Shuru
Apke Nagar Ki App…
நாமக்கல் குருசாமிபாளையம் பிள்ளாநல்லூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் நாளை ஜனவரி 14ஆம் தேதி இரவு 8 மணி அளவில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு குலசேகரன் தொழிலாளர்கள் மாநில பொதுச் சங்கம் சார்பாக தேனீர், பிஸ்கட் பிரசாதமாக வழங்கப்பட உள்ளன பக்தர்கள் அனைவரும் வாங்கிச் செல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறார்கள்
கணேஷ் G
நாமக்கல் குருசாமிபாளையம் பிள்ளாநல்லூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் நாளை ஜனவரி 14ஆம் தேதி இரவு 8 மணி அளவில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு குலசேகரன் தொழிலாளர்கள் மாநில பொதுச் சங்கம் சார்பாக தேனீர், பிஸ்கட் பிரசாதமாக வழங்கப்பட உள்ளன பக்தர்கள் அனைவரும் வாங்கிச் செல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறார்கள்
More news from தமிழ்நாடு and nearby areas
- திருச்செங்கோடு தோக்கவாடி ஊராட்சி கே.எஸ். ஆர். கல்வி நகர் பகுதியில் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் மயில்சாமி என்பவரது வீட்டிலும்,ஆவின் நிறுவனத்தில் கால்நடை மருத்துவராக வேலை பார்த்து வரும் முத்துவேல் என்பவரது வீட்டிலும் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் இரு குடும்பத்தினரும் வெளியூர் சென்று இருப்பதை அறிந்து மர்ம நபர்கள் கைவரிசை ஒரு வீட்டில் ஐந்து பவுன் நகை ரொக்கம் மற்றும் மயில்சாமி என்பவரது வீட்டில் 20 பவுன் நகை 60 ஆயிரம் பணம் உண்டியல் காசுகள் வெள்ளிப் பொருட்கள் என பல்வேறு பொருட்கள் திருட்டு. ஊரக போலீசார் தீவிர விசாரணை கைரேகை நிபுணர்கள் வரவழைத்து தீவிர சோதனை2
- Post by Firojali Sk1
- Post by Deoprasad Say2
- பொங்கல் பண்டிகைக்கு ஒரே நாள் உள்ள நிலையில் நல்லம்பள்ளி வார சந்தையில் 10 ஆயிரம் ஆடுகள் குவிந்தது சுமார் 8 கோடிக்கு மேல் விற்பனையால் விவசாயிகள் மகிழ்ச்சி1
- தருமபுரியில் மாமியாருடனான கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்த மாமனாரை நண்பர்கள் உதவியுடன் அடித்து கொலை செய்து ஏரியில் வீசிய, மருமகன் உட்பட ஆறு பேர் கைது. தருமபுரி அடுத்த மதிக்கோண்பாளையம் ஏரியில் ஆண் சடலம் இருப்பதாக, நகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் தண்ணீரில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சடலத்தில் பல்வேறு இடங்களில் வெட்டி காயங்களும், இருசக்கர வாகனமும் தண்ணீரில் கிடந்துள்ளது. இந்த நிலையில் சடலமாக கிடந்தவர், எறங்காட்டு கொட்டாயை சார்ந்த ஆறுமுகம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து ஆறுமுகம் மனைவி ஜோதி மற்றும் மருமகன் சீதாராமன் இருவரையும் காவல் துறையினர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சீதாராமனும் ஜோதியும் இருவரும் இணைந்து காரணிஓனி பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்ததில், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சீதாராமன் மனைவி பிரிந்து சென்ற நிலையில், ஜோதி தனது மகள் சந்தியாவை சீதாராமனுக்கு, கட்டாயப்படுத்தி 2-வது திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தில் விருப்பமில்லாத சந்தியா ஓசூர் தனியார் நிறுவனத்திற்கு பணிக்கு சென்றுள்ளார். சீதாராமன் மனைவி வீட்டிற்கு வராததால் ஜோதியும், சீதாராமனும் ஓசூருக்கு சென்று, சந்தியாவை வீட்டிற்கு அழைத்து தாக்கியுள்ளனர். சந்தியா தனது தந்தை ஆறுமுகத்திடம், நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் ஜோதியை கண்டித்துள்ளார். இந்த நிலையில் தங்களது பழக்கத்திற்கு இடையூறாக மாமனார் ஆறுமுகம் இருப்பதால், அவரை கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்ட சீதாராமன், தனது நண்பர்களுடன் மாமனாரை ஆறுமுகத்தை பின் தொடர்ந்து சென்று கல்லால் தாக்கி, இருசக்கர வாகனத்துடன் காரில் எடுத்துச் சென்று மதிக்கோன்பாளையம் ஏரியில் வீசிவிட்டு சென்றதாக சீதாராமன் ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆறுமுகத்தை திட்டமிட்டு கொலை செய்த சீதாராமன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஆறுமுகம் மனைவி ஜோதி, முருகன், சரவணன், சங்கர் கணேஷ், பிரவீன் குமார் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.1
- அரசு அதிகாரிகளை எச்சரித்த தர்மபுரி எம்எல்ஏ தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாகரம் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தருமபுரி எம்எல்ஏ எஸ்பி வெங்கடேஸ்வரன் இன்று செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார் அப்போது எம்எல்ஏவிடம் அப்பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டி வெகு நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் புழுக்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். உடனே நகராட்சி ஆணையரைத் தொலைபேசியில் அழைத்த எம்எல்ஏ மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியைச் சுத்தம் செய்யாவிட்டால் நானே இறங்கிச் சுத்தம் செய்வேன்" என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் உடனடியாக அங்கு வந்த நகராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.1
- தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை முதல் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகளில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மணப்பாறை அடுத்த உசிலம்பட்டி அருகே செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனையடுத்து பள்ளியின் வளாகத்தில் உள்ள கல்வி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.1
- தருமபுரி அருகே மாமியாருடன் தகாத உறவுக்கு தடையால் மருந்து கடை ஊழியரை கொன்று ஏரியில் உடல் வீச்சு மருமகன், மனைவி உள்பட 6 பேர் கைது1