logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK

16 hrs ago
user_RR AARI WORK
RR AARI WORK
Tailor சிவகாசி, விருதுநகர், தமிழ்நாடு•
16 hrs ago
1bbe0a54-a9cd-4da7-9255-8bd391d3ef31
fa1cf2a1-4286-49a0-aace-e0132b87cbca

RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK

More news from தமிழ்நாடு and nearby areas
  • RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK
    1
    RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse,
RR AARI WORK
    user_RR AARI WORK
    RR AARI WORK
    Tailor சிவகாசி, விருதுநகர், தமிழ்நாடு•
    34 min ago
  • வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு  வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்காக ஆகஸ்ட் 25 முதல் 28- ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தாணிப்பாறை வழியாக காலை 6 முதல் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்  சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் பிற்பகல் 4 மணிக்கு மேல் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சதுரகிரி மலையில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
    1
    வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு 
வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு  நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்காக ஆகஸ்ட் 25 முதல் 28- ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தாணிப்பாறை வழியாக காலை 6 முதல் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்  சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் பிற்பகல் 4 மணிக்கு மேல் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சதுரகிரி மலையில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • அருப்புக்கோட்டை காந்திநகரில் தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு அவர்கள் ரசிகர்கள் ஏழை மக்களுக்கு முட்டை பிரியாணி மற்றும் சேது ராஜபுரம் கிராமத்தில் உள்ள அன்னை முதியோர் இல்லத்தில் சிக்கன் பிரியாணியுடன் அன்னதானமும் புதிய ஆடைகள் வழங்கியதோடு இனிப்புகள் வழங்கி பிறந்த நாளை கொண்டாடினார் தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கார், வேன் மெக்கானிக்குகளாக வேலை செய்து வரும் அவரது ரசிகர்கள் ஒன்று சேர்ந்து ஏழை மக்களுக்கு முட்டை பிரியாணி அன்னதானமாக வழங்கினர். முன்னதாக காந்திநகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அங்கிருந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தாங்களாக முன்வந்து விஜயகாந்த் திருவுருவப்படத்தை தொட்டு வணங்கி மரியாதை செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பொதுமக்களுக்கும், பேருந்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. விஜயகாந்த் ரசிகர்கள் ஒன்று கூடி அனைவருக்கும் முட்டை பிரியாணி அன்னதானமாக வழங்கியதை பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கி சென்றனர். இதில் விஜயகாந்த் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை காந்திநகரில் உள்ள பொன்னுச்சாமி - விஜயலட்சுமி தனியார் குடும்பத்தினரும் சேது ராஜபுரம் கிராமத்தில் உள்ள அன்னை முதியோர் இல்லத்திலும் ஆதரவற்ற முதியோர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கியதோடு புதிய ஆடைகளும் வழங்கினர் முதியோர்கள் தெய்வதிரு கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பிரார்த்தனை செய்து வழிபாடு செய்தனர்
    1
    அருப்புக்கோட்டை காந்திநகரில் தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு அவர்கள் ரசிகர்கள் ஏழை மக்களுக்கு முட்டை பிரியாணி  மற்றும் சேது ராஜபுரம் கிராமத்தில் உள்ள அன்னை முதியோர் இல்லத்தில் சிக்கன் பிரியாணியுடன் அன்னதானமும் புதிய ஆடைகள்  வழங்கியதோடு இனிப்புகள் வழங்கி பிறந்த நாளை கொண்டாடினார்
தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கார், வேன் மெக்கானிக்குகளாக வேலை செய்து வரும் அவரது ரசிகர்கள் ஒன்று சேர்ந்து ஏழை மக்களுக்கு முட்டை பிரியாணி அன்னதானமாக வழங்கினர். முன்னதாக காந்திநகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அங்கிருந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தாங்களாக முன்வந்து விஜயகாந்த் திருவுருவப்படத்தை தொட்டு வணங்கி மரியாதை செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பொதுமக்களுக்கும், பேருந்து  பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. விஜயகாந்த் ரசிகர்கள் ஒன்று கூடி அனைவருக்கும் முட்டை பிரியாணி அன்னதானமாக வழங்கியதை பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கி சென்றனர். இதில் விஜயகாந்த் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை காந்திநகரில் உள்ள பொன்னுச்சாமி - விஜயலட்சுமி தனியார் குடும்பத்தினரும் சேது ராஜபுரம் கிராமத்தில் உள்ள அன்னை முதியோர் இல்லத்திலும் ஆதரவற்ற முதியோர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கியதோடு புதிய ஆடைகளும் வழங்கினர்  
முதியோர்கள் தெய்வதிரு கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பிரார்த்தனை செய்து வழிபாடு செய்தனர்
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    16 hrs ago
  • தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் அடிப்படையிலும், பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகும் தான் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது : தங்கம் தென்னரசு. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய முன்னாள் அமைச்சரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு, பரந்தூர் விமான நிலையத் திட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது என்பதை நான் நேற்றைய செய்தியாளர் சந்திப்பிலேயே விரிவாக விளக்கியிருந்தேன். சென்னை நகரின் புவியியல் அமைப்பிலேயே, வேறு எந்த இடத்திற்கும் விமான நிலையத்தை மாற்றுவது சாத்தியமில்லை என்பது புரியும். விமான நிலையம் அமைத்திட நாங்கள் நேரடியாக சென்று உடனடியாக பரந்தூரைத் தேர்வு செய்துவிடவில்லை. பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்ட பிறகே இந்த பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. ஒரு விமானநிலையத்தை அமைப்பதற்கு முன்பு இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதற்காக சோழிங்கநல்லூர், படாளம், பன்னூர் உள்ளிட்ட பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால் ஒவ்வொரு இடத்திலும் தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு காரணங்களினால் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. சென்னையின் கிழக்குப் பகுதியில் வங்கக்கடல் இருப்பதால் அங்கு விமான நிலையம் அமைக்க இயலாது. வடக்குப் பகுதியில் மணலி, எண்ணூர் உள்ளிட்ட தொழிற்பேட்டைகள் உள்ளன. பழவேற்காடு ஏரி போன்ற இடங்கள் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக உள்ளன. எனவே அந்தப் பகுதிகளும் பொருத்தமற்றதாக கருதப்பட்டன. இதைத்தொடர்ந்து, தெற்குப் பகுதியில் சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால் அவை தாம்பரம் விமானப்படைத் தளத்தின் வான்வெளிக்கு அருகில் இருப்பதால் அங்கு விமான நிலையம் அமைப்பது சாத்தியமில்லை. மேலும் தெற்கில் கல்பாக்கம் அணுமின் நிலையமும், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமும் உள்ளன. எனவே அந்தப் பகுதிகளும் நிராகரிக்கப்பட்டன. இதன் காரணமாகவே மேற்குப் பகுதியில் விமானநிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய நேரிட்டது. அப்போது பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகிய இரண்டு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த இரு இடங்களுக்கும் இடையில் விரிவான ஒப்பீட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் பணிகள் துவங்கின. முன்னதாக, ஒரு இடத்தைத் தேர்வு செய்யும்போது தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் முக்கியமாக பார்க்கப்படுகின்றன. அந்தப் பகுதியில் உயரழுத்த மின் கம்பிகள், பெரிய தொழிற்சாலைகள் இருந்தால் அவற்றை இடமாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுமா போன்ற அம்சங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோல், எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் நிலம் தேவைப்படுகிறது. குறிப்பாக, நிலம் கையகப்படுத்தப்படும்போது அப்பகுதியில் வாழும் மக்களை இடமாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். எனவே தேர்வு செய்யப்படும் இடத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே பாதிக்கப்படுவதை கணக்கிட்டு உறுதிசெய்யவேண்டும். இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில்தான் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. மேலும் நிலத்தின் விலை உள்ளிட்ட பொருளாதார காரணிகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. எனவே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதற்குப் பின்னால் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. இது முழுக்க முழுக்க தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். இதில் மாநில அரசு மட்டுமல்ல, ஒன்றிய அரசும் ஈடுபட்டுள்ளது. பல்வேறு இடங்களை ஆய்வு செய்த பிறகு, இந்திய குடிமை விமானப் போக்குவரத்து அமைச்சகம் இறுதியாக பரந்தூருக்கே ஒப்புதல் வழங்கியது. அதனால்தான் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. அதைத்தாண்டி தனிநபர் விருப்பத்திற்காக எதுவும் செய்யப்படவில்லை. இப்போது மாற்று இடங்களை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் எந்த புதிய இடத்தை ஆய்வு செய்தாலும் இதே போன்ற சிக்கல்கள் எழும். அங்கும் விவசாய நிலங்கள் இருக்கும்; அங்கும் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கும்; அங்கும் மக்கள் பாதிக்கப்படக்கூடும். அதே மதிப்பீடுகளை மீண்டும் நீங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்தத் திட்டம் பல ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள், அனுமதி நடைமுறைகளைக் கடந்து இன்றைய நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையில் அதை கைவிட்டால், மீண்டும் இதுபோன்ற ஒரு திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது கேள்விக்குறியாகிவிடும். சிலர் தற்போதைய சென்னை விமான நிலையத்தையே விரிவுபடுத்தலாம் என்று கூறுகின்றனர். ஆனால் அங்கு இரண்டாவது ஓடுபாதை அமைப்பது எப்படி சாத்தியமாகும். சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள மக்கள் அடர்த்தியை கருத்தில் கொண்டால், மீனம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் எத்தனை பேரை இடமாற்றம் செய்ய வேண்டியிருக்கும். அங்கு ஏற்படும் சமூக மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் இதைவிட அதிகமாக இருக்கும். ஆகவே, பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடரப்பட வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. ஏற்கனவே அப்பகுதியில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட பட்டா நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் திட்டத்தை கைவிடுவது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கே பாதகமாக இருக்கும். ஒருபுறம் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்று கூறிக்கொண்டே, மறுபுறம் அதற்கு அடித்தளமாக அமையும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை எதிர்ப்பது முரண்பாடான நிலைப்பாடாகும்.இதுதான் எங்களுடைய நிலைப்பாடு, அதைத்தான் நாங்கள் விளக்குகிறோம் எனக்கூறினார்.
    1
    தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் அடிப்படையிலும், பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகும் தான் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது :  தங்கம் தென்னரசு.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய முன்னாள் அமைச்சரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு, பரந்தூர் விமான நிலையத் திட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது என்பதை நான் நேற்றைய செய்தியாளர் சந்திப்பிலேயே விரிவாக விளக்கியிருந்தேன். சென்னை நகரின் புவியியல் அமைப்பிலேயே, வேறு எந்த இடத்திற்கும் விமான நிலையத்தை மாற்றுவது சாத்தியமில்லை என்பது புரியும். விமான நிலையம் அமைத்திட நாங்கள் நேரடியாக சென்று உடனடியாக பரந்தூரைத் தேர்வு செய்துவிடவில்லை. பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்ட பிறகே இந்த பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.
ஒரு விமானநிலையத்தை அமைப்பதற்கு முன்பு இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதற்காக சோழிங்கநல்லூர், படாளம், பன்னூர் உள்ளிட்ட பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால் ஒவ்வொரு இடத்திலும் தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு காரணங்களினால் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை.
சென்னையின் கிழக்குப் பகுதியில் வங்கக்கடல் இருப்பதால் அங்கு விமான நிலையம் அமைக்க இயலாது. வடக்குப் பகுதியில் மணலி, எண்ணூர் உள்ளிட்ட தொழிற்பேட்டைகள் உள்ளன. பழவேற்காடு ஏரி போன்ற இடங்கள் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக உள்ளன. எனவே அந்தப் பகுதிகளும் பொருத்தமற்றதாக கருதப்பட்டன.
இதைத்தொடர்ந்து, தெற்குப் பகுதியில் சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால் அவை தாம்பரம் விமானப்படைத் தளத்தின் வான்வெளிக்கு அருகில் இருப்பதால் அங்கு விமான நிலையம் அமைப்பது சாத்தியமில்லை. மேலும் தெற்கில் கல்பாக்கம் அணுமின் நிலையமும், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமும் உள்ளன. எனவே அந்தப் பகுதிகளும் நிராகரிக்கப்பட்டன.
இதன் காரணமாகவே மேற்குப் பகுதியில் விமானநிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய நேரிட்டது. அப்போது பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகிய இரண்டு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த இரு இடங்களுக்கும் இடையில் விரிவான ஒப்பீட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் பணிகள் துவங்கின. 
முன்னதாக, ஒரு இடத்தைத் தேர்வு செய்யும்போது தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் முக்கியமாக பார்க்கப்படுகின்றன. அந்தப் பகுதியில் உயரழுத்த மின் கம்பிகள், பெரிய தொழிற்சாலைகள் இருந்தால் அவற்றை இடமாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுமா போன்ற அம்சங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன.
அதேபோல், எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் நிலம் தேவைப்படுகிறது. குறிப்பாக, நிலம் கையகப்படுத்தப்படும்போது அப்பகுதியில் வாழும் மக்களை இடமாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். எனவே தேர்வு செய்யப்படும் இடத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே பாதிக்கப்படுவதை கணக்கிட்டு உறுதிசெய்யவேண்டும். இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில்தான் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. மேலும் நிலத்தின் விலை உள்ளிட்ட பொருளாதார காரணிகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
எனவே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதற்குப் பின்னால் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. இது முழுக்க முழுக்க தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். இதில் மாநில அரசு மட்டுமல்ல, ஒன்றிய அரசும் ஈடுபட்டுள்ளது. பல்வேறு இடங்களை ஆய்வு செய்த பிறகு, இந்திய குடிமை விமானப் போக்குவரத்து அமைச்சகம் இறுதியாக பரந்தூருக்கே ஒப்புதல் வழங்கியது. அதனால்தான் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. அதைத்தாண்டி தனிநபர் விருப்பத்திற்காக எதுவும் செய்யப்படவில்லை. 
இப்போது மாற்று இடங்களை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் எந்த புதிய இடத்தை ஆய்வு செய்தாலும் இதே போன்ற சிக்கல்கள் எழும். அங்கும் விவசாய நிலங்கள் இருக்கும்; அங்கும் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கும்; அங்கும் மக்கள் பாதிக்கப்படக்கூடும். அதே மதிப்பீடுகளை மீண்டும் நீங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்தத் திட்டம் பல ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள், அனுமதி நடைமுறைகளைக் கடந்து இன்றைய நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையில் அதை கைவிட்டால், மீண்டும் இதுபோன்ற ஒரு திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது கேள்விக்குறியாகிவிடும்.
சிலர் தற்போதைய சென்னை விமான நிலையத்தையே விரிவுபடுத்தலாம் என்று கூறுகின்றனர். ஆனால் அங்கு இரண்டாவது ஓடுபாதை அமைப்பது எப்படி சாத்தியமாகும். சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள மக்கள் அடர்த்தியை கருத்தில் கொண்டால், மீனம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் எத்தனை பேரை இடமாற்றம் செய்ய வேண்டியிருக்கும். அங்கு ஏற்படும் சமூக மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் இதைவிட அதிகமாக இருக்கும். 
ஆகவே, பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடரப்பட வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. ஏற்கனவே அப்பகுதியில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட பட்டா நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் திட்டத்தை கைவிடுவது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கே பாதகமாக இருக்கும்.
ஒருபுறம் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்று கூறிக்கொண்டே, மறுபுறம் அதற்கு அடித்தளமாக அமையும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை எதிர்ப்பது முரண்பாடான நிலைப்பாடாகும்.இதுதான் எங்களுடைய நிலைப்பாடு, அதைத்தான் நாங்கள் விளக்குகிறோம் எனக்கூறினார்.
    user_குமார்
    குமார்
    Firefighter Kariapatti, Virudhunagar•
    18 hrs ago
  • டாஸ்மாக் கடைகள் விடுமுறை: மதுபான கடைகளில் குவிந்த மது பிரியர்கள். தமிழகத்தில் மிலாடி நபியை முன்னிட்டு நாளை (ஆக.26) டாஸ்மார்க் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து இன்று (ஆக.25) இரவில் மதுரை நகரில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று தங்களுக்கு வேண்டிய மது பாட்டில்களை வாங்கி சென்றார்கள்.
    1
    டாஸ்மாக் கடைகள் விடுமுறை: மதுபான கடைகளில் குவிந்த மது பிரியர்கள்.
தமிழகத்தில் மிலாடி நபியை முன்னிட்டு நாளை  (ஆக.26) டாஸ்மார்க் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டு கடைகள்  அடைக்கப்படும் என்று  தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து இன்று (ஆக.25) இரவில் மதுரை நகரில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று தங்களுக்கு வேண்டிய மது பாட்டில்களை வாங்கி சென்றார்கள்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    10 hrs ago
  • கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் மாற்று திறனாளிகள் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் மாற்றுத்திறனாளிகளின் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கயத்தாறு ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் காந்திராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜெபஸ்டின்ராஜ், மாவட்ட துணைச் செயலாளர் எம். சாலமுன்ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் சரோஜா, கோவில்பட்டி நகர செயலாளர் குருநாதன், நகர குழு உறுப்பினர்கள் திருப்பதி, செல்வராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையாவது மாதந்தோறும் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூபாய் 6000 ஆக உயர்த்தக் கோரியும், மாற்றுத்திறனாளிகள் உதவி த்தொகைக்காக வழங்கப்பட்ட அனைத்து மனுக்களையும் உடனடியாக பரிசீலனை செய்து உடனடியாக உதவித்தொகை வழங்கும்படியும், தமிழக அரசு அறிவித்துள்ள வெற்றி வீடு திட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாற்றுத்திறனாளிகள் கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    4
    கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் மாற்று திறனாளிகள்  கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் 
கயத்தாறில்  மதுரை மெயின் ரோட்டில் மாற்றுத்திறனாளிகளின் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கயத்தாறு ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் காந்திராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்  தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜெபஸ்டின்ராஜ், மாவட்ட துணைச் செயலாளர் எம். சாலமுன்ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் சரோஜா, கோவில்பட்டி நகர செயலாளர் குருநாதன், நகர குழு உறுப்பினர்கள் திருப்பதி, செல்வராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையாவது  மாதந்தோறும் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூபாய் 6000 ஆக உயர்த்தக் கோரியும், மாற்றுத்திறனாளிகள் உதவி த்தொகைக்காக  வழங்கப்பட்ட அனைத்து மனுக்களையும் உடனடியாக பரிசீலனை செய்து உடனடியாக உதவித்தொகை வழங்கும்படியும், தமிழக அரசு அறிவித்துள்ள வெற்றி வீடு திட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாற்றுத்திறனாளிகள் கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    user_பூல்பாண்டி
    பூல்பாண்டி
    Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • கயத்தாறில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது* தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தினை மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய செயலாளர் காந்திராஜ் தலைமையில் கயத்தாறு பஜாரில் வைத்து நடைபெற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சாலமன் ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் தமிழகத்தில் ஏற்கனவே வழங்கப்படும் 1500 ரூபாய்க்கு பதிலாக ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களைப் போலவே மாதந்தோறும் 6 ஆயிரம் வழங்க வலியுறுத்தியும். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உதவித்தொகை விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை உடனடியாக வழங்கவும். மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் மட்டும் திருநங்கை இலவசமாக பயணிக்கும் வெற்றி பயணத் திட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் திட்டத்தில் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் தமிழக அரசே கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்
    2
    கயத்தாறில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது*
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தினை
மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய செயலாளர் காந்திராஜ் தலைமையில் கயத்தாறு பஜாரில் வைத்து நடைபெற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சாலமன் ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
தமிழகத்தில் ஏற்கனவே வழங்கப்படும் 1500 ரூபாய்க்கு பதிலாக ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களைப் போலவே மாதந்தோறும் 6 ஆயிரம் வழங்க வலியுறுத்தியும். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உதவித்தொகை விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை உடனடியாக வழங்கவும். மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் மட்டும் திருநங்கை இலவசமாக பயணிக்கும் வெற்றி பயணத் திட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் திட்டத்தில் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் தமிழக அரசே கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்
    user_MAYILVAGANAN REPORTER
    MAYILVAGANAN REPORTER
    Photographer கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் குவிந்த பக்தர்கள் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் இன்று (25.08.2026) செவ்வாய்க்கிழமை அங்காரக வார பிரதோசத்தை முன்னிட்டு மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனர்.
    1
    இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் குவிந்த பக்தர்கள் 
மதுரை  பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் இன்று 
(25.08.2026) செவ்வாய்க்கிழமை  அங்காரக வார பிரதோசத்தை முன்னிட்டு  மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    11 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.