காஞ்சிபுரம் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு, மாநகர கிழக்கு பகுதி கழக செயலாளர் வி.பாலாஜி அவர்கள் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்ட கழகத்தினர் வெள்ளி தேர் வடம் பிடித்து இழுத்து வணங்கினர். ---------------------------------------------------- தமிழக முதல்வர் மறைந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாள் வருகின்ற 24 ம் நடைபெற உள்ளது . அதனை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட கழகம் சார்பில் காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் வெள்ளி தேர் பவனி நடைபெற்றது. கந்தபுராணம் தோன்றிய தலமும், கந்தபுராணம் அரங்கேறிய தலமான. புகழ்பெற்ற இத் திருக்கோவிலில் மாசி மாத செவ்வாய்க்கிழமை ஒட்டியும், முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளையொட்டி மற்றும் மாவட்ட வெள்ளித்தேர் அலங்கரிக்கப்பட்டு தங்க நிற பட்டாடை உடுத்தி கந்தக்கோட்ட முருகன், அரக்கு நிற பட்டாடை உடுத்தி வள்ளி- தெய்வானை சமேதராக முருகர் வெள்ளித் தேரில் எழுந்தருளினார் . வெள்ளி தேரை மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, உள்ளிட்ட அதிமுகவினர் வெள்ளி தேர் வடம் பிடித்து இழுத்து வந்தனர் . இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு வெள்ளி தேரை வடம் பிடித்து உள்பிரகாரத்தில் இழுத்து வந்தனர். பொதுமக்களுக்கு சேலைகள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. பின்னர் கோவிலில் கூடி இருந்த பக்தர்களுக்கு புளியோதரை, கேசரி உள்ளிட்ட சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. மாநகர கிழக்கு பகுதி கழக செயலாளர் வி.பாலாஜி அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட கழக பொருளாளர் அப்பு என்ற வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம் ,மாவட்ட பாசறை செயலாளர் வி ஆர.மணிவண்ணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆனந்தன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வெள்ளி தேர் பவனி நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அரோகரா என்ற கோசத்துடன் வெள்ளி தேரை வடம்பிடித்து கோவில் உட்பிரகாரத்தில் இழுத்து வந்தனர்.

- நெல்மணிகளை பறவைகளிடமிருந்து காப்பாற்ற, களக்காட்டூர் பெண் விவசாயி ஒருவர் நாள் முழுவதும் பாத்திரத்தை டமால் டமால்’ என தட்டி சத்தம் எழுப்பி குருவிகளை ஓட்ட பெரும்பாடு பட்டு வருகிறார். __________ காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர், பகுதியில் பெண் விவசாயி ஒருவரின் வித்தியாசமான முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பயிர் செய்த நெற்பயிர் முளைத்து வளரும் இந்த நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் குருவிகள் கூட்டமாக வந்து நெல்மணிகளைத் தின்றுவிட்டு செல்வதாக அவர் கூறுகிறார். இதைத் தடுக்க, தண்ணீர் நிரப்ப பயன்படுத்தப்படும் காலி அன்னக்கூடையை கையில் பிடித்து, குச்சியால் ‘டமால் டமால்’ எனத் தட்டி சத்தமிட்டு குருவிகளை விரட்டுகிறார். “சத்தம் போடாமல் இருந்தால் முளைத்துள்ள நெல்மணிகளை குருவிகள் முழுவதும் சேதப்படுத்தி விடும். அதனால் தினமும் இரண்டு வேளையும் இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது,” என்று அந்த பெண் விவசாயி வேதனையுடன் தெரிவித்தார். தன் உழைப்பின் பலனை காக்க, இயற்கையோடு போராடும் இந்த பெண் விவசாயியின் விடாமுயற்சி, கிராமப்புற விவசாய வாழ்க்கையின் சவால்களை வெளிப்படுத்துகிறது.1
- Post by Vinayagam Vinayagam1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இன்று சாம்பல் புதன் தினத்தை அனுசரிக்கிறார்கள் இன்று முதல் 40 நாட்களுக்கு தவக்கால நோன்பு அனுசரிப்பது வழக்கம். இந்த நிலையில் கோவிலூர் புனித சவேரியார் தேவாலயத்தில் இன்று சாம்பல் புதனை சிறப்பிக்கும் வகையில் பங்கு தந்தை ஆரோக்கியசாமி, உதவி பங்குத்தந்தை பெனடிக்ட் தலைமையில் திருப்பலியும் அதில் குருத்தோலை சாம்பலில் சிலுவை அடையாளம் வரைந்து வழிபாடு நடந்தது.1
- .ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடி குண்டு மிரட்டல் விடுத்து மாவட்ட முதன்மை நீதிமன்ற இமெயில் முகவரிக்கு வந்த குறுந்தககளால் பரபரப்பு நீதிபதிகள் உட்பட- நீதிமன்ற பணியாளர்கள் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றம் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டை தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட தடங்கும் பகுதியில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களான மாவட்ட நீதிமன்றம், மாவட்ட அமர்வு முதன்மை நீதிமன்றம், மகிலா நீதிமன்றம் மாவட்ட சார்பு நீதிமன்றம் உள்ளிட்ட 16 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு மாவட்ட நீதிமன்ற இமெயில் முகவரிக்கு வந்த குறும் தகவலில் இன்று 12:020 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என வந்த தகவலை அடுத்து அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் அதியமான் கோட்டை காவல் துறையினர் விரைந்து வந்து நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் 2000 ஊழியர்கள் 700 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை வெளியேற்றி 16 நீதிமன்றங்களையும் பூட்டி தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர் பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் லூபி உதவியுடன் நீதிமன்ற வளாகத்திற்குள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது இந்த சம்பவத்தால் நீதிமன்றம் வாழாகும் பரபரப்பாக காணப்பட்டது. இதேபோல் தருமபுரி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த வருடம் செப்டம்பர் 26 ஆம் தேதியும், மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 19. 12. 2025 தேதியும், தருமபுரி பழைய கோர்ட் வாலாகத்திற்கு கடந்த 9ம் தேதியும் இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.1
- குமாரசாமிபேட்டை அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக் கொள்ளை பெருவிழா: மேளதாளத்துடன் அந்தரங்கத்தில் தொங்கியபடி பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம் தருமபுரி குமாரசாமிபேட்டை அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் சிவராத்திரியையொட்டி மயானக் கொள்ளை நிகழ்ச்சி பெருவிழா இன்று காலை மேளதாளத்துடன் பக்தர்கள் அலகு குத்தியும் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது அம்மன் கோவிலில் இருந்து துவங்கிய ஊர்வலத்தில் அலங்கரிகப்பட்ட ரதத்தில் அம்மன் ஊர்வலமாக மயானம் வரை சென்றது கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவின் 5ம் நாளான இன்று மயானக்கொள்ள திருவிழா ஊர்வல நிகழ்ச்சி நடைபெற்றது பக்தர்கள் அலகு குத்தி அந்தரங்கத்தில் தொங்கியபடியும் பென் பக்தர்கள் வாயில் அலகு குத்தியும் அம்மன், காளி வேடங்களுடன் மேளதாளத்துடன் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக மயானம் வரை சென்றனர் பின்னர் நன்பகல் மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது1
- Post by Vinayagam Vinayagam1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மயான கொள்ளை திருவிழாவில் பக்தர்கள் அழகு குத்தி நேர்த்திக்கடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம். தருமபுரி குமாரசாமி பேட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயியில் மயான கொள்ளை பெருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கடந்த 12 ம் தேதி சக்தி கரகம் அழைத்து கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைதொடர்ந்து ஸ்ரீ மகா கணபதி, சுப்ரமணியர், அம்மாளுக்கு சிறப்பு யாகங்கள் நடைந்தேறியது. அதனைதொடர்ந்து கடந்த 14 ம் தேதி ஏராளமான பெண்கள், ஆண் பக்தர்கள் தீக்குண்டத்தல் இறங்கி சுவாமி தரிசனம் சேய்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். நேற்று பால் குடம் ஊர்வலமும் நடைபெற்றது. அதனைதொடர்ந்து இன்று மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக மயான கொள்ளை புறப்பாடு நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தும் வகையில் அலகு குத்தியும், நூதன முறையில் அழகு குத்தி கிரேனில் அந்தரத்தில் தொங்கியபடி ஊர்வலமாக வந்து நேர்த்தி கடனை செலுத்தினர். குழுவாக சேர்ந்து கோலட்டம் ஆடியும், காளி வேடம் அணிந்தும் ஊர்வலமாக வந்து மயான கொள்ளை நடைபெரும் மயானத்திற்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மேலும் பக்தர்கள் தங்களது வீட்டில் இருந்து கொண்டு வந்த மிளகு, உப்பு உள்ளிட்ட நவதானியங்களை அம்மன் மீது வீசினர். பின்னர் மயானத்தில் நவதானியங்கள் படையலிட்டு பண்டைய கால வழக்கபடி மயானத்தில் உள்ள எலும்புகளை சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது. அதே போல் தருமபுரி எஸ்.வி.ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் மயான கொள்ளை திருவிழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மனை வழிபட்டு தங்களது நேரத்தி கடனை செலுத்தினர்.1