Shuru
Apke Nagar Ki App…
காஞ்சிபுரம் : அம்பேத்கர் நற்பணி சங்கம் சார்பில் பாதுகாப்பு கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர் ஊராட்சியில் டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் நற்பணி சங்கத்தின் மூலம் ஏனாத்தூர் கிராம பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டனர். மேலும், கிராமத்தின் பல்வேறு பிரச்சினைகளின் தீர்வுகளையும், அதற்கான வழி நெறிமுறைகளையும் கருத்துக்களாக அனைவரும் வழங்கினர்.
Naga Rajan
காஞ்சிபுரம் : அம்பேத்கர் நற்பணி சங்கம் சார்பில் பாதுகாப்பு கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர் ஊராட்சியில் டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் நற்பணி சங்கத்தின் மூலம் ஏனாத்தூர் கிராம பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டனர். மேலும், கிராமத்தின் பல்வேறு பிரச்சினைகளின் தீர்வுகளையும், அதற்கான வழி நெறிமுறைகளையும் கருத்துக்களாக அனைவரும் வழங்கினர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க பெண் மருத்துவர்கள் பிரிவின் சார்பாக சங்கரா பன்னோக்கு மருத்துவமனையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சங்கரா அறக்கட்டளை அறங்காவலர் விஸ்வநாத ஐயர் வரவேற்புரை நிகழ்த்தினார். காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் கா.சு. தன்யகுமார் தலைமை வகித்தார். மதிப்புறு செயலர் டாக்டர் வெ. முத்துக்குமரன், பொருளாளர் டாக்டர் ஆ.ஞானவேல் முன்னிலை முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் டாக்டர் எம். நிஷாப்ரியா, இணை செயலர் டாக்டர் வி. முத்துலஷ்மி, பெண் மருத்துவர்கள் பிரிவு தலைவர் டாக்டர் ஏ. சசிகலா, செயலர் டாக்டர் கோ. காஞ்சனா, முன்னாள் தலைவர்கள் டாக்டர் சு.மனோகரன், டாக்டர் தி. விக்டோரியா, மூத்த மருத்துவர் பேராசிரியர் டாக்டர் ரெ. ஹரிபாபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பொங்கலிட்டு சூரிய பகவானை வழிபட்ட பின்னர் உறியடித்தல், ரங்கோலி கோலப் போட்டி முதலான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் டாக்டர் ஜி. லஷ்மி விஜயசங்கர், டாக்டர் க.புஷ்பம், டாக்டர் ஜெ.இன்பவல்லி, மூத்த மருத்துவர்கள் டாக்டர் ச. கர்ணன் ஸ்ரீனிவாஸ், டாக்டர் வை. சிந்துஜா , சங்கரா செவிலியர் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமை செயல் அலுவலர் விஜயலெச்சுமி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் நந்தகுமார் தலைமையிலான குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- திருவண்ணாமலை மாவட்டம்: ஜமுனாமரத்தூர் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் குளிர் காலமாகும். ஆண்டில் சில மாதங்களில் பகல் அதிகமாகவும் இரவு நேரம் குறைவாகவும் இருக்கும். சில மாதங்களில் பகல் நேரம் குறைவாகவும் இரவு நேரம் அதிகமாகவும் இருக்கும். வழக்கத்திற்கு மாறாக 2025 இந்த ஆண்டு நவம்பர் குளிர்காலம் தொடங்கி கடந்த இரண்டு நாட்களாக கடும் குளிர் வாட்டிவந்த நிலையில் 10/01/2026 ஜனவரி மாதம் சனிக்கிழமை தொடங்கிய மழை, கடந்த மூன்று தினங்களாக இரவும் பகலும் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருவதால். ஜவ்வாது மலை சுற்றியுள்ள மலை கிராம மக்கள் கடும் குளிரிலும் மழையை பாராமல். பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வாங்கி சென்றனர்.1
- ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் பருவமழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. நேற்று 700 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜன.12) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாக, மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.1
- தர்மபுரி அருகே மதிகோன் பாளையம் ஏரியல் மருந்து கடை விற்பனையாளர் சடலமாக மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கிழக்கு மற்றும் மேற்கு நகர திமுக சார்பில் நகர அளவிலான திராவிட பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் நேற்றும் இன்றும்நடைபெற்றது. வாலிபால் மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் கபடி போட்டிகளில் பத்துக்கும் மேற்பட்ட அணிகளும் வாலிபால் போட்டியில் 15க்கும் மேற்பட்ட அணிகளும் பங்கேற்று விளையாடினார்கள் இறுதி வாலிபால் போட்டியை திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சேலம் கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சேலம் ஏ வி எஸ் கல்லூரியின் முதல்வர் சீனிவாசன்திருச்செங்கோடு மேற்கு நகர திமுக பொறுப்பாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் கிழக்கு நகர திமுக பொறுப்பாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இந்தப் போட்டிகளில்நகர அளவிலான விளையாட்டு வீரர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.கபடி பிரிவில் முதலிடம் பிடித்த எஸ்.பி. என் A அணிக்கு 5 ஆயிரம் ரொக்கப் பரிசு கோப்பை, 2ம் இடம் பிடித்த எஸ்.பி. என் B அணிக்கு 4ஆயிரம் மற்றும் கோப்பை 3ம் இடம் பிடித்த அன்னைத் தமிழ் அணிக்கு 3 ஆயிரம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப் பட்டது. இதே போல் வாலிபால் பிரிவில் முதல் பரிசு பெற்ற மாணிக் பிரண்ட்ஸ் அணிக்கு5000 ரொக்கப் பரிசு மற்றும் கோப்பை இரண்டாம் பரிசு பெற்ற சந்துரு பிரண்ட்ஸ் அணிக்கு 3000 ரொக்க பரிசு மற்றும் கோப்பை மூன்றாம் இடம் பிடித்த பி.ஆர்.சி அணிக்கு ரூ 3000 ரொக்க பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது1
- *சென்னையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்த பா.ஜ.க மாநில இளைஞரணி தலைவர் சூர்யா தாக்குதல் செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க இளைஞரணி சார்பில் திமுகவினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது* சென்னையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்த, பா.ஜ.க, மாநில இளைஞரணி தலைவர் சூர்யா உள்ளிட்ட, பா.ஜ.க,வினர் மீது தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தாக்குதலில் காயமடைந்த சூர்யா மற்றும் பா.ஜ.க வினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இச்சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க இளைஞரணி சார்பில் தமிழக பாஜக மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் டி.ஆர்.தவமணி தலைமையில் தி.மு.க.,வினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய இளைஞரணி தலைவர் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1