தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் 37 புதிய CCTV கேமராக்கள் – பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு காவல்துறை அதிரடி நடவடிக்கை..! தூத்துக்குடி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் காவல்துறை சார்பாக புதிதாக நிறுவப்பட்ட 37 சிசிடிவி கேமராக்கள் மற்றும் PA System ஒலிபெருக்கி அமைப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் இன்று துவக்கி வைத்தார். தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் இந்த நவீன கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை அறிவிப்புகளை வழங்க உயர்திறன் கொண்ட ஆம்பிளிஃபையர் மற்றும் 8 ஹாரன் ஸ்பீக்கர்களுடன் கூடிய PA System அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தின் வெளிப்புறத்தில் ஷேர் ஆட்டோ நிறுத்தம் முதல் கண்ணா சில்க்ஸ் பகுதி வரை இந்த ஒலிபெருக்கி வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த CCTV மற்றும் PA System அமைப்புகள் அனைத்தும் தூத்துக்குடி ஒருங்கிணைந்த நவீன CCTV காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரடியாக போலீசாரால் கண்காணிக்கப்படுவதுடன், அவசர சூழ்நிலைகளில் உடனடி தகவல் பரிமாற்ற வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில், சிக்னல் கோர் டெக்னோ சொல்யூசன்ஸ் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தூத்துக்குடி TMB வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

- அன்புVsதொல்லை !! உண்மையான அன்புக்கு இயங்குபவர்களுக்கு அது தொல்லையாக தெரியாது !!!1
- 2026 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னை அணி தட்டி சென்றது* *4 நாட்களாக நடைபெற்று வந்த போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடமும், மதுரை அணி மூன்றாம் இடத்தையும் பெற்றது* *2026 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னை அணி தட்டி சென்றது* *4 நாட்களாக நடைபெற்று வந்த போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடமும், மதுரை அணி மூன்றாம் இடத்தையும் பெற்றது* தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் மற்றும் தேனி மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் சார்பில் 2026 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி தேனியில் நடைபெற்றது தேனி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியானது இன்று 10-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்று முடிந்தது இந்த போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், சேலம், மதுரை, திருச்சி, திண்டுக்கல், அரியலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு வயது வாரியாக பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது நான்கு நாட்களாக நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி முதலாவது இடம் பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டி சென்றது, அவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது தொடர்ந்து இரண்டாம் இடத்தில் காஞ்சிபுரம் அணியும் மற்றும் மூன்றாம் இடத்தில் மதுரை அணியும் வெற்றி பெற்றது போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுச் சான்றிதல் வழங்கப்பட்டது இந்த போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வரக்கூடிய மாதங்களில் தொடர்ந்து நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என கிக் பாக்ஸிங் அசோசியேஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது1
- தர்பூசணி பழத்தில் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை செதுக்கி வடிவமைத்து வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த சிற்பக் கலைஞர்* *தர்பூசணி பழத்தில் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை செதுக்கி வடிவமைத்து வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த சிற்பக் கலைஞர்* தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று காலை முதலமைச்சராக பதவி ஏற்றார் அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றனர் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முதல் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டாடினர் இந்த நிலையில் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த காய்கறி சிற்பக் கலைஞரான இளஞ்செழியன் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தர்பூசணி பழத்தில் விஜயின் முகத்தை வடிவமைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் "தமிழ்நாடு அரசு" சின்னத்துடன் "முதலமைச்சர்" என்கிற வாசகத்துடனும் மற்றொரு தர்ப்பூசணி பழத்தில் விஜயின் புகைப்படத்துடன் வாழ்த்துக்கள் "தமிழ்நாடு சிஎம் 2026" என ஆங்கிலத்தில் வடிவமைத்து வித்தியாசமான முறையில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்1
- தர்பூசணி பழத்தில் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை செதுக்கி வடிவமைத்து வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த சிற்பக் கலைஞர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை முதலமைச்சராக பதவி ஏற்றார் அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றனர் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் பொது மக்களுக்கு இடுப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டாடினர் இந்த நிலையில் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த காய்கறி சிற்பக் கலைஞரான இளஞ்செழியன் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தர்பூசணி பழம் விஜயின் முகத்தை வடிவமைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் "தமிழ்நாடு அரசு" சின்னத்துடன் "முதலமைச்சர்" என்கிற வாசகத்துடனும் மற்றொரு தர்ப்பூசணி பழத்தில் விஜயின் புகைப்படத்துடன் வாழ்த்துக்கள் தமிழ்நாடு சிஎம் என ஆங்கிலத்தில் வடிவமைத்து வித்தியாசமான முறையில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்1
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு மாதங்களுக்கு பிறகு துவங்கிய மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் - அதிகாரிகள் செல்போன் பார்க்கும் அவலம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு 2 மாதங்களுக்கு பின்பு இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது பிரச்சனைகளை மனுக்களாக அளிக்க வந்தவர்களுக்கு போதுமான இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை மேலும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள ஒரு சில அதிகாரிகள் செல்போன் பார்த்து கொண்டும், செல்போன் பேசிக் கொண்டும் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் செல்போனை பயன்படுத்தினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நடந்த இந்தக் கூட்டத்தில் அலுவலர்களின் அலட்சியம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.1
- தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஒரு மாணவனின் செயலால் கிராம மக்கள் அதிர்ச்சியில் கண்ணீர் சிந்தினர். குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த பரபரப்பு சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.1
- கௌமாரியம்மன் கோவில் அருகே ராட்டினம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது தேனி அருகே உள்ள வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நாளை முதல் எட்டு நாட்கள் நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வருகை தர உள்ளனர் இதனால் கோவில் அருகே உள்ள மைதானத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மாணவர்கள் பொழுதுபோக்குக்காக ராட்டினம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது1
- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீர்மரபினர் நல சங்கம் சார்பில் முக்கிய மனு அளிக்கப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பின்போது ஓபிசி மற்றும் டிஎன்டி வகுப்பினரின் புள்ளிவிவரங்களை கட்டாயம் சேர்க்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. மத்திய அரசு இதை புறக்கணிப்பது அநீதி என்றும், நடைபெறவிருக்கும் சென்சஸ் கணக்கெடுப்பின்போது இந்த தரவுகளைச் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.2