டி.டி.சி.பி. அனுமதி பெற்றுத் தருவது என பல்வேறு நடைமுறைகளுக்காகத் தனியார் பள்ளிகளிடம் இருந்து சுமார் ரூ.100 கோடி வரை லஞ்சமாக வசூலிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் அதிரடிச் சோதனை நடைபெற்று வருகிறது.  தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தி வருகின்றனர். திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தனியார் பள்ளி நிர்வாகங்களுக்குப் புதிய அங்கீகாரம் வழங்குவது, தர உயர்வு அளிப்பது மற்றும் டி.டி.சி.பி. அனுமதி பெற்றுத் தருவது என பல்வேறு நடைமுறைகளுக்காகத் தனியார் பள்ளிகளிடம் இருந்து சுமார் ரூ.100 கோடி வரை லஞ்சமாக வசூலிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய பி.டி. அரசகுமார் என்பவருக்குச் சொந்தமான இடங்களில் ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையில், முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சான்றுகள் கைப்பற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தற்போது, சென்னை மற்றும் திருச்சி உட்பட 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால், கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் வீட்டில் நடைபெற்று வரும் இந்த அதிரடிச் சோதனை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- கோவில்பட்டி எழுத்தாளர் கி ராஜநாராயணன் 104வது பிறந்தநாள் விழா / காணொளி கோவில்பட்டி எழுத்தாளர் கி ராஜநாராயணன் 104வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் விசு மகாஜன் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்1
- தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அருள்மிகு ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அருள்மிகு ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது அன்னதானத்தை 14 வது வார்டு வட்டச்செயலாளர் காளிதுரை, மீளவிட்டான் மெயின் ரோடு வியாபாரிகள் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் கோவிந்தராஜ், மாரிமுத்து, பழனிகுமார், முத்து,நடராஜன், கண்ணன், பாலகுமார்,செல்வம்,கோவில் பிள்ளை, மகளிரணிகள் மாரிச்செல்வி, பாக்யலக்ஷ்மி,பூ இசக்கி,பத்மா, கனிஷா,கனிகா மற்றும் இளைஞரணி சிவா,விஷால், சந்தோஷ், சஞ்சய், பாலசரவணன், பால காமராஜ்,தினேஷ்,பிரிதிவி, சஞ்ஜித் உடன் இருந்தனர்கள்.2
- எட்டயபுரம் பாரதியார் கூட்டுறவு நூற்பாலை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் தூத்துக்குடி Thursday எட்டையாபுரத்தில் பாரதியார் கூட்டுறவு உட்பட ஒன்று உள்ளது. இந்த ஆலையை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளிடம் ஆலையின் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார்.1
- தூத்துக்குடி மாநகராட்சியில் தினசரி குடிநீர் விநியோகம்: மேயர் ஜெகன் பெரியசாமி!!1
- தமிழக வெற்றிக்கழக அமைச்சர் வெங்கட்ராமன் அவர்கள் திடீர் ஆய்வு ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பா.வெங்கட்ராமன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, ஆறுமுகநேரி பேரூர் கழகச் செயலாளர் ஜே.பி.வி. நிவாஸ் கண்ணன், காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் காந்திபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பா . வெங்கட்ராமனிடம் நிவாஸ் கண்ணன் வலியுறுத்தினார்.2
- திருநெல்வேலிஅரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்பதன வசதி பராமரிப்பு… சடலங்கள் பாதுகாப்பில் கேள்வி எழுப்பும் நிலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் பழைய சவக்கிடங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன. பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளுக்கு ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் (AMC) செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுப்பணித்துறை மின் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் ஏசி மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில் பிணவறையின் குளிர்பதன வசதிகள் தொடர்பாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்றும் நாளையும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்படும் சடலங்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய சவக்கிடங்கில் வைத்து பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குளிர்பதன அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், குளிர்பதன வசதி தொடர்ந்து இயங்கி வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், பிணவறையின் குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் சூழல் பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. சடலங்களை பாதுகாப்பாக பராமரிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதா என்பதையும், பராமரிப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதையும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து வழக்கமான முறையில் பிரேத பரிசோதனைகள் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1
- ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு1
- சென்னை பெசண்ட் நகரில் த.வெ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள். சென்னை பெசண்ட் நகரில் த.வெ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் போயிருக்கிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.1