Shuru
Apke Nagar Ki App…
பிரதோஷ வழிபாட்டில் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் ஆதி சிவன் மதுரை தவிட்டுச்சந்தை பந்தடி 5வது தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதி சிவன் திருக்கோயிலில் இன்று (ஆக.25) மாலையில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஆதி சிவன் அர்த்தநாரிஸ்வரர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்ற பின்பு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
சு.இரத்தினவேல்
பிரதோஷ வழிபாட்டில் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் ஆதி சிவன் மதுரை தவிட்டுச்சந்தை பந்தடி 5வது தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதி சிவன் திருக்கோயிலில் இன்று (ஆக.25) மாலையில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஆதி சிவன் அர்த்தநாரிஸ்வரர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்ற பின்பு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
More news from Tamil Nadu and nearby areas
- டாஸ்மாக் கடைகள் விடுமுறை: மதுபான கடைகளில் குவிந்த மது பிரியர்கள். தமிழகத்தில் மிலாடி நபியை முன்னிட்டு நாளை (ஆக.26) டாஸ்மார்க் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து இன்று (ஆக.25) இரவில் மதுரை நகரில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று தங்களுக்கு வேண்டிய மது பாட்டில்களை வாங்கி சென்றார்கள்.1
- தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் அடிப்படையிலும், பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகும் தான் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது : தங்கம் தென்னரசு. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய முன்னாள் அமைச்சரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு, பரந்தூர் விமான நிலையத் திட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது என்பதை நான் நேற்றைய செய்தியாளர் சந்திப்பிலேயே விரிவாக விளக்கியிருந்தேன். சென்னை நகரின் புவியியல் அமைப்பிலேயே, வேறு எந்த இடத்திற்கும் விமான நிலையத்தை மாற்றுவது சாத்தியமில்லை என்பது புரியும். விமான நிலையம் அமைத்திட நாங்கள் நேரடியாக சென்று உடனடியாக பரந்தூரைத் தேர்வு செய்துவிடவில்லை. பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்ட பிறகே இந்த பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. ஒரு விமானநிலையத்தை அமைப்பதற்கு முன்பு இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதற்காக சோழிங்கநல்லூர், படாளம், பன்னூர் உள்ளிட்ட பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால் ஒவ்வொரு இடத்திலும் தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு காரணங்களினால் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. சென்னையின் கிழக்குப் பகுதியில் வங்கக்கடல் இருப்பதால் அங்கு விமான நிலையம் அமைக்க இயலாது. வடக்குப் பகுதியில் மணலி, எண்ணூர் உள்ளிட்ட தொழிற்பேட்டைகள் உள்ளன. பழவேற்காடு ஏரி போன்ற இடங்கள் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக உள்ளன. எனவே அந்தப் பகுதிகளும் பொருத்தமற்றதாக கருதப்பட்டன. இதைத்தொடர்ந்து, தெற்குப் பகுதியில் சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால் அவை தாம்பரம் விமானப்படைத் தளத்தின் வான்வெளிக்கு அருகில் இருப்பதால் அங்கு விமான நிலையம் அமைப்பது சாத்தியமில்லை. மேலும் தெற்கில் கல்பாக்கம் அணுமின் நிலையமும், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமும் உள்ளன. எனவே அந்தப் பகுதிகளும் நிராகரிக்கப்பட்டன. இதன் காரணமாகவே மேற்குப் பகுதியில் விமானநிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய நேரிட்டது. அப்போது பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகிய இரண்டு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த இரு இடங்களுக்கும் இடையில் விரிவான ஒப்பீட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் பணிகள் துவங்கின. முன்னதாக, ஒரு இடத்தைத் தேர்வு செய்யும்போது தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் முக்கியமாக பார்க்கப்படுகின்றன. அந்தப் பகுதியில் உயரழுத்த மின் கம்பிகள், பெரிய தொழிற்சாலைகள் இருந்தால் அவற்றை இடமாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுமா போன்ற அம்சங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோல், எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் நிலம் தேவைப்படுகிறது. குறிப்பாக, நிலம் கையகப்படுத்தப்படும்போது அப்பகுதியில் வாழும் மக்களை இடமாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். எனவே தேர்வு செய்யப்படும் இடத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே பாதிக்கப்படுவதை கணக்கிட்டு உறுதிசெய்யவேண்டும். இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில்தான் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. மேலும் நிலத்தின் விலை உள்ளிட்ட பொருளாதார காரணிகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. எனவே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதற்குப் பின்னால் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. இது முழுக்க முழுக்க தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். இதில் மாநில அரசு மட்டுமல்ல, ஒன்றிய அரசும் ஈடுபட்டுள்ளது. பல்வேறு இடங்களை ஆய்வு செய்த பிறகு, இந்திய குடிமை விமானப் போக்குவரத்து அமைச்சகம் இறுதியாக பரந்தூருக்கே ஒப்புதல் வழங்கியது. அதனால்தான் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. அதைத்தாண்டி தனிநபர் விருப்பத்திற்காக எதுவும் செய்யப்படவில்லை. இப்போது மாற்று இடங்களை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் எந்த புதிய இடத்தை ஆய்வு செய்தாலும் இதே போன்ற சிக்கல்கள் எழும். அங்கும் விவசாய நிலங்கள் இருக்கும்; அங்கும் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கும்; அங்கும் மக்கள் பாதிக்கப்படக்கூடும். அதே மதிப்பீடுகளை மீண்டும் நீங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்தத் திட்டம் பல ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள், அனுமதி நடைமுறைகளைக் கடந்து இன்றைய நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையில் அதை கைவிட்டால், மீண்டும் இதுபோன்ற ஒரு திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது கேள்விக்குறியாகிவிடும். சிலர் தற்போதைய சென்னை விமான நிலையத்தையே விரிவுபடுத்தலாம் என்று கூறுகின்றனர். ஆனால் அங்கு இரண்டாவது ஓடுபாதை அமைப்பது எப்படி சாத்தியமாகும். சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள மக்கள் அடர்த்தியை கருத்தில் கொண்டால், மீனம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் எத்தனை பேரை இடமாற்றம் செய்ய வேண்டியிருக்கும். அங்கு ஏற்படும் சமூக மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் இதைவிட அதிகமாக இருக்கும். ஆகவே, பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடரப்பட வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. ஏற்கனவே அப்பகுதியில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட பட்டா நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் திட்டத்தை கைவிடுவது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கே பாதகமாக இருக்கும். ஒருபுறம் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்று கூறிக்கொண்டே, மறுபுறம் அதற்கு அடித்தளமாக அமையும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை எதிர்ப்பது முரண்பாடான நிலைப்பாடாகும்.இதுதான் எங்களுடைய நிலைப்பாடு, அதைத்தான் நாங்கள் விளக்குகிறோம் எனக்கூறினார்.1
- அருப்புக்கோட்டை காந்திநகரில் தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு அவர்கள் ரசிகர்கள் ஏழை மக்களுக்கு முட்டை பிரியாணி மற்றும் சேது ராஜபுரம் கிராமத்தில் உள்ள அன்னை முதியோர் இல்லத்தில் சிக்கன் பிரியாணியுடன் அன்னதானமும் புதிய ஆடைகள் வழங்கியதோடு இனிப்புகள் வழங்கி பிறந்த நாளை கொண்டாடினார் தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கார், வேன் மெக்கானிக்குகளாக வேலை செய்து வரும் அவரது ரசிகர்கள் ஒன்று சேர்ந்து ஏழை மக்களுக்கு முட்டை பிரியாணி அன்னதானமாக வழங்கினர். முன்னதாக காந்திநகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அங்கிருந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தாங்களாக முன்வந்து விஜயகாந்த் திருவுருவப்படத்தை தொட்டு வணங்கி மரியாதை செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பொதுமக்களுக்கும், பேருந்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. விஜயகாந்த் ரசிகர்கள் ஒன்று கூடி அனைவருக்கும் முட்டை பிரியாணி அன்னதானமாக வழங்கியதை பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கி சென்றனர். இதில் விஜயகாந்த் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை காந்திநகரில் உள்ள பொன்னுச்சாமி - விஜயலட்சுமி தனியார் குடும்பத்தினரும் சேது ராஜபுரம் கிராமத்தில் உள்ள அன்னை முதியோர் இல்லத்திலும் ஆதரவற்ற முதியோர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கியதோடு புதிய ஆடைகளும் வழங்கினர் முதியோர்கள் தெய்வதிரு கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பிரார்த்தனை செய்து வழிபாடு செய்தனர்1
- மேலூரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் காமாட்சி அம்மன் சிவன் கோவிலில் இன்று பிரதோஷ வழிபாடு! மேலூரில் அமைந்துள்ள சிவன் கோவிலில் இன்று மாலை 4:00 பிரதோஷ வழிபாடு நடைபெற உள்ளது. பிரதோஷ வழிபாடுக்கு தேவையான தயிர்,பால் மற்றும் அபிஷேகப் பொருட்கள் பக்தர்கள் வழங்கி வருகின்றனர். பிரதோஷ வழிபாடு இன்று மாலை நடைபெற உள்ளது. சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது. சுற்று வட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் அனைவரும் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ளலாம்.1
- அம்பேத்கரை சாதித் தலைவர் என குறிப்பிட்ட பேரூராட்சித் தலைவர்? இளையான்குடி பேரூராட்சி கூட்டத்தில் சலசலப்பு சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சிக் கூட்டம் பேரூராட்சித் தலைவர் நஜூமுதீன் (திமுக) தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர் ராஜவேலு பேசுகையில், பேரூராட்சி கூட்டரங்கில் முதல்வர் விஜயின் புகைப்படம் அருகே அம்பேத்கரின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் எனக் கூறி, அவரது புகைப்படத்தை பேரூராட்சி நிர்வாகத்திடம் வழங்கியதாகவும், இதுவரை புகைப்படம் வைக்கப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். அப்போது பேரூராட்சித் தலைவர் நஜூமுதீன், “அம்பேத்கர் உங்களது சாதித் தலைவர் என்பதால் அவரது புகைப்படத்தை வைக்கக் கேட்கிறீர்களா?” என கூறி அம்பேத்கர் புகைப்படத்தை கூட்டரங்கில் வைக்க முடியாது என அவர் தெரிவித்ததார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர் ராஜவேலு, “அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர். அவரை எப்படி சாதித் தலைவர் என்று கூறலாம்?” என கேள்வி எழுப்பினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மற்றொரு கவுன்சிலர் ஜமிமா பேசுகையில், கடந்த ஆட்சிக் காலத்தில் பேரூராட்சி கூட்டரங்கில் முன்னாள் முதல்வரின் புகைப்படம் வைக்கப்படாததற்கு, கட்சித் தலைவர் சார்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததே காரணம் என்றும், “அனைவரது மனதிலும் இருந்தால் மட்டும் போதும்” என தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார். தற்போதைய முதல்வரின் புகைப்படம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே, அம்பேத்கர் புகைப்படத்தை பேரூராட்சி நிர்வாகம் வைக்கவில்லை என்றால், தங்களிடம் புகைப்படத்தை வழங்குமாறு சுயேச்சை கவுன்சிலர் ராஜவேலு வலியுறுத்தியதால் கூட்டத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.1
- RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK1
- விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாநகர் மாவட்டம் சார்பில் பாரதி புரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.1
- இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் குவிந்த பக்தர்கள் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் இன்று (25.08.2026) செவ்வாய்க்கிழமை அங்காரக வார பிரதோசத்தை முன்னிட்டு மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனர்.1