கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் நிறுவனர் தின விழா நடைபெற்றது. கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் நிறுவனர் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் தாளாளர் மற்றும் செயலாளர் பி.என்.வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி எஸ்.ஏ.தனலட்சுமி வரவேற்புரை மற்றும் சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுகவுரை வழங்கினார். விழாவின் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் வணிகவியல்துறை முன்னாள் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் முனைவர் கருணையாத்தாள் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிறுவனர் தின விழாவை முன்னிட்டு பி.ஆர். நடராஜன் அறக்கட்டளை நிதியிலிருந்து கல்வி ஊக்கத் தொகை +2 தேர்வில் 500க்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும், இளங்கலை வகுப்பில் 85% மதிப்பெண்கள் பெற்று முதுகலை முதலாமாண்டு பயின்று வரும் மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது. அதேபோல் விளையாட்டுத் துறையைச் சார்ந்த முழுமையான சலுகை பெறும் மாணவிகளுக்கும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும் நிறுவனர் பிறந்த மாதமான ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தநாள் மற்றும் திருமணநாள் கொண்டாடும் நமது கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் கோபி தாமு செட்டியார் நகை மாளிகை சார்பாக சிறப்பு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிறுவனர் தின விழாவின் சிறப்பம்சமாக நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக சுமார் 200 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக இலவசக் கண் சிகிச்சை முகாம் மற்றும் இரத்ததான முகாம் பி.கே.ஆர் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது. விழாவில் அனைத்துத்துறை முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், நிறுவனர் தோழர்கள், குடும்ப உறுப்பினர்கள், மாணவிகள் என 700-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கணிதத்துறை முதன்மையர் ஜெயலட்சுமி நன்றியுரை கூற விழா இனிதே நிறைவடைந்தது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகம் செய்து கொடுத்தது.
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் நிறுவனர் தின விழா நடைபெற்றது. கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் நிறுவனர் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் தாளாளர் மற்றும் செயலாளர் பி.என்.வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி எஸ்.ஏ.தனலட்சுமி வரவேற்புரை மற்றும் சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுகவுரை வழங்கினார். விழாவின் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் வணிகவியல்துறை முன்னாள் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் முனைவர் கருணையாத்தாள் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிறுவனர் தின விழாவை முன்னிட்டு பி.ஆர். நடராஜன் அறக்கட்டளை நிதியிலிருந்து கல்வி ஊக்கத் தொகை +2 தேர்வில் 500க்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும், இளங்கலை வகுப்பில் 85% மதிப்பெண்கள் பெற்று முதுகலை முதலாமாண்டு பயின்று வரும் மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது. அதேபோல் விளையாட்டுத் துறையைச் சார்ந்த முழுமையான சலுகை பெறும் மாணவிகளுக்கும்
கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும் நிறுவனர் பிறந்த மாதமான ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தநாள் மற்றும் திருமணநாள் கொண்டாடும் நமது கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் கோபி தாமு செட்டியார் நகை மாளிகை சார்பாக சிறப்பு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிறுவனர் தின விழாவின் சிறப்பம்சமாக நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக சுமார் 200 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக இலவசக் கண் சிகிச்சை முகாம் மற்றும் இரத்ததான முகாம் பி.கே.ஆர் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது. விழாவில் அனைத்துத்துறை முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், நிறுவனர் தோழர்கள், குடும்ப உறுப்பினர்கள், மாணவிகள் என 700-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கணிதத்துறை முதன்மையர் ஜெயலட்சுமி நன்றியுரை கூற விழா இனிதே நிறைவடைந்தது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகம் செய்து கொடுத்தது.
- பூண்டி நகராட்சி மன்ற தலைவர் தலைமையில் மாநகராட்சி குப்பை லாரிகள் வழிமறித்து சிறைபிடிப்பு... திருப்பூர் மாவட்டம்,பூண்டி நகராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் உட்பட மொத்த கவுன்சிலர்களும் மாநகராட்சி பகுதியில் இருந்து வரும் குப்பை லாரிகளை வழி மறித்து சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சியில் இரண்டு மூன்று மாதங்களாக தேங்கிய குப்பைகளை, திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் உள்ள அம்மாபாளையம் பாறைக்குழியில் அடாவடியாக குப்பை கொட்டும் போக்கைக் கண்டித்தும், வரிசைகட்டி நிற்கும் குப்பை லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.1
- சேலம் மாநகரத்தில் வெளுத்து கட்டிய கனமழை! பொதுமக்கள் மகிழ்ச்சி..... சேலம் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை 6 மணி அளவில் திடீரென மிதமான மழை பெய்யத் தொடங்கியது, நேரம் செல்லச் செல்ல தனது வேகத்தை கூட்டிய மலை கனமழையாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. இந்த திடீர் கனமழையினால் மாநகரத்தில் முக்கிய பகுதிகளான அஸ்தம்பட்டி, சாரதா கல்லூரி சாலை, புதிய பேருந்து நிலையம், கன்னங்குறிச்சி, ஏற்காடு அடிவாரம், கெட்டிச்சாவடி, அழகாபுரம் பெரிய புதூர், ஐந்து ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர். மேலும் இந்த திடீர் மழை நாள் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் மழையின் குளிரில் மகிழ்ச்சியடைந்தனர்.1
- இராசிபுரம்: திருநங்கைகளின் ஆவணி மாத பௌர்ணமி சிறப்பு நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் பனந்தோப்பில் அமைந்துள்ள திருநங்கைகளின் குலதெய்வ கோயில் நாக முத்து மாரியம்மன், அங்காள பரமேஸ்வரி தெய்வங்களுக்கு ஆகஸ்ட் 27 வியாழக்கிழமை இரவு 7 மணி அளவில் ஆவணி மாத பௌர்ணமி பூஜை மிக சிறப்பாக பல்வேறு திரவிங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மங்கள வாத்தியத்துடன் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.1
- தருமபுரியில் எச்.ஐ.வி. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வு பேரணி..! தருமபுரியில் எச்.ஐ.வி. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வு பேரணி..! தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் சரவணன் தொடங்கி வைத்தார். முன்னதாக, எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையேற்று வாசித்தார். தொடர்ந்து, அரசு துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழியைப் பின்தொடர்ந்து வாசித்து ஏற்றுக்கொண்டனர். உறுதிமொழியில், எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த முழுமையான அடிப்படைத் தகவல்களை அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் நம்பிக்கை மையங்கள் மூலம் அறிந்து கொள்வது, தன்னார்வத்துடன் எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்வது, எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தொற்றுடன் வாழ்பவர்களை அரவணைத்து, அவர்களுக்கு தேவையான சேவைகளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பது, அவர்களுக்கு சம உரிமை அளிப்பது உள்ளிட்டவற்றை கடைப்பிடிப்பதாக உறுதியேற்றனர். மேலும், புதிய எச்.ஐ.வி. தொற்றில்லாத குடும்பம் மற்றும் சமூகத்தை உருவாக்க பாடுபடுவதாகவும் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து, எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார். மேலும், ஆட்டோக்களில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, பாரதி கலைக்குழு மற்றும் இராமகிருஷ்ணா கலைக்குழுவினரின் சார்பில் நடைபெற்ற எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியையும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதையடுத்து, எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி பாரதிபுரம் வரை சென்று நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் 250-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், “எச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோரை ஆதரிப்போம்” உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் சுகாதாரம் இராஜேந்திரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் தரணிதரன், தொழுநோய் துணை இயக்குநர் புவனேஷ்வரி, மண்டல திட்ட மேலாளர் பாலமுருகன், மாவட்ட மேற்பார்வையாளர் உலகநாதன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு ஆலோசகர்கள் பாலமுருகன், ராஜ்குமார், சரவணன், SEED இயக்குநர் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அரசு கலைக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.1
- கிரிவலத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோமீட்டர் கிரிவலம் ஆவணி மாத பௌர்ணமி இன்று காலை 9:53 மணிக்கு தொடங்கி நாளை 28ம் தேதி காலை 10:29 மணிக்கு நிறைவடைய உள்ளதால் பக்தர்கள் இன்று இரவு கிரிவலம் மேற்கொள்ளலாம் என்று அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று மாலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.1
- திண்டுக்கல் நத்தம் அருகே நூதன பண மோசடி தொடர்ந்து நத்தம் பகுதியில் பதட்டம் காவல்துறை வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டது.3
- ஜக்கசமுத்திரத்தில் இணைப்பு சாலை கோரி பொதுமக்கள் தர்ணா - மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று விசாரணை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, ஜக்கசமுத்திரம் கிராமத்திற்கு இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜக்கசமுத்திரம் ஊராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள 16 கிராமங்களுக்கு மையப்பகுதியாகவும் இக்கிராமம் உள்ளது. ஊராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, வங்கிகள், தபால் நிலையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை 844-ல் சேவைச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், ஜக்கசமுத்திரம் பகுதிக்கு செல்லும் இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லாததால் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். மேலும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஜக்கசமுத்திரம் என்ற கிராமமே பதிவேட்டில் இல்லை” என தெரிவிப்பதாக பொதுமக்கள் அதிர்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் சாலையோரம் நின்று தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சரவணன் சம்பவ இடத்திற்க்கு சென்று கோரிக்கைகளை கேட்டறிந்தவர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு வருமாறு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.1
- திண்டுக்கல்லில் ரெட்டியூர் சத்திரம் புதுப்பட்டி வழியாக பேருந்து இயக்கப்படாததால் தொடர்ந்து பேருந்து புதுப்பட்டி வழியாக இயக்க வேண்டும் என போராட்டம்1