Shuru
Apke Nagar Ki App…
வந்தவாசி அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் அதிமுக வேட்பாளர் ராணி தனது மனுவினை தாக்கல் செய்தார். உடன் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முக்கூர் என்.சுப்பிரமணியன், தேர்தல் பொறுப்பாளர் வழக்கறிஞர் பி.ஜாகீர் உசேன்,அதிமுக பாஸ்கர் ரெட்டியார், பாமக நிர்வாகி மண்ணப்பன் உள்ளிட்டோர்.
A.Shahulhameed
வந்தவாசி அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் அதிமுக வேட்பாளர் ராணி தனது மனுவினை தாக்கல் செய்தார். உடன் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முக்கூர் என்.சுப்பிரமணியன், தேர்தல் பொறுப்பாளர் வழக்கறிஞர் பி.ஜாகீர் உசேன்,அதிமுக பாஸ்கர் ரெட்டியார், பாமக நிர்வாகி மண்ணப்பன் உள்ளிட்டோர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அர்த்தனாரி இன்று சர்ச்சில் உளாள பொதுமக்களிடம் கைச்சின்னத்திற்கு வாக்கு கேட்டார் முதலில் ஸ்டெயின் மேரிஸ் கல்லூரியின் முதல்வர் அருளப்பன்யிடம் ஆசி பெற்றார் மேலும் பாதர் கூறும்பொழுது ஏழைகளின் சின்னம் கைச்சின்னம் உதயசூரியின் சின்னம் என்றும் கூறினார் கண்டிப்பாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று வேட்பாளருக்கு ஆசிர்வாதம் செய்தார் அருகில் சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர். வி. ஸ்ரீராம் மற்றும் திமுக நிர்வாகிகள் தோழமைக் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.1
- நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நாட்டுக்கோழி சந்தை நடைபெறுவது வழக்கம். இன்று (ஏப்.05) நடைபெற்ற சந்தையில் சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் நாட்டுக்கோழிகள் ரூ.400 - 1,300 வரை விற்பனையானது. மேலும் இன்று ஒரே நாளில் மொத்தம் ரூ.3.70 லட்சத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.1
- தர்மபுரி மாவட்டம், தர்மபுரி சட்டமன்றத் தொகுதிக்கான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வேட்பாளர் சௌமியா அன்புமணி பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், தர்மபுரி அடுத்துள்ள சோகத்தூர் கூட்ரோடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்கு சேகரிப்பு திட்டங்கள், பிரசார முறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய சௌமியா அன்புமணி, “தர்மபுரி தொகுதியில் மக்கள் ஆதரவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிகமாக உள்ளது. இந்த ஆதரவை வாக்குகளாக மாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும், வீடு தோறும் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு அளிக்கும் நோக்கில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும் கூட்டத்தில் பேசிய சௌமியா அன்புமணி தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்றால் தொப்பூர் கணவாய் மேம்பால பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பபோம் என்றும் கிடப்பில் போடப்பட்டுள்ளது வத்தல்மலை சுற்றுலா தளம் திட்டத்தை விரிவுபடுத்தி நடைமுறைப்படுத்தப்படும் என்றும் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாள் வேலை திட்டமாக மாற்றப்படும் என்றும் ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தையும் நிறைவேற்றுவோம் என்றும் கூறினார் கூட்டணிக் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு, வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்றும், இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பு முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.1
- சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியாளராக அருண் தம்புராஜ் ஐஏஎஸ் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். முன்னதாக சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த டாக்டர் பிருந்தா தேவி தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய மாவட்ட ஆட்சியாளராக அருண் தம்புராஜை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்ததை தொடர்ந்து, இன்று சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார். புதிய ஆட்சியருக்கு மாவட்ட அரசு உயர் அதிகாரிகள், ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், செய்தியாளர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.1
- நாமக்கல் மல்லசமுத்திரம் அருகே துத்திப்பாளையம் பகுதியில் வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின்கம்பி உரசியதில் தீப்பிடித்து எரிந்தன அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் வந்து தீயணைத்தனர் இருந்தபோதிலும் லாரி முற்றிலும் எரிந்து நாசமாயின சிறிது நேரம் அப்பகுதியில் பதட்டம் நிலவியது1
- இரட்டை இலை #admk #KPK #eps1
- தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருப்பதால் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கவும் வாக்காளர்களின் கவனத்தை இருக்கவும் பல்வேறு விதமான யுக்திகளை கையாளுவார்கள் அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள புகழ்பெற்ற சக்கராபள்ளி சக்கரவாகேஸ்வரர் திருக்கோவிலின் சப்தஸ்தான திருவிழாவில் அய்யம்பேட்டை சாலை தெருவில் சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை புரிந்த த வெ க சார்பில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அசாருதீன் உதுமான் அலி அவர்கள் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து கைலாய வாத்தியம் வாசிக்கும் சிறார்கள் இடம் அவர்களின் வாசிக்கப்படும் கைலாய வாத்திய கருவியை பற்றியும் என்ன படிக்கிறார்கள் என்பது பற்றியும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அந்த கைலாய வாத்திய கருவியை வாசித்து பக்தர்களின் கவனத்தை ஈர்த்து ஆதரவு திரட்டினார். உடன் தவெக நிரர்வாகிகள் உடனிருந்தனர்.1
- தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட கோவிலூரில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான புனித சவேரியார் தேவாலயத்தில் இன்று இயேசுவின் உயிர்ப்பு தினமான ஈஸ்டர் திருவிழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றதை தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி அளவில் பங்கு தந்தை ஆரோக்கியசாமி மற்றும் குருக்கள் தலைமையில் சிறப்பு கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது இதில் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்து ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.1