Shuru
Apke Nagar Ki App…
என்ன ஒரு அழகான காட்சி. ராமேஸ்வரத்தில் சூரிய உதய காட்சி.
Senthilkumarankumaran
என்ன ஒரு அழகான காட்சி. ராமேஸ்வரத்தில் சூரிய உதய காட்சி.
More news from Tamil Nadu and nearby areas
- இந்திய விண்வெளியின் புரட்சி நாயகன். யார் இவர் என்ன செய்தார் என்று பார்ப்போம்.1
- ஆனைமலை பெருமாள் சாமி மலை குறித்து மக்களிடையே தலைமுறை தலைமுறையாக சொல்லப்படும் சில முக்கிய உள்ளூர் புராணக் கதைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 🐘 1️⃣ ஆனை வடிவில் தோன்றிய மலை – “ஆனைமலை” பெயர்க் காரணம் பழமையான ஒரு நம்பிக்கைப்படி, ஒரு காலத்தில் அகந்தை கொண்ட ஒரு அசுரன் யானை (ஆனை) வடிவம் கொண்டு மக்களைத் துன்புறுத்தினான். அவனது அட்டகாசத்தை அடக்க திருமால் (பெருமாள்) இந்த மலைப்பகுதியில் தோன்றி, அவனை வதம் செய்தார். 👉 அந்த யானையின் உடல் மலையாக மாறியதால், “ஆனை + மலை = ஆனைமலை” என்ற பெயர் ஏற்பட்டதாக மக்கள் நம்புகின்றனர். 🌿 2️⃣ சித்தர்கள் தவம் செய்த புனித மலை இந்த மலைப்பகுதி, பண்டைய காலங்களில் சித்தர்கள் மற்றும் முனிவர்கள் தவம் செய்த இடம் என்று கூறப்படுகிறது. பெருமாள், தவத்தில் இருந்த சித்தர்களுக்கு நாராயண தரிசனம் அளித்ததாக ஒரு புராணம் உண்டு. அதனால் இந்த மலை மந்திர சக்தி நிறைந்த தலம் என நம்பப்படுகிறது. இன்று கூட, சிலர் “இரவில் மணி ஒலி, சங்க நாதம்” கேட்பதாகச் சொல்வார்கள். 🌄 3️⃣ நேரில் தோன்றிய பெருமாள் – பக்தர் காப்புக் கதை ஒரு காலத்தில், மலையடிவார கிராமத்தை ஒரு கடுமையான நோய் தாக்கியதாகவும், அப்போது மக்கள் பெருமாளை வேண்டி விரதம் இருந்து மலை ஏறி வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. 🙏 அந்த இரவில், பெருமாள் ஒரு வயதான அந்தணர் போல தோன்றி, “பயப்படாதீர்கள்” என்று அருளியதாக நம்பிக்கை. 👉 மறுநாளே நோய் விலகி, அதன் நினைவாக இந்த மலை பெருமாள் காவல் தெய்வமாக போற்றப்படுகிறார். 🪔 4️⃣ விளக்கு அணையாத அதிசயம் உள்ளூர் மக்களிடையே சொல்லப்படும் மற்றொரு கதை: ஒருகாலத்தில், மலைக்கோயிலில் ஏற்றிய நெய் விளக்கு பல நாட்கள் அணையாமல் எரிந்ததாம். அதனை பெருமாளின் நித்திய வாசம் என்பதற்கான அடையாளமாகக் கருதினர். இன்றும், ➡️ புரட்டாசி சனிக்கிழமைகளில் ➡️ வைகுண்ட ஏகாதசி நாளில் விளக்கு வழிபாடு மிக முக்கியமாக நடக்கிறது. 🌼 5️⃣ வேண்டுதல் நிறைவேற்றும் மலை இந்த மலையில், நேர்மையான மனதுடன் பாத யாத்திரையாக (நடந்து) விரதம் இருந்து வழிபட்டால் ✨ வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் என்று பக்தர்கள் உறுதியாக நம்புகிறார்கள். குறிப்பாக: குழந்தை பாக்கியம் நீண்டகால நோய் நீக்கம் வேலை / தொழில் முன்னேற்றம் இவைகளுக்காக அதிகம் வேண்டுகின்றனர்.1
- தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதிகளில் இரவு முதல் விடியவிடிய பெய்து வரும் தொடர்மழை காரணமாக அணைப் பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு. தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் உள்ளூர் பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு வரும் சூழல் உள்ளதால் தடுப்பணை பகுதிக்கு செல்ல காவல்துறை தடை. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ளது அணை பிள்ளையார் தடுப்பணை நீர்வீழ்ச்சி. போடிநாயக்கனூரில் உள்ள முக்கிய நீர்ப்பாசன கண்மாயிகள் குளங்களான பங்காரு சாமி குளம், செட்டிகுளம், சங்கரப்பன் கண்மாய், மீனாட்சி அம்மன் கண்வாய் போன்றவைகளின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக விளங்கும் இந்த தடுப்பணை நீர்வீழ்ச்சியின் உபரி நீர் கொட்டக்குடி ஆறு வழியாக வைகை அணைசெல்கிறது . தற்போது போடிநாயக்கனூரை சுற்றியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான குரங்கணி, பிச்சாங்கரை, ஊத்தாம்பாறை, போடி மெட்டு பகுதிகளில் நேற்று இரவு சுமார் 7 மணி முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணைப் பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக போடிநாயக்கனூர் சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக கொட்டகுடி ஆறு கொம்பு தூக்கி ஆறு புலியூத்து அருவி பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் போடிநாயக்கனூரை சுற்றியுள்ள கண்மாய் கள் குளங்களின் முக்கிய நீர் வரத்து பகுதியான அணைப் பிள்ளையார் தடுப்பணை நீர்வீழ்ச்சி பகுதியில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. தடுப்பணைகளைத் தாண்டி காட்டாற்று வெள்ளம் சீறி ப்பாய்ந்து செல்கிறது. இன்று அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காரணமாக சாரல் மழையிலும் தடுப்பணை பகுதிகளுக்கு ரீல்ஸ் எடுக்கவும் செல்பி எடுக்கவும் வருகைதரும் நிலையில் தடுப்பணைகளை தாண்டி சிறுசிறு மரக்கட்டைகள் கற்களுடன் மற்றும் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள்வெள்ள நீரில் இழுத்துவரப்படும் அபாயம் உள்ளதால் தடுப்பணை பகுதிக்குள் யாருக்கு இறங்கக்கூடாது என்று எச்சரிக்கை. விடுக்கப்பட்டுள்ளது. தற்போது, நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.1
- வேடசந்தூர்: மாரம்பாடி புனித பெரிய அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித பெரிய அந்தோனியார் ஆலயம் உள்ளது. 2026 ஆம் ஆண்டு பிறந்ததையொட்டி சிறப்பு திருப்பலி பூஜைகள் நடைபெற்றது. ஆலயத்தின் பங்கு தந்தை சுரேஷ்சகாயராஜ், துணைப் பங்கு தந்தை அமல்ராஜ் ஆகியோர் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு பூஜையில் மாரம்பாடி ஊர் மேனேஜர் மற்றும் நாட்டாமை, மணியக்காரர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.1
- திண்டுக்கல் ரயில் நிலையம் முன்பு பயணிகளை ஏற்ற வந்த அரசு பேருந்து பழுதாகி நின்றதால் *பொதுமக்கள் அரசு பேருந்தை தள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்1
- நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பேரூராட்சியில் இன்று ஜனவரி 1 புத்தாண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது பொதுமக்கள் புத்தாண்டு வரவேற்கும் பட்சத்தில் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர் மற்றும் வண்ண வான வெடிகள் வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர். கோயில்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டன அனைத்து இல்லங்களிலும் வண்ணக் கோலங்கள் இட்டு மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்1
- வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு பாலஜங்கமனஅள்ளி கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் நேற்று முன்தினம் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு தஞ்சாவூர் சென்று இருந்த நிலையில், நேற்று வீடு திரும்பி பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 10.5 பவுன் தங்க நகை 4 லட்சம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது இது குறித்து அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்1
- நேற்று செம்மொழி பூங்காவில் கூடய மக்கள்.1