Shuru
Apke Nagar Ki App…
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் இடம் ஆய்வு. கிருஷ்ணகிரி சுங்கசாவடி அருகில் உள்ள மைதானத்தில், 13.03.2026 அன்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுவதையொட்டி, விழா நடைபெறும் இடம் மற்றும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள் அவர்கள் இன்று (09.03.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) அபிநயா, வருவாய் துறை, காவல் துறை, மாநகராட்சி, நகராட்சி, தீயணைப்பு, மின்சாரத்துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செல்வம்
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் இடம் ஆய்வு. கிருஷ்ணகிரி சுங்கசாவடி அருகில் உள்ள மைதானத்தில், 13.03.2026 அன்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுவதையொட்டி, விழா நடைபெறும் இடம் மற்றும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள் அவர்கள் இன்று (09.03.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) அபிநயா, வருவாய் துறை, காவல் துறை, மாநகராட்சி, நகராட்சி, தீயணைப்பு, மின்சாரத்துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்ட அரங்கில் தேன்கனிகோட்டைவட்டம், குந்து மாரணப்பள்ளி கிராமத்தில் பட்டியலிமைக்கள் பல வருடங்களாக சொந்தமாக வீட்டுமனை வீடு இல்லாமல் இருக்கின்றர்க் வீட்டுமனை வழங்க கோரி அரசுக்குமனு அளித்தும் இதுவரை அரசு நேரில் விசாரிக்க கூட வர வில்லை அதனால் இன்று மாவட்ட ஆட்சியரிடம் வீட்டு மனையும்,கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.1
- *அரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையில் இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.* ஈரான் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டு நாடுகளின் ஏகாதிபத்திய தாக்குதலை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் இடதுசாரி அமைப்புகள் இன்று தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமெரிக்காவின் இந்த அநீதியான தாக்குதல் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், ஈரானின் மீறிய உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரி, அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூடிய 100-க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் சிசுபாலன் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிற அமைப்புகள் பங்கேற்றனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் வசிப்பவர் மோகன்தாஸ் இவரது மனைவி ரஞ்சிதா இவர்களது மகன் ரித்தீஷ் திருப்பத்தூர் நகராட்சிக்கு அருகாமையில் உள்ள அரசு நிதி உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவர் அதே பள்ளியில் உதவி மாணவத் தலைவராகவும் (ASPL) இருந்து உள்ளார் இந்நிலையில் பள்ளி விடுமுறை நாள் என்பதால் ரித்தீஷ் தன்னுடைய சக மாணவர்களுடன் வெளியே சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது யாரும் வீட்டில் இல்லாத நிலையில் பள்ளி மாணவன் ரித்தீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்த குடும்பத்தார் கத்தி கூச்சலிட்டு ரித்தீஷின் சடலத்தை மீட்டு உள்ளனர். பின்பு தகவல் அறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறை ரித்தீஷின் சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகப்படும்படியான காரணங்கள் ஏதேனும் உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.1
- தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மொரப்பூர் காப்புகாடு, மலையயூர் காப்புக் காட்டிலிருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது காட்டுயாணைகள் ஊருக்குள் புகுந்து விசாயநிலங்களை சேதப்படுத்தி வந்த நிலையில் இன்று விடியற்காலை பாலக்கோடு அருகே உள்ள கம்மாளப்பட்டி ஊருக்குள் இரண்டு காட்டுயானைகள் புகுந்து வீதி வீதியாக உணவு மற்றும் தண்ணீர் தேடி செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யாணை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். தற்போது பாலக்கோடு சுற்றுவட்டார வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் காட்டு யாணைகள் விவசாய நிலத்தில் உள்ள ராகி, கம்பு, சோளம், கரும்பு, நெல் உள்ளிட்டவைகளை உண்ண வனத்தை விட்டு வெளியே வருகிறது. ஒன்றன் பின் ஒன்றாக ஊருக்குள் நுழைந்து வரும் காட்டு யானைகளால் மக்கள் வெளியே நடமாட அச்சமடைந்து வருகின்றனர். வன பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் அமைத்து பராமரித்தால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவது தவிர்க்கப்படும் என விலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.1
- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனர். மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் வீட்டு வசதி இல்லாத ஏழை மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு அரசு வீடு வழங்க வேண்டும், நீண்ட காலமாக வசித்து வரும் இடங்களுக்கு நில பட்டா வழங்க வேண்டும், குடிநீர் வசதி, சாலை வசதி, முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். இந்த மனுக்களை பெற்றனர் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் உடனடியாக அனுப்பி வைத்து, மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்து விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது தகுந்த விசாரணை நடத்தி, சட்டப்பூர்வமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் பல்வேறு துறைகளின் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில் விவசாயம் சங்கத்தினர் சார்பாக திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டி மூன்று நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வாக்குறுதி அளித்துள்ளன என்று மூத்த தலைவர் நேரில் சென்று நேற்று மார்ச் 9 ம் தேதி மாலை 5 மணி அளவில் பேச்சுவார்த்தை நடத்ததில் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன1
- Post by Vinayagam Vinayagam1
- கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக விவசாயிகள் விழிப்புணர்வு சங்கம் சார்பாக மகளிர் தின விழாவை சிறப்பாக கொண்டாடப்பட்டது1