாச்சார ஐகானாகவும், முன்னணி பிராண்டுகளின் உலகளாவிய தூதுவராகவும் திகழ்கிறார்.
    user_Ana_d_armas_10k
    Ana_d_armas_10k
    அண்டிமடம், அரியலூர், தமிழ்நாடு•
    20 hrs ago
  • உதயநிதி ஸ்டாலினை சூழ்ந்த கேமராக்கள். - வாயை திறக்காமல் காரில் ஏறிய சம்பவம். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி ஏற்கும் விழா நடைபெற்றது. இவ்விழா முடிவடையும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் வெளியேறிய போது தொலைக்காட்சி கேமராக்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி சூழ்ந்து கொண்டனர். இதனை துளியும் பொருட்படுத்தாமல் உதயநிதி ஸ்டாலின் மௌனம் காத்து தனது காரில் ஏறி புறப்பட்டு சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
    1
    உதயநிதி ஸ்டாலினை சூழ்ந்த கேமராக்கள். - வாயை திறக்காமல் காரில் ஏறிய சம்பவம்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி ஏற்கும் விழா நடைபெற்றது. இவ்விழா முடிவடையும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் வெளியேறிய போது தொலைக்காட்சி கேமராக்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி சூழ்ந்து கொண்டனர். இதனை துளியும் பொருட்படுத்தாமல் உதயநிதி ஸ்டாலின் மௌனம் காத்து தனது காரில் ஏறி புறப்பட்டு சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
    user_Reporter M.Krishna Kumar
    Reporter M.Krishna Kumar
    Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    46 min ago
  • எடப்பாடி பழனிசாமிக்கு வணக்கம் வைக்காத சம்பவம்! நெட்டிசன்கள் அதிரடி தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவு பெற்று வெற்றி பெற்ற சட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று சட்டமன்ற வளாகத்தில் சபாநாயகர் முன்பு பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க வரும் முன்பு முதல்வர் ஜோசப் விஜய்யை பார்த்து மரியாதை நிமித்தமாக வணக்கம் வைத்தார், ஆனால் முதல்வர் ஜோசப் விஜையோ எடப்பாடி பழனிசாமியை கண்டு கொள்ளாமல் பதில் வணக்கம் வைக்காதது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுகவினரும் நெட்டிசன்களும் கூறும்போது, இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வருக்கு பதில் வணக்கம் வைக்காதது அவர்கள் வகிக்கின்ற பதவியை அவமதிக்கும் செயலாகும், மரியாதை நிமித்தமாக கூட வணக்கம் வைக்காத ஒரு முதல்வர் இவர் தான் தமிழகத்தை 5 வருடத்திற்கு ஆளப்போகிறாரா, ஓபிஎஸ்-க்கு வணக்கம் வைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வணக்கம் வைக்காதது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    எடப்பாடி பழனிசாமிக்கு வணக்கம் வைக்காத சம்பவம்! நெட்டிசன்கள் அதிரடி 
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவு பெற்று வெற்றி பெற்ற சட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று சட்டமன்ற வளாகத்தில் சபாநாயகர் முன்பு பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க வரும் முன்பு முதல்வர் ஜோசப் விஜய்யை பார்த்து மரியாதை நிமித்தமாக வணக்கம் வைத்தார், ஆனால் முதல்வர் ஜோசப் விஜையோ எடப்பாடி பழனிசாமியை கண்டு கொள்ளாமல் பதில் வணக்கம் வைக்காதது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுகவினரும் நெட்டிசன்களும் கூறும்போது, இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வருக்கு பதில் வணக்கம் வைக்காதது அவர்கள் வகிக்கின்ற பதவியை அவமதிக்கும் செயலாகும், மரியாதை நிமித்தமாக கூட வணக்கம் வைக்காத ஒரு முதல்வர் இவர் தான் தமிழகத்தை 5 வருடத்திற்கு ஆளப்போகிறாரா, ஓபிஎஸ்-க்கு வணக்கம் வைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வணக்கம் வைக்காதது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    5 hrs ago
  • தர்மபுரி பாரதிபுரம் போக்குவரத்து அலுவலகம் முன்பு தமிழக வெற்றி கழக போக்குவரத்து தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் இவ்வாறு செய்தனர்.
    1
    தர்மபுரி பாரதிபுரம் போக்குவரத்து அலுவலகம் முன்பு தமிழக வெற்றி கழக போக்குவரத்து தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் இவ்வாறு செய்தனர்.
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    20 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.