Shuru
Apke Nagar Ki App…
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரங்கள் தேனி மாவட்ட அணைகளின் (ஜன.09) நீர்மட்டம்: வைகை அணை: 50.33 (71) அடி, வரத்து: 749 க.அடி, திறப்பு: 69 க.அடி, பெரியாறு அணை: 130.90 (142) அடி, வரத்து: 72 க.அடி, திறப்பு: 1000 க.அடி, மஞ்சளார் அணை: 50.90 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 126.11 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 32.90 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 14.47 க.அடி.
Theni Godwin
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரங்கள் தேனி மாவட்ட அணைகளின் (ஜன.09) நீர்மட்டம்: வைகை அணை: 50.33 (71) அடி, வரத்து: 749 க.அடி, திறப்பு: 69 க.அடி, பெரியாறு அணை: 130.90 (142) அடி, வரத்து: 72 க.அடி, திறப்பு: 1000 க.அடி, மஞ்சளார் அணை: 50.90 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 126.11 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 32.90 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 14.47 க.அடி.
More news from தமிழ்நாடு and nearby areas
- தேனியில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து போட்டிகளை உற்சாகமாக கண்டு ரசிக்கும் இளைஞர்கள். தேனியில் உள்ள தனியார் விளையாட்டு கழகம் சார்பில் முதலாமாண்டு மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் இன்றும் நாளை என 2 நாட்கள் நடத்தப்படுகின்றன. தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள காமராஜர் பூங்கா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் மதுரை, கோயமுத்தூர், திருச்சி, சேலம், சென்னை என மாநில அளவிலான சுமார் 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. நாக் அவுட் முறையில் பகல் - இரவு ஆட்டமாக மின்னொளி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியை தேனி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள் என விளையாட்டு வீரர்கள் உற்சாகமாக கண்டு ரசிக்கின்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் முதல் 4 அணிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளன.1
- *ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி* *ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் ஐந்தாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்* தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஐந்தாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மாவட்ட அலுவலகத்தில் இருந்து பணியாளர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் காலை உணவு திட்டத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கு சத்துணவு சட்ட பணியாளர்களுக்கு இணையான மதிப்பூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதாரப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஐந்தாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்1
- திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கப்ட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் மார்கழி மாத 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் அமிர்தா வித்யாலயம் பள்ளி குழந்தைகள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம்பட்டி அமைந்துள்ள புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் ஆலயத்தில் இன்று மார்கழி மாதத்தை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திண்டுக்கல் எஸ். காமாட்சிபுரம் பிரிவு பகுதியில் அமைந்துள்ள அமிர்தா வித்யாலயம் பள்ளியில் இருந்து 200 பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்த பூஜையானது குழந்தைகளின் கல்வி, மங்களம் பெருகவும், ஆரோக்கியம், செல்வம் பெருகும் . தீமைகள் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும். தீபத்தை ஏற்றி முதலில் கணபதி பூஜை பின்னர் குலதெய்வம், முருகப்பெருமானை மனதால் நினைத்து வழிபட்டார்கள். பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவருக்கும் பாதாள செம்பு முருகன் திருக்கோவில் சார்பாக இந்த வருடத்திற்கான காலண்டர் மற்றும் முருகனின் புகைப்படம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.1
- திண்டுக்கல் அருகே பழிக்கு பழியாக கணவன் - மனைவியை இரு வெவ்வேறு இடங்களில் வெட்டி படுகொலை - 9 பேர் கைது திண்டுக்கல் யாகப்பன்பட்டியை சேர்ந்த சேசுராஜ்(41) இவர் நத்தம் ரோடு R.M.T.C.காலனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தனர். அதே நேரத்தில் சேசுராஜின் 2-வது மனைவி தீபிகா(35) யாகப்பன்பட்டியில் வீட்டின் வாசலில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.பிரதீப் பிரதீப் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வேடபட்டியை சேர்ந்த அந்தோணி ஆரோக்கியசாமி(35), தர்மராஜ்(52), சேவியர்ஆல்பர்ட்(22), மணிகண்டன்(19) யாகப்பன்பட்டியை சேர்ந்த அருள்ராஜ்(60), ஜான்பீட்டர்(42), மைக்கேல்ராஜ்(31), மருதாசிபுரத்தை சேர்ந்த ஞானராஜ்(54), முத்தழகுபட்டியை சேர்ந்த ராபின்(23) ஆகிய 9 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.3
- தமிழ்நாட்டில் சில இடங்களில் 10/01/26 மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மைய அறிவிப்பு வெளியிடபட்டது போல திருச்செங்கோடு பகுதியில் லேசான மழை தூறல்கள் பெய்து வருகிறது1
- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் ஊராட்சிக்கு உட்பட்ட சூரியநல்லூர் அருகே திமுக விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக குண்டடம் ஒன்றியம் திருப்பூர் கிழக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது அதன் பின்னர் பெண்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது இதில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்1
- தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு நான் குற்றாலம் வருவாய் கிராமம் காசிமேஜர்புரத்தில் வசித்து வருகின்றேன்...எனது வீட்டின் தென் பக்கத்தில் வசிக்க கூடிய திரு.சு.வள்ளிநாயகம் என்பார்கள் அடிக்கடி இடையூறு செய்யும் வண்ணமாக செயல்படுகிறார்.கடந்த 10 வருடமாக .99653 70820. அவதூறாக பேசுவது.காசிமேஜர்புரத்தில் முக்கிய சமுதாய நாட்டாமை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது என பல வழிகளில் எங்கள் குடும்பத்தினை இடையூறு செய்து வருகிறார் .இன்று மதியம் என்னே அவமாரியதை செய்யும் போது எனது விட்டின் CCTV வில் பதிவில் இருக்கிறது..இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையத்தில் இதன் மூலம் எனது மனுவினை பதிவு செய்கிறேன்..1
- *இருதரப்பு ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் சாதி ரீதியாக ஒருத்தரப்பு மீது மட்டும் நடவடிக்கை எடுத்த போலீசார்* *ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆதரவாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரி டம் புகார் செய்த புதிய தமிழகம் கட்சியினர்* தேனி புதிய பேருந்து நிலையம் பகுதியில் பென்னிகுயிக் ஆட்டோ சங்கம் என்ற பெயரில் ஆட்டோ நிறுத்தம் உள்ளது இந்த ஆட்டோ நிறுத்தத்தில் மற்றொரு தரப்பினர் ஆட்டோக்களை நிறுத்துவதால் இருதரப்பிற்கிடையே பிரச்சனை நிலவி வந்தது இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்திற்கு நகராட்சி அனுமதி இல்லை எனக்கூறி பேரிக்காடுகளை அமைத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர் இதனை அடுத்து போலீசாரின் தடையை மீறி ஆட்டோ நிறுத்திய 9 நபர்களை தேனி போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆதரவாக புதிய தமிழக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேக பிரியாவை சந்தித்து தங்கள் ஆட்டோ நிறுத்ததை செயல் படுத்து அனுமதி அளிக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர் பேருந்து நிலையப் பகுதியில் இரு சமுதாயத்தைச் சேர்ந்த தரப்புக்கும் ஆட்டோ நிறுத்தம் உள்ள நிலையில் தங்கள் தரப்பை மட்டும் ஆட்டோ இயக்கக் கூடாது என போலீசார் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும் திமுகவினர் தூண்டுதலோடு சாதிய வன்மத்தோடு பல ஆண்டுகளாக ஆட்டோ இயக்கி வந்த தங்கள் ஆட்டோ நிறுத்தத்திற்கு அனுமதி கொடுக்காமல் தங்களது கொள்வாதாரத்தை பாதிப்புக்குள்ளாக்கி வருவதாக தெரிவித்துள்ளனர் தங்கள் ஆட்டோ நிறுத்தத்தை மீண்டும் செயல்படுத்த அனுமதி தர வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் புகார் மனு அளித்தனர்1