Shuru
Apke Nagar Ki App…
கோவில்பட்டி எழுத்தாளர் கி ராஜநாராயணன் 104வது பிறந்தநாள் விழா / காணொளி கோவில்பட்டி எழுத்தாளர் கி ராஜநாராயணன் 104வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் விசு மகாஜன் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்
ஜெகஜீவன்
கோவில்பட்டி எழுத்தாளர் கி ராஜநாராயணன் 104வது பிறந்தநாள் விழா / காணொளி கோவில்பட்டி எழுத்தாளர் கி ராஜநாராயணன் 104வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் விசு மகாஜன் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்
More news from தமிழ்நாடு and nearby areas
- நெல்லை மாவட்ட பஞ்சாயத்து சார்பில் குடிநீர் திட்டத்துக்காக ரூ.1 1/4 கோடி ஒதுக்கீடு தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் தலைமையில் தீர்மானம் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் இசக்கியப்பன் முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள் கனகராஜ், சாலமோன் டேவிட், மகேஷ், அருண் தவசு பாண்டியன், தனி தங்கம், ஜான்ஸ்ரூபா, லிங்க சாந்தி, சத்தியவாணி முத்து, கிருஷ்ணவேணி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் 92 சதவீதம் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த நிதியாண்டில் ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி உள்ளது. இதனை குடிநீர் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டம் செயல்படுத்தப்படும். கடந்த நிதி ஆண்டுகளில் முடிக்கப்படாத பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். முடிக்கப்பட்ட பணிகளுக்கு திறப்பு விழா நடக்கும் போது கண்டிப்பாக கல்வெட்டு வைக்க வேண்டும். மாவட்ட கவுன்சிலர்கள் பணி பாராட்டுக்கு உரியது. இவ்வாறு அவர் பேசினார்.1
- திருச்செந்தூர் அருகே அம்மன்புரத்தில் வீடு கட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தவெக நிர்வாகியை, திமுகவை சேர்ந்த 5 பேர் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அம்மன் புறம் கீழ புதுகுடியை சேர்ந்த பீட்டர்(48). இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் திருச்செந்தூர் மேற்கு ஒன்றிய பொருளாளராக பதவி வகித்து வருகிறார். இவருக்கும் வீட்டின் அருகில் உள்ள திமுகவை சேர்ந்த ஞானராஜ் என்பவருக்கும், பீட்டருக்கும் வீடு கட்டுவது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் பீட்டர் கடந்த 10-ம் தேதி காலையில் தனது மகனை அம்மன்புரத்தில் பஸ் ஏற சென்று விட்டு விட்டு வீடு திரும்பியபோது அங்குள்ள சர்ச் நுழைவாயில் அருகே சென்றதில் ஞானராஜ் தம்பி மகன் ஆல்வின் மற்றும் அவருடன் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய நான்கு பேர் உட்பட மொத்தமா ஐந்து பேர் பீட்டர் இருசக்கர வாகனத்தை மறித்து தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது. இதில் காயமடைந்த பீட்டர் அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஐந்து பேரை தேடி வருகின்றனர்.2
- கல்லிடைக்குறிச்சி புனித அந்தோனியார் திருத்தல திருவிழா கோலாகலம் நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. முக்கிய நாளான இன்று கூட்டுத் திருப்பலி நடைபெற்றது ஏராளமான பொதுமக்கள் மற்றும் அந்தோணியாரின் பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்1
- தவெக ஆட்சியில் எங்கேயாவது லஞ்சம் வாங்க நினைத்தால் அதை கண்டுபிடிக்க தனி குழு அமைத்துள்ளோம், லஞ்சம் வாங்கும் போது சிக்கிவிட்டால் உங்கள் பாணியிலேயே பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேச்சு....! விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சந்தனபாண்டியன் தலைமையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது ....இதில் முன்னாள் அமைச்சரும் , விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .அப்போது பேசிய அவர் அதிமுக வெற்றியை தவறவிட்டாலும் இந்த இயக்கதையும் எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்தவும் இன்றைக்கும் லட்சோப லட்சம் தொண்டர்கள் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கிறார்கள் அதிமுக என்பது பல்வேறு சாதனைகளை செய்த இயக்கம் ஏழை மக்கள், இல்லாத மக்கள், பாட்டாளி மக்கள் பட்டாசு தொழிலாளர்களுக்காக பல தியாகங்களை செய்து அவர்களது வாழ்க்கை முன்னேற பாடுபட்ட இயக்கம் அதிமுக இயக்கம் அப்படிப்பட்ட இயக்கத்தில் இருப்பது பெருமை, இயக்கத்திற்கு உழைப்பது பெருமை, இயக்கத்தில் இருந்து மடிவது பெருமை, இருக்கும் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை கௌரவிப்பது மாவட்டச் செயலாளர் என்ற முறையில் எனது கடமை கடந்த 53 ஆண்டு காலம் அதிமுக இயக்கம் யாரைக்கண்டும் பயப்படவில்லை, யாரைக்கண்டும் ஓடி ஒடியவில்லை, திமுக என்ற திமிங்கலத்தையே எதிர்த்து அடித்து நொறுக்கி வளர்ந்த அதிமுக தற்குறிகளை கண்டு ஒழிந்து, அழிந்து போகாது விஜய் விபத்தில் முதலமைச்சரானவர் 107 இடங்களில் வெற்றி பெற்று தற்போது 106 சீட்டு மட்டுமே அவர்களிடம் உள்ளது தவெக ஒட்டுச்சுவரில் உலை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள், எந்த நேரத்தில் சுவர் விழும் என்பதே தெரியாது ஆட்சி நீடிக்குமா? நிலைக்குமா? என்ற நிலையில்தான் இன்றைக்கு விஜய் இருக்கிறார் அதற்குள் ஏன் இவ்வளவு ஆட்டம், ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என சாடிய கே.டி.ராஜேந்திரபாலாஜி, சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி கேட்டால் பதில் சொல்ல துப்பில்லாமல் 3 நாட்கள் கழித்துதான் பதில் சொல்வேன் என சொல்லி எழுதியதை கண்ணாடி முன் நின்று பேசி பழகி அதை சட்டமன்றத்தில் ஒப்புவித்து வசனம் பேசிவிட்டு சென்றுள்ளார் தமிழக மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை பற்றி கேள்வி கேட்டால் முதல்வர் அதைப் பற்றி பேசாமல் 20 வருடத்திற்கு முன் நடந்த நிகழ்வு குறித்து பேசி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டு செல்கிறார் சட்டமன்றத்தில் விஜயின் நாடகம் மட்டுமே நடக்கிறது, பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சிதான் நடக்கிறது சட்டமன்றத்தில் எந்த அமைச்சரும் ஒழுக்கமாக பேசுவதில்லை, வேளாண்துறை பற்றி கேள்வி எழுப்பினால் அதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் பதிலளிக்கிறார், யார் யாரோ பதில் சொல்கிறார்கள் இப்படிப்பட்ட கேவலமான ஆட்சி தான் இன்றைக்கு தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது, இந்த ஆட்சி நீடிக்குமா? பலம் பொருந்திய அதிமுக, மதம் கொண்ட யானையான திமுகவை வீழ்த்தி அமுக்கிய இயக்கம் அதிமுக அதிமுகவை உங்களால் அழிக்க முடியுமா? அதிமுகவை பார்த்து கைகட்டி நின்றவர்களேல்லாம் இன்றைக்கு சட்டமன்றத்தில் ஜெயித்து விட்டோம் என்பதற்காக எள்ளி நகையாடினால் தமிழக மக்கள் அதை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள் பட்டாசுக்கு பிரச்சனை வந்த நேரத்தில் டெல்லி வரை சென்று பாதுகாத்தவர்கள் எடப்பாடியார் பட்டாசு ஆலைகளில் ஒரு நாளைக்கு 10 முறை ஆய்வு செய்தால் பட்டாசு தொழிலாளர்கள் எப்படி பிழைப்பார்கள், பட்டாசு உற்பத்தி எப்படி நடக்கும் தவெக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் 260 பட்டாசு ஆலைகளை மூடியது தவெக ஆட்சிக்கு வந்தவுடன் மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்க அடிப்படையில் முழக்கமிட்டவர்கள் நாங்கள், அதிமுக போராட்டம் அறிவித்த பின்னர் தான் மற்ற கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக ஆட்சியில் பட்டாசு தொழிலுக்கு இவ்வளவு பிரச்சனை வந்ததில்லை, இவ்வளவு விபத்தும் நடக்கவில்லை பட்டாசு தொழிலாளர்கள் தற்போது அதிகாரிகளின் ஆய்வுக்கு அஞ்சி பதற்றத்தில் வேலை பார்க்கிறார்கள் தவெக ஆட்சியின் நிர்வாக கோளாறு காரணமாக வெடி விபத்து ஏற்படுகிறது அதிமுகவின் போராட்ட அறிவுப்புக்கு தவெக அரசு பணிந்து பட்டாசு ஆலைகளை திறந்துள்ளது அதிமுக என்றாலும் தோற்றாலும் என்றைக்கும் சிவகாசி பகுதி மக்களுக்காக உழைப்போம் தவெக ஆட்சியில் எங்கேயாவது லஞ்சம் வாங்க நினைத்தால் அதை கண்டுபிடிக்க தனி குழு அமைத்துள்ளோம், லஞ்சம் வாங்கும் போது சிக்கிவிட்டால் உங்கள் பாணியிலேயே பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் தவெகவினர் யோக்கியம் போல் நினைத்துக் கொண்டு அனைவரையும் குற்றம் சொல்கிறார்கள், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தாண்டி கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழகத்தில் எதுவும் நடைபெறவில்லை ஆட்சிக்கு வந்தவுடன் 2500 ரூபாய் தருவதாக முதல்வர் விஜய் தெரிவித்துருந்தார், இதை யாரிடம் கேட்க லண்டனில் தொழில் முதலீடு செய்ய முதல்வரை அனுப்பினால் அவர் அங்கு சென்று முதலீடு ஈர்க்காமல் வேறு வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார் இந்த வேலையை செய்யவா இவரை முதல்வராக தேர்வு செய்தோம்? ஏன் விஜய்க்கு வாக்களித்தோம் என்பதே மக்களுக்கு தெரியவில்லை தவெகவிற்கு வாக்களித்தவர்கள் எல்லாம் முழித்துக் கொண்டிருக்கிறார்கள் திடாவிட இயக்கத்தின் ஆட்சிகளில்தான் தமிழகம் வளர்ந்துள்ளது பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆண்ட காலம் தமிழகத்தின் பொற்காலம் இயக்கம் ஆரம்பித்த 53 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் அதிமுக தமிழகத்தை ஆண்டுள்ளது முல்லைப்பெரியாறு, காவிரி, நீட், கொரோணா, கஜா புயல் போன்ற பிரச்சனைகள் வந்த காலங்களில்ளெல்லாம் தமிழக மக்களுக்காக குரல் கொடுத்து காவலாக நின்ற கட்சி அதிமுக ஏழை மாணவர்கள் இன்று மருத்துவராக அடிப்படை காரணமே எடப்பாடி பழனிச்சாமிதான் இதுபோன்ற பல்வேறு சாதனைகளை செய்த வரலாறு அதிமுக கட்சிக்கும் அதிமுக ஆட்சிக்கும் உள்ளது இதில் ஏதாவது ஒரு வரலாறு திமுகவிற்கோ தவெகவிற்க்கோ உள்ளதா? தவெக ஆட்சிக்கு வந்த 126 நாட்களில் அவர்கள் ஆடும் ஆட்டம் தாங்க முடியவில்லை தவெகவினர் விபத்து நடந்த இடத்திலும், இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் இடத்திலும் ரீல்ஸ் போடுகிறார்கள் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றாமல் அங்கு சென்று ரிலீஸ் போடுகிறார்கள் தவெகவில் ரீல்ஸ் பைத்தியங்களாக உள்ளார்கள், எங்கே போய் முடிய போகிறது என்பதே தெரியவில்லை அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா தாலிக்கு தங்கம், ஆடு மாடு, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, மாணவர்களுக்கு லேப்டாப் என பல்வேறு திட்டங்களை கொடுத்தார், ஆனால் தவெக ஆட்சியில் இதுவரை எதுவுமே கொடுக்கவும் இல்லை எதையும் அறிவிக்கவும் இல்லை, விஜய் வந்தால் ஏதாவது கொடுப்பார் என மக்கள் நம்பினார்கள் 110 விதியின் கீழ் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பேசும்போது மக்களுக்கான நல்ல பல திட்டங்களை அறிவிப்பார்கள் ஆனால் தற்போது 110 விதியின் கீழ் எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை தவெக ஆட்சிக்கு வந்த 126 நாட்களில் 36 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளார்கள் தமிழகத்தில் தற்போது அறிவிப்பில்லா மின் வெட்டால் மக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள் தவெக ஆட்சி அவமானத்தின் ஆட்சியாக இருக்கிறது, இந்த ஆட்சி நாட்டுக்கு தேவையா? என மக்கள் தற்போதைய பேச துவங்கி விட்டார்கள் இடைத்தேர்தலில் தவெக எப்படி வெற்றிபெருவார்கள் என பார்ப்போம் அதிமுக வேட்பாளர்கள் லட்சம் வாக்குகளை பெற்று வெற்றி பெறப் போவது உறுதி அதிமுகவிற்கு மக்களின் ஆதரவு இன்றைக்கும் இருக்கிறது அதிமுகவை தூக்கிப் பிடிப்பதற்கு ஏழை மக்களும், பாட்டாளி மக்களும் தயாராக உள்ளனர் அதிமுகதான் மக்களுக்கான இயக்கம் அதிமுக மட்டும் தான் மக்களுக்கு உதவும் இயக்கம், திமுக தங்கள் குடும்பத்தை மட்டுமே பார்க்கும், தவெக விஜய் யாருக்காக உழைக்கிறார் என்றே தெரியவில்லை, எதற்காக முதல்வரானார் என்றே தெரியவில்லை, முதல்வர் விஜய் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை மாலை 6 மணிக்கு மேல் முதல்வரை யாரும் பார்க்க முடிவதில்லை ஒரு முதல்வரை 6:00 மணிக்கு மேல் பார்க்க முடியவில்லை என்றால் நாட்டில் என்ன பிரச்சனை என்பதை யார் கண்டறிவது வருகின்ற தேர்தல் எதுவாக இருந்தாலும் அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என தெரிவித்தார்.1
- தென்காசி மாவட்டம் குற்றாலம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் அருவி நீரில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்1
- கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டியபுரம் அருகே நீர்வீழ்ச்சி சுற்றுலாத்தலமான உலக்கை அருவியில் சுற்றுலா பயணிகள் வீசி சென்ற 346 கிலோ மது பாட்டில் கழிவுகளை வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து சேகரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்- தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளுக்கு இடையூறாக கண்ணாடி பாட்டில் கொண்ட கழிவுகளை வீசி சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டியபுரம் அருகே நீர்வீழ்ச்சி சுற்றுலாத்தலமான உலக்கை அருவியில் சுற்றுலா பயணிகள் வீசி சென்ற 346 கிலோ மது பாட்டில் கழிவுகளை வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து சேகரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்- தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளுக்கு இடையூறாக கண்ணாடி பாட்டில் கொண்ட கழிவுகளை வீசி சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.1
- பத்து நாட்களுக்கு மேலாக நெல்லை மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு குல வனிகர் புரம் பகுதியில் இருப்பு பாதையை மறித்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு திருநெல்வேலி மேலப்பாளையம் 31-வது வார்டுக்குட்பட்ட குலவணிகர்புரம் பாண்டித்துரை 1 முதல் 3-வது தெருக்கள், விநாயகர் தெரு 1 முதல் 3-வது தெருக்கள் உள்ளிட்ட 7 தெருக்களில் சுமார் 10 நாட்களாக மாநகராட்சி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதியடைந்து வந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பும் இதேபோன்று குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து குடிநீர் விநியோகம் சீரான நிலையில், தற்போது மீண்டும் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், அதனை சீரமைக்க 2 நாட்கள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்ட பின்னரும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி, குலவணிகர்புரம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருவனந்தபுரம் சாலையில் மத்திய சிறைச்சாலை அருகே உள்ள குலவணிகர்புரம் ரயில்வே கேட் பகுதியில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் திருநெல்வேலி–திருச்செந்தூர் இருப்புப்பாதையிலும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த மேலப்பாளையம் மற்றும் பெருமாள்புரம் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பாளையங்கோட்டை வட்டாட்சியர் மாரிராஜா தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, குடிநீர் பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பிரதான சாலையில் பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.1
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் செப்.20- ல் திருக்கல்யாணம், 23-ம் தேதி செப்பு தேரோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள வட பத்திர சன்னதியில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் செப்டம்பர் 20-ம் தேதி திருக்கல்யாணமும், 23-ம் தேதி செப்பு தேரோட்டமும் நடைபெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்) அவதார உற்சவமான புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஶ்ரீதேவி பூதேவி சமேதராக பெரிய பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதன்பின் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 11 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தினசரி காலை மண்டபங்களில் எழுந்தருளும் ஸ்ரீதேவி ஸ்ரீதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனமும், மாலை வீதி உலாவும் நடைபெறுகிறது. பிரமோற்சவ விழாவில் செப்டம்பர் 19-ம் தேதி தங்க கருட சேவையும், 20-ம் தேதி மாலை 4 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரியபெருமாள் திருக்கல்யாணமும், 21-ம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது. பெரிய பெருமாள் அவதரித்த பெரிய திருவோண நட்சத்திரத்தில் செப்டம்பர் 23- ம் தேதி காலை 7 மணிக்கு செப்பு தேரோட்டம் நடைபெற உள்ளது.இதில் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி, நகராட்சி ஆணையாளர் குமார்,வட்டாட்சியர் அறிவானந்தம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.1
- தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரன்குன்றாபுரம் டிடிடிஏ நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள டிஎஸ் டேனியல் ராஜம்மாள் நினைவு கட்டடம் திறப்பு விழா நடந்தது விழாவிற்கு தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் பிரபாகரன் தலைமை வகித்து திறந்து வைத்து வாழ்த்தி பேசினார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராஜீவ், தென்காசி கலெக்டர் ரஞ்சித் சிங் ரெட்டியபட்டி நாராயணன் எம்எல்ஏ சென்னை டிஎஸ் குரூப்ஸ் ஜெயசிங், சௌந்திரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்1