logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஆம்பூர் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் (இன்று ஏப்ரல் 01 காலை) ஆம்பூர் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் வெங்கடேசன் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட அஇஅதிமுக நிர்வாகி பலர் கலந்து கொண்டனர்

2 hrs ago
user_Yuvaraj Yuvaraj
Yuvaraj Yuvaraj
Photographer Ambur, Tirupathur•
2 hrs ago

ஆம்பூர் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் (இன்று ஏப்ரல் 01 காலை) ஆம்பூர் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் வெங்கடேசன் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட அஇஅதிமுக நிர்வாகி பலர் கலந்து கொண்டனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • தர்மபுரியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பேச்சு - திமுகவால் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கான பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) வேட்பாளர் சௌமியா அன்புமணி இன்று தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினரால் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தர்மபுரியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கே.பி. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 5 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்கள் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பிரச்சார திட்டங்கள், வாக்காளர் தொடர்பு முறைகள், பூத் வாரியாக அமைப்பு வலுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய சௌமியா அன்புமணி தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு குற்றங்கள் பெருகி உள்ளது என்றும், தருமபுரி மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்கள், இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்க்காக தொடங்கப்பட்ட சிப்காட் தொழிற்சாலை உள்ளிட்ட முக்கிய திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைப்போம் என்றும் அப்போது தருமபுரி மாவட்டத்தின் அணைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    1
    தர்மபுரியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பேச்சு -  திமுகவால் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கான பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) வேட்பாளர் சௌமியா அன்புமணி இன்று தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தந்தார்.
அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினரால் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. 
தொடர்ந்து தர்மபுரியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கே.பி. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. 
இதில் பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 5 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்கள்  முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பிரச்சார திட்டங்கள், வாக்காளர் தொடர்பு முறைகள், பூத் வாரியாக அமைப்பு வலுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய சௌமியா அன்புமணி தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளதாகவும்,
கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு குற்றங்கள் பெருகி உள்ளது என்றும்,
தருமபுரி மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்கள், இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்க்காக தொடங்கப்பட்ட சிப்காட் தொழிற்சாலை உள்ளிட்ட முக்கிய திட்டங்களை  திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைப்போம் என்றும் அப்போது தருமபுரி மாவட்டத்தின் அணைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள்  மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • ​2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் அவர்கள் வீதி வீதியாக சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்  _________ தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் ஏப்ரல் மாதம் 23 ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான  வி.சோமசுந்தரம் அவர்கள் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் அறிவித்துள்ளார்கள். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வி.சோமசுந்தரம் அவர்கள் காஞ்சிபுரம் மாநகர கிழக்கு பகுதி கழக செயலாளர் பாலாஜி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து பெரிய காஞ்சிபுரம் பகுதியில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து வருகிறார். காஞ்சிபுரம் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தவும், வாழ்வாதாரமின்றி அல்லல் படும் பூக்கடை வியாபாரிகள் மற்றும் தெருவோரக்கடை வியாபாரிகள் வாய்க்கை மேம்படவும் முயற்சிகள் எடுக்கப் போவதாக உறுதியளித்து  பிரச்சாரம் மேற்கொண்டு  வருகிறார். காஞ்சிபுரம் மாநகர கிழக்கு பகுதியில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வில் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ,அனைத்துலகு எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம்  உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பொதுமக்களிடம் அதிமுக தேர்தல் அறிக்கைகளில் உள்ள திட்டங்களை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்து வருகிறார்கள். வி.சோமசுந்தரம் அவர்கள் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு முன்னதாக பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் பங்குனி உத்திர விழாவில் சாமி ஊர்வலம் வரும்போது அதிமுக கழகம் பெரும் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொண்டு பிரசாரத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
    1
    ​2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் அவர்கள் வீதி வீதியாக சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் 
_________
தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் ஏப்ரல் மாதம் 23 ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான  வி.சோமசுந்தரம் அவர்கள் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வி.சோமசுந்தரம் அவர்கள் காஞ்சிபுரம் மாநகர கிழக்கு பகுதி கழக செயலாளர் பாலாஜி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து பெரிய காஞ்சிபுரம் பகுதியில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்.
காஞ்சிபுரம் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தவும், வாழ்வாதாரமின்றி அல்லல் படும் பூக்கடை வியாபாரிகள் மற்றும் தெருவோரக்கடை வியாபாரிகள் வாய்க்கை மேம்படவும் முயற்சிகள் எடுக்கப் போவதாக உறுதியளித்து  பிரச்சாரம் மேற்கொண்டு  வருகிறார்.
காஞ்சிபுரம் மாநகர கிழக்கு பகுதியில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வில் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ,அனைத்துலகு எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம்  உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பொதுமக்களிடம் அதிமுக தேர்தல் அறிக்கைகளில் உள்ள திட்டங்களை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்து வருகிறார்கள்.
வி.சோமசுந்தரம் அவர்கள் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு முன்னதாக பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் பங்குனி உத்திர விழாவில் சாமி ஊர்வலம் வரும்போது அதிமுக கழகம் பெரும் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொண்டு பிரசாரத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
    user_E.LAKSHMI KANTHAN
    E.LAKSHMI KANTHAN
    பத்திரிகையாளர் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    9 hrs ago
  • சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு - பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் 2,444 வாக்காளர்களில், மாலை 6:15 மணி வரை 2,160 பேர் வாக்களித்தனர். வாக்குப்பெட்டிகள் மாவட்ட நீதிபதி சுமதியிடம் ஒப்படைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதில் ஐயப்பமணி, சரவணன் உள்ளிட்டோர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
    1
    சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு - பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் 2,444 வாக்காளர்களில், மாலை 6:15 மணி வரை 2,160 பேர் வாக்களித்தனர். வாக்குப்பெட்டிகள் மாவட்ட நீதிபதி சுமதியிடம் ஒப்படைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதில் ஐயப்பமணி, சரவணன் உள்ளிட்டோர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    22 hrs ago
  • சேலம் அம்மாபேட்டை ராமலிங்க சுவாமி தெருவில், 43 ஆம் ஆண்டு காவிரி திருவிழா இன்று அப்பகுதியில் விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பால் காவடி மற்றும் மயில் காவடி எடுத்து சுப்பிரமணியர் கோவிலில் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இதில் கோவில் தலைவர் ஜெயமணி, சௌந்தரராஜன் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
    1
    சேலம் அம்மாபேட்டை ராமலிங்க சுவாமி தெருவில், 43 ஆம் ஆண்டு காவிரி திருவிழா இன்று அப்பகுதியில் விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பால் காவடி மற்றும் மயில் காவடி எடுத்து சுப்பிரமணியர் கோவிலில் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இதில் கோவில் தலைவர் ஜெயமணி, சௌந்தரராஜன் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    11 hrs ago
  • ஏன்டா மெடிக்கல் ஷாப்ல ஒரு பேனா வாங்கினது குத்தமாடா ? புரிந்தால் சிரியுங்கள்......😂
    1
    ஏன்டா மெடிக்கல் ஷாப்ல ஒரு பேனா வாங்கினது குத்தமாடா ?
புரிந்தால் சிரியுங்கள்......😂
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • எடப்பாடி அருகே சித்தூர் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகளிடம் நூதன முறையில் வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்... 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு பல்வேறு கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தூர் பகுதியில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரியதர்ஷினி விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகளிடம் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... இதனைத் தொடர்ந்து சீமான் தலைமையிலான ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளிடம் உறுதி அளித்தார். மேலும் வீடு வீடாக சென்று இல்லத்தரசிகளிடம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே தமிழகத்தை காப்பாற்றும் முடியும் என்று கூறி வாக்கு சேகரித்தார்...
    1
    எடப்பாடி அருகே சித்தூர் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகளிடம் நூதன முறையில் வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்...
2026 சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு பல்வேறு கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தூர் பகுதியில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரியதர்ஷினி விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகளிடம் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்...
இதனைத் தொடர்ந்து சீமான் தலைமையிலான ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளிடம் உறுதி அளித்தார். மேலும் வீடு வீடாக சென்று இல்லத்தரசிகளிடம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே தமிழகத்தை காப்பாற்றும் முடியும் என்று கூறி வாக்கு சேகரித்தார்...
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    11 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • தருமபுரி மாவட்டம் கடைமடை ரெயில்வே கேட் அருகே டீ கடையில் அமர்ந்து தேனீர் சாப்பிட்ட துனை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் காலை அரூர், மற்றும் பாப்பிரெட்டிபட்டி திமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பறப்புரையில் ஈடுபட்டார் இதனை யடுத்து கடத்தூரிலிருந்து பாலக்கோடு செல்லும் வழியில் கடைமடை ரயில்வே கேட் பகுதியில் ரயில் செல்வதற்காக ரயில்வே கேட் போடப்பட்டதால் 20 நிமிடங்கள் அருகே இருந்த தேனீர் கடையில் அமர்ந்து வேட்பாளர்களுடன்தேனீர் பருகினார் இதைதொடர்ந்து அங்கு காத்திருந்த அரசு பேருந்தில் ஏரி பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் பெண்கள், ஆண்கள் சிலர் துணை முதல்வருடன் செல்பி எடுத்து கொண்டனர் இதையடுத்து ரயில்வே பாதையை கடந்து சென்று தனது பிரச்சார வாகனத்தில் ஏரி பாலக்கோட்டிற்கு சென்றார் துணை முதல்வருடன் பாப்பிரெட்டிபட்டி வேட்பாளர் P. பழநியப்பன், பாலக்கோடு வேட்பாளர். DNV செந்தில்குமார் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்
    1
    தருமபுரி மாவட்டம் கடைமடை ரெயில்வே கேட் அருகே டீ கடையில் அமர்ந்து தேனீர் சாப்பிட்ட துனை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தருமபுரி மாவட்டத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் காலை அரூர், மற்றும் பாப்பிரெட்டிபட்டி திமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பறப்புரையில் ஈடுபட்டார்
இதனை யடுத்து கடத்தூரிலிருந்து பாலக்கோடு செல்லும் வழியில் கடைமடை ரயில்வே கேட் பகுதியில் ரயில் செல்வதற்காக ரயில்வே கேட் போடப்பட்டதால் 20 நிமிடங்கள் அருகே இருந்த தேனீர் கடையில் அமர்ந்து வேட்பாளர்களுடன்தேனீர் பருகினார் இதைதொடர்ந்து அங்கு காத்திருந்த அரசு பேருந்தில் ஏரி பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் பெண்கள், ஆண்கள் சிலர் துணை முதல்வருடன் செல்பி எடுத்து கொண்டனர் இதையடுத்து ரயில்வே பாதையை கடந்து சென்று தனது பிரச்சார வாகனத்தில் ஏரி பாலக்கோட்டிற்கு சென்றார்
துணை முதல்வருடன் பாப்பிரெட்டிபட்டி வேட்பாளர் P. பழநியப்பன், பாலக்கோடு வேட்பாளர். DNV செந்தில்குமார் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • எடப்பாடி அருகே பல வருடங்களாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாத ஆர்.ஓ பிளான்ட்... சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஆவனிப் பேரூர் கீழ்முகம் ஊராட்சி போடிநாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் ஆர்வோ பிளான்ட் கட்டி முடிக்கப்பட்டது. அதேபோல் எடப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சி ஊராட்சி அம்மன்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் குடிநீர் ஆர்ஓ பிளான்ட்கட்டி முடிக்கப்பட்டது... இரண்டு குடிநீர் ஆர்ஓ பிளான்டுகளும் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. பல ஆண்டுகளாகியும் குடிநீர் ஆர்ஓ பிளான்டில் குடிநீர் நிரப்பி பொதுமக்களின் பயன் பாட்டிற்கு விடப்படவில்லை... பல லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட குடிநீர் ஆர்ஓ பிளான்ட் மக்களின் பயன்பாட்டிற்கு விடப்படாததால் அரசு பணம் பல லட்சம் விரய மாகி உள்ளதாக பொதுமக்கள் விமர்சித்து வருகிறார்கள். குடிநீர் ஆர்ஓ பிளான்டில் குடிநீர் நிரப்பி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட வேண் டும் என யூனியன் பிடிஓ மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோருக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் மக்களின் பயன் பாட்டிற்கு ஆர்ஓ பிலான்டடை கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை.‌.. கோடை வெயில் பாதிப்பு தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க போடிநாயக்கன்பட்டி மற்றும் செட்டிங்குறிச்சி அம்மன் கோவில் ஆகிய இரு இடங்களிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆர் பிளான்டில் குடிநீர் ஏற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்...
    1
    எடப்பாடி அருகே பல வருடங்களாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாத ஆர்.ஓ பிளான்ட்... சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஆவனிப் பேரூர் கீழ்முகம் ஊராட்சி போடிநாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் ஆர்வோ பிளான்ட் கட்டி முடிக்கப்பட்டது. அதேபோல்  எடப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சி ஊராட்சி அம்மன்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் குடிநீர் ஆர்ஓ பிளான்ட்கட்டி முடிக்கப்பட்டது...
இரண்டு குடிநீர் ஆர்ஓ பிளான்டுகளும் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. பல ஆண்டுகளாகியும் குடிநீர் ஆர்ஓ பிளான்டில் குடிநீர் நிரப்பி பொதுமக்களின் பயன் பாட்டிற்கு விடப்படவில்லை...
பல லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட குடிநீர் ஆர்ஓ பிளான்ட் மக்களின் பயன்பாட்டிற்கு விடப்படாததால் அரசு பணம் பல லட்சம் விரய மாகி உள்ளதாக பொதுமக்கள் விமர்சித்து வருகிறார்கள். குடிநீர் ஆர்ஓ பிளான்டில் குடிநீர் நிரப்பி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட வேண் டும் என யூனியன் பிடிஓ மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோருக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் மக்களின் பயன் பாட்டிற்கு ஆர்ஓ பிலான்டடை கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை.‌..
கோடை வெயில் பாதிப்பு தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க போடிநாயக்கன்பட்டி மற்றும் செட்டிங்குறிச்சி அம்மன் கோவில் ஆகிய இரு இடங்களிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆர் பிளான்டில் குடிநீர் ஏற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்...
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.