Shuru
Apke Nagar Ki App…
பண்ருட்டி பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கடலூர் மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் லிடியாசெல்வி மற்றும் போலீசார், பண்ருட்டி ரத்னா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், உதவி எண் 1091 குறித்தும், காவல் உதவி App குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
Kalai
பண்ருட்டி பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கடலூர் மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் லிடியாசெல்வி மற்றும் போலீசார், பண்ருட்டி ரத்னா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், உதவி எண் 1091 குறித்தும், காவல் உதவி App குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
More news from தமிழ்நாடு and nearby areas
- ஆத்தூரில் தங்க கவசத்தில் அருள் பாலித்த வெள்ளப் பிள்ளையார். சேலம் மாவட்டத்தில் உள்ள, ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, அருள்மிகு வெள்ளப் பிள்ளையார் திருக்கோயிலில் இன்று (செப் 14) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் முன்னதாக பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தங்க கவசம் சாற்றப்பட்டு, பூஜைகள் வெகு விமர்சியாக நடைபெற்றது. பின்னர் தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு தங்க கவசத்தில் வெள்ளப் பிள்ளையார் அருள் பாலித்து வருகிறார். விநாயகர் சதுர்த்தி என்பதால் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகரித்து வருகிறது.2
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- லால்குடி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் நேரில் கள ஆய்வு. திருச்சி மாவட்டம் லால்குடி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் இன்று நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது, மருத்துவமனையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவைகள், நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணிகள் உள்ளிட்டவற்றை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். லால்குடி அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள தேவையான நவீன மருத்துவ உபகரணங்களை பெற்றுத்தர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்தார்.மேலும், பொதுமக்கள் உயர்தர மருத்துவ சேவையை உள்ளூரிலேயே பெறும் வகையில் CT Scan மற்றும் தேவையான நவீன ஸ்கேன் வசதிகளை லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வருவது தொடர்பாக சட்டமன்றத்தில் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளதாகவும், அதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். மருத்துவமனை 24 மணி நேரமும் சிறப்பாக செயல்படும் வகையில் தேவையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பணியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் அவர் உறுதியளித்தார். லால்குடி அரசு மருத்துவமனையை பொதுமக்களுக்கு அனைத்து நவீன மருத்துவ வசதிகளும் கிடைக்கும் வகையில் தனியார் மருத்துவமனைக்கு இணையான தரத்தில் மேம்படுத்துவதே தனது நோக்கம் என்றும் எம்எல்ஏதெரிவித்தார். ஆய்வின்போது, மருத்துவமனையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரித்து வருவதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களை அவர் பாராட்டி, அவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ பாலன்,ஒன்றியச் செயலாளர்கள் அருணகிரி, சூப்பர் நடேசன், பிச்சப்பிள்ளை, ஜெயசீலன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் லால்குடி அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.1
- திருப்பத்தூரில் தவெக 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் தமிழக அமைச்சர் ரஞ்சித்குமார் பங்கேற்பு! திருப்பத்தூரில் தவெக 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் தமிழக அமைச்சர் ரஞ்சித்குமார் பங்கேற்பு! திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் ஆதியூர் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழக அரசின் நூறு நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.திருப்பதி தலைமையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக வனத்துறை அமைச்சரும் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ரஞ்சித் குமார் கலந்து கொண்டு நூறு நாள் சாதனைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில்: ஒருவர் கட்சியை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளில் ஆட்சியை பிடித்த வரலாறு அது தமிழக வெற்றி கழகத்திற்கும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு தான் பொறுத்தும் என்றார், மேலும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் என்ன நினைத்தாரோ அதை தற்போது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார், அதனால் தான் அவரை எம்ஜிஆரின் வாரிசாக தமிழக மக்களும், நானும் பார்க்கிறேன், தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பதவியை நாம் தான் கைப்பற்றுவோம், மேலும் 2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழக வெற்றி கழகம் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என பேசினார், இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் முனிசாமி, நவீன்குமார், ஒன்றிய செயலாளர்கள் முருகன், பெரியசாமி, நிர்வாகிகள் மணிகண்டன், குமார், டாக்டர் வினோதினி, திருப்பதி, மனோகரன், சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.3
- *வேட்புமனு தாக்கல்* மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்; மதுராந்தகம் கோட்டாட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். *🔹🔸மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல் செய்தார்.* #DMK | #Maduranthakam *_🇮🇳#gmnews🇮🇳_* *𝟭𝟱, 𝐓𝐮𝐞𝐬𝐝𝐚𝐲 𝐒𝐞𝐩. 𝟮𝟬𝟮𝟲* *★❀━━━━gmnews━━━━❀★*1
- லெஜென் சரவணா எழுத்தாளர் சங்கத்தில்கௌரவ உறுப்பினராக சேர்ந்தபோது....1
- தமிழக கட்சி கழகம் 100 நாள் சாதனை விளக்க கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா அமைச்சர் ! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா ஆதியூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் தமிழக வெற்றிக்கழக 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சிகள் இணையம் விழா திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திருப்பதி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றிக்கழக வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். உடன் ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் பல்வேறு அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மேலும் மாற்றுக் கட்சியின் விலகி நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர் அவர்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து மரியாதை செய்தார்கள்.2
- *🔹🔸தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்.. கொட்டும் மழையிலும் திமுக வேட்பாளர் சுகன்யாவுக்காக பரப்புரை மேற்கொண்ட முன்னாள் அமைச்சர்கள்..* #Dharapuram | #DMK | #ByElection *_🇮🇳#gmnews🇮🇳_* *𝟭𝟱, 𝐓𝐮𝐞𝐬𝐝𝐚𝐲 𝐒𝐞𝐩. 𝟮𝟬𝟮𝟲* *★❀━━━━gmnews━━━━❀★* *🔹🔸தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்.. கொட்டும் மழையிலும் திமுக வேட்பாளர் சுகன்யாவுக்காக பரப்புரை மேற்கொண்ட முன்னாள் அமைச்சர்கள்..* #Dharapuram | #DMK | #ByElection *_🇮🇳#gmnews🇮🇳_* *𝟭𝟱, 𝐓𝐮𝐞𝐬𝐝𝐚𝐲 𝐒𝐞𝐩. 𝟮𝟬𝟮𝟲* *★❀━━━━gmnews━━━━❀★*1
- ஆ.ராசா பேச்சு திமுகவிற்கு எதிரான கருத்தை உருவாக்கும்!” | திருமாவளவன் கண்டனம் முதல்வர் விஜய்க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆ.ராசாவின் பேச்சுக்கு தனது கண்டனத்தை தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இது திமுகவிற்கு எதிரான கருத்தை மக்களிடன் ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.1