logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

இந்த மாட்டுக்கு உள்ள அறிவை பாருங்கள். எப்படி சென்றால் அந்த தண்ணீரை கடக்க முடியும் என்று தெரிந்து வைத்து உள்ளது.

11 hrs ago
user_Senthilkumarankumaran
Senthilkumarankumaran
Journalist Coimbatore South, Tamil Nadu•
11 hrs ago

இந்த மாட்டுக்கு உள்ள அறிவை பாருங்கள். எப்படி சென்றால் அந்த தண்ணீரை கடக்க முடியும் என்று தெரிந்து வைத்து உள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள நரம்பியல் பிரிவினை நேரில் பார்வையிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது தேனி மாவட்டம் கம்பம். இந்த கம்பம் நகராட்சியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளா பகுதிகளில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளி நோயாளிகளும் இங்கு சிகிச்சை பெறுகின்றனர். இதற்கிடையே பல ஆண்டுகளாக கம்பத்தில் நரம்பியல் தொடர்பான மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும் நரம்பு தொடர்பான சிகிச்சைகள் மேற்கொள்வதற்கு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர் இப்பகுதி மக்கள். மேலும் மாற்றுத்திறனாளிகள் இங்கிருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று நரம்பியல் மருத்துவம் பார்ப்பதில் மிகவும் பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதால் கம்பத்தில் நரம்பியல் மருத்துவம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று கம்பம் அரசு மருத்துவமனையில் மாதம் ஒருமுறை நரம்பியல் சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று துவங்கப்பட்ட இந்த பிரிவினை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா நேரில் பார்வையிட்டு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது என்பது குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து சமூக நீதி நாளை முன்னிட்டு கம்பம் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் பொதுமக்களுடன் இணைந்து சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.இந்த நிகழ்வில் பலரும் கலந்து கொண்டனர்.
    1
    தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள நரம்பியல் பிரிவினை நேரில் பார்வையிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி 
தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது தேனி மாவட்டம் கம்பம். இந்த கம்பம் நகராட்சியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
நாள்தோறும் கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளா பகுதிகளில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளி நோயாளிகளும் இங்கு சிகிச்சை பெறுகின்றனர்.
இதற்கிடையே பல ஆண்டுகளாக கம்பத்தில் நரம்பியல் தொடர்பான மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும் நரம்பு தொடர்பான சிகிச்சைகள் மேற்கொள்வதற்கு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர் இப்பகுதி மக்கள்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் இங்கிருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று நரம்பியல் மருத்துவம் பார்ப்பதில் மிகவும் பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதால் கம்பத்தில் நரம்பியல் மருத்துவம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 
இந்த கோரிக்கையை ஏற்று கம்பம் அரசு மருத்துவமனையில் மாதம் ஒருமுறை நரம்பியல் சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்று துவங்கப்பட்ட இந்த பிரிவினை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா நேரில் பார்வையிட்டு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது என்பது குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து சமூக நீதி நாளை முன்னிட்டு கம்பம் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் பொதுமக்களுடன் இணைந்து சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.இந்த நிகழ்வில் பலரும் கலந்து கொண்டனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • க.விலக்கு GHல் சிகிச்சைக்கு வருவோரிடம் பணம் வசூல் செய்பவர் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தேனி கலெக்டர் அறிவிப்பு தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் தேனி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர் அவ்வாறு சிகிச்சைக்காக வருகின்ற நோயாளிகளிடம் அன்புள்ள ஊழியர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக புகார் எழுந்துள்ளது எனவே இதனை தவிர்க்கும் பொருட்டு மூன்று நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் இந்த குழுவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்பவர்கள் மீது புகார் அளிக்கலாம் என தேனி கலெக்டர் டாக்டர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்
    1
    க.விலக்கு GHல் சிகிச்சைக்கு வருவோரிடம் பணம் வசூல் செய்பவர் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தேனி கலெக்டர் அறிவிப்பு
தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் தேனி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர் அவ்வாறு சிகிச்சைக்காக வருகின்ற நோயாளிகளிடம் அன்புள்ள ஊழியர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக புகார் எழுந்துள்ளது எனவே இதனை தவிர்க்கும் பொருட்டு மூன்று நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் இந்த குழுவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்பவர்கள் மீது புகார் அளிக்கலாம் என தேனி கலெக்டர் டாக்டர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு பாமக சார்பில் வீர வணக்கம். செப்டம்பர் 17 இட ஒதுக்கீடு போராட்டத்தில் என்னுயிர் நீர்த்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது கரூர் பாட்டாளி பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு மாவட்ட சார்பில் சுரேஷ் தலைமையில் கடந்த 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளை வலியுறுத்தி நடைபெற்ற தொடர் சாலை மறியல் போராட்டத்தில், துப்பாக்கிச் சூடு மற்றும் 21 சமூகநீதிப் போராட்ட தியாகிகள் தங்களது இன்னுயிரை நீத்தனர். அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சமூகநீதி நாளாகவும், தியாகிகள் நினைவு நாளாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று கரூர் மாவட்ட மேற்கு பாட்டாளி மக்கள் கட்சி சுரேஷ் மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், 21 தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மாவட்ட, நகர, ஒன்றிய பா.ம.க நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி பொறுப்பாளர்கள் , பாஜகவினர் மாலை அணிவித்து, மலர் தூவி, வீரவணக்கத்தைச் செலுத்தினர்.
    1
    இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு பாமக சார்பில் வீர வணக்கம்.
செப்டம்பர் 17 இட ஒதுக்கீடு போராட்டத்தில் என்னுயிர் நீர்த்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது கரூர் பாட்டாளி பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு மாவட்ட சார்பில் சுரேஷ் தலைமையில் 
கடந்த 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளை வலியுறுத்தி நடைபெற்ற தொடர் சாலை மறியல் போராட்டத்தில், துப்பாக்கிச் சூடு மற்றும் 21 சமூகநீதிப் போராட்ட தியாகிகள் தங்களது இன்னுயிரை நீத்தனர்.
அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சமூகநீதி நாளாகவும், தியாகிகள் நினைவு நாளாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இன்று கரூர் மாவட்ட மேற்கு பாட்டாளி மக்கள் கட்சி சுரேஷ் மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், 21 தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மாவட்ட, நகர, ஒன்றிய பா.ம.க நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி பொறுப்பாளர்கள் , பாஜகவினர் மாலை அணிவித்து, மலர் தூவி, வீரவணக்கத்தைச் செலுத்தினர்.
    user_Karur clicks
    Karur clicks
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழாமகா கும்பாபிஷேக வைபவம், சிறப்புப் பூஜைகளை முடித்து, கலசங்களுக்கு ஊற்றப்பட்ட புனித நீர். வேதங்கள் முழங்க மீனாட்சி அம்மன் சன்னதிக்கு மேல் உள்ள கோபுரங்களின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது 7 புண்ணிய தீர்த்தங்கள் கங்கையில் இருந்து எடுத்துவரப்பட்டு யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீா் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்களின் இந்த குடமுழுக்கு நிகழ்ச்சியை கண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
    1
    மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழாமகா கும்பாபிஷேக வைபவம், சிறப்புப் பூஜைகளை முடித்து, கலசங்களுக்கு ஊற்றப்பட்ட புனித நீர்.
வேதங்கள் முழங்க மீனாட்சி அம்மன் சன்னதிக்கு மேல் உள்ள கோபுரங்களின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது
7 புண்ணிய தீர்த்தங்கள் கங்கையில் இருந்து எடுத்துவரப்பட்டு யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீா் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டது.
லட்சக்கணக்கான பக்தர்களின் இந்த குடமுழுக்கு நிகழ்ச்சியை கண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    11 hrs ago
  • நன்செய் இடையாறு பொன்கோவில் - மூங்கில் வனச்சோலை கூட்டாத்து மூலையில் அமைந்து இருக்கும் ஸ்ரீ சங்கிலி கருப்பண்ண சுவாமி மஹா கும்பாபிஷேக விழா நன்செய் இடையாறு பொன்கோவில் - மூங்கில் வனச்சோலை கூட்டாத்து மூலையில் அமைந்து இருக்கும் ஸ்ரீ சங்கிலி கருப்பண்ண சுவாமி மஹா கும்பாபிஷேக விழா
    1
    நன்செய் இடையாறு
பொன்கோவில் - மூங்கில் வனச்சோலை கூட்டாத்து மூலையில் அமைந்து இருக்கும் ஸ்ரீ சங்கிலி கருப்பண்ண சுவாமி மஹா கும்பாபிஷேக விழா
நன்செய் இடையாறு
பொன்கோவில் - மூங்கில் வனச்சோலை கூட்டாத்து மூலையில் அமைந்து இருக்கும் ஸ்ரீ சங்கிலி கருப்பண்ண சுவாமி மஹா கும்பாபிஷேக விழா
    user_DHINESH KUMAR
    DHINESH KUMAR
    Local News Reporter Namakkal, Tamil Nadu•
    21 hrs ago
  • ராசிபுரம் அருகே வீட்டின் அருகே புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்பு... ராசிபுரம் அருகே வீட்டின் அருகே புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்பு... ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை குள்ளாண்டிக்காடு பகுதியில் வீட்டின் அருகே புகுந்த சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை குள்ளாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கவின்குமார். கொல்லிமலை அடிவாரப் பகுதியில் வசித்து வரும் இவரது வீட்டின் அருகே மலைப்பாம்பு ஒன்று புகுந்ததாக ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள், வீட்டின் அருகே பதுங்கியிருந்த மலைப்பாம்பை பாம்பு பிடிக்கும் இடுக்கி மூலம் லாவகமாக உயிருடன் மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட மலைப்பாம்பு சுமார் 8 அடி நீளம் கொண்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
    1
    ராசிபுரம் அருகே வீட்டின் அருகே புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்பு...

ராசிபுரம் அருகே வீட்டின் அருகே புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்பு...
ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை குள்ளாண்டிக்காடு பகுதியில் வீட்டின் அருகே புகுந்த சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை குள்ளாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கவின்குமார். கொல்லிமலை அடிவாரப் பகுதியில் வசித்து வரும் இவரது வீட்டின் அருகே மலைப்பாம்பு ஒன்று புகுந்ததாக ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள், வீட்டின் அருகே பதுங்கியிருந்த மலைப்பாம்பை பாம்பு பிடிக்கும் இடுக்கி மூலம் லாவகமாக உயிருடன் மீட்டனர்.
பின்னர் மீட்கப்பட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட மலைப்பாம்பு சுமார் 8 அடி நீளம் கொண்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
    user_ILAYARAJA
    ILAYARAJA
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    4 hrs ago
  • தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா வேட்பு மனு தாக்கல் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இடைத்தேர்தல் அறிவித்ததை தொடர்ந்து நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் தாராபுரம் தொகுதி 50 ஆண்டுகளுக்கு முன்பு கோவையும் தாராபுரம் ஒன்றாக நகராட்சி அந்தஸ்து பெற்றது எனவும் இன்றைக்கு கோவை பெரிய தொழில் நகரமாகவும் எண்ணற்ற வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் தாராபுரம் தொகுதி 50 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் அடையாததையும் சுட்டிக்காட்டினார். மேலும் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்ற சத்தியபாமா வாக்களித்த மக்களை ஏமாற்றி தவெகவில் இணைந்ததாகவும் கூறினார். பரந்தூர் விமான நிலையம் அமைவதால் அப்பகுதி மக்களின் விவசாய நிலங்கள் தரிசுநிலமாக மாறுமே தவிர தற்போது அப்பகுதியில் சிப்காட் அமைவதால் நிலத்தடி நீர் மாசு காற்று மாசு அப்பகுதியே அழியக்கூடிய சூழ்நிலை உருவாகும். அப்பகுதி மக்கள் சொந்த ஊரிலேயே அகதிகளாக அலைய வேண்டிய நிலை உருவாகும் எனவும் கூறினார். மேலும் முதல்வர் விஜய் ஆட்சி பொறுப்பேற்றதால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனவும் கூறினார்.
    1
    தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா வேட்பு மனு  தாக்கல் 
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இடைத்தேர்தல் அறிவித்ததை தொடர்ந்து நாம் தமிழர் வேட்பாளர்  கார்த்திகா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் தாராபுரம் தொகுதி 50 ஆண்டுகளுக்கு முன்பு கோவையும் தாராபுரம் ஒன்றாக நகராட்சி அந்தஸ்து பெற்றது எனவும் இன்றைக்கு கோவை பெரிய தொழில் நகரமாகவும் எண்ணற்ற வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் தாராபுரம் தொகுதி 50 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் அடையாததையும் சுட்டிக்காட்டினார். மேலும் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்ற சத்தியபாமா வாக்களித்த மக்களை ஏமாற்றி தவெகவில் இணைந்ததாகவும் கூறினார். பரந்தூர் விமான நிலையம் அமைவதால் அப்பகுதி மக்களின் விவசாய நிலங்கள் தரிசுநிலமாக மாறுமே தவிர தற்போது அப்பகுதியில் சிப்காட் அமைவதால் நிலத்தடி நீர் மாசு காற்று மாசு அப்பகுதியே அழியக்கூடிய சூழ்நிலை உருவாகும். அப்பகுதி மக்கள் சொந்த ஊரிலேயே அகதிகளாக அலைய வேண்டிய  நிலை உருவாகும் எனவும் கூறினார். மேலும் முதல்வர் விஜய் ஆட்சி பொறுப்பேற்றதால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனவும் கூறினார்.
    user_Dpm news
    Dpm news
    Photographer தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு•
    19 hrs ago
  • பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை தேனி மாவட்டம் பெரியகுளம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர் இந்நிலையில் பெரியகுளம் பகுதியில் பெய்து வந்த நிலையில் இன்று பிற்பகல் பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள தாமரைக்குளம், லட்சுமிபுரம், கள்ளிப்பட்டி, கைலாச பட்டி, சரத்துப்பட்டி, எ. புதுப்பட்டி, பங்களா பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு வெளுத்து வாங்கிய கனமழை பெய்துள்ளது தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்ததால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர் இதில் இன்று மழையால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    1
    பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள  பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை
தேனி மாவட்டம் பெரியகுளம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்
இந்நிலையில்  பெரியகுளம் பகுதியில் பெய்து வந்த நிலையில் இன்று பிற்பகல்  பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள  தாமரைக்குளம், லட்சுமிபுரம், கள்ளிப்பட்டி, கைலாச பட்டி, சரத்துப்பட்டி, எ. புதுப்பட்டி, பங்களா பட்டி   உள்ளிட்ட பகுதிகளில்  ஒரு மணி நேரத்துக்கு வெளுத்து வாங்கிய கனமழை பெய்துள்ளது
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்ததால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர் இதில் இன்று  மழையால் வெப்பத்தின் தாக்கம் சற்று  குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • வரும் 19ஆம் தேதி தேனி மாவட்டத்தில் அனைத்து நியாய விலை கடைகளிலும் e-kyc பணிக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் அத்தியாவசிய பொருட்கள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்கள் முன்னுரிமை குடும்ப அட்டை PHH மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா AAY குடும்ப அட்டை வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து நபர்களின் ஆதார் விவரங்களை சரிபார்த்திட கைவிரல் ரேகை மற்றும் கருவிழி பதிவின் மூலம் உறுதி செய்யும் e-kyc பணி நடைபெற்று வருகிறது எனவே வருகின்ற 19ம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது எனவே மாவட்டத்தில் இதுவரை கைரேகை மற்றும் கருவிழி பதிவு செய்யாத அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் இந்த முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது
    1
    வரும் 19ஆம் தேதி தேனி மாவட்டத்தில் அனைத்து நியாய விலை கடைகளிலும் e-kyc பணிக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் அத்தியாவசிய பொருட்கள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்கள் முன்னுரிமை குடும்ப அட்டை PHH மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா AAY குடும்ப அட்டை வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து நபர்களின் ஆதார் விவரங்களை சரிபார்த்திட கைவிரல் ரேகை மற்றும் கருவிழி பதிவின் மூலம் உறுதி செய்யும் e-kyc பணி நடைபெற்று வருகிறது எனவே வருகின்ற 19ம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது எனவே மாவட்டத்தில் இதுவரை கைரேகை மற்றும் கருவிழி பதிவு செய்யாத அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் இந்த முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.