logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நாகப்பட்டினம் தவெக மாவட்ட செயலாளர் மா.சுகுமாறன் அறிக்கை நாகப்பட்டினம் மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் மா.சுகுமாறன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: வேதாரண்யம் வட்டம் வாய்மேடு நடுக்காடு பகுதியை சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதால் கடந்த ஏப்ரல் 2 ந்தேதி தவெகவில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். தற்போது மீண்டும் அவர் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதால் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் தவெகவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. என சுகுமாறன் தெரிவித்துள்ளார்.

1 hr ago
user_NAGAI BABU
NAGAI BABU
Reportar நாகப்பட்டினம், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
1 hr ago
4b98c9cb-fee6-4495-bd6b-26c400060877

நாகப்பட்டினம் தவெக மாவட்ட செயலாளர் மா.சுகுமாறன் அறிக்கை நாகப்பட்டினம் மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் மா.சுகுமாறன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: வேதாரண்யம் வட்டம் வாய்மேடு நடுக்காடு பகுதியை சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதால் கடந்த ஏப்ரல் 2 ந்தேதி தவெகவில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். தற்போது மீண்டும் அவர் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதால் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் தவெகவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. என சுகுமாறன் தெரிவித்துள்ளார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • நாகை மாவட்டம் கீழ்வேளூர் கடைத்தெருவில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் நாகை பிரபாகரன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை...
    4
    நாகை மாவட்டம் கீழ்வேளூர் கடைத்தெருவில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் நாகை பிரபாகரன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை...
    user_Chakravarthy
    Chakravarthy
    நாகப்பட்டினம், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    16 hrs ago
  • புதுச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை அரை மணி நேரம் லேசான மழை நாகப்பட்டினம் மாவட்டம் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆவராணி, விக்கனபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 4 மணி முதல் 4:30 மணி முதல் அரை மணி நேரம் லேசான மழை பெய்தது. காலை முதல் வெயில் வீசி வந்த நிலையில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிறகு சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. இதனால் இந்த பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
    1
    புதுச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை அரை மணி நேரம் லேசான மழை
நாகப்பட்டினம் மாவட்டம் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆவராணி, விக்கனபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 4 மணி முதல் 4:30 மணி முதல் அரை மணி நேரம் லேசான மழை பெய்தது. காலை முதல் வெயில் வீசி வந்த நிலையில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிறகு சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. இதனால் இந்த பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
    user_Manikandan
    Manikandan
    Plumber கீழ்வேளூர், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    6 hrs ago
  • தமிழக முதல்வர் மற்றும் தவெக மாவட்ட செயலாளர் ஆகியோரை அவதூறு பரப்பியவர் மீது போலீசில் புகார் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுக்கா தம்பிக்கோட்டை கீழக்காடுவை சேர்ந்த செளந்தரராஜன் மகன் பாலமுருகன் என்பவர் தொடர்ந்து தமிழக முதல்வர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய் அவர்கள் அயராது உழைத்து தமிழக மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற தன்னிகரில்லா தலைவர் அவர்களையும் தமிழக வெற்றிக் கழக திருவாரூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜி.பி.பாரதி அவர்களையும் சமூக வலைத்தளங்களிலும் இணையதளம் வாயிலாக தொடர்ந்து சிலரது தூண்டுதலின் பேரில் அவதூறு பரப்பியும் வருகிறார். இது தொண்டர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியும் தமிழக மக்களுக்காக தமிழக வெற்றி கழகம் முன் மாதிரியான தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வரும் எங்களது தளபதி அவர்களையும் டெல்டா பகுதியில் திருவாரூர் தெற்கு மாவட்ட பகுதியை ஒரு சிறப்பான நிர்வாகத்தை தரும் நோக்கோடு செயல்பட்டு வரும் டெல்டாவின் நாயகர் திருவாரூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜி.பி.பாரதி அவர்களையும் அவதூறு பரப்பும் நோக்கோடு செயல்பட்டு வரும் பாலமுருகன் என்பவர் மீது நடவடிக்கையும், அவதூறு பரப்பும் இணையதளத்தையும் முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டு திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலிவலம் காவல் நிலையத்தில் புகார் மனுவினை கொடுத்துள்ளனர்.
    1
    தமிழக முதல்வர் மற்றும் தவெக மாவட்ட செயலாளர் ஆகியோரை அவதூறு பரப்பியவர் மீது போலீசில்  புகார்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுக்கா தம்பிக்கோட்டை கீழக்காடுவை சேர்ந்த செளந்தரராஜன் மகன் பாலமுருகன் என்பவர் தொடர்ந்து தமிழக முதல்வர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய் அவர்கள் அயராது உழைத்து தமிழக மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற  தன்னிகரில்லா தலைவர் அவர்களையும் தமிழக வெற்றிக் கழக திருவாரூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜி.பி.பாரதி அவர்களையும் சமூக வலைத்தளங்களிலும் இணையதளம் வாயிலாக தொடர்ந்து சிலரது தூண்டுதலின் பேரில் அவதூறு பரப்பியும் வருகிறார். இது தொண்டர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியும் தமிழக மக்களுக்காக தமிழக வெற்றி கழகம் முன் மாதிரியான தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வரும் எங்களது தளபதி அவர்களையும் டெல்டா பகுதியில் திருவாரூர் தெற்கு மாவட்ட பகுதியை ஒரு சிறப்பான நிர்வாகத்தை தரும் நோக்கோடு செயல்பட்டு வரும்  டெல்டாவின் நாயகர் திருவாரூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜி.பி.பாரதி அவர்களையும் அவதூறு பரப்பும் நோக்கோடு செயல்பட்டு வரும் பாலமுருகன் என்பவர்  மீது நடவடிக்கையும், அவதூறு பரப்பும் இணையதளத்தையும் முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டு திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலிவலம் காவல் நிலையத்தில் புகார் மனுவினை கொடுத்துள்ளனர்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter Kilvelur, Nagapattinam•
    17 hrs ago
  • *30 பேரின் நிலைமை தெரியவில்லை. 20 பேர் மட்டுமே தொடர்பு கொண்டு பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். சூப்பர் யாத்ரா ஏஜென்சி உரிமையாளர் சாதிக் தகவல்.* தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கும்பகோணம், மயிலாடுதுறை, ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 57 பேர் விமான மூலம் நேபாளம் உள்ளிட்ட வட மாநிலத்திற்கு 13 நாட்கள் சுற்றுலா சென்றுள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு புறப்பட்ட அவர்கள் மூன்று பேருந்துகளில் இரண்டு நாள் நேபாளத்தில் சுற்றிவிட்டு இன்று காலை தான் எல்லை விட்டு திபெத் சென்றுள்ளனர். அப்போதுதான் இந்த இயற்கை பேரிடர்களில் சிக்கி உள்ளனர். மூன்று பேருந்துகளில் சென்று உள்ளவர்களில் ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் மட்டுமே பாதுகாப்பாக இருப்பதாகவும் தன்னை தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். மேலும் இரண்டு பேருந்துகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அதில் 37 பேர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகன் உமர் பாரூக் தலைமையில் சுற்றுலா சென்றுள்ளதாகவும் மேலும் தனது மகன் கூட தன்னை தொடர்பு கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
    1
    *30 பேரின் நிலைமை தெரியவில்லை. 20 பேர் மட்டுமே தொடர்பு கொண்டு பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். சூப்பர் யாத்ரா ஏஜென்சி உரிமையாளர் சாதிக் தகவல்.*
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கும்பகோணம், மயிலாடுதுறை, ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 57 பேர் விமான மூலம் நேபாளம் உள்ளிட்ட வட மாநிலத்திற்கு 13 நாட்கள் சுற்றுலா சென்றுள்ளனர். 
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு புறப்பட்ட அவர்கள் மூன்று பேருந்துகளில் இரண்டு நாள் நேபாளத்தில் சுற்றிவிட்டு இன்று காலை தான் எல்லை விட்டு திபெத் சென்றுள்ளனர். அப்போதுதான் இந்த இயற்கை பேரிடர்களில் சிக்கி உள்ளனர். மூன்று பேருந்துகளில் சென்று உள்ளவர்களில் ஒரு பேருந்தில்  உள்ள 20 பேர் மட்டுமே பாதுகாப்பாக இருப்பதாகவும் தன்னை தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். மேலும் இரண்டு பேருந்துகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அதில் 37 பேர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகன் உமர் பாரூக் தலைமையில் சுற்றுலா சென்றுள்ளதாகவும் மேலும் தனது மகன் கூட தன்னை தொடர்பு கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
    user_A. Mathankumar
    A. Mathankumar
    Local News Reporter கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    20 hrs ago
  • கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் அவசர தேவைக்கு செல்ல முடியாத சூழ்நிலை கூடுதல் காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையை நியமிக்க கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை* புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சுப முகூர்த்த தினங்கள் மற்றும் கோயில் விசேஷ நாட்களில் அதிகளவில் பொதுமக்கள் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கியது. இதனால் அவசர தேவைக்காக செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கறம்பக்குடியில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் காவல்துறையினர் போதிய அளவில் பணியில் இல்லாததே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு கூடுதல் காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் 
*புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் அவசர தேவைக்கு செல்ல முடியாத சூழ்நிலை கூடுதல் காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையை நியமிக்க கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை*
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சுப முகூர்த்த தினங்கள் மற்றும் கோயில் விசேஷ நாட்களில் அதிகளவில் பொதுமக்கள் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கியது. இதனால் அவசர தேவைக்காக செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கறம்பக்குடியில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் காவல்துறையினர் போதிய அளவில் பணியில் இல்லாததே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு கூடுதல் காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • கடலூர் மாவட்டத்தில் இன்று எந்தெந்த இடங்களில் எவ்வளவு மிமீ மழை பதிவு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக நேற்று மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 27) காலை 8.30 மணி நிலவரப்படி பண்ருட்டியில் 4 மில்லி மீட்டர், வானமாதேவி 3 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 0.40 மில்லி மீட்டர், கடலூர் 0.20 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 7.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    1
    கடலூர் மாவட்டத்தில் இன்று எந்தெந்த இடங்களில் எவ்வளவு மிமீ மழை பதிவு 
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக நேற்று மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 27) காலை 8.30 மணி நிலவரப்படி பண்ருட்டியில் 4 மில்லி மீட்டர், வானமாதேவி 3 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 0.40 மில்லி மீட்டர், கடலூர் 0.20 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 7.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    user_Kalai
    Kalai
    கடலூர், கடலூர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • திருவாடானையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது மக்கள் மகிழ்ச்சி ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தாங்க முடியாத வெப்பம் மற்றும் புழுக்கத்தால் மக்கள் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர். வெளியில் செல்ல முடியாமல், அன்றாடப் பணிகளைச் செய்வதிலும் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். மேலும் இரவு நேரங்களில் வெட்கை அதிக அளவில் இருந்தது இந்த நிலையில்,  தற்போது அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது. வெப்பத்தின் தாக்கமும் குறைந்தது இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, மழையை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
    1
    திருவாடானையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது மக்கள் மகிழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தாங்க முடியாத வெப்பம் மற்றும் புழுக்கத்தால் மக்கள் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர். வெளியில் செல்ல முடியாமல், அன்றாடப் பணிகளைச் செய்வதிலும் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். மேலும் இரவு நேரங்களில் வெட்கை அதிக அளவில் இருந்தது இந்த நிலையில்,  தற்போது அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது. வெப்பத்தின் தாக்கமும் குறைந்தது இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, மழையை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
    user_அனல் ஆனந்த்
    அனல் ஆனந்த்
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    16 hrs ago
  • கறம்பக்குடி அருகே வெள்ளாள கொல்லை வடுவச்சியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வெள்ளாளகொல்லை ஸ்ரீ.வடுவச்சியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது இதில் திரளான பெண்கள் பங்கேற்று முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பிலாவிடுதி ஊராட்சி வெள்ளாளகொல்லை கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த ஸ்ரீ.வடுவச்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு வள்ளுவர் திடலில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் பெண்கள் முளைப்பாரியை வைத்து நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், உலக ஒற்றுமை வேண்டியும் சிறப்பு வழிபாடு செய்து செண்டை மேளங்கள் முழங்க, குதிரை நடனத்துடன் பெண்கள் திரளானோர் பங்கேற்று முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் கருப்பர் மற்றும் முத்துமாரியம்மன் வேடம் அணிந்து நடனமாடிய நிகழ்வு பொதுமக்களையும், விழாவைக் காண வந்தவர்களையும் வெகுவாக கவர்ந்தது.
    1
    கறம்பக்குடி அருகே வெள்ளாள கொல்லை வடுவச்சியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே  வெள்ளாளகொல்லை ஸ்ரீ.வடுவச்சியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது இதில் திரளான பெண்கள் பங்கேற்று முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பிலாவிடுதி ஊராட்சி வெள்ளாளகொல்லை கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த ஸ்ரீ.வடுவச்சியம்மன் கோயில் உள்ளது. 
இந்த கோயிலின் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு 
வள்ளுவர் திடலில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் பெண்கள் முளைப்பாரியை வைத்து நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், உலக ஒற்றுமை வேண்டியும் சிறப்பு வழிபாடு செய்து
செண்டை மேளங்கள் முழங்க, குதிரை நடனத்துடன் பெண்கள் திரளானோர் பங்கேற்று முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் கருப்பர் மற்றும் முத்துமாரியம்மன் வேடம் அணிந்து நடனமாடிய நிகழ்வு பொதுமக்களையும், விழாவைக் காண வந்தவர்களையும் வெகுவாக கவர்ந்தது.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.