logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சேலம் மாவட்டத்தில் புதிய ஆட்சியாளராக அருண் தம்பராஜ் இன்று பதவி ஏற்பு! சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியாளராக அருண் தம்புராஜ் ஐஏஎஸ் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். முன்னதாக சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த டாக்டர் பிருந்தா தேவி தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய மாவட்ட ஆட்சியாளராக அருண் தம்புராஜை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்ததை தொடர்ந்து, இன்று சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார். புதிய ஆட்சியருக்கு மாவட்ட அரசு உயர் அதிகாரிகள், ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், செய்தியாளர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

1 day ago
user_Rajendran
Rajendran
salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
1 day ago

சேலம் மாவட்டத்தில் புதிய ஆட்சியாளராக அருண் தம்பராஜ் இன்று பதவி ஏற்பு! சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியாளராக அருண் தம்புராஜ் ஐஏஎஸ் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். முன்னதாக சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த டாக்டர் பிருந்தா தேவி தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய மாவட்ட ஆட்சியாளராக அருண் தம்புராஜை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்ததை தொடர்ந்து, இன்று சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார். புதிய ஆட்சியருக்கு மாவட்ட அரசு உயர் அதிகாரிகள், ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், செய்தியாளர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

More news from Karur and nearby areas
  • கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழ தாளியாம்பட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு குளித்தலை கடம்ந்துறை ஆற்றில் இருந்து தீர்த்த குடம் பால்குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக தாளியாம்பட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் வந்தடைந்தனர் பின்பு கொண்டுவரப்பட்ட தீர்த்தங்களை தங்களது கைகளாலே அம்மனுக்கு ஊற்றி அபிஷேகம் செய்து வழிபட்டனர்
    1
    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழ தாளியாம்பட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு குளித்தலை கடம்ந்துறை ஆற்றில் இருந்து தீர்த்த குடம் பால்குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக தாளியாம்பட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் வந்தடைந்தனர் பின்பு கொண்டுவரப்பட்ட தீர்த்தங்களை தங்களது கைகளாலே அம்மனுக்கு ஊற்றி அபிஷேகம் செய்து வழிபட்டனர்
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    21 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் என்டிஏ கூட்டணியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர். விஜயகுமார் இன்று மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசித்ரகலாவிடம் வேட்புமனுவை அளித்தார். அதனைத் தொடர்ந்து மணப்பாறை நகரின் முக்கிய வீதிகளில் பிரச்சாரமும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்ட செயலாளர் ரத்தினவேல், பாஜக மாவட்ட செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகர், சின்னசாமி, ராமச்சந்திரன், வழக்கறிஞர் முருகன் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் என்டிஏ கூட்டணியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர். விஜயகுமார் இன்று மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசித்ரகலாவிடம் வேட்புமனுவை அளித்தார். அதனைத் தொடர்ந்து மணப்பாறை நகரின் முக்கிய வீதிகளில் பிரச்சாரமும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்ட செயலாளர் ரத்தினவேல், பாஜக மாவட்ட செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகர், சின்னசாமி, ராமச்சந்திரன், வழக்கறிஞர் முருகன் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • Post by Rajalakshmi sivasangaran
    2
    Post by Rajalakshmi sivasangaran
    user_Rajalakshmi sivasangaran
    Rajalakshmi sivasangaran
    Charity Mettupalayam, Coimbatore•
    1 hr ago
  • தஞ்சாவூர்  மாவட்டம், பாபநாசம் தாலுக்கா,  சக்கராப்பள்ளி தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் ஆலய சப்தஸ்தான பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு வாண வேடிக்கையுடன் கோலாகலமாக நடைபெற்றது. கொடி ஏற்றத்துடன் தொடங்கிய சப்தஸ்தான பெருவிழா தொடர்ந்து நாள்தோறும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் உற்சவர்கள் சுவாமி அம்மன் எழுந்தருளி  வழுத்தூர், சரபோஜிராஜபுரம், அரியமங்கை, நல்லிச்சேரி, சூலமங்கலம், பசுபதிகோவில், இழுப்பக்கோரை ஆகிய ஏழு ஊர்களுக்கு சென்று பக்தர்களுக்கு காட்சி தந்து, கைலாய வாந்தியங்கள் முழங்க, சக்கராப்பள்ளி கோயிலுக்கு புறப்பட்ட பல்லக்கு அய்யம்பேட்டை வந்தடைந்தது.   அய்யம்பேட்டையில் அழகு நாச்சியம்மன் கோவில் முன்பு விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு நடைப்பெற்றது. கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி காட்சி தந்த சக்கர வாகேஸ்வரருக்கு கிருஷ்ணன் பொம்மை பூ போட்டது.  வாண வேடிக்கைகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வினை 18-கிராமங்களை சேர்ந்த சுமார் 20-ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மேற்பார்வையில் ஏடிஎஸ்பி குமார் தலைமையில், 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    1
    தஞ்சாவூர்  மாவட்டம், பாபநாசம் தாலுக்கா,  சக்கராப்பள்ளி தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் ஆலய சப்தஸ்தான பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு வாண வேடிக்கையுடன் கோலாகலமாக நடைபெற்றது.
கொடி ஏற்றத்துடன் தொடங்கிய சப்தஸ்தான பெருவிழா தொடர்ந்து நாள்தோறும்
சுவாமி வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் உற்சவர்கள் சுவாமி அம்மன் எழுந்தருளி  வழுத்தூர், சரபோஜிராஜபுரம், அரியமங்கை, நல்லிச்சேரி, சூலமங்கலம், பசுபதிகோவில், இழுப்பக்கோரை ஆகிய ஏழு ஊர்களுக்கு சென்று பக்தர்களுக்கு காட்சி தந்து, கைலாய வாந்தியங்கள் முழங்க, சக்கராப்பள்ளி கோயிலுக்கு புறப்பட்ட பல்லக்கு அய்யம்பேட்டை வந்தடைந்தது.  
அய்யம்பேட்டையில் அழகு நாச்சியம்மன் கோவில் முன்பு விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு நடைப்பெற்றது. கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி காட்சி தந்த சக்கர வாகேஸ்வரருக்கு கிருஷ்ணன் பொம்மை பூ போட்டது. 
வாண வேடிக்கைகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வினை 18-கிராமங்களை சேர்ந்த சுமார் 20-ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மேற்பார்வையில் ஏடிஎஸ்பி குமார் தலைமையில், 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    பத்திரிகையாளர் பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • திண்டுக்கல் திமுக வேட்பாளர் ஐபி செந்தில் குமார் வேட்புமனு தாக்கல் செய்து வெளியே வந்தவுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
    1
    திண்டுக்கல் திமுக வேட்பாளர் ஐபி செந்தில் குமார் வேட்புமனு தாக்கல் செய்து வெளியே வந்தவுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    23 hrs ago
  • திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் விஸ்வநாதன், பிள்ளையார் நத்தம், பித்தளைப்பட்டி, வக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, ஆரியநல்லூர், பண்ணப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளிலும் ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் போக்குவரத்துநகர், மற்றும் பஞ்சம்பட்டி ஊராட்சி பகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். உடன் மாவட்ட , ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    1
    திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் விஸ்வநாதன், பிள்ளையார் நத்தம், 
பித்தளைப்பட்டி, 
வக்கம்பட்டி,
முன்னிலைக்கோட்டை,
ஆரியநல்லூர்,
பண்ணப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளிலும்
ஆலமரத்துப்பட்டி  ஊராட்சியில் 
போக்குவரத்துநகர்,
மற்றும் பஞ்சம்பட்டி  ஊராட்சி பகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். உடன்
மாவட்ட , ஒன்றிய,  கிளை பொறுப்பாளர்கள்  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    4 hrs ago
  • தருமபுரி சட்டமன்ற தேசியஜனநாயக கூட்டணி பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி வேட்பு மனு தாக்கல் தர்மபுரி சட்டமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளராக பாமகவின் பசுமை தாயக மாநில தலைவர் செளமியா அன்புமணி அறிவிக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் வரும் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 30ஆம் தேதி முதல் நடந்து வருகிறது, வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி தருமபுரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் காயத்திரியிடம் தனது வேப்புமனு தாக்கல் செய்து உறுதி மொழி எடுத்துக் கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழக முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்று கழக பொதுசெயலாளர் எடப்பாடியர் தலைமையில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி நல்லாட்சி அமையும் என தெரிவித்தார். வேட்பு மனு தாக்கலின் போது பாமக எம் எல் ஏ எஸ்.பி. வெங்கடேஷ்வரன், அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி, அமமுக மாநில நிர்வாகி பாலு பாஜக மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
    1
    தருமபுரி சட்டமன்ற தேசியஜனநாயக கூட்டணி பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி வேட்பு மனு தாக்கல்
தர்மபுரி சட்டமன்ற  தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின்   வேட்பாளராக பாமகவின்  பசுமை தாயக மாநில தலைவர் செளமியா அன்புமணி அறிவிக்கப்பட்டார்.
தமிழகம் முழுவதும் வரும் 23ம்  தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 30ஆம் தேதி முதல் நடந்து வருகிறது,
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று பாமக வேட்பாளர்  செளமியா அன்புமணி 
தருமபுரி கோட்டாட்சியர்  அலுவலகத்தில்    தேர்தல் நடத்தும் அலுவலர் காயத்திரியிடம்  தனது வேப்புமனு தாக்கல் செய்து உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழக முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்று கழக பொதுசெயலாளர் எடப்பாடியர் தலைமையில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி நல்லாட்சி   அமையும் என தெரிவித்தார்.
வேட்பு மனு தாக்கலின் போது பாமக எம் எல் ஏ எஸ்.பி. வெங்கடேஷ்வரன்,  அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி, அமமுக மாநில நிர்வாகி  பாலு  பாஜக மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • நமது தேசிய கூட்டணியின் வால்பாறை சட்டமன்ற வெற்றி வேட்பாளர் D லக்ஷ்மண சிங் அவர்களுடன் சரளபதி, தம்பம்பதி, சர்க்கார்பதி, காளியாபுரம் சோமநாதபுரம் பிரிவு, எட்டிதுரை, KPM காலனி மற்றும் நரிக்கல்பதி பகுதிகளில் பிரச்சாரம் நடத்தப்பட்டது!#BJP#ADMK#
    1
    நமது தேசிய கூட்டணியின் வால்பாறை சட்டமன்ற வெற்றி வேட்பாளர் D லக்ஷ்மண சிங் அவர்களுடன் சரளபதி, தம்பம்பதி, சர்க்கார்பதி, காளியாபுரம் சோமநாதபுரம் பிரிவு, எட்டிதுரை, KPM காலனி மற்றும் நரிக்கல்பதி பகுதிகளில் பிரச்சாரம் நடத்தப்பட்டது!#BJP#ADMK#
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    7 hrs ago
  • மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் (193) புதிய தமிழகம் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் இரும்பொறை சேதுராமன் நேற்று (6.4.26) வேட்புமனு தாக்கல் செய்தார் அவருடன் மேற்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார் மற்றும் கிழக்கு தொகுதி வேட்பாளர் பாரதிராஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணன் சுதாகர் மேற்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர் இரும்பொறை சேதுராமன் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரட்டுபட்டி என்ற ஊரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
    1
    மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் (193) புதிய தமிழகம் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் இரும்பொறை சேதுராமன் நேற்று  (6.4.26) வேட்புமனு தாக்கல் செய்தார் அவருடன் மேற்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார் மற்றும் கிழக்கு தொகுதி வேட்பாளர் பாரதிராஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணன் சுதாகர் மேற்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர் இரும்பொறை சேதுராமன் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரட்டுபட்டி என்ற ஊரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
    user_தங்க சுரேஷ்
    தங்க சுரேஷ்
    பத்திரிகையாளர் வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.