Shuru
Apke Nagar Ki App…
பட்டுக்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் LC-94 ரயில்வே கடவை பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.இதில் பட்டுக்கோட்டை முன்னாள் நகர்மன்ற தலைவர் SR ஜவஹர் பாபு sk உதயகுமார் sk செந்தில்குமார் மற்றும் AK குமார் சரவணன் அப்பகுதி பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் LC-94 அமைப்பு, வணிகர்கள், ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் நாடியம்மன் வழிபாட்டு குழுவினர் கலந்து கொண்டனர். பொதுமக்களின் நீண்டநாள் தேவையான சுரங்கப்பாதை திட்டத்தை மத்திய அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும் என தலைவர்கள் வலியுறுத்தினர்.
Saleem cctv technician
பட்டுக்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் LC-94 ரயில்வே கடவை பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.இதில் பட்டுக்கோட்டை முன்னாள் நகர்மன்ற தலைவர் SR ஜவஹர் பாபு sk உதயகுமார் sk செந்தில்குமார் மற்றும் AK குமார் சரவணன் அப்பகுதி பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் LC-94 அமைப்பு, வணிகர்கள், ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் நாடியம்மன் வழிபாட்டு குழுவினர் கலந்து கொண்டனர். பொதுமக்களின் நீண்டநாள் தேவையான சுரங்கப்பாதை திட்டத்தை மத்திய அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும் என தலைவர்கள் வலியுறுத்தினர்.
More news from Thanjavur and nearby areas
- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகர இஸ்லாமிய முன்னேற்ற நல சங்கம் (முஹல்லா கமிட்டி) சார்பாக 4 ஆம் ஆண்டு பித்ரா எனும் பெருநாள் மளிகை பொருட்கள் இஸ்லாமிய மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி பட்டுக்கோட்டை த்ரீ ஸ்டார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் நூறுக்கு மேற்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாட்டினை நகர இஸ்லாமிய நலச்சங்கம் (மொஹல்லா கமிட்டி) நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்து இருந்தனர் இதற்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளனர்1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை வாசலில் வீற்றிருக்கும் ஸ்ரீ கோட்டை காலபைரவருக்கு இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பூசணிக்காயில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். தொடர்ந்து, பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.1
- நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்த ஆண்டில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடை பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 170 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று மாலையிலும் இரவில் மழை பெய்ததால் வெண்மணி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகள் இயக்கப்படாததால் கொள்முதல் நிலையத்தில் தேங்கி இருப்பதால் விவசாயிகளின் நெல்லை பிடிப்பதற்கு தாமதம் ஆகுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். நெல் மூட்டைகளை ஒரு வாரத்திற்கு மேல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் நெல் கொள்முதல் செய்யப்படாததால் பெய்யும் மழையால் நனைந்து ஈரப்பதம் கூடும் என்பதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என கவலை தெரிவித்துள்ள அவர்கள் உடனடியாக கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை எடுத்துச் செல்வதற்கு கூடுதலாக லாரிகளை இயக்க வேண்டும். மழையில் நனைந்து வரும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் ஈரப்பத தளர்வு செய்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் வேதனை கோரிக்கை வைத்துள்ளனர்.1
- திருச்சியில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், "இந்தியாவில் கேஸ் தட்டுப்பாடு என்பது இல்லை. ஊடகங்கள் கேஸ் தட்டுப்பாடு என்கிற செய்தியை பரப்புகிறது. எரிபொருள் இருப்பு குறித்து விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும். தவெகவை NDA கூட்டணியில் இணைப்பது குறித்து, தமிழ்நாட்டில் NDA கூட்டணிக்கு தலைமை வகிக்கும் எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுக்க வேண்டும்" என்றார். இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள தொப்பம்பட்டியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வரும் முத்தப்புடையான்பட்டியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் அப்பள்ளியில் பயின்று வரும் மாணவிகளில் சிலருக்கு பாலியல் தொந்தரவு செய்தாகவும், அது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்த வேளாங்கண்ணி என்பவரிடம் பெற்றோர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (06.03.26) புகார் தெரிவித்துள்ளனர். தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி இது தொடர்பாக நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் சிறுமிகளின் பெற்றோர்கள் 09.03.2026 பள்ளி முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் தெரிந்ததன் பேரில் பள்ளிக்கு சென்ற மணப்பாறை உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் காவியா மற்றும் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் குழந்தைகள் நல துறையைச் சேர்ந்த அலுவலர்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். ஆசிரியர் பாஸ்கர் பள்ளி சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதும் அந்த நிகழ்வை பள்ளியின் தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி யாரிடமும் சொல்லாமல் மறைத்த குற்றத்திற்காகவும் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கைது சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- Post by Lingaraju mc6
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் அதிகாரிகள் இன்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வ சுரபி தலைமையில், எஸ்.பி. சிவபிரசாத், ஆர்.டி.ஓ ஜெபி கிரேசியா, தாசில்தார் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் உள்ள பதிவுகளை பரிசோதித்தனர்1
- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் சாட்டியக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கீழவீடங்கலூர் பகுதிக்கு கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறி கிராம மக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாட்டியகுடி ஊராட்சிக்கு உட்பட்ட கீழவிடங்களூர் பகுதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அருகிலுள்ள தரைமட்ட கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நீர் ஏற்றம் செய்து பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் கீழவீடங்கலூர் பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் முறையாக வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் கீழ்வேளூர் – திருக்குவளை – கச்சனம் இணைப்பு பிரதான சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் சாலை மறியல் காரணமாக அந்த வழியாக சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வலிவலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முரளி தலையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநியோகத்தை விரைவில் சீரமைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்தனர். இதனால் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.1