logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தஞ்சாவூர் பெரிய கோயிலின் கோட்டை சுவரைச் சுற்றி புதிதாக அமைக்கப்பட்ட நிரந்தர மின்விளக்கு அமைப்புகளை மாவட்ட ஆட்சித் தலைவர் த. இரா. ரேவதி இயக்கி திறந்து வைத்தார். பெரிய கோயிலின் சுற்று சுவரில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய மின்விளக்கு அமைப்பு, கோட்டை சுவரின் அழகை இரவு நேரங்களில் மேலும் எடுப்பாக காட்சியளிக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

13 hrs ago
user_Thanjavurnews
Thanjavurnews
Local News Reporter தஞ்சாவூர், தஞ்சாவூர், தமிழ்நாடு•
13 hrs ago
ff0f8e73-5fac-491e-b9d3-99510058fb85

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தஞ்சாவூர் பெரிய கோயிலின் கோட்டை சுவரைச் சுற்றி புதிதாக அமைக்கப்பட்ட நிரந்தர மின்விளக்கு அமைப்புகளை மாவட்ட ஆட்சித் தலைவர் த. இரா. ரேவதி இயக்கி திறந்து வைத்தார். பெரிய கோயிலின் சுற்று சுவரில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய மின்விளக்கு அமைப்பு, கோட்டை சுவரின் அழகை இரவு நேரங்களில் மேலும் எடுப்பாக காட்சியளிக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

More news from Thanjavur and nearby areas
  • திருச்சி மாநகரில் உள்ள ஒரு கடையின் பூட்டை உடைத்த இளைஞர்கள் சிசிடிவி கேமராவில் சிக்கிய காட்சி பதிவாகியுள்ளது.
    1
    திருச்சி மாநகரில் உள்ள ஒரு கடையின் பூட்டை உடைத்த இளைஞர்கள் சிசிடிவி கேமராவில் சிக்கிய காட்சி பதிவாகியுள்ளது.
    user_Mani
    Mani
    Local News Reporter Thiruvaiyaru, Thanjavur•
    16 hrs ago
  • தஞ்சாவூரில் இருந்து கபிஸ்தலம் மற்றும் கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி பட்டுக்குடி வழியாக அரசு நகரப் பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, பட்டுக்குடி கிராமத்திற்கு காலை ஒரு முறையும், மாலை ஒரு முறையும் என நாள் ஒன்றுக்கு இரண்டு முறை மட்டுமே அரசுப் பேருந்துகள் வந்து செல்கின்றன. காலையில் இயக்கப்படும் பேருந்து, கபிஸ்தலம் வழியாக பயணிகளையும் மாணவ மாணவிகளையும் ஏற்றிச் சென்று பட்டுக்குடி வரை வந்து மீண்டும் தஞ்சாவூருக்கே திரும்புகிறது. பட்டுக்குடி பகுதியில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், நோயாளிகள், வியாபாரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் எனப் பலரும் இந்தப் பேருந்தையே நம்பிப் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்தப் பேருந்து ஏற்கனவே மற்ற பகுதிகளில் இருந்து பயணிகளையும் மாணவ மாணவிகளையும் ஏற்றி வருவதால், பட்டுக்குடி பகுதியில் மாணவ மாணவிகள் ஏறும் போது பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு மிகுந்த கூட்ட நெரிசலுடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் தொடர்ந்து இருந்து வருகிறது. மேலும், பேருந்துகள் கூட்ட நெரிசலுடன் வருவதால், ஏராளமானோர் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குப் பயணிக்க முடியாமல் திரும்பச் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவ மாணவிகள் மற்றும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தற்போது காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களில் மட்டும் இயக்கப்படும் பேருந்துகளை பகல் 12 மணி மற்றும் மாலை 4 மணி என நாள் ஒன்றுக்கு நான்கு தடவை இயக்க வேண்டும் என்றும் பட்டுக்குடி கிராமப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்குடி வரை தனிப் பேருந்து ஒன்றையும் இயக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    1
    தஞ்சாவூரில் இருந்து கபிஸ்தலம் மற்றும் கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி பட்டுக்குடி வழியாக அரசு நகரப் பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, பட்டுக்குடி கிராமத்திற்கு காலை ஒரு முறையும், மாலை ஒரு முறையும் என நாள் ஒன்றுக்கு இரண்டு முறை மட்டுமே அரசுப் பேருந்துகள் வந்து செல்கின்றன. காலையில் இயக்கப்படும் பேருந்து, கபிஸ்தலம் வழியாக பயணிகளையும் மாணவ மாணவிகளையும் ஏற்றிச் சென்று பட்டுக்குடி வரை வந்து மீண்டும் தஞ்சாவூருக்கே திரும்புகிறது.

பட்டுக்குடி பகுதியில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், நோயாளிகள், வியாபாரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் எனப் பலரும் இந்தப் பேருந்தையே நம்பிப் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்தப் பேருந்து ஏற்கனவே மற்ற பகுதிகளில் இருந்து பயணிகளையும் மாணவ மாணவிகளையும் ஏற்றி வருவதால், பட்டுக்குடி பகுதியில் மாணவ மாணவிகள் ஏறும் போது பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு மிகுந்த கூட்ட நெரிசலுடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் தொடர்ந்து இருந்து வருகிறது. மேலும், பேருந்துகள் கூட்ட நெரிசலுடன் வருவதால், ஏராளமானோர் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குப் பயணிக்க முடியாமல் திரும்பச் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவ மாணவிகள் மற்றும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தற்போது காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களில் மட்டும் இயக்கப்படும் பேருந்துகளை பகல் 12 மணி மற்றும் மாலை 4 மணி என நாள் ஒன்றுக்கு நான்கு தடவை இயக்க வேண்டும் என்றும் பட்டுக்குடி கிராமப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்குடி வரை தனிப் பேருந்து ஒன்றையும் இயக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    பத்திரிகையாளர் பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    1 hr ago
  • நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடியில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி சேமிப்பு மையத்தை உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் சுகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
    4
    நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடியில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி சேமிப்பு மையத்தை உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் சுகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
    user_Chakravarthy
    Chakravarthy
    நாகப்பட்டினம், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    19 hrs ago
  • மளேவாட்டில் இயற்கையின் அபரிமிதமான மற்றும் தனித்துவமான கலைத்திறனை நேரடியாக அனுபவிக்க முடிந்தது. அங்குள்ள புகழ்பெற்ற ஓவியரும், பத்திரிகையாளருமான மதன் முர்கரின் வீட்டுத் தோட்டத்தில், மிகவும் அரியதும், வசீகரமானதுமான ஒரு செம்பருத்திப் பூ மலர்ந்துள்ளது. இந்தப் பூ ஒரே பூவில் சிவப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வண்ணங்களின் கவர்ச்சிகரமான கலவையை வெளிப்படுத்துகிறது. பொதுவாக, செம்பருத்திப் பூக்கள் முழுவதும் சிவப்பு, வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால், முர்கரின் தோட்டத்தில் மலர்ந்துள்ள இந்தப் பூவில், பாதிப் பூ அடர் சிவப்பு நிறத்திலும், மீதிப் பாதி வெள்ளை நிறத்திலும் குளித்திருப்பது போல், இயற்கை வண்ணங்களால் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தியுள்ளது. ஒரு ஓவியரின் வீட்டுத் தோட்டத்திலேயே இயற்கை இந்த தனித்துவமான வண்ண அதிசயத்தைக் காட்டியிருப்பது, அப்பகுதி மக்களிடையே மிகுந்த ஆவலைத் தூண்டியுள்ளது. தற்போது, இந்த சிறப்பான பூவை காண்பதற்கும், இயற்கையின் இந்த வண்ணமயமான கைவண்ணத்தை தங்கள் கைப்பேசிகளில் பதிவு செய்வதற்கும் மதன் முர்கரின் வீட்டிற்கு இயற்கை ஆர்வலர்கள் வந்து செல்கின்றனர்.
    1
    மளேவாட்டில் இயற்கையின் அபரிமிதமான மற்றும் தனித்துவமான கலைத்திறனை நேரடியாக அனுபவிக்க முடிந்தது. அங்குள்ள புகழ்பெற்ற ஓவியரும், பத்திரிகையாளருமான மதன் முர்கரின் வீட்டுத் தோட்டத்தில், மிகவும் அரியதும், வசீகரமானதுமான ஒரு செம்பருத்திப் பூ மலர்ந்துள்ளது. இந்தப் பூ ஒரே பூவில் சிவப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வண்ணங்களின் கவர்ச்சிகரமான கலவையை வெளிப்படுத்துகிறது.

பொதுவாக, செம்பருத்திப் பூக்கள் முழுவதும் சிவப்பு, வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால், முர்கரின் தோட்டத்தில் மலர்ந்துள்ள இந்தப் பூவில், பாதிப் பூ அடர் சிவப்பு நிறத்திலும், மீதிப் பாதி வெள்ளை நிறத்திலும் குளித்திருப்பது போல், இயற்கை வண்ணங்களால் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தியுள்ளது. ஒரு ஓவியரின் வீட்டுத் தோட்டத்திலேயே இயற்கை இந்த தனித்துவமான வண்ண அதிசயத்தைக் காட்டியிருப்பது, அப்பகுதி மக்களிடையே மிகுந்த ஆவலைத் தூண்டியுள்ளது.

தற்போது, இந்த சிறப்பான பூவை காண்பதற்கும், இயற்கையின் இந்த வண்ணமயமான கைவண்ணத்தை தங்கள் கைப்பேசிகளில் பதிவு செய்வதற்கும் மதன் முர்கரின் வீட்டிற்கு இயற்கை ஆர்வலர்கள் வந்து செல்கின்றனர்.
    user_मालवणी Express
    मालवणी Express
    Iam writer and editor India•
    23 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை ராஜிவ் நகரில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. கடந்த மாதம் கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து நேற்று முதல் பிரதோஷ விழா நடந்தேறியது. இதில், நத்திகேஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த வழிபாட்டைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரின் உலா நடைபெற்றது. பின்னர், சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இந்த வழிபாட்டு நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை ராஜிவ் நகரில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. கடந்த மாதம் கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து நேற்று முதல் பிரதோஷ விழா நடந்தேறியது. இதில், நத்திகேஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்த வழிபாட்டைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரின் உலா நடைபெற்றது. பின்னர், சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இந்த வழிபாட்டு நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    20 min ago
  • திருச்சி மாவட்டம் பிடாரபட்டியைச் சேர்ந்த ராகினி (26) தனது ஒரு வயது குழந்தை மற்றும் தங்கை கலைமதி ஆகியோருடன் மணப்பாறையிலிருந்து திரும்பி, துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தில் ஏறி பிடாரபட்டிக்குச் சென்றுள்ளனர். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர்கள் கூட்டத்துடன் ஏறியுள்ளனர். அப்போது, இவர்களுக்குப் பின்னால் நின்ற ஒரு மூதாட்டி, ராகினியின் ஒரு வயது மகனின் கழுத்தில் அணிந்திருந்த தங்கத் தாயத்தை கட்டிங் பிளேடு மூலம் அறுத்துள்ளார். இந்தச் செயலை பின்னால் நின்று பார்த்துக்கொண்டிருந்த ராகினியின் தங்கை கலைமதி உடனடியாக கூச்சலிட, அருகிலிருந்த பொதுமக்கள் அந்த மூதாட்டியைப் பிடித்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த மூதாட்டி தஞ்சை கோரிகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி செல்வி (65) என்பதும், அவர் மீது பல காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ராகினி அளித்த புகாரின் பேரில் மூதாட்டி மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்தச் சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 65 வயதான ஒரு மூதாட்டி இதுபோன்ற செயலில் ஈடுபட்டதால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். ஓடும் பேருந்தில் குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த நகைக்காக, நகையின் கயிற்றை அறுத்த மூதாட்டி, நகைக்காக எது வேண்டுமானாலும் செய்வார் என்ற பேச்சு பொதுமக்களிடையே நிலவியது. மேலும், அந்த மூதாட்டி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் காவல்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திருச்சி மாவட்டம் பிடாரபட்டியைச் சேர்ந்த ராகினி (26) தனது ஒரு வயது குழந்தை மற்றும் தங்கை கலைமதி ஆகியோருடன் மணப்பாறையிலிருந்து திரும்பி, துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தில் ஏறி பிடாரபட்டிக்குச் சென்றுள்ளனர். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர்கள் கூட்டத்துடன் ஏறியுள்ளனர். அப்போது, இவர்களுக்குப் பின்னால் நின்ற ஒரு மூதாட்டி, ராகினியின் ஒரு வயது மகனின் கழுத்தில் அணிந்திருந்த தங்கத் தாயத்தை கட்டிங் பிளேடு மூலம் அறுத்துள்ளார்.

இந்தச் செயலை பின்னால் நின்று பார்த்துக்கொண்டிருந்த ராகினியின் தங்கை கலைமதி உடனடியாக கூச்சலிட, அருகிலிருந்த பொதுமக்கள் அந்த மூதாட்டியைப் பிடித்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த மூதாட்டி தஞ்சை கோரிகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி செல்வி (65) என்பதும், அவர் மீது பல காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ராகினி அளித்த புகாரின் பேரில் மூதாட்டி மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்தச் சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 65 வயதான ஒரு மூதாட்டி இதுபோன்ற செயலில் ஈடுபட்டதால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். ஓடும் பேருந்தில் குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த நகைக்காக, நகையின் கயிற்றை அறுத்த மூதாட்டி, நகைக்காக எது வேண்டுமானாலும் செய்வார் என்ற பேச்சு பொதுமக்களிடையே நிலவியது. மேலும், அந்த மூதாட்டி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் காவல்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • நமது பகுதியில், கடல் இறாலை விட நல்ல தண்ணீரில் இறால் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை, நல்ல தண்ணீரில் இறால் வளர்க்கும் சாத்தியக்கூறுகளை இங்கு காட்டுகிறது.
    1
    நமது பகுதியில், கடல் இறாலை விட நல்ல தண்ணீரில் இறால் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை, நல்ல தண்ணீரில் இறால் வளர்க்கும் சாத்தியக்கூறுகளை இங்கு காட்டுகிறது.
    user_Namma Ooru Adanai
    Namma Ooru Adanai
    Photographer திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    14 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே அமைந்துள்ள பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடியில், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்காக ஒரு நாள் பயிற்சி முகாம் இன்று நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சி முகாமின் முக்கிய நோக்கம், விபத்துகள் ஏற்படும் நேரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் மற்றும் அவசரகால உதவிகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஊழியர்களுக்குக் கற்பிப்பதாகும். இந்த முகாம் புராஜெக்ட் மேலாளர் செந்தில் குமரன் தலைமையில் நடைபெற்றது.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே அமைந்துள்ள பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடியில், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்காக ஒரு நாள் பயிற்சி முகாம் இன்று நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சி முகாமின் முக்கிய நோக்கம், விபத்துகள் ஏற்படும் நேரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் மற்றும் அவசரகால உதவிகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஊழியர்களுக்குக் கற்பிப்பதாகும். இந்த முகாம் புராஜெக்ட் மேலாளர் செந்தில் குமரன் தலைமையில் நடைபெற்றது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.