சுங்குவார்சத்திரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து – பரபரப்பு. _______ பெங்களூருவை சேர்ந்த ரமேஷ்பாபு ஸ்ரீலதா தம்பதியினர், பூந்தமல்லி பகுதியில் ரெட்மி என்ற காங்கிரீட் கம்பெனி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தங்களுக்குச் சொந்தமான காரில் பெங்களூரிலிருந்து பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்த போது, சுங்குவார்சத்திரம் அருகே காரின் இன்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறுவதை அவர்கள் கவனித்தனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட தம்பதியினர், காரை ஓரமாக நிறுத்தி, காரின் பின்புறம் வைத்திருந்த கைப்பை மற்றும் முக்கிய உடைமைகளை எடுத்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். அடுத்த சில நிமிடங்களில், இன்ஜின் பகுதியில் இருந்து வந்த லேசான புகை, திடீரென பெரும் தீயாக மாறி, காரின் முன்பகுதி முழுவதும் தீப்பிடித்து வேகமாக எரியத் தொடங்கியது. இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பெரும் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீச்சி தீயை முழுமையாக அணைத்தனர். இருந்தபோதிலும், கார் முழுவதுமாக தீக்கிரையாகி, கடுமையாக சேதமடைந்தது. இந்த விபத்தில் உயிர் சேதமோ காயமோ யாருக்கும் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- 10.02.2026 அன்று மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டமும், 19.02.2026 அன்று முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டமும் நடத்த போவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் (பெரா) மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கரலிங்கம் உயர் மட்ட குழுவில் அறிவிப்பு. ___________ காஞ்சிபுரம் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில உயர் மட்ட கூட்டமைப்பு கூட்டம் காஞ்சிபுரம் வட்டாச்சியர் வளாகத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலக முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு, தமிழ்நாடு கிராம உதவியாளர் மாநில சங்கம் ஆகியவற்றின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில உயர் மட்ட கூட்டமைப்பில் விவாதிக்கப்பட்டது. அதில் அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்து சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், வருவாய்த்துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அதீதமான பணி நெருக்கடி ஏற்படுத்தப்படுவது தொடர்பாகவும், குறிப்பாக களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்பந்தம் செய்வது தொடர்பாக ஏற்கனவே வருவாய்த்துறை அரசு செயலாளர் அவர்களிடம் விரிவாக முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், உடன் தீர்வு வழங்கிட வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிப்பளு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் & தனி ஊதியம் வழங்கிட வேண்டும், தமிழக அரசு துறைகளில் கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து, மீண்டும் 25% ஆக நிர்ணயம் செய்திட வேண்டும், வருவாய்த் துறையில் உள்ள அனைத்து நிலையிலான காலிப்பணிடங்களை நிரப்ப வேண்டும், கிராம நிருவாக அலுவலர்கள், கிராமங்களிலேயே தங்கி பணிபுரிய வேண்டும் என்பதை தளர்வு செய்து, வட்ட எல்லைக்குள் தங்கி பணிபுரியம் வகையில் தமிழ்நாடு அமைச்சுப்பணி விதிகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் கிராம நிருவாக அலுவலர்களின் கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக நிர்ணயம் செய்திட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிசாய்க்காததால், தமிழக அரசை வலியுறுத்தி, 10.02.2026 அன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டமும், 19.02.2026 அன்று முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டமும் நடத்த போவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் (பெரா) மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கரலிங்கம் உயர் மட்ட குழுவில் அறிவித்தார். பேட்டி. சங்கரலிங்கம். பெரா மாநில ஒருங்கிணைப்பாளர்2
- இந்தியாவின் 77 ஆவது குடியரசு தின விழாவையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தி காவலர்களின் அணிவகுப்பினை ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், சார் ஆட்சியர் ஆஷிக் அலி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.1
- Post by Vinayagam Vinayagam1
- கூத்தாடிகள் ஜாக்கிரதை #cinema #news #tn1
- குடியரசு தின விழாவில் கருப்பு கொடியை ஏந்தி கிராம சபாவை புறக்கணித்த பிஜேபி ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார். திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர் அங்கு வந்து அதிகாரிகளிடம் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் அப்பகுதியில் கடந்த ஐந்து வருடங்களாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றியும் கிராமம் வளர்ச்சி அடையாத நிர்வாக சீர்கேடு குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் நூறு மனுக்களுக்கு மேல் அளித்தும். எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு மனு அனுப்பப்படுகிறது அந்த மனு அங்கே கிடப்பில் போடப்படுவது வாடிக்கையாக உள்ளது. மீண்டும் மனுவின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை மேலும் அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க அழுத்தம் தரும் பட்சத்தில் வேறு ஒரு அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமித்து விசாரணைக்கு அனுப்புகின்றனர். இதுவே தொடர் கதையாகி வருகின்றது அந்த மனுவில் தெரிவித்தார்.1
- கிருஷ்ணகிரி அருகே உள்ள வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற குடியரசு தின விழா.1
- Post by Periyasamy1
- சுங்குவார்சத்திரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து – பரபரப்பு. _______ பெங்களூருவை சேர்ந்த ரமேஷ்பாபு ஸ்ரீலதா தம்பதியினர், பூந்தமல்லி பகுதியில் ரெட்மி என்ற காங்கிரீட் கம்பெனி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தங்களுக்குச் சொந்தமான காரில் பெங்களூரிலிருந்து பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்த போது, சுங்குவார்சத்திரம் அருகே காரின் இன்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறுவதை அவர்கள் கவனித்தனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட தம்பதியினர், காரை ஓரமாக நிறுத்தி, காரின் பின்புறம் வைத்திருந்த கைப்பை மற்றும் முக்கிய உடைமைகளை எடுத்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். அடுத்த சில நிமிடங்களில், இன்ஜின் பகுதியில் இருந்து வந்த லேசான புகை, திடீரென பெரும் தீயாக மாறி, காரின் முன்பகுதி முழுவதும் தீப்பிடித்து வேகமாக எரியத் தொடங்கியது. இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பெரும் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீச்சி தீயை முழுமையாக அணைத்தனர். இருந்தபோதிலும், கார் முழுவதுமாக தீக்கிரையாகி, கடுமையாக சேதமடைந்தது. இந்த விபத்தில் உயிர் சேதமோ காயமோ யாருக்கும் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.1