Shuru
Apke Nagar Ki App…
திருவொற்றியூரில் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு - குடும்பத்துடன் பொதுமக்கள் பங்கேற்பு சென்னை, செப்.14:- விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இன்று (14.09.2026) திருவொற்றியூர் கடற்கரையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலர், தங்கள் இல்லங்களில் வைத்து வழிபட்ட சிறிய விநாயகர் சிலைகளை, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் குடும்பத்தினருடன் எடுத்து வந்து, திருவொற்றியூர் கடலில் கரைத்தனர். முன்னதாக, பக்தர்கள் விநாயகர் சிலைகளுக்கு மலர் மாலை சூட்டி, தேங்காய் உடைத்து, கற்பூர ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர். பின்னர் பக்தி பரவசத்துடன் சிலைகளை கடலில் கரைத்தனர். கடற்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Baskaran
திருவொற்றியூரில் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு - குடும்பத்துடன் பொதுமக்கள் பங்கேற்பு சென்னை, செப்.14:- விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இன்று (14.09.2026) திருவொற்றியூர் கடற்கரையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலர், தங்கள் இல்லங்களில் வைத்து வழிபட்ட சிறிய விநாயகர் சிலைகளை, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் குடும்பத்தினருடன் எடுத்து வந்து, திருவொற்றியூர் கடலில் கரைத்தனர். முன்னதாக, பக்தர்கள் விநாயகர் சிலைகளுக்கு மலர் மாலை சூட்டி, தேங்காய் உடைத்து, கற்பூர ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர். பின்னர் பக்தி பரவசத்துடன் சிலைகளை கடலில் கரைத்தனர். கடற்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஏலேல சிங்க விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலை நேரத்தில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்பு தீப தூப ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காலை 9 மணி அளவில் 25 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் பத்து ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான புதிய ரூபாய் நோட்டுகளால் கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு விநாயகருக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தெற்கு பார்த்த விநாயகப் பெருமானை ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்து மனமுருக பிரார்த்தனை செய்தனர்.. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.... காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஏலேல சிங்க விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலை நேரத்தில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்பு தீப தூப ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காலை 9 மணி அளவில் 25 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் பத்து ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான புதிய ரூபாய் நோட்டுகளால் கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு விநாயகருக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தெற்கு பார்த்த விநாயகப் பெருமானை ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்து மனமுருக பிரார்த்தனை செய்தனர்.. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்....1
- தமிழக கட்சி கழகம் 100 நாள் சாதனை விளக்க கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா அமைச்சர் ! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா ஆதியூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் தமிழக வெற்றிக்கழக 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சிகள் இணையம் விழா திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திருப்பதி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றிக்கழக வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். உடன் ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் பல்வேறு அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மேலும் மாற்றுக் கட்சியின் விலகி நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர் அவர்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து மரியாதை செய்தார்கள்.2
- வினாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு கிருஷ்ணகிரி சீனிவாச காலனி மகாராஜா வடிவில் எழுந்தருளிய நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராஜா கணபதி சிலைக்கு சிறப்பு பூஜையில் ஜாதி,மத வேறுப்பாடுகள் இன்றி ஏராளமான மக்கள் பங்கேற்பு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று வழக்கம் போல விநாயகர் சதூர்த்தி விழா சாலையோரம், குடியிருப்பு பகுதிகள், கோயில்கள் என பல்வேறு இடங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வினாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது,1
- சித்தக்காடு நெடுஞ்சாலை நடுவில் தடுப்பு கட்டை அமைக்கும் பணி நடைபெறுகிறது மயிலாடுதுறை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை சித்தக்காடு இரயில்வே மேம்பாளம் முன்னே சாலையை இரண்டாக பிரித்து நடுவே தடுப்பு கட்டை அமைக்கும் பணி தீவீரம் பொது மக்களுக்கு சிறமம் ஏற்படாத வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது1
- ஆத்தூரில் பார்வையாளர்களைக் கவர்ந்த மாணவிகளின் பரதநாட்டியம்! ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, அருள்மிகு வெள்ளப் பிள்ளையார் திருக்கோவிலில் நேற்று (செப் 14) விநாயகர் சதுர்த்தி விழாவினை ஒட்டி, கோயில் நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சிவ கால கேஸ்தரா பரதநாட்டிய பள்ளி மாணவிகளின் ஆடிய பரத நடனம் பார்ப்போரைக் கவர்ந்தது. சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நின்றவாறு, நடனத்தைக் கண்டு களித்து மாணவிகளை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.1
- தர்மபுரி திமுக கட்சியின் சார்பில் 118-வது அண்ணா பிறந்தநாள் விழா அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. தர்மபுரி திமுக கட்சியின் சார்பில் பேருந்து நிலையம் அருகே இருந்து ஊர்வலமாக தர்மபுரி 4 ரோடு பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு நகர செயலாளர்கள் நாட்டான் மாது .கௌதம். தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்பு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். தடங்கம் சுப்பிரமணி முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மசெல்வன். மாவட்ட பொருளாளர் தங்கமணி ஒன்றிய செயலாளர் என் பி பெரியண்ண ஏ எஸ் சண்முகம் இளரணி துனை அமைப்பாளர்கள் அசோகன் . வழக்கறிஞர் அசோக் குமார். ஒன்றிய செயலாளர் காவேரி கோட்டைகோவில் அறங்காவலர் குழு தலைவர். சுருளிராஜன். நகர மன்ற உறுப்பினர். மாதேஸ்வரன். நிர்வாகிகள் முல்லைவேந்தன். வெல்டிங் ராஜா. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.1
- அதிமுக கட்சியின் சார்பில் 118-வது அண்ணா பிறந்தநாள் விழா அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது1
- தருமபுரியில் தேசிய மக்கள் நீதிமன்றம், 1,971 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு..! தருமபுரியில் தேசிய மக்கள் நீதிமன்றம், 1,971 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு..! தருமபுரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் எனப்படும் நேஷனல் லோக் அதாலத் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாகவும், சமரச அடிப்படையிலும் தீர்த்து வைப்பதற்காக, தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படியும், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படியும் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சுதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மட்டுமின்றி அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம் உள்ளிட்ட 5 தாலுகா நீதிமன்ற வளாகங்களிலும் மொத்தம் 9 அமர்வுகள் அமைக்கப்பட்டு வழக்குகளில் சமரசம் ஏற்படுத்தப்பட்டது. இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 1,979 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 1,870 வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காணப்பட்டு, ரூ.12 கோடியே 91 லட்சத்து 89 ஆயிரத்து 214 மதிப்பிலான சமரசத் தொகைக்கு தீர்வு காணப்பட்டது. மேலும், வங்கி வாராக்கடன் தொடர்பான 265 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில், 101 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு காணப்பட்டு, ரூ.4 கோடியே 67 லட்சத்து 10 ஆயிரத்து 148 மதிப்பிலான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதன் மூலம், மொத்தம் 2,244 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் 1,971 வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு காணப்பட்டது. இதற்கான மொத்த சமரசத் தொகை ரூ.17 கோடியே 58 லட்சத்து 99 ஆயிரத்து 362 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு தீர்வு காணப்படுவதன் மூலம், முத்திரைத்தாள் வாயிலாக செலுத்தப்பட்ட நீதிமன்றக் கட்டணத்தை திரும்பப் பெறும் வாய்ப்பு உள்ளது. மேலும், வழக்கில் தீர்வு காணப்பட்டவுடன் அதற்கான தீர்ப்பு நகல் உடனடியாக வழங்கப்படும். மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது என்பதுடன், இதில் வெற்றி பெற்றவர், தோல்வியடைந்தவர் என்ற நிலை இல்லாமல் இரு தரப்பினரின் சமரசத்தின் அடிப்படையில் தீர்வு காணப்படுகிறது. மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத வேறு சட்டப் பிரச்சனைகளுக்கும் மக்கள் நீதிமன்றத்தை அணுகினால், அவற்றையும் விசாரித்து நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள், நீதித்துறை ஊழியர்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.1
- டிப்பர் லாரியிலிருந்து கொட்டப்பட்ட மண் பொதுமக்கள் அவதி அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையில் வெங்கட கிருஷ்ணாபுரம் அருகே சாலையில் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனத்தில் இருந்து மண் சாலையில் கொட்டிச் சென்றுள்ளது. ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் இந்த சாலையில் பயணித்தே அரியலூரை வந்தடைய முடியும். இந்நிலையில் சாலையில் கொட்டிக் கிடந்த மண்ணைக் கடந்து செல்லும் கனரக வாகனங்களின் வேகத்தினால் அதிலிருந்து எழும் மண் துகள்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை பெரிதும் அவதிக்குள்ளாக்கியது. கண்களில் வந்து விழுந்த மண் துகள்களால் வாகனத்தை இயக்க முடியாது பொதுமக்கள் அவதியுற்றனர். உடனடியாக சாலையில் கொட்டிக் கிடக்கும் இந்த மண்ணை அகற்றி வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1