logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கல்வராயன் மலையில் மாற்றுக் கட்சியில் இருந்து 30க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வவராயன் மலைப் பகுதியில் அரசியல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், மாற்றுக் கட்சிகளில் இருந்து 30க்கும் மேற்பட்டோர் விலகி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சியில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. கரியாலூர் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா பாக்கியராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த இணைவு நிகழ்ச்சியில், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இரா.ராகேஷ் அவர்கள் முன்னிலையில், பலர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய இரா.ராகேஷ், “மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்வராயன் மலைப் பகுதிகளில் அடிப்படை வசதிகள்,சாலை, குடிநீர்,விவசாய மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவோம்” என உறுதியளித்தார். மேலும்,கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு நிர்வாகிகள் வரவேற்பு அளித்ததுடன், எதிர்வரும் தேர்தலில் அதிமுக வெற்றிக்காக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.இந்த இணைவு நிகழ்வு, கல்வராயன் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிமுகவின் ஆதரவு வலுவாக அதிகரித்து வருவதை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

on 14 April
user_M.P.Palani Samy
M.P.Palani Samy
கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
on 14 April

கல்வராயன் மலையில் மாற்றுக் கட்சியில் இருந்து 30க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வவராயன் மலைப் பகுதியில் அரசியல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், மாற்றுக் கட்சிகளில் இருந்து 30க்கும் மேற்பட்டோர் விலகி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சியில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. கரியாலூர் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா பாக்கியராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த இணைவு நிகழ்ச்சியில், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இரா.ராகேஷ் அவர்கள் முன்னிலையில், பலர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய இரா.ராகேஷ், “மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்வராயன் மலைப் பகுதிகளில் அடிப்படை வசதிகள்,சாலை, குடிநீர்,விவசாய மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவோம்” என உறுதியளித்தார். மேலும்,கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு நிர்வாகிகள் வரவேற்பு அளித்ததுடன், எதிர்வரும் தேர்தலில் அதிமுக வெற்றிக்காக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.இந்த இணைவு நிகழ்வு, கல்வராயன் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிமுகவின் ஆதரவு வலுவாக அதிகரித்து வருவதை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • ஓசூரில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று பிரதோஷ வழிபாடினை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது நந்தி பகவானுக்கு பால், தயிர்,சந்தனம், மஞ்சள்,குங்குமம், பஞ்சாமிர்தம், விபூதி, ஆகியவைக் கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் அலங்காரமும் செய்து மாலை அணிவித்து உதிரி பூக்களால் அர்ச்சனை செய்து தூப தீபம் காட்டினார்கள். பக்தர்கள் திரளாக வருகை தந்து நந்தி பகவன் அருள் பெற்று சென்றனார். பிரசாதம் வழங்கப்பட்டது.
    1
    ஓசூரில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று பிரதோஷ வழிபாடினை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது நந்தி பகவானுக்கு பால், தயிர்,சந்தனம், மஞ்சள்,குங்குமம், பஞ்சாமிர்தம், விபூதி, ஆகியவைக் கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் அலங்காரமும் செய்து மாலை அணிவித்து உதிரி பூக்களால் அர்ச்சனை செய்து தூப தீபம் காட்டினார்கள். பக்தர்கள் திரளாக வருகை தந்து நந்தி பகவன் அருள் பெற்று சென்றனார். பிரசாதம் வழங்கப்பட்டது.
    user_USHA INDU
    USHA INDU
    Taxi Driver ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • Post by Salem_Updates
    1
    Post by Salem_Updates
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    22 hrs ago
  • திருவெறும்பூர் அருகே உள்ள பெல் வளாகத்தில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலய 5 வது ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவில் விமர்சையாக நடைபெற்றது. திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் குடியிருப்பு வளாகத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது இந்த கோவிலின் ஐந்தாவது ஆண்டு கும்பாபிஷேக விழா இன்று மிக விமர்சனையாக 1024 கலச பூஜைகளுடன் நடந்தது. முன்னதாக கடந்த 23ஆம் தேதி மாலை கணபதி பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து பலி வாஸ்து கலசம் தொடங்கி 24ஆம் தேதி காலை கணபதி ஹோமம் மூல பூஜையும் 25ஆம் தேதி சாந்தி ஹோமம், பகவதி சேவை என நாள்தோறும் பூஜை புனஸ்காரங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 7:15 மணியிலிருந்து 8 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற்றது அதனை தொடர்ந்து 1008 கலசம் அபிஷேகமும் நடந்தது. இந்த விழாவில் பெல் ஊரகப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் ஐயப்ப சேவா சங்கத்தினர் உட்பட சுற்றுவட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
    2
    திருவெறும்பூர் அருகே உள்ள பெல் வளாகத்தில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலய
5 வது ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவில் விமர்சையாக நடைபெற்றது.
திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் குடியிருப்பு வளாகத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது 
இந்த கோவிலின் ஐந்தாவது ஆண்டு கும்பாபிஷேக விழா இன்று மிக விமர்சனையாக 1024 கலச பூஜைகளுடன் நடந்தது.
முன்னதாக கடந்த 23ஆம் தேதி மாலை கணபதி பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து பலி  வாஸ்து கலசம்  தொடங்கி 24ஆம் தேதி காலை கணபதி ஹோமம்  மூல பூஜையும்  25ஆம் தேதி சாந்தி ஹோமம், பகவதி சேவை என நாள்தோறும் பூஜை புனஸ்காரங்கள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து  இன்று காலை 7:15 மணியிலிருந்து 8 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
அதனை தொடர்ந்து 1008 கலசம் அபிஷேகமும் நடந்தது. இந்த விழாவில் பெல் ஊரகப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் ஐயப்ப சேவா சங்கத்தினர் உட்பட சுற்றுவட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    1 hr ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மின்னூர், வடகரை, மேல் சான்றோர் குப்பம், உட்பட பல்வேறு கிராமங்களில் (இன்று ஏப்ரல் 29 மாலை 3 மணிக்கு) இடி மின்னல் காற்று மழை பெய்தது கடந்த சில நாட்களாக 100 டிகிரி வெயில் சுட்டெரித்த நிலையில் தற்போது இன்று பெய்த மழையினால் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகி உள்ளது இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர் இந்த மழை தொடர்ந்து 3 நாட்களுக்கு தொடர்ந்து பேயும் என வானிலை ஆராய் மையம் நேற்று அறிவிப்பு இந்த நிலையில் இன்று மழை
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மின்னூர், வடகரை, மேல் சான்றோர் குப்பம், உட்பட பல்வேறு கிராமங்களில் (இன்று ஏப்ரல் 29 மாலை 3 மணிக்கு) இடி மின்னல் காற்று மழை பெய்தது  கடந்த சில நாட்களாக 100 டிகிரி வெயில் சுட்டெரித்த நிலையில் தற்போது இன்று பெய்த மழையினால் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகி உள்ளது இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர் இந்த மழை தொடர்ந்து 3 நாட்களுக்கு தொடர்ந்து பேயும் என வானிலை ஆராய் மையம் நேற்று அறிவிப்பு இந்த நிலையில் இன்று மழை
    user_Yuvaraj Yuvaraj
    Yuvaraj Yuvaraj
    Photographer ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    23 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் குறும்பபட்டியைச் சேர்ந்த பாண்டி -42 சொந்த ஊரான செந்துறைக்கு செல்வதற்காக இன்று அதிகாலை 5 மணிக்கு துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது பேருந்து நிலையத்திலிருந்து மணப்பாறை செல்வதற்கு அரசு கிராம பேருந்து பேருந்து நிலையத்தில் உள்ளே சென்று திரும்பும் போது எதிர்பாராத விதமாக பாண்டியன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் கேசவன் 30 மற்றும் நடத்துனர் முருகேசன் 45 இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம்  குறும்பபட்டியைச் சேர்ந்த பாண்டி -42
சொந்த ஊரான செந்துறைக்கு செல்வதற்காக இன்று அதிகாலை 5 மணிக்கு துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில்
பேருந்துக்காக காத்திருந்தபோது  பேருந்து நிலையத்திலிருந்து மணப்பாறை செல்வதற்கு அரசு கிராம பேருந்து பேருந்து நிலையத்தில் உள்ளே சென்று திரும்பும் போது எதிர்பாராத விதமாக பாண்டியன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில்  பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பேருந்தின்  ஓட்டுநர் கேசவன் 30 மற்றும் நடத்துனர் முருகேசன் 45 இவர்களிடம்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    1
    Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    user_ஆ.கார்த்திக் (P F H R.)
    ஆ.கார்த்திக் (P F H R.)
    Press advisory மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • Post by Vinayagam Vinayagam
    1
    Post by Vinayagam Vinayagam
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    22 hrs ago
  • திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம் மின்விளக்குகள் தெரியாததால் கல்லணை பிரிவு மற்றும் கூத்தைப்பார் பிரிவு சாலைகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது. இந்த நிலையில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் இரண்டு நிமிடத்திற்கு ஒரு புறநகர் பேருந்தும் ஐந்து நிமிடத்திற்கு ஒரு மாநகர் பேருந்து இயக்கப்படுகிறது. மேலும் திருவெறும்பூர் பகுதியில்மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் பாதுகாப்பு துறை நிறுவனங்களான எச் இப்பி, துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் நூற்றுக்கணக்கான சிறு குறு நிறுவனங்கள் இயங்கி வருகிறது இதனால் திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் பல லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த நிலையில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பராமரித்து வரும் தனியார் நிறுவனம் முறையாக பராமரிக்காமல் அடிக்கடி மின்விளக்குகள் பழுது ஏற்படுகிறது. இதனை சரி செய்வதில்லை இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சென்று மீடியனில் உள்ள மின்விளக்குகள் போதிய வெளிச்சம் இல்லாமல் உள்ளது. இந்நிலையில் திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம் முதல் மலைக்கோயில் வரை சென்று மீடியனில் உள்ள மின் விளக்குகள் எரிவதில்லை மேலும் ரயில்வே மேம்பாலத்தில் கல்லணை பிரிவு சாலை மற்றும் கூத்தைப் பார் பிரிவு சாலை செல்லும் இடத்தில் உள்ள ஹைமாஸ் லைட்டும் எரிவதில்லை. இதனால் கல்லணை பிரிவு சாலை மற்றும் கூத்தைப்பார் பிரிவு சாலையிலிருந்து திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலைகள் வருவதற்காக பொது மகள் வாகனங்களில் வரும்பொழுது திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி வரும் வாகனங்கள் கட்டுப்பாடு இல்லாமல் வருகிறது இதனால் அந்த பகுதியில் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது குறித்துதிருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை பராமரித்து வரும் தனியார் நிறுவனத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் புகார் தெரிவித்துள்ளதாகவும் ஆனால் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் அதனை கண்டு கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம் மின்விளக்குகள் தெரியாததால் கல்லணை பிரிவு மற்றும் கூத்தைப்பார் பிரிவு சாலைகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும்  சூழ்நிலை உருவாகியுள்ளது.
திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது.
இந்த நிலையில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் இரண்டு நிமிடத்திற்கு ஒரு புறநகர் பேருந்தும் ஐந்து நிமிடத்திற்கு ஒரு மாநகர் பேருந்து இயக்கப்படுகிறது.
மேலும் திருவெறும்பூர் பகுதியில்மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் பாதுகாப்பு துறை நிறுவனங்களான எச் இப்பி, துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் நூற்றுக்கணக்கான சிறு குறு நிறுவனங்கள் இயங்கி வருகிறது
இதனால் திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் பல லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.
இந்த நிலையில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பராமரித்து வரும் தனியார் நிறுவனம் முறையாக பராமரிக்காமல் அடிக்கடி மின்விளக்குகள் பழுது ஏற்படுகிறது.
இதனை சரி செய்வதில்லை இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சென்று மீடியனில் உள்ள மின்விளக்குகள் போதிய வெளிச்சம் இல்லாமல் உள்ளது.
இந்நிலையில் திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம் முதல்  மலைக்கோயில் வரை சென்று மீடியனில் உள்ள  மின் விளக்குகள் எரிவதில்லை மேலும் ரயில்வே மேம்பாலத்தில் கல்லணை பிரிவு சாலை மற்றும் கூத்தைப் பார் பிரிவு சாலை செல்லும் இடத்தில் உள்ள ஹைமாஸ் லைட்டும்  எரிவதில்லை.
இதனால் கல்லணை பிரிவு சாலை மற்றும் கூத்தைப்பார் பிரிவு சாலையிலிருந்து திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலைகள் வருவதற்காக பொது மகள் வாகனங்களில் வரும்பொழுது திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி வரும் வாகனங்கள் கட்டுப்பாடு இல்லாமல் வருகிறது இதனால் அந்த பகுதியில் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இது குறித்துதிருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை பராமரித்து வரும்  தனியார் நிறுவனத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் புகார் தெரிவித்துள்ளதாகவும் ஆனால் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் அதனை கண்டு கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.