Shuru
Apke Nagar Ki App…
மதுரை வைகை ஆற்றின் ஏ.வி. மேம்பாலம் முதல் குருவிகாரன் சாலை மேம்பாலம் வரையிலான பகுதியில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா இன்று (11.07.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தத் திட்டத்தின் கீழ், வைகை ஆற்றுப் பகுதியில் எல்.இ.டி. அலங்கார விளக்குகள், மிதக்கும் பாலம், இசை நீரூற்று, நடைபாதை, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் மலர்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா வசதிகளை ஏற்படுத்துவது குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
சு.இரத்தினவேல்
மதுரை வைகை ஆற்றின் ஏ.வி. மேம்பாலம் முதல் குருவிகாரன் சாலை மேம்பாலம் வரையிலான பகுதியில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா இன்று (11.07.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தத் திட்டத்தின் கீழ், வைகை ஆற்றுப் பகுதியில் எல்.இ.டி. அலங்கார விளக்குகள், மிதக்கும் பாலம், இசை நீரூற்று, நடைபாதை, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் மலர்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா வசதிகளை ஏற்படுத்துவது குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள கல்குவாரி மற்றும் கிரசர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜெயங்கொண்டநிலை, மல்லாக்கோட்டை, சித்தமல்லிப்பட்டி, கிருஷ்ணாபுரம் மற்றும் மலம்பட்டி ஆகிய பகுதிகளில் அமையவிருக்கும் கல்குவாரி மற்றும் கிரசர்களை எதிர்த்து கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிங்கம்புணரி மற்றும் மேலூர் பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.1
- தேனி மாவட்டம் தேனி பழனிசெட்டிபட்டி அருகே உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். ரேஷன் கடைகளில் தரம் இல்லாத அரிசி கிடைப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசிகளின் தரம் குறித்து ஆய்வு செய்து, தரமான அரிசிகள் வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வெங்கட்ரமணன், தேனியில் தற்போது 15 தற்காலிக கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருவதாகவும், தேவைக்கேற்ப நிரந்தர கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப திறந்தவெளி குடோன்களில் வைக்கப்படும் அரிசி மற்றும் தானியங்களைப் பாதுகாக்க அறிவியல் பூர்வமான குடோன்கள் தரம் உயர்த்தப்பட்டு கட்டப்பட்டு வருவதாகக் கூறிய அவர், ரேஷன் கடைகளில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வது குறித்து உரிய ஆலோசனைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், மாநில எல்லைகளில் பல்வேறு துறைகள் இணைந்து எந்தவித கடத்தலும், கையூட்டும் பெறாத வகையில் ஒருங்கிணைந்து செயல்படும் என்றும், குடும்ப அட்டைதாரர்களுக்கு சமையல் எரிவாயு விரைவில் கிடைப்பது துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே, திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் குறித்துப் பேசிய அமைச்சர், 50 ஆண்டுகால கட்சிகளைத் தவிர்த்துவிட்டு மக்கள் த.வெ.காவிற்கு வாக்களித்துள்ளதாகக் குறிப்பிட்டார். அத்துடன், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர் என்றும் அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்தார்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மேட்டுக்கடை பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு, கடைக்கு பூட்டு போட்டு, அதை நிரந்தரமாக மூடக்கோரி தீவிர முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடைக்கு முன்பாக பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள், கடையை மூடும் வரை தங்கள் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என உறுதியுடன் தெரிவித்துள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே வீரப்பூர் பொன்னர் - சங்கர் கோவில் மற்றும் வெள்ளயன்கோன்பட்டி ஆகிய பகுதிகளிலும் இதேபோன்று கடைகளை மூடக் கோரி பெண்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறாக இருக்கும் இந்த டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்குத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.1
- கடந்த வாரம் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்த முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பி.கே.வைரமுத்து மற்றும் திருமயம் தொகுதி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் இன்று புதுக்கோட்டை மாவட்ட தவெக அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அங்கு அவர்கள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸை நேரில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது, புதுக்கோட்டையில் அமைச்சரைச் சந்தித்த முன்னாள் எம்எல்ஏ பி.கே.வைரமுத்து மற்றும் தவெக நிர்வாகிகள் அனைவருக்கும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் பொன்னாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தார்.1
- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்தநாள் அரசு விழா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு விழா என்று அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஒரு முறையும், இரண்டு அமைச்சர்கள் தனித்தனியாக இரு முறையும் என மொத்தம் மூன்று முறை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது விழாவிற்கு வந்திருந்தவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிமண்டபத்தில் உள்ள அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு காலை 10:30 மணிக்கு அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அரசு சார்பில் தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா ஆட்சியருடன் வந்து மாலை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் சிறிது நேரம் கழித்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆட்சியருடன் தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒரே நிகழ்ச்சியில் மூன்று முறை தனித்தனியாக நடந்த இந்த நிகழ்வு, அரசு விழா என்பதைத் தாண்டி த. வெ. க கோஷ்டி பூசல் விழாவாக மாறியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் ஒருங்கிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்து, அழகுமுத்துக்கோனின் வாரிசுகளை கௌரவப்படுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த முறை அதுபோன்ற எந்த விழாவும் நடைபெறவில்லை. மேலும், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் மற்றவர்களைச் சென்று மரியாதை செய்யச் சொல்வதில் காவல்துறையினருக்கும் தயக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.1
- தேவகோட்டை நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், திடீர் மாற்றமாக மதிய வேளையில் கருமேகங்கள் சூழ்ந்தன. அதனைத் தொடர்ந்து மாலை நேரத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் மழையினால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இருப்பினும், நீண்ட நாட்களாக நிலவிய கடுமையான வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், இப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிட்டங்கியில், உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், கம்பத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மேட்டுக்கடை பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மற்றும் பெண்கள் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மணப்பாறை - கோவில்பட்டி பிரதான சாலையோரம் அமைந்துள்ள இந்த மதுக்கடையால் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும், பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் கடை மூடப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஏராளமான பெண்கள் இன்று அந்த டாஸ்மாக் கடைக்கு அதிரடியாக பூட்டு போட்டு, அதன் முன்பாக அமர்ந்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மணப்பாறை போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், இந்த மதுக்கடையை நிரந்தரமாக மூடினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.1
- திருச்சி மாவட்டம் திருச்சி - துறையூர் வழித்தடத்தில் 'கோபால்' என்ற தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்தின் பின்புறத்தில் இளைஞர்கள் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்வது மிகுந்த வேதனையளிப்பதாக அமைந்துள்ளது. இது வெறும் அலட்சியம் மட்டுமல்லாமல், உயிரிழப்பை ஏற்படுத்தும் ஆபத்தான செயல் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை கொண்ட பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் அதன் நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1