Shuru
Apke Nagar Ki App…
மெட்ரோ ரயில் பணி பள்ளத்தில் விழுந்து தொழிலாளி பலி: போலீசார் விசாரணை ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் உமாகாந்த் கோகாயத் (43). இவர் பூந்தமல்லியில் உள்ள டயர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலை பிருந்தா தியேட்டர் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடத்திற்குள் அத்துமீறி நுழைந்தார். அப்போது, மெட்ரோ ரயில் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உமாகாந்த் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Basakaran
மெட்ரோ ரயில் பணி பள்ளத்தில் விழுந்து தொழிலாளி பலி: போலீசார் விசாரணை ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் உமாகாந்த் கோகாயத் (43). இவர் பூந்தமல்லியில் உள்ள டயர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலை பிருந்தா தியேட்டர் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடத்திற்குள் அத்துமீறி நுழைந்தார். அப்போது, மெட்ரோ ரயில் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உமாகாந்த் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- இசை மழை இரவு வணக்கம் இரவு இன்னிசை இரவு வணக்கம்.........1
- தண்டையார்பேட்டை தாசில்தார் அலுவலகத்திற்கு செல்ல அச்சப்படும் பொதுமக்கள். சென்னை ஆர்.கே நகர் தொகுதி தண்டையார்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் நாய் ஒன்று அலுவலகம் முழுவதும் சுற்றித் தெரிகிறது. இதனால் தாசில்தார் அலுவலகத்திற்கு ஆதார் பிறப்பு இறப்பு வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை பெறுவதற்கு வரும் பொதுமக்கள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.1
- திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள் . திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பல்நோக்கு கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதி படி விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.1
- மின் தகனமேடை பழுது-பிணத்தை சாலையில் வைத்து சாலை மறியல்* *காஞ்சிபுரம் வெள்ளைக்குளம் தெரு பகுதியில் அமைந்துள்ள நவீன தகன எரிவாயு மேடை கடந்த 4மாதங்களுக்கு மேலாக பழுது ஏற்பட்டுள்ள நிலையில் பிணத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டவரும் உறவினர்கள்* *கொல்லி போடும் கோலத்தில் உறவினர்களுடன் சாலையில் அமர்ந்த உயிரிழந்தவரின் மகன்* *மின் தகனமேடை பழுது-பிணத்தை சாலையில் வைத்து சாலை மறியல்* *காஞ்சிபுரம் வெள்ளைக்குளம் தெரு பகுதியில் அமைந்துள்ள நவீன தகன எரிவாயு மேடை கடந்த 4மாதங்களுக்கு மேலாக பழுது ஏற்பட்டுள்ள நிலையில் பிணத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டவரும் உறவினர்கள்* *கொல்லி போடும் கோலத்தில் உறவினர்களுடன் சாலையில் அமர்ந்த உயிரிழந்தவரின் மகன்* ---------------------- காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்படட் வெள்ளைக்குளம் தெரு பகுதியில் நவீன மின் தகன மேடை அமைக்கப்பட்டு பெரிய காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் தகனம் செய்து வந்தனர்.இந்த நிலையில் மின் தகனமேடை பழுது ஏற்பட்டு கடந்த 4மாதங்களுக்கு மேலாக தகனங்களை எரியூட்டபடாமல் பெரிய காஞ்சிபுரத்திலிருந்து 5கிலோ மீட்டர் கடந்த தாயார்குளம் மின் தகன மேடைக்கு செல்ல அறிவுறுத்தப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதன் காரணமாக இரட்டிப்பு செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்த நிலையில் ஒலி முகமது பேட்டை வேணுகோபால் தெரு பகுதியை சேர்ந்த குமார்(46) என்பவர் உடல் நிலை சரியில்லாமல் இன்று உயிரிழந்த நிலையில் அவரை மின் தகனமேடையில் எரியூட்ட முடியாமல் அவரது உறவினர்களுடன் பிணத்தை வெள்ளைக்குளம் தெரு சாலையில் வைத்து இறந்தவரின் மகன் கொல்லி போடும் கோலத்திலேயே மறியலில் ஈடுபட்டனர்.மேலும்மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியும் மறியலில் ஈடுபட்டனர். சாலையில் பிணத்தை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் அச்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- ஜவ்வாதுமலை : அல்லேரிமலை அதானிக்கு ஜவ்வாதுமலை யாருக்கு? திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையின் ஜமுனாமருத்தூர் பகுதியில் ஹெலிகாப்டர் வட்டமிட்டதை தொடர்ந்து, அல்லேரி மலைப்பகுதியில் அதானி குழுமத்தின் பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு நீர்மின் திட்டங்கள் மற்றும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான செய்திகள் வெளியாகி மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. இச்சூழலில் ஜவ்வாதுமலையை யாருக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டதோ ? என்ற சந்தேகமும் அப்பகுதி மக்கள் மத்தியில் எழும்பியிருக்கிறது.1
- வடலூர் வள்ளலார் கோவிலுக்கு புதிய தீர்ப்பு மக்கள் கொண்டாட்டம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வடலூர் வள்ளலார் கோவிலின் புதிய தீர்ப்பை அளித்துள்ளனர் இதனால் மக்கள் கொண்டாட்டம்1
- ஆடி 3வது வெள்ளிக்கிழமையை யோட்டி அம்மனுக்கு பொங்கல் வைத்த பெண்கள். சென்னை ஆர்.கே நகர் தொகுதி கொருக்குப்பேட்டை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆடி மாதம் 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். இதனால் அப்பகுதி திருவிழா போல் காட்சி அளிக்கின்றது.1