logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

காஞ்சிபுரம் : சமூக நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மையங்கள். மாவட்ட ஆட்சியர் தகவல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் சமூக நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வாலாஜாபாத், படப்பை கால்நடை மருந்தகம் மற்றும் காஞ்சிபுரம் கால்நடை பெரு மருத்துவமனை ஆகிய மூன்று மையங்கள் அமைக்கப்பட்டு 13.02.2026 அன்று முதல் செயல்பட்டு வருகின்றது. மேற்படி மையங்களில் சம்பந்தப்பட்ட ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட இடங்களிலுள்ள சமூக நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகின்றது. மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி தூய்மை பணியாளர்களால் உரிய முறையில் பிடித்துக்கொண்டு வரப்படும் சமூக நாய்களுக்கு இம்மையங்களில் இனவிருத்தி கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மற்றும் வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டு மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி பணியாளர்கள் மூலமாக முறையாக 5 நாட்கள் நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு பிடித்த இடத்திலேயே ஆரோக்கியமான நிலையில் திரும்ப அதன் வாழ்விடத்தில் விடப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்

2 hrs ago
user_Naga Rajan
Naga Rajan
Journalist காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
2 hrs ago
fe320399-c277-4341-9698-dcae2da658a0

காஞ்சிபுரம் : சமூக நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மையங்கள். மாவட்ட ஆட்சியர் தகவல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் சமூக நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வாலாஜாபாத், படப்பை கால்நடை மருந்தகம் மற்றும் காஞ்சிபுரம் கால்நடை பெரு மருத்துவமனை ஆகிய மூன்று மையங்கள் அமைக்கப்பட்டு 13.02.2026 அன்று முதல் செயல்பட்டு வருகின்றது. மேற்படி மையங்களில் சம்பந்தப்பட்ட ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட இடங்களிலுள்ள சமூக நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகின்றது. மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி தூய்மை பணியாளர்களால் உரிய முறையில் பிடித்துக்கொண்டு வரப்படும் சமூக நாய்களுக்கு இம்மையங்களில் இனவிருத்தி கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மற்றும் வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டு மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி பணியாளர்கள் மூலமாக முறையாக 5 நாட்கள் நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு பிடித்த இடத்திலேயே ஆரோக்கியமான நிலையில் திரும்ப அதன் வாழ்விடத்தில் விடப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்

More news from தமிழ்நாடு and nearby areas
  • ஒரகடம் அருகே தனியார் வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தை மண்வெட்டியால் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி ; கொள்ளை முயற்சி குறித்து போலீஸ் தீவிர விசாரணை. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே கண்டிகை பகுதியில் வண்டலூர் வாலாஜாபாத் நெடுஞ்சாலையை யொட்டி இந்தியா நம்பர் ஒன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையம் உள்ளது. இதில் அதிகாலை, பணம் எடுப்பது போல வந்த மர்ம நபர்கள் மண்வெட்டி மற்றும் கற்கள் மூலம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர். மண் வெட்டியால், இயந்திரத்தை உடைத்து பிளந்த போது அபாய எச்சரிக்கை அலாரம் பயங்கர சத்தத்துடன் ஒலி எழுப்பி உள்ளது. இதனால் அச்சமடைந்த கொள்ளையர்கள் இயந்திரத்தை உடைக்க பயன்படுத்திய மண்வெட்டி, கற்களை அங்கேயே வீசி விட்டு தப்பி ஓடி உள்ளனர். எச்சரிக்கையா அலாரம் மூலம் வங்கி நிர்வாகத்திற்கு தகவல் சென்றது. இதை அடுத்து ஒரகடம் போலீசாருக்கு வங்கி நிர்வாகம் தகவல் அளித்ததின் பெயரில், போலீசார் ஏ.டி.எம்., மையத்தில் சோதனை செய்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள தடயங்களை கைரேகை நிபுணர்கள் மூலம் சேகரித்தனர், அதேபோல ஏ.டி.எம்., மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றினர். இயந்திரத்தை உடைக்கும் போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால், ஏ.டி.எம்.,மில் இருந்த பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளையர்களிடமிருந்து தப்பி உள்ளது. இது தொடர்பாக ஒரகடம் போலீசார், கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    1
    ஒரகடம் அருகே தனியார் வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தை மண்வெட்டியால் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி ; கொள்ளை முயற்சி குறித்து போலீஸ் தீவிர விசாரணை.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே கண்டிகை பகுதியில் வண்டலூர் வாலாஜாபாத் நெடுஞ்சாலையை யொட்டி இந்தியா நம்பர் ஒன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையம் உள்ளது. இதில் அதிகாலை, பணம் எடுப்பது போல வந்த மர்ம நபர்கள் மண்வெட்டி மற்றும் கற்கள் மூலம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர். மண் வெட்டியால், இயந்திரத்தை உடைத்து பிளந்த போது அபாய எச்சரிக்கை அலாரம் பயங்கர சத்தத்துடன் ஒலி எழுப்பி உள்ளது. இதனால் அச்சமடைந்த கொள்ளையர்கள் இயந்திரத்தை உடைக்க பயன்படுத்திய மண்வெட்டி, கற்களை அங்கேயே வீசி விட்டு தப்பி ஓடி உள்ளனர். எச்சரிக்கையா அலாரம் மூலம் வங்கி நிர்வாகத்திற்கு தகவல் சென்றது. இதை அடுத்து ஒரகடம் போலீசாருக்கு வங்கி நிர்வாகம் தகவல் அளித்ததின் பெயரில், போலீசார் ஏ.டி.எம்., மையத்தில் சோதனை செய்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள தடயங்களை கைரேகை நிபுணர்கள் மூலம் சேகரித்தனர், அதேபோல ஏ.டி.எம்., மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றினர். இயந்திரத்தை உடைக்கும் போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால், ஏ.டி.எம்.,மில் இருந்த பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளையர்களிடமிருந்து தப்பி உள்ளது. இது தொடர்பாக ஒரகடம் போலீசார், கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    43 min ago
  • மகளிர் உரிமைத்தொகை வாங்குகின்ற குடும்பங்களில் விதவை பென்ஷன் ,முதியோர் தொகை உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்பட்டதால் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவதி. அப்பாவும் மகனும் மக்களை ஏமாற்றுகிறார்கள் -  முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி  ________ காஞ்சிபுரம் மாநகர தெற்கு பகுதி செயலாளர் கோல்ட் ரவி அவர்கள் தலைமையில்,  காஞ்சிபுரம் கீழ்கேட் ஆலடி பிள்ளையார் கோயில் தெரு  ஐயப்ப சுவாமி கோயில் அருகில், மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியின் அவலங்களை மக்கள் மன்றத்தில் முன்னெடுத்து வைக்கும் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரச்சார கூட்டத்தில் கழக மகளிர் அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பா.வளர்மதி அவர்கள் பேசும்போது, 2 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ள இடத்தில் ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு மட்டுமே மக்கள் உரிமைத்தொகை வழங்கப்படுகின்றது . கிட்டத்தட்ட  70 லட்சம் மக்களுக்கு முதியோர் பென்ஷன், விதவை பென்ஷன் உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.  முதல்வர் அப்பா ஸ்டாலின் மகன் உதயநிதி சேர்ந்து கொண்டு பொதுமக்களை ஏமாற்றுகின்றர்கள். அவர்களை நம்ப வேண்டாம் என பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். முன்னதாக வி.சோமசுந்தரம் அவர்கள் பேசும்போது, கோடை காலம் என்பது பொதுவானது. ஒரு கோடியே 31 லட்சம்  பெண்களுக்கு மட்டுமா கோடை காலம்? அனைத்து பெண்களுக்கும் தானே கோடை காலம் அப்படி இருக்கும் போது அனைவருக்கும் தானே இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து இருக்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய கடமையை ஒழுங்காக செய்யவில்லை என பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு பட்டுசேலைகளும் பிரிஞ்சி சாதம்,  புளியோதரை சாதம் போன்ற அன்னதானம் வழங்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா கணேசன், மைதிலி திருநாவுக்கரசு,  அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம் , மாவட்ட அவைத்தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கழக பொருளாளர் அப்பு என்ற வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான கழகத்தினர் கலந்து கொண்டனர்.
    1
    மகளிர் உரிமைத்தொகை வாங்குகின்ற குடும்பங்களில் விதவை பென்ஷன் ,முதியோர் தொகை உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்பட்டதால் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவதி. அப்பாவும் மகனும் மக்களை ஏமாற்றுகிறார்கள் -  முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி 
________
காஞ்சிபுரம் மாநகர தெற்கு பகுதி செயலாளர் கோல்ட் ரவி அவர்கள் தலைமையில்,  காஞ்சிபுரம் கீழ்கேட் ஆலடி பிள்ளையார் கோயில் தெரு  ஐயப்ப சுவாமி கோயில் அருகில், மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியின் அவலங்களை மக்கள் மன்றத்தில் முன்னெடுத்து வைக்கும்
தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரச்சார கூட்டத்தில் கழக மகளிர் அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பா.வளர்மதி அவர்கள் பேசும்போது, 2 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ள இடத்தில் ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு மட்டுமே மக்கள் உரிமைத்தொகை வழங்கப்படுகின்றது . கிட்டத்தட்ட  70 லட்சம் மக்களுக்கு முதியோர் பென்ஷன், விதவை பென்ஷன் உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.  முதல்வர் அப்பா ஸ்டாலின் மகன் உதயநிதி சேர்ந்து கொண்டு பொதுமக்களை ஏமாற்றுகின்றர்கள். அவர்களை நம்ப வேண்டாம் என பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.
முன்னதாக வி.சோமசுந்தரம் அவர்கள் பேசும்போது, கோடை காலம் என்பது பொதுவானது. ஒரு கோடியே 31 லட்சம்  பெண்களுக்கு மட்டுமா கோடை காலம்? அனைத்து பெண்களுக்கும் தானே கோடை காலம் அப்படி இருக்கும் போது அனைவருக்கும் தானே இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து இருக்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய கடமையை ஒழுங்காக செய்யவில்லை என பேசினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு பட்டுசேலைகளும் பிரிஞ்சி சாதம்,  புளியோதரை சாதம் போன்ற அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா கணேசன், மைதிலி திருநாவுக்கரசு,  அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம் , மாவட்ட அவைத்தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கழக பொருளாளர் அப்பு என்ற வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான கழகத்தினர் கலந்து கொண்டனர்.
    user_E.LAKSHMI KANTHAN
    E.LAKSHMI KANTHAN
    பத்திரிகையாளர் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    7 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    11 hrs ago
  • தமிழ் நாடு அரசு சார்பில் மறைந்த தலைசிறந்த தமிழ் திரைப்படம் பாடகர்கள் மற்றும் இசை மேதைகள் பெயர் பலகை திறந்து வைத்து மரியாதை செய்த வீடியோ தொகுப்பு உங்கள் பார்வைக்காக இதோ பார்த்து மகிழ்வோம்.
    1
    தமிழ் நாடு அரசு சார்பில் மறைந்த தலைசிறந்த தமிழ் திரைப்படம் பாடகர்கள் மற்றும் இசை மேதைகள் பெயர் பலகை திறந்து வைத்து மரியாதை செய்த வீடியோ தொகுப்பு உங்கள் பார்வைக்காக இதோ பார்த்து மகிழ்வோம்.
    user_AMUTHAM TV அமுதம் TV வாஞ்சியார
    AMUTHAM TV அமுதம் TV வாஞ்சியார
    Newspaper advertising department தாம்பரம், செங்கல்பட்டு, தமிழ்நாடு•
    22 hrs ago
  • நட்சத்திர தொகுதி காத்திருங்கள் வெற்றியை மட்டுமே சந்திக்கப் போகும் சோழிங்கநல்லூர் தொகுதி. ஒருமுறை தவறிவிட்டது இந்த முறை. எங்கள் தொகுதியின் மக்கள் முடிவு பண்ணி விட்டார்கள் வெற்றியை நோக்கி மக்கள் பணி என்றும் என் தலைவன்... #KPK #சென்னைபுறநகர்மாவட்டம் #சோழிங்கநல்லூர்
    1
    நட்சத்திர தொகுதி 
காத்திருங்கள் வெற்றியை மட்டுமே சந்திக்கப் போகும் சோழிங்கநல்லூர் தொகுதி. ஒருமுறை தவறிவிட்டது இந்த முறை. எங்கள் தொகுதியின் மக்கள் முடிவு பண்ணி விட்டார்கள் வெற்றியை நோக்கி மக்கள் பணி என்றும் என் தலைவன்...
#KPK
#சென்னைபுறநகர்மாவட்டம் 
#சோழிங்கநல்லூர்
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    22 hrs ago
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    1
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    15 hrs ago
  • சென்னை ஆர்.கே நகர் தொகுதி 40வது வார்டுக்குட்பட்ட இளையா தெருவில் நீண்ட நாட்களாக சாலையோரம் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை தீர்வுக்கு கொண்டு வரும் விதமாக கார்களில் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டி அபராதம் விதித்தது. ஆனால் கார் உரிமையாளர்கள் மதிக்காமல் நீண்ட காலமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதற்கு போக்குவரத்து போலீசார் நிரந்தர தீர்வு காண வேண்டுமென சமூக ஆர்வலர்கள் இன்று கோரிக்கை விடுத்தனர்.
    1
    சென்னை ஆர்.கே நகர் தொகுதி 40வது வார்டுக்குட்பட்ட இளையா தெருவில் நீண்ட நாட்களாக சாலையோரம் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை தீர்வுக்கு கொண்டு வரும் விதமாக கார்களில் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டி அபராதம் விதித்தது. ஆனால் கார் உரிமையாளர்கள் மதிக்காமல் நீண்ட காலமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதற்கு போக்குவரத்து போலீசார் நிரந்தர தீர்வு காண வேண்டுமென  சமூக ஆர்வலர்கள் இன்று கோரிக்கை விடுத்தனர்.
    user_Reporter M.Krishna Kumar
    Reporter M.Krishna Kumar
    Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    20 hrs ago
  • ஆதனூர் பகுதியில் மல்லிகை கடை ஒன்றில் பேரிச்சம் பழம் திருடிய இளைஞரின் சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே ஆதனூர் பகுதியைச் சேர்ந்தவர் பலராமன். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது கடைக்கு பொருட்களை வாங்குவது போல வந்த இளைஞர் ஒருவர், கடையில் இருந்தவரிடம் இரண்டு மேகி பாக்கெட்கள் கொடுக்கும்படி கேட்டுள்ளார். பின்னர், கடை உரிமையாளர் உள்ளே சென்று மேகி பாக்கெட்டுகளை எடுத்து வர சென்ற சமயத்தில், கடையின் மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த பேரிச்சம்பழம் பாக்ஸை திருடி எடுத்து, இடுப்பில் சொருகிக் கொண்டு வாங்கிய மேகி பாக்கெட்களுக்கு கூகுள் பேவில் பணத்தை செலுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து கடை உரிமையாளர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இளைஞர் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்படாத நிலையில், கடையில் பேரிச்சம் பழம் திருடிய இளைஞரின் சிசிடிவி காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு , வைரலாகி வருகிறது.
    1
    ஆதனூர் பகுதியில் மல்லிகை கடை ஒன்றில் பேரிச்சம் பழம் திருடிய இளைஞரின் சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே ஆதனூர் பகுதியைச் சேர்ந்தவர் பலராமன். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது கடைக்கு பொருட்களை வாங்குவது போல வந்த இளைஞர் ஒருவர், கடையில் இருந்தவரிடம் இரண்டு மேகி பாக்கெட்கள் கொடுக்கும்படி கேட்டுள்ளார். பின்னர், கடை உரிமையாளர் உள்ளே சென்று மேகி  பாக்கெட்டுகளை எடுத்து வர சென்ற சமயத்தில், கடையின் மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த பேரிச்சம்பழம் பாக்ஸை திருடி எடுத்து, இடுப்பில் சொருகிக் கொண்டு வாங்கிய மேகி பாக்கெட்களுக்கு கூகுள் பேவில் பணத்தை செலுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து கடை உரிமையாளர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இளைஞர் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்படாத நிலையில், கடையில் பேரிச்சம் பழம் திருடிய இளைஞரின் சிசிடிவி காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு , வைரலாகி வருகிறது.
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    22 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.