*குமரி. லஞ்சம் பெற்று வருட கணக்கில் மண் கொள்ளைக்கு அனுமதி அளித்த கனிமவளத்துறை.* *ஒரு டெம்போ மண் எடுக்க அனுமதிக்கு 600 ரூபாய் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு*. *அழிக்கப்படும் மலைக் குன்றுகளால் இயற்கையே அழியும் அபாயம்* *சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட மண்கொள்ளை அனுமதி குறித்து விவசாய குறைதீர் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளால் பரபரப்பு* கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமோடி மற்றும் குழித்துறை அருகே பாலவிளை உட்பட பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக ஒரு வருடம் மண் எடுக்க குமரி மாவட்ட கனிம வள துறை உதவி இயக்குநர் அனுமதி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு உள்ள மலை குன்று அழிக்கப்பட்டு அதில் இருந்த பாறைகளும் மற்றும் விவசாயத்திற்கு செல்லும் கால்வாய் பகுதிகளும் உடைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரு டெம்போ மண் எடுக்க 600 ரூபாயை ஒரு வெளியூர் கும்பல் ஒன்று குழுவாக இருந்து வசூலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க கூட கடுமையான சட்ட விதிகளை பின்பற்றி மாவட்ட ஆட்சியரின் உத்தரவு பெற வேண்டி இருக்கும் நிலையில், சுற்று சூழல் அனுமதி இன்றி மலை குன்று பகுதியை முழுமையாக அழித்து அதில் இருந்து சட்ட விரோதமாக மண் கொள்ளை நடத்த மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனரே மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறாமல் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் ரகசியம் காத்து வருட கணக்கில் மண் எடுத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . மேலும் எந்த அனுமதியும் இன்றி அதில் இருந்த பாறைகளையும் உடைத்து எடுத்து சட்ட விரோதமாக பாறைகளையும் உடைத்து கால்வாய்களையும் அழித்து மண் கடத்தி வருகின்றனர். இதற்கு பெரும் லஞ்சம் கைமாறி உள்ளதாக கூறப்படுகிறது. சாதாரணமாக 5 செட் 10 சென்ட் இடங்களில் வீடு கட்டுவதற்கு நிலத்தை சரி சமன் செய்ய அனுமதி கேட்கும் போது மிக கடினமான சட்ட வழிமுறைகளை பின்பற்றும் கனிமவளத்துறை பெரும் மண் கொள்ளை நடத்த விதிகளை தளர்த்தி பெருமளவு லஞ்சம் பெற்று அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் எழுப்பப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அமைச்சர்கள் மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பணம் பெறுவதாக மேற்படி பணம் வசூல் செய்யும் கும்பல் கூறியதாகவும் அந்த குற்றச்சாட்டுகளை கேட்டு மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி அடைந்து கனிமவளத்துறை அதிகாரிகளிடம் விபரங்கள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாதாரணமாக அனுமதி கொடுக்கும் போது 5 லிருந்து 7 நாட்களுக்குள்ளாக நிலத்தை சமன் செய்து மண் எடுக்க அனுமதி வழங்குவது வழக்கம். *அந்த மண்ணை கூட விற்பனை செய்ய அனுமதி இல்லை என்பதும் அவர்களின் மாற்று விவசாய நிலங்களில் போட மட்டுமே அனுமதி என்பது குறிப்பிடத்தக்கது.* மண் தேவைக்கு குமரி மாவட்ட குளங்களில் இருந்து மண் எடுத்து பயன்படுத்தலாம். அதனால் குமரி மாவட்ட பாசன குளங்கள் கூடுதல் நீரை தேக்கி வைக்கும் நிலையும் உருவாகும். ஆனால் தற்போது மண்ணை விற்று கொள்ளை லாபம் பார்க்க மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் விரோதமாக அனுமதி கொடுத்து மண்கொள்ளைக்கு உடந்தையாக செயல்பட்டு உள்ளது குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விவசாய சங்கங்கள் தற்போது வரும் 24ம் தேதி குமரி மாவட்டத்திற்கு வர இருக்கும் தமிழக முதல்வரிடம் நேரில் மண் கொள்ளை குறித்து முறையிடுவது என தீர்மானிக்கப்பட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆகவே சட்ட விரோதமாக லஞ்சத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள மண் கொள்ளை மற்றும் பாறைகளை உடைத்து கடத்தும் செயலை தடுக்கவும் கால்வாயை உடைத்து சேதப்படுத்தியவர்கள் மீது உடனடியாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து சட்டவிரோதமாக கனிமவளத்துறை உதவி இயக்குனரால் கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 600 ரூபாய் வீதம் ஒரு டெம்போ மண்ணுக்கு லஞ்சம் பெறும் கும்பல் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- நட்சத்திர தொகுதி காத்திருங்கள் வெற்றியை மட்டுமே சந்திக்கப் போகும் சோழிங்கநல்லூர் தொகுதி. ஒருமுறை தவறிவிட்டது இந்த முறை. எங்கள் தொகுதியின் மக்கள் முடிவு பண்ணி விட்டார்கள் வெற்றியை நோக்கி மக்கள் பணி என்றும் என் தலைவன்... #KPK #சென்னைபுறநகர்மாவட்டம் #சோழிங்கநல்லூர்1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- தமிழ் நாடு அரசு சார்பில் மறைந்த தலைசிறந்த தமிழ் திரைப்படம் பாடகர்கள் மற்றும் இசை மேதைகள் பெயர் பலகை திறந்து வைத்து மரியாதை செய்த வீடியோ தொகுப்பு உங்கள் பார்வைக்காக இதோ பார்த்து மகிழ்வோம்.1
- சென்னை ஆர்.கே நகர் தொகுதி 40வது வார்டுக்குட்பட்ட இளையா தெருவில் நீண்ட நாட்களாக சாலையோரம் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை தீர்வுக்கு கொண்டு வரும் விதமாக கார்களில் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டி அபராதம் விதித்தது. ஆனால் கார் உரிமையாளர்கள் மதிக்காமல் நீண்ட காலமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதற்கு போக்குவரத்து போலீசார் நிரந்தர தீர்வு காண வேண்டுமென சமூக ஆர்வலர்கள் இன்று கோரிக்கை விடுத்தனர்.1
- ஆதனூர் பகுதியில் மல்லிகை கடை ஒன்றில் பேரிச்சம் பழம் திருடிய இளைஞரின் சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே ஆதனூர் பகுதியைச் சேர்ந்தவர் பலராமன். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது கடைக்கு பொருட்களை வாங்குவது போல வந்த இளைஞர் ஒருவர், கடையில் இருந்தவரிடம் இரண்டு மேகி பாக்கெட்கள் கொடுக்கும்படி கேட்டுள்ளார். பின்னர், கடை உரிமையாளர் உள்ளே சென்று மேகி பாக்கெட்டுகளை எடுத்து வர சென்ற சமயத்தில், கடையின் மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த பேரிச்சம்பழம் பாக்ஸை திருடி எடுத்து, இடுப்பில் சொருகிக் கொண்டு வாங்கிய மேகி பாக்கெட்களுக்கு கூகுள் பேவில் பணத்தை செலுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து கடை உரிமையாளர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இளைஞர் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்படாத நிலையில், கடையில் பேரிச்சம் பழம் திருடிய இளைஞரின் சிசிடிவி காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு , வைரலாகி வருகிறது.1
- பட்டு நெசவு செய்ய முக்கிய பொருளான ஜரிகைகட்டையை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டு 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் மாநில கைத்தறி தந்தை தோழர் கே எஸ் .பார்த்தசாரதி கைத்தறி நெசவாளர் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் __________ காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் நெசவாளர் காலனி பகுதியில் உள்ள கைத்தறி துணை இயக்குனர் அலுவலகம் முன்பாக கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தினர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துணை செயலாளர் ஜெ கமலநாதன் பேசும்போது, கடந்த சில ஆண்டுகளாக ரக ஒதுக்கீடு சட்டத்தை கராறாக அமல் படுத்ததாதால் தமிழ்நாடு முழுவதும் பட்டு நெசவு தொழில் நலிவடைந்து கொண்டே வருகிறது, இந்த நிலையில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலமாகவும் பட்டு சேலை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது, அது மட்டும் இன்றி, ஒரு ஆண்டுகாலமாக பட்டு கைத்தறி நெசவுத் தொழிலுக்கு தேவையான முக்கிய மூல பொருளான ஜரிகை, வெள்ளி, தங்கம் விலை விண்ணை முட்டும் அளவில் உயர்ந்து கொண்டே போவதால் கூட்டுறவு சங்கங்களும், தனியார் உற்பத்தியாளர்களும், பட்டு சேலை உற்பத்திக்கு தேவையான ஜரிகை கொள்முதல் செய்ய இயலாமல், நெசவாளர்களின் குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் எனப் பேசினார். திமுக ஆட்சியில், நெசவாளர் குடும்பங்கள் பட்டினி சாவை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என நெசவாளர் தரப்பில் கூறப்பட்டது. நெசவு தொழிலை பாதுகாத்திட கோரி கைத்தறி துணை இயக்குனர் அலுவலகம் முன்பாக கே.எஸ். பார்த்தசாரதி கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் முக்கிய கோரிக்கையாக, பட்டு நெசவுக்கு தேவையான ஜரிகை விலையை குறைக்கவும் , தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை ரத்துசெய்யவும், கோறாவிற்கு மான்யம் வழங்குவது போல் ஜரிகைக்கும் மான்யம் வழங்கிடவும், தொடர்ந்து உயரும் கோறா விலையை கட்டுபடுத்தவும், குடிசை தொழிலாக விளங்கும் கைத்தறி நெசவுத் தொழிலுக்கு பயன்படுத்தும் மூலப் பொருட்களுக்கு GST வரியில் இருந்து விலக்கு அளித்திடவும், ரக ஒதுக்கீடு சட்டத்தை கராறாக அமல்படுத்திடவும், உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில், தமிழ்மாநில கைத்தறி தந்தை தோழர். K.S. பார்த்தசாரதி கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கத்தினர் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வேட்டி ஜெ.கமலநாதன் துணைச் செயலாளர் கைத்தறி சங்கம்2
- Post by Vinayagam Vinayagam1
- ஸ்ரீபெரும்புதூரில் புதிய டிரைலர் மற்றும் டிரக் பாடி உற்பத்தி ஆலை திறப்பு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்கியுள்ளது. சுமார் 15 ஏக்கரில் அமைந்துள்ள இந்த ஆலை, மாதத்திற்கு 800 யூனிட்டுகள் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. உயர் தொழில்நுட்ப உபகரணங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வசதி, நிறுவனத்தின் உற்பத்தி திறனை அதிகரித்து, உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து துறைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய ஆலை மூலம் உள்ளூர் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தரமான தயாரிப்புகள் மற்றும் வேகமான விநியோகம் வழங்கும் நோக்கில் இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் டிரைலர் உற்பத்தியில் புதிய தரத்தை நிர்ணயிக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. ஆலை திறப்பு விழாவில் தொழில் துறை பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.1