Shuru
Apke Nagar Ki App…
சாக்கோட்டை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அன்னதானம் சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. சாக்கோட்டை முன்னாள் ஏ டி எம் கே முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் v. சுப்பிரமணியன் தலைமையில் நடைப்பெற்றது. சாக்கோட்டை சேர்மன் செந்தில்நாதன், ஐயப்பன், கலைச்செல்வம் ,சிவசக்தி பாண்டியன், சங்கு பாண்டி,மற்றும் எல்லா அரசியல் கட்சி தலைவர் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Nirmala Devi R
சாக்கோட்டை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அன்னதானம் சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. சாக்கோட்டை முன்னாள் ஏ டி எம் கே முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் v. சுப்பிரமணியன் தலைமையில் நடைப்பெற்றது. சாக்கோட்டை சேர்மன் செந்தில்நாதன், ஐயப்பன், கலைச்செல்வம் ,சிவசக்தி பாண்டியன், சங்கு பாண்டி,மற்றும் எல்லா அரசியல் கட்சி தலைவர் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி வார சந்தை விலை நிலவரம் வெங்காயம் 2 கி ரூ.140 தக்காளி 1 .500 ரூ.50 உருளைக்கிழங்கு 1.500 ரூ. 50 பீட்ரூட் 1 தட்டு ரூ.20 அவரைக்காய் 1 தட்டு ரூ. 20 முட்டைகோஸ் ரூ. 30-40 இஞ்சி 100 கி ரூ.30 கொத்தமல்லி ரூ.10 வெண்டைக்காய்1/2 கி ரூ.50 முள்ளங்கி 1 தட்டு ரூ 20 கேரட் 1/2 கி ரூ 50 தேங்காய் 1 காய் 20 -50 ரூ கொடை மிளகாய் 3 காய் 20 ரூ முருங்கை காய் 3 காய் 20 ரூ ஆப்பிள் 1 கி 200 ரூ சாத்துக்குடி 1 கி 80 ரூ திராட்சை பழம் 1/2 கி 40 ரூ விநாயகர் சிலை 50 -200 ரூ அகல் விளக்கு 10 விளக்கு 10 ரூ பொரி 20 ரூ கதம்பம் 1 மோலம் 25 ரூ என்ற விலைக்கு விற்கப்பட்டது.1
- பொன்னமராவதியில் திமுக சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் பொன்னமராவதி திமுக நகரச் செயலாளர் அழகப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டன. அதில் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- புதுக்கோட்டை பெரியா நகரை சேர்ந்த சாய் திவ்யாஉலக சாதனை படைத்த சிறுமி புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகரை சேர்ந்த கண்ணன் ராதா தம்பதிகளில் 6 வயது குழந்தை சாய் திவ்யா ஐஸ் கட்டியில் பரதநாட்டியம் ஆடும் உலக சாதனை திகழ்ந்தார்4
- அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதர்கள் மண்டி கிடப்பதால் மாணவிகள் அச்சம்: திருவாடானை பாரதிநகரில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நூற்றுக்கணக்கான மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.இப்பள்ளி வளாகத்திற்குள் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் தேவையற்ற பொருட்கள் அடர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. இதன் காரணமாக, பள்ளி வளாகத்தில் அவ்வப்போது விஷப் பூச்சிகள் மற்றும் ஊர்வன நடமாட்டம் தென்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், தினமும் பள்ளிக்கு வரும் மாணவிகள் அச்சத்துடனேயே கல்வி பயிலும் சூழல் நிலவுகிறது.எனவே, மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு பள்ளி வளாகத்தில் உள்ள புதர்களை அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- என் ஊர் திருவிழா நாளைக்கு கும்பாபிஷேகம் விழா எல்லோரும் வாங்க1
- மாணவர்களுடன் காலை உணவு அருந்திய விருதுநகர் மாவட்ட ஆட்சியர். விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா ஹரி இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.09.2026) திருவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம், சுகாதாரம் மற்றும் உணவு வழங்கப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை அருந்தி, அவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களின் கல்வி, பள்ளியில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.1
- குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கும் திண்டுக்கல் மாவட்ட வனவிலங்குகள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தண்ணீருக்காக சாலையில் திரியும் அரிய வகை சிங்கவால் குரங்குகள் சாலையில் ஓடிய மழைநீரை குரங்குகள் அருந்திய நிலையில், வனவிலங்குகளுக்கு குடிநீர் வசதி அமைத்து தர விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை1
- வைத்தியலிங்க புரம் வெற்றி விநாயகர் பாலமுருகன் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு பூசை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி வைத்தியலிங்க புரம் வெற்றி விநாயகர் பாலமுருகன் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு இன்று (செப் 14) வெற்றி விநாயகருக்கு சிறப்பு பூசை நடைபெற்றது. இன்று காலை மஞ்சல்,பால், தயிர்,திரவிய பொடி,பன்னீர்,அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். பின் மோதகம் பிரசாதம் வழங்கப்பட்டது.1