காப்பாற்ற முயற்சி சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், வட்டாட்சியரின் கடிதத்திற்கும், மன்னிப்பு கேட்காதீங்க.. நடவடிக்கை எடுங்க.. விஜய்க்கு சிபிஎம் சண்முகம் கடிதம்! கூட்டணியில் சலசலப்பு! இந்திய கம்யூனிஸட் கட்சி (சிபிஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) குறித்தும், இக்கட்சிகளின் மாணவர் அமைப்புகள் மற்றும் கரப்பான் ஜனதாக கட்சி குறித்தும் சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டிருந்த உத்தரவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் உரிய பதிலளிக்க வேண்டும் என்று சிபிஎம் விஜய்க்கு கடிதம் எழுதியிருக்கிறது. அக்கடிததத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவாக, இடதுசாரி இயக்கங்கள் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினரின் போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்பதைத் தடுப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செயல்பட வேண்டும் என்ற சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. விஜய் விளக்கம் தரணும் இது உயரிய முன்னுரிமை என்றும் மிக அவசரம் என்றும் வகைப்படுத்தப்பட்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை (action taken report) கோரப்பட்டுள்ளது. இது முற்றிலும் சட்டவிரோதமானதும், அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள போராட்ட உரிமையை மறுப்பதும் ஆகும். இது திட்டமிட்டு இடதுசாரி அமைப்புகளைக் குறி வைக்கிற செயல் என்கிற முறையில் எங்களது கடும் கண்டனத்தைத் தெரியப்படுத்துகிறோம். அரசின் அதிகார கட்டமைப்பில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் தலைமைச் செயலாளர் எடுக்கும் முடிவு அரசின் முடிவாகவே கருதப்படும். எனவே, இதுகுறித்து தாங்கள் விளக்கம் அளிப்பது அவசியம். நடவடிக்கை தேவை இடதுசாரி அமைப்புகள் மட்டுமல்ல, எந்தவொரு அமைப்பும் போராடுவதற்கு உரிமை உண்டு. அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையை ஒடுக்குவதற்கு, பல்துறை ஒருங்கிணைப்பை செயல்படுத்துவது அரசமைப்பு சட்டத்திற்கு முரணானதாகும். காவல்துறை உட்பட கல்வி வளாகங்களுக்குள் சென்று நடவடிக்கை எடுக்கும் சட்டவிரோத செயலை அங்கீகரிப்பதாகும். எனவேதான், தலைமை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், ஜனநாயக இயக்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், உயர் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அவர்களின் முடிவை கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்த இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்டுவிட்டோம் என்று சொல்வது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல; பொருத்தமானதும் அல்ல. மன்னிப்பு போதாது உயர்கல்வித் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் மன்னிப்பு கோரியிருக்கிறார். நாங்கள் யாரிடமும் மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. மாறாக, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை என்பதையே வலியுறுத்தியிருக்கிறோம்; இப்போதும் வலியுறுத்துகிறோம். இதுகுறித்து அரசு தரப்பிலிருந்து இதுவரையிலும் பொறுப்பான பதில் ஏதும் சொல்லப்படவில்லை. மென்மையான அணுகுமுறை திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டாட்சியர், அந்த வட்டத்திற்குட்பட்ட CPI(M), CPI கட்சிகளின் உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் சேகரிக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இது நேரடியான அச்சுறுத்தல் மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதும், தனது பதவியை தவறாக பயன்படுத்துவதும் ஆகும். இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லாமல் அவரது பயிற்சி காலம் முடிந்ததால் இடமாறுதல் செய்வதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்திருந்தார். பிறகு அவருக்கு அரசு ஊழியர் நடத்தை விதிகள் 17 A-யின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதாவது இது சிறு குற்றமாக மட்டுமே அரசால் கருதப்பட்டு மென்மையாக அணுகப்படுகிறது. காப்பாற்ற முயற்சி சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், வட்டாட்சியரின் கடிதத்திற்கும், அரசுக்கும் சம்பந்தமில்லை; சொந்த விருப்பு, வெறுப்பு அடிப்படையில் அவர் அந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார். வட்டாட்சியரின் சட்டவிரோதமான இந்த செயலுக்கு அமைச்சரின் பதிலும், துறையின் நடவடிக்கையும் எந்தவகையிலும் பொருத்தமானதல்ல. அரசுப் பதவியில் உள்ள ஒருவர் தனிப்பட்ட நோக்கத்திற்காக செய்தார் (abuse of power) என்றால் அது கடுமையான குற்றமாகும். ஆனால், இதற்குமேல் எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்கிற முறையில் அமைச்சர் பதிலளித்திருப்பதும், 17 A பிரிவின் கீழ் விளக்கம் கேட்டிருப்பதும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரை அவருடைய தவறுக்கு தண்டிப்பதற்கு பதிலாக, அவரை பாதுகாப்பதற்கான முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது. விஜய் தலையிடணும் எனவே, முதலமைச்சர் இந்த பிரச்சனையில் தலையிட்டு, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் உட்பட தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தலைமைச் செயலாளர் பங்கேற்ற கூட்டத்தின் முடிவு ரத்து செய்யப்பட்டு, அந்த சுற்றறிக்கை முழுமையாகத் திரும்பப் பெறப்பட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம்" என சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்திருக்கிறார்.

- நேபாளில் வெள்ளம் கோரத்தாண்டவம்..... சோகம் நிறைந்த மக்கள்....1
- திருவொற்றியூர் பட்டினத்தார் கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திடீர் தரிசனம்! சென்னை, ஆக.27:- திருவொற்றியூர் திருத்தலங்களில் ஒன்றான பட்டினத்தார் திருக்கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திடீர் தரிசனம் மேற்கொண்டார். திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலுக்கு அவர் அவ்வப்போது வருகை தந்து தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் பட்டினத்தார் திருக்கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தது ஆன்மீக பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.1
- *காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடைபெற்றது* . *காஞ்சிபுரம்ஆக.28* காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று சமரச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த சமரச விழிப்புணர்வு முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி திரு. நாகராஜன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி திரு.எஸ். நாகராஜன் அவர்கள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு சிவில் வழக்குகள், பாக வழக்குகள், குடும்ப நல வழக்குகள், தொழிலாளர் நீதிமன்ற வழக்குகள், விபத்து வழக்குகள், சிறு குற்ற வழக்குகள் உள்ளிட்ட 10 கும் மேற்பட்ட வழக்குகளை மக்கள் தாங்கலாகவே தீர்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் எனவும், இதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை உள்ளது எனவும், இதை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்களுக்காகவே சிறப்பு அமர்வுகள் அமர்த்தப்பட்டுள்ளது எனவும், மாவட்ட நீதிமன்றத்தின் சார்பிலும் வழக்கறிஞர்கள் சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன் என காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி திரு.எஸ். நாகராஜ் அவர்கள் தெரிவித்தார். இந்த சமரச விழிப்புணர்வு முகாமில் மாவட்ட கூடுதல் நீதிபதி மோகன குமாரி, தலைமை அலுவலர் தொழிலாளர் நீதிமன்றம் சுஜாதா, மாவட்ட சிறப்பு நீதிபதி பாண்டியராஜ், முதன்மை துணை நீதிபதி மோகனா, கூடுதல் துணை நீதிபதி முகமது அலி, மாவட்ட முதன்மை முன் சிப் ஃபண்ணி ராஜன், கூடுதல் மாவட்ட முன்சீப் சந்தியா தேவி, சக்தி மகேஷ் குமார், நவீன் துரை பாபு உள்பட ஆண், பெண், வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்... *காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடைபெற்றது* . *காஞ்சிபுரம்ஆக.28* காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று சமரச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த சமரச விழிப்புணர்வு முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி திரு. நாகராஜன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி திரு.எஸ். நாகராஜன் அவர்கள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு சிவில் வழக்குகள், பாக வழக்குகள், குடும்ப நல வழக்குகள், தொழிலாளர் நீதிமன்ற வழக்குகள், விபத்து வழக்குகள், சிறு குற்ற வழக்குகள் உள்ளிட்ட 10 கும் மேற்பட்ட வழக்குகளை மக்கள் தாங்கலாகவே தீர்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் எனவும், இதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை உள்ளது எனவும், இதை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்களுக்காகவே சிறப்பு அமர்வுகள் அமர்த்தப்பட்டுள்ளது எனவும், மாவட்ட நீதிமன்றத்தின் சார்பிலும் வழக்கறிஞர்கள் சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன் என காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி திரு.எஸ். நாகராஜ் அவர்கள் தெரிவித்தார். இந்த சமரச விழிப்புணர்வு முகாமில் மாவட்ட கூடுதல் நீதிபதி மோகன குமாரி, தலைமை அலுவலர் தொழிலாளர் நீதிமன்றம் சுஜாதா, மாவட்ட சிறப்பு நீதிபதி பாண்டியராஜ், முதன்மை துணை நீதிபதி மோகனா, கூடுதல் துணை நீதிபதி முகமது அலி, மாவட்ட முதன்மை முன் சிப் ஃபண்ணி ராஜன், கூடுதல் மாவட்ட முன்சீப் சந்தியா தேவி, சக்தி மகேஷ் குமார், நவீன் துரை பாபு உள்பட ஆண், பெண், வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்...1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- திருவண்ணாமலை சூனியம் பருவதமலை கடலாடி என்ற ஊர் சுடிதார் பை சூனியம் மினாடி பண்டிகை சூனியத்துக்காக வந்ததா இந்த மதத்தை எவரும் நம்பாதீர்கள் திருவண்ணாமலையில் சூனியம் பருவதமலை பக்கம் கடல் அலைகின்ற ஊர் சுவிதா பாய் சூனியக்காரன் இவரால் முற்படும்பம் அளிக்கிறது குடும்பத் தலைவன் அழிகிறான் பணம் கட்டுமரட்டுகிறான் காதுக்குள்ளே வந்து பேசிகிட்டு எரிச்சல் கொடுத்துவிட்டு பணம் கேட்டு மிரட்டுறான் மதம் மாற சொல்றான் முடியல ரொம்ப முடியாம தான் வருது சீக்கிரமா உள்ள தள்ற வரைக்கும் கொடுத்துட்டே இருப்பான் வீடியோ1
- கடலூர் மாவட்டத்தில் இன்று எந்தெந்த இடங்களில் எவ்வளவு மிமீ மழை பதிவு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக நேற்று மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 27) காலை 8.30 மணி நிலவரப்படி பண்ருட்டியில் 4 மில்லி மீட்டர், வானமாதேவி 3 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 0.40 மில்லி மீட்டர், கடலூர் 0.20 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 7.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.1
- தமிழ்நாட்டில் எச்சரிக்கை அவசியம். நேபாளத்தில் ஏற்பட்டதாக பகிரப்படும் இந்த அதிர்ச்சியூட்டும் காணொளியில், மலைப்பகுதியில் திடீரென பெருக்கெடுத்து வரும் மண் மற்றும் வெள்ளநீர், குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை சூழ்ந்து அடித்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இயற்கை சீற்றம் ஏற்படும் நேரங்களில் நீரின் இயல்பான பாதையை ஆக்கிரமிப்பது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த காட்சிகள் உணர்த்துகின்றன. நீர்வழிப்பாதைகளின் இருபுறமும் குறைந்தபட்சம் 50 மீட்டர் வரை எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்ற கருத்தும் இதில் வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக மலைப்பிரதேசங்களில், நில அமைப்பு மற்றும் மழைப்பொழிவை கருத்தில் கொண்டு இந்த பாதுகாப்பு இடைவெளி மேலும் அதிகமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. நீர்வழிப்பாதைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமானங்களை அரசு அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் இருப்பின் பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்காமல் விட்டால், இயற்கை பேரிடர்கள் ஏற்படும் நேரத்தில் அந்த ஆக்கிரமிப்புகளே மிகப்பெரிய பாதிப்புகளுக்கு காரணமாக மாறக்கூடும். இயற்கை தனது பாதையை மீட்டெடுக்கும் போது ஏற்படும் சேதங்களை பணத்தால் ஈடு செய்ய முடிந்தாலும், மனித உயிரிழப்புகளை ஒருபோதும் ஈடு செய்ய முடியாது. எனவே, நேபாளத்தில் பகிரப்படும் இந்த பேரிடர் காட்சிகளை ஒரு எச்சரிக்கை பாடமாக எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள நீர்வழிப்பாதைகள், ஓடைகள், கால்வாய்கள் மற்றும் மழைநீர் செல்லும் இயற்கை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக கண்டறிந்து அகற்ற வேண்டும். குறிப்பாக மலை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். “இயற்கையின் பாதையை மறிக்காதீர்; இல்லையெனில் பேரிடர் நேரத்தில் அதன் விளைவுகளை மனிதர்களே சந்திக்க நேரிடும்” என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடமும், அதிகாரிகளிடமும் ஏற்படுத்துவது அவசியமாகிறது.1
- மறைந்த அ.தி.மு.க. நிர்வாகி பாபு படத்திற்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், மாவட்ட பொறுப்பாளர் சி.பி.மூவேந்தன் மலர்தூவி அஞ்சலி! சென்னை, ஆக.26:- ஆர்.கே.நகர் 42-வது வட்டம் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் மறைந்த வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட முன்னாள் அம்மா பேரவை செயலாளர் இ.பாபுவின் திருவுருவப் படத்திறப்பு விழா கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட இணைச் செயலாளர் கே.பாலசுப்பிரமணி தலைமை நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான டி.ஜெயக்குமார், வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட பொறுப்பாளரும், கழக அம்மா பேரவை மாநில துணைச் செயலாளருமான டாக்டர் சி.பி.மூவேந்தன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மறைந்த இ.பாபுவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் நேதாஜி கணேசன், ஜனார்த்தனன், சந்தனசிவா, எஸ்.எம்.மாரிமுத்து, ஏ.டி.அரசு, லட்சுமி சிவகுமார், பி.ஜெகன், கவுனர்கான், ஓ.ஏ.ரவிராஜன், வண்ணை கணபதி, பவானி வெங்கடேசன், பகுதி துணை செயலாளர், லயன் ஈ.சண்முகவினாயகம், வட்ட கழக செயலாளர்கள் ஜெசிபிஎஸ் சுரேஷ், எம். சீனிவாசன், வி.எஸ். புருஷோத்தமன், ஆர்.சிவகுமார், கே.எஸ்.மூர்த்தி,லிங்கேசன், அருண்பிரசாத், மற்றும் நிர்வாகிகள் டி.ஹரிதாஸ், ஏ.ஆர். ஏழுமலை, வேலுமேஸ்திரி, ஜி.ராஜசேகரன், எம்.ஜெய்சங்கர், டி.கேப்ரியல், இரா.முரளிமுருகன், எம். கண்ணியப்பன், ஜீவிதா, ஜி.எச்.ரமேஷ், மனோகரன், நாகலிங்கம், சங்கீதா, விஜி, சி.பாலு,எல்.பெரியசாமி, ஆர்.விஸ்வநாதன், எம். ஹரிகிருஷ்ணன், தா.மணிமாறன், மற்றும் மறைந்த பாபுவின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.1